Skip to content

கொள்கைகள்

இஸ்லாமிய  அகீதாவை அறிந்து கொள்வோம்!

அன்புக்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் அன்றி வேறில்லை (ஸுரா ஆலஇம்ரான்:19) மேற்குறித்த திருமறைக் குர்ஆன் வசனத்திற்கமைய நேரான கொள்கையும் தெளிவான வழிகாட்டலும் இஸ்லாத்திலேயே அன்றி வேறு எம்மதத்திலும் கிடையாது என்பதை சந்தேகமற அறியலாம்.

வணங்க வேண்டிய இறைவன் பற்றி சரியான வரைவிலக்கணத்தைக் கூறிய ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். மனித குலம் பகுத்தறிவை அடகு வைக்கும் கொள்கைகளில் மூழ்கிக் காணப்பட்ட நேரத்தில் படைத்தவனை நேர்த்தியான முறையில் மனிதர்களிடம் அறிமுகம் செய்த தனித்துவமான மார்க்கம் இஸ்லாம் என்றால் மிகையாகாது.
இஸ்லாமிய மார்க்கத்தில்  அகீதா(இறைகொள்கையை) அறிந்து கொள்வது இன்றிய‌மையாத ஒன்றாகும்.முதலில் எம்மைப் படைத்துக் காக்கின்ற இரட்சகனை அறிந்து கொள்வோம்!

நபியே! இறைவன் ஒருவன் என்று கூறுங்கள்! அவன் எத்தேவையுமற்றவன்! அவன் யாரையும் பெறவுமில்லை. யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எதுவுமில்லை.(112ம் அத்தியாயம்)
மேற்குறித்த அத்தியாயத்தைக் கவனித்துப் பார்த்தால் இஸ்லாம் கூறும் இறைவன் மனிதப் பல‌வீனங்களைக் கடந்து தன்னிகரற்று விளங்கும் தனித்துவமானவன் என்பதை அறியலாம்.
மற்றய மதங்களைப்போன்று கடவுளென்பவன் குழந்தைகள் பல பெற்று குடும்பம் நடாத்திய அசிங்கமான இறைவனை தவறான முறையில் சித்தரிக்கும் கதைகள் இஸ்லாமிய மார்க்கத்தில் கிடையாது.

தனித்தன்மையோடு விளங்கும் இறைவன் சகல சக்திகளும் வாய்ந்தவன்.அழித்தல் காத்தல் ஆக்கல் போன்ற பண்புகளுக்கு அவனே சொந்தக்காரன்.அவனை மிகைக்க யாருமில்லை.
 அல்லாஹ்வுக்குண்டான தனித்தன்மைகள்
1= அவனுக்கு நிகர் கிடையாது.
இன்று பல முஸ்லிம்கள் அல்லாஹ்வைப் பற்றி சரியாகத்தெரிந்து கொள்லாததின் காரணமாக தமது வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து இறைகோபத்தைச் சம்பாதித்து வருகின்றனர்.அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது பாவங்களில் பெரும் பாவமாகும் ஒருமுறை அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும் ஒரு ஆத்மாவைக்கொலைசெய்வதும் பாவங்களில் பெரும்பாவமாகும்.(ஆதாரம் ஸஹீஹ் அல்புஹாரி 6363) ஷிர்க் எனும் இணைகற்பித்தலைத் திருமறை குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கின்றது. 


يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (2:21)
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையையே வணங்குங்கள்! (அதனால்) இறையச்சம் உடையோராகலாம்!  வணக்கவழிபாடுகள் அல்லாஹ்வுக்குமாத்திரமே செய்யப்படல் வேண்டும்.அல்லாஹ் அல்லாத வேறு எந்நபருக்கும் வணக்கங்கள் செய்யப்பட்டால் அல்லாஹ் அதனை மன்னிக்கவே மாட்டேன் என்று  தனது திருமறையில் கூறுகிறான்.

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ
  وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைகற்பிப்பதை ஒருக்காலும் ம‌ன்னிக்கவேமாட்டான்.அது அல்லாத பாவங்களை தான் நாடியோருக்கு மன்னிப்பான்.
எவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பாவத்தை இட்டுக்கட்டிவிட்டார். (  4:  4 8  ) கருனையுள்ள இரட்சகனால் கூட மன்னிக்க முடியாத பெரும் பாவம் இந்த ஷிர்க்.வணக்கவ‌ழிபாட்டில் அல்லாஹ்வோடு யாரையும் எச்சந்தர்ப்பத்திலும் கூட்டுச்சேர்க்க முடியாது என்பதை மேற்குறித்த வசனம் அழகாக எடுத்துரைக்கின்றது.இஸ்லாத்தின் அடிப்படைத்தத்துவம் இதுதான்.
ومَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ
எவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றாரோ அவ‌ருக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றான்.அவர் தங்குமிடம் நரகம் தான்.(5:72 )  மேற் குறித்த அல்குர்ஆனிய வசனம் எவ்வளவு கடுமையாய் ஷிர்க்கின் விளைவை  எமக்குச் சொல்லித்தருகின்றது.அல்லாஹ்விடைய தூதர் கடுமையாகப் பயந்தது ஷிர்க் எனும் இணையைப் பற்றித்தான்.
இணை கற்பிப்பதால் ஒருமனிதன் இறைசாபத்தைப் பெறுகின்றான்.எந்த மார்க்கம் இவ்வுலகில் ஷிர்க்குக்கு முற்றுப்புள்ளி வைத்ததோ அந்த ச்த்திய மார்க்கத்தில் இன்று வாழும் எமது முஸ்லிம்களில் அதிகமானோர் அல்லாஹ்வுக்கு தினமும் இணைகற்பித்து அல்லாஹ்வின் அதிருப்திக்கு ஆளாகிவருகின்றனர்.நல்லடியார்களின் மண்னறைகளை முத்தமிடுவது,கப்ருகளுக்கு சாஸ்டாங்கம் செய்வது,மலர்கள் தூவுவது,தமது குழந்தைகளை கப்ருகளில் உருட்டுவது போன்ற இன்னோரன்ன மார்க்க விரோதச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்னும் வளரும்..

இன்ஷா அல்லாஹ்

 

 

 

 

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers