Skip to content

ஒன்றுக்கு மேற்பட்ட ஜமாஅத்கள் நடாத்துவதை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?

February 10, 2010

எனதருமை இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஒரு ஜமாஅத் நடைபெற்று முடிந்த பள்ளிவாயலில் மேலதிக ஜமாஅத்கள் நடாத்துவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை எவருடைய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவை தூய்மையாக எடுத்தியம்புகின்ற பல பிரச்சார அமைப்புக்களில் ஒரு பிரச்சார அமைப்பான இலங்கையில் உள்ள தாருல் அதர் எனும் மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையிலான பிரச்சார அமைப்பு கொண்டிருக்கின்றது.

இந்த வகையில் தாருல் அதர் பிரச்சாரகர்களில் ஒருவரான மௌலவி நௌபர் (காஷிபி) அவர்கள் எழுதிய ஆக்கத்திற்கு தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅதினைச் சார்ந்த மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் பதில் என்ற பெயரில் எழுதியதை இஸ்லாத்தை மிகத் தூய வடிவில் எடுத்தியம்புகின்ற பல இணையதளங்களில் ஒன்றான www.onlinepj.com என்ற அறிஞர் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களது இணையதளத்தில் அவர்களால் சரி காணப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.

எமது பார்வையில் மௌலவி அப்துன் நாஸர் அவர்களது ஆக்கத்தில் நாம் கண்ட பிழையான கருத்துக்களை இம்மடலினூடாக ஒவ்வொன்றாக தொட்டுக்காட்டலாம் என நினைக்கின்றோம். அதற்கு முன்னதாக மிக அத்தியாவசியமான ஒரு விடயத்தை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தம் எனக்கருதுகிறேன்.

அதாவது, தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅதைப் பொருத்தவரைக்கும் குறிப்பாக மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தமிழ் உலகத்தில் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதோர் மத்தியில் பிரச்சாரங்கள், நூற்கள், கலந்துரையாடல்கள், விவாதங்கள், கேள்வி பதில்கள் ஊடாக இஸ்லாமியத் தூதை எடுத்துச் செல்வதில் பல்வேறுபட்ட தியாகங்களுடன் மிகப்பாரிய பங்களிப்பைச் செலுத்தியிருப்பதை யார் மறந்தாலும் அல்லது மறந்தது போன்று நடித்தாலும் நாம் ஒரு காலமும் அவற்றை மறக்கவுமாட்டோம். மறுக்கவுமாட்டோம்.

இன்னும் சொல்லப்போனால் எமது பிரச்சாரங்களின் பல கட்டங்களில் அவற்றை மெச்சிப் பேசியுமிருக்கிறோம். இனிமேலும் பேசுவோம் இன்ஷா அழ்ழாஹ். அவர்களது பாணியில் சொல்வதைப்போல் புகழ்மாலை பாடுவதற்காக அல்ல, மாறாக படிப்பினைக்காக! இந்தியா, இலங்கை முஸ்லிம்களிடத்தில் குடிகொண்டிருந்த மௌட்டீகங்களும், பித்அத்களும், அநாச்சாரங்களும் செயலிழந்து போவதற்கு பல தௌஹீத் பிரச்சார அமைப்புக்கள் பங்களிப்பு செலுத்தினாலும் ஒப்பீட்டளவில் மிகக்கூடுதலான பங்களிப்பைச் செலுத்தியவர்களுல் மிக முக்கியமானவர் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களாவார்கள் என்பது நாமரிந்த வரலாற்று உண்மையாகும்.

அறிஞர் அவர்களது துனிச்சலாலும், குர்ஆன் ஸுன்னாவை எடுத்தியம்ப வேண்டுமென்ற வைராக்கியத்தாலும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் பிரமிக்குமளவுக்கு அழ்ழாஹ்வின் உதவியினால் பல மாநாடுகளை தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் கண்டிருக்கிறது. இத்தனைக்கும் மத்தியில் நாத்திகர்கள், கிரிஸ்தவர்கள், காதியானிகள், அஹ்லே குர்ஆன், ஜமாஅதுல் முஸ்லிமீன் போன்ற தவறான சிந்தனையுடையோர்களோடு சத்திய வேதவாக்கியங்களைக்கொண்டு அவர்களை ஆட்டங்கானச்செய்த அறிஞர்தான் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களாவார்கள் என்பதை ஒவ்வொறு தௌஹீத் பேசும் சகோதரர்களும் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆக வேண்டும். இதே நேரம் இன்னுமொறுபக்கம் சென்று பார்த்தால் இலங்கையிலுள்ள பல தௌஹீத் மார்க்க அறிஞர்களும் தங்களையே அர்பணித்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மிகப்பாரிய சேவைசெய்து போற்றத்தக்க பல மாற்றங்களையும் உண்டு பன்னியிருப்பதை அவ்வளவு சீக்கிரம் நாம் யாரும் மறந்துவிடக்கூடாது என்பதையும் நாம் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

அவ்வப்போது மனிதன் என்ற ரீதியில் கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கையானதே. அதற்காக கொள்கையில் தடம்பிரண்டு போன தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி போன்றோரை சாடுவது போன்று சாடுவது நேர்மையான ஒரு தஃவாவாக இருக்க முடியாது. கொள்கையளவில் பெரும்பாலான விடயங்களில் நாம் அனைவரும் உடன்பட்டிருக்கிறோம் என்பதை கருத்திற்கொண்டு நம் அனைவருக்கும் பொது எதிரிகளாக இருக்கின்ற தரீகாவாதிகளும், இஹ்வான்களும், கைகொட்டிச் சிரிக்குமளவுக்கு நமது தஃவாக் களத்தை கொண்டு செல்வது ஒரு ஆரோக்கியமான நடைமுறையல்ல.

இஸ்லாத்தை படிப்பதற்காக இணையதளங்களில் உற்பிரவேசிக்கும் பன்பாடுள்ள தௌஹீத் சகோதரர்கள் இவ்வாரான ஆரோக்கியமற்ற விமர்சனங்ளைகண்டு தௌஹீதையே வெறுக்கின்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டால் அதற்கான முழுப்பாவங்ளையும் நாமே சுமக்க வேண்டிவரும் என்பதனை கருத்திற்கொண்டு அறிவுபூர்வமாகவும் ஆரோக்கியமாகவும் நமது கருத்ததாடல்கலை அமைத்துக்கொண்டால் நன்றாக இருக்குமென்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

இந்த வைகயில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தனது தஃவாக் களத்தில் பிர தௌஹீத் அமைப்புக்கள் நாகரீகத்துடனோ நாரீகமற்றோ விமர்சனங்களை முன்வைக்கின்ற போது ஆட்களை சாடுவதை விட்டு விட்டு தங்களது கருத்துக்களை மிக ஆணித்தரமாக நிருவினால் அக்கருத்து நடுநிலையாலர்களிடத்தில் எடுபடும் என்பது எனது தாழ்மையான மற்றுமொறு கருத்தாகும். ஆனால் அதே நேரம் இலங்கையில் உள்ள பல தௌஹீத் மார்க்க அறிஞர்களிடம் (வளைந்து குளைந்து மார்க்கத்தைச் சொல்பர்கள் அல்ல) இந்த நாகரிகமான விமர்சனத்தை தாராளமாக பார்க்க முடிகின்றது. இதற்கு அவர்களது பயான் சீடிகளே சாட்சி.

ஆனால் இஸ்லாத்தை அழகுபட எடுத்துச் சொல்லும் அறிஞர் பி.ஜே அவர்களிடம் இதனை காண முடியாமலிருக்கிறது என்பதுதான் மிக மனவேதனை தரக்கூடிய அம்சமாகும். எமது தாருல் அதர் அத்தஅவிய்யா (மத்ஹபுகள் சாராத அல் குர்ஆன் அஸ்ஸுன்ன அடிப்படையிலான பிரச்சார அமைப்பு) அமைப்பைப் பொருத்தமட்டில் அன்றாடம் தொழில் செய்கின்ற சாதாரன மக்களிடத்தில் பணங்கள் வசூல் திரட்டப்பட்டு அழ்ழாஹ்வின் உதவியால் இயங்கிவரும் ஓர் அமைப்பாகும். இந்த வகையில் சத்தியத்தில் எவ்வித சமரசமும் செய்யாது ஸலபு அறிஞர்களின் கருத்துக்களை தனியான மார்க்க ஆதாரமாக கொள்ளாது பிரச்சாரம் செய்வதில் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅதினுடைய கருத்தும் தாருல் அதரினடைய கருத்தும் ஒருமித்திருப்பதால்தான் எத்தனையோ தடவைகள் நமக்கு மத்தியில் சுமுகமான உறவுகளை ஏற்படுத்தி அதன் பின் நமது கருத்து முரண்பாடுகளை குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் ஒரு தீர்வுக்கு கொண்டு வருவதற்கு எத்தனித்தோம். அதனால்தான் சகோதரர் நௌபர் மௌலவி அவர்கள் அப்பாஸ் அலி அவர்களுக்கு மறுப்பு எழுதும் போது TNTJ யினுடைய பாணியில் இல்லாமல் மிகவும் அறிவு பூர்வமாகவும், நாகரிகமாகவும் தனது கருத்துக்களை பதிவு செய்து எழுதியிருந்தார்.

ஆனால் பிஜே தரப்பு அறிஞர்களோ நான் பிடித்த முயலுலுக்கு 3 கால்கள் என்ற ரீதியில் தங்களது எதிர்வாதங்களை தொடர்ந்திருப்பதன் மூலம் தனது அமைப்பு மட்டுமே உயர்ந்து நிற்க வேண்டும் என்று எல்லோரும் TNTJயைப்பற்றி பேசிக்கொள்வதனை மேலும் மேலும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

எது எப்படி இருந்திட்ட போதிலும் இனிமேலாவது காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் நின்று கொண்டு நமது கருத்தாடல்களைத் தொடர்ந்தால் மிக ஆரோக்கியமாக இருக்கும். நமது கருத்தாடல்களை பார்த்துக்கொண்டிருக்கின்ற நேயர்களுக்கும் இஸ்லாத்தை மாத்திரம் கொண்டு போய் சேர்த்த கூலிகளை, எல்லாம் வல்ல அழ்ழாஹ் நமக்குத் தந்தருல்வான்.

இதில் நியாயங்கள் இருந்தால் ஏற்றுக்கொள்ளவும், தவறுகள் இருந்தால் உரிய முறையில் சுட்டிக்காட்டும் பட்சத்தில் நான் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக அமையும் என்பதனை இத்தாள் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

சரி மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் இரண்டாம் ஜமாஅத் தொடர்பாக நௌபர் மௌலவி அவர்களுக்கு மறுப்பாக எழுதிய ஆக்கத்தில் உள்ள தவறுகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஓன்றுக்கு மேற்பட்டு மேலதிக ஜமாஅத்கள் நடாத்துவது நூதன அனுஸ்டானம் என்பது எமது அமைப்பின் கருத்து என்ற ரீதியல்தான் நான் இங்கு இதனை பதிய ஆரம்பிக்கிறேன்.

ஹதீத்களில் இல்லாத கருத்துக்களை ஹதீத்களில் உள்ளது போன்று காட்டுவதில் கைதேர்ந்த (இதனை தங்க நகை கட்டுரையில் அம்பளப்படுத்தியுள்ளோம்) நௌபர் என்பவர் ………. என்று ஆரம்பித்துள்ளார் அறிஞர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள். சாதாரணமாக நௌபர் அவர்கள் என்று குறிப்பிடாமல் இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆரம்பித்திருப்பதுதான் அறிஞர் அவர்களின் ஸ்பெசலாகும்.

ஹதீத்களில் இல்லாத கருத்துக்களில் உள்ளது போன்று காட்டுவதில் கைதேர்ந்தவர்தான் நௌபர் என்பவர் என்பது ஆதாரமில்லாத, அடிப்படை இல்லாத ஒரு குற்றச்சாட்டாகும். பி.ஜே அவர்கள் கூற்றில் உண்மையானவர்களாக இருந்தால் நௌபர் மௌலவி அவர்கள் ஹதீத்களில் இல்லாத கருத்துக்களை ஹதீத்களில் உள்ளது போன்று மொழிபெயர்த்த வாசகத்தை காட்ட வேண்டும். அப்படி காட்டவில்லை என்றால் கூற்றில் உண்மையாளர் அல்ல என்பது வெட்டவெளிச்சத்திற்கு வந்து விடும். ஆனால் மௌலவி பி.ஜே அவர்கள்தான் அதில் கைதேர்ந்தவர்கள்ன்பது எம்மாலும் ஆதாரங்களுடன் கூற முடியும். மருத்தால் இன்ஷா அழ்ழாஹ் அதனை எடுத்துக்காட்டுவோம்.

எனவே, இப்படி ஆதாரமில்லாத பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சொல்லி தங்களின் மீது என்போன்ற மாணவர்கள் வைத்திருக்கின்ற நம்பகத்தன்மையை இல்லாமல் செய்யாதீர்கள் என விணயமாய் கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்து, தங்க நகை கட்டுரையில் இதனை தாங்கள் அம்பளப்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மையில் நீங்கள் குறிப்பிடும் குற்றிச்சாட்டுக்கு சொந்தக்காரர் நௌபர் மௌலவியல்ல. மாறாக ஸஹ்ரான் மௌலவி அவர்கள்தான் வழமைபோன்று ஹதீதில் இல்லாதவைகளைச் சேர்த்து மொழிபெயர்த்திருந்தார். இதனை நாமும் தங்க நகை கட்டுரையிலேயே தெளிவுபடுத்தியிருக்கின்றோம். இது போன்ற பல காரணங்களால்தான் அவர் தௌஹீத் பிரச்சாரத்திற்கு தகுதி இல்லாதவர் என்று அவரை எமது அமைப்பிலிருந்து நீக்கியுள்ளோம். அவர் செய்த தவறிற்கு எமது அமைப்பைச்சேர்ந்த மார்க்க அறிஞர்களை குற்றம் சுமத்துவது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.

அடுத்து, நேரடியாக தலைப்பிற்குள் வருவோம். நமக்கென்று ஒரு நிலைப்பாட்டை தீர்மானித்துக் கொண்டு அதற்கேற்ற ஆதாரங்களை குர்ஆன் ஸுன்னாவிலிருந்து தேடுவது மனோ இச்சைவாதிகளின் கொள்கையாகும். சத்தியம் எதுவோ அதற்கு முற்றிலுமாக அடிபனிவேன் என்ற நோக்கோடு குர்ஆனிலிருந்தும் ஹதீத்களிலிருந்தும் ஆதாரங்களை தேடுவது இறை விசுவாசிகளின் போக்காகும். எனினும், இப்போக்கை சகோதர அறிஞர் அப்துன் நாஸர் என்பவரிடம் காணமுடியாமலிருக்கிறது. அவர் சொன்னதைப்போன்று ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. மாறாக அவரது மறுப்பே அவருடைய நிலைபாட்டை தீர்மானித்துக்கொள்வதற்கு மிக ஏதுவாக அமைந்து விட்டது.

பொதுவாக, ஒரு ஆய்வாளரைப் பொருத்தவரைக்கும் ஸுன்னாவை தரம்பிரிக்கின்ற போதிய அறிவு அவரிடம் காணப்படும் அதே வேலை, குர்ஆனையும் ஸுன்னாவையும் எந்த அடிப்படைகள் கொண்டு விளங்க வேண்டுமென்ற சட்டக்கலையோடு தொடர்பான போதிய தெளிவு அவரிடம் இருக்க வேண்டும். இல்லாதவிடத்தில் சில வேலை அல்ல பலவேலைகளில் தப்பும் தவறுமாக முடிவெடுக்க வேண்டிவரும்.

இஸ்லாத்திற்தெதிரான அத்வைதம், காதியானிசம், பயில்வானிசம், போன்ற இன்னும் பல வழிகேடான சிந்தனைகலெல்லாம் முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே உருப்பெற்றதற்கான அடிப்படைக் காரணமே சட்டக்களையில் போதிய தெளிவில்லாமல் இஸ்லாமிய ஆய்வியல் துறைக்குள் காலடி எடுத்து வைத்தமையே. இப்படிப்பட்ட ஒருவர் ஆய்வு என்று எதையோ சொல்லி இஸ்லாத்தை மரணிக்கச் செய்வதை விட அவர் மௌனம் சாதித்து இஸ்லாத்தை உயிர் வாழவைப்பதே மேலானதாகும். இன்னும் சொல்லப்போனால் குர்ஆன், ஸுன்னா என்ற இரு அஸ்திவாரங்களில் அடித்தளமிட்டவர்கள் எங்கும் எந்த இடத்திலும் எமது கருத்தே சத்தியம் என்று துனிச்சலோடு முகம் கொடுக்க முடியுமென்றால் அதற்கு காரணம் சட்டக்களையில் நாம் போட்டிருக்கின்ற அஸ்திவாரமகும். இது அல்லாமல் இஜ்மா, கியாஸ், இஸ்திஹ்ஸான் என்று கூறிக்கொண்டிருக்கின்ற பலவேசக் கொள்கை தாரிகளுக்கு மத்தியில் ஒரு தீர்க்கமான நிலைபாடு தங்களுக்கென்று இருக்காது. அவர்களின் கொள்கைகள் எப்போதும் ஆட்டங் கண்டுகொண்டே இருக்கும்.

உண்மையில் இப்படியான விடயங்களை மாற்றுக் கொள்கையினருக்கு மறுப்புகள் எழுதுகின்ற போதுதான் குறிப்பிட வேண்டும். எனினும், துரதிஷ்ட வசமாக எமது சக தௌஹீத் மார்க்க அறிஞர்களுக்கு இப்படியான விடயங்களை தொட்டுக்காட்டுவதில் வெட்கமும் வேதனையுமாக இருக்கின்றது. மனம் இடங்கொடுக்காவிட்டாலும் சந்தர்ப்ப சூல்நிலைகள் அப்படியான ஒரு நிலைக்கு எம்மை இழுத்துச்சென்றுவிட்டன.

சரி ஏதோ மனிதர்களில் மனோ இச்சையை மார்க்கமாக்கிய பலர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்தாலும் அவற்றை ஒளிக்க களமிறங்கிய எமது கொள்கைச் சகோதரர் அப்துன் நாஸர் மற்றும் அவரது ஆய்வை சரிகண்டு தேவையான பல மாற்றங்கள் செய்யப்படவேண்டி இருந்தும் சில மாற்றங்களே செய்யப்பட்டு தனது உத்தியோகபூர்வ இனையதளத்தில் வெளியிட்ட அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் போன்றவர்களிடத்திலும் இப்படியான மனோ இச்சையைப் பின்பற்றும் போக்குகள் அவ்வப்போது எற்பட்டுவிடுகின்றன என்ற நல்லென்னத்தில்தான் இதனை நாம் எழுதிக்கொண்டிருக்கின்றோம்.

ஏனெனில், சகோதரர் நௌபர் மௌலவி அவர்கள் இரண்டாம் ஜமாஅத் தொடர்பான சட்டப்பிரச்சினை குறித்து தனது வாதங்ளை முன்வைக்கு முன் எமது தலைப்பிற்குத் தேவையான மிக அத்தியாவசியமான சில சட்ட ரீதியான அடிப்படைகளை முன்வைக்கின்றார். அந்த அடிப்படைகளை சகோதரர் அப்துன் நாஸர் அவர்கள் ஏரெடுத்தும் பாரக்காமல் இவரின் வாதமே ரொம்ப டேஞ்சராக ஆரம்பிக்கிறது என்று அப்பட்டமான பொய்யை அல்ல தவறை எழுதுகின்றார். அந்த அடிப்படைகளில் நின்று கொண்டுதான் நாம் அந்த ஆபத்தான கேள்வியைக் கேட்டோம். ஆனால் அறிஞர் அப்துன் நாஸர் அவர்களோ அதனை கண்டும் கானாதது போல் ஹதீத்களிலிருந்து தனது வாதங்களை எடுத்துவைக்குமுன் இப்படியான ஆபத்தான கேள்வியை நாம் கேட்டதாக குறிப்பிடுகின்றார். உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜமாஅத்கள் நடைபெருவதற்கு அல்குர்ஆனிலோ அஸ்ஸுன்னாவிலோ எந்தவொறு ஆதாரமுமே இல்லை எனும்போது அது பகுத்திரிவு ரீதியாகவும் பிழை என்பதை நிறுவத்தான் அந்த வாதத்தை நாம் எடுத்துவைத்தோம்.

உதாரணத்திற்கு, பெண்களின் மாதவிடாயை கருப்பு இரத்தத்தை வைத்துத்தான் அடையாளம் காண வேண்டும் என நபிகள் நாயகம் சொல்லியுள்ளார்கள். அதே நேரம், கியாஸை மார்க்க ஆதாரமாகக்கொள்வோர் சிவப்பு, மஞ்சல், செம் மஞ்சல் போன்ற நிரங்களையும் ஹைழு என்று வாதிடுகின்றனர். இது குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இல்லாத கருத்து என்பதற்காக அதனை அவர்கள் பாணியிலேயே மறுத்துரைக்க முடியும். (கருப்பின் சாயல் சிவப்பு, சிவப்பின் சாயல் மஞ்சல், மஞ்சலின் சாயல் செம் மஞ்சல்) எனவே, அவை அனைத்துமே ஹைழாகும் என்பதுதான் மத்ஹபுவாதிகளின் வாதமாகும். எனினும் செம் மஞசலின் சாயல் வெள்ளையில் இருக்கிறதல்லவா? ஆனால் வெள்ளையை ஹைழ் என்று வாதிட மாட்டார்கள் இப்போது அவர்களின் பானிக்கே போவோம். வெள்ளையின் சாயல் செம் மஞ்சலிலே இருக்கிறது, செம் மஞ்சலின் சாயல் மஞ்சலில் இருக்கிறது, மஞ்சலின் சாயல் சிவப்பில் இருக்கிறது எனவே, அவை அனைத்தும் ஹைழுடைய இரத்தம் கிடையவே கிடையாது.)

ஆனால் உண்மையில் நபிகளாரே இப்படிச்சொல்லியிருந்தால் இப்படி பகுத்தரிவு ரீதியாக எம்மால் மறுக்க முடியுமா? இன்னும் சொல்லப்போனால் அறிஞர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கூட தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக உரையாற்றுகையில் அவை தொடர்பாக அறிவிக்கப்படுகின்ற ஹதீத்கள் பலவீணமானது எனக்கூறிவிட்டு அந்த தொழுகை இறை சிந்தனைக்கு மிக மிக ஆபத்தான ஒரு தொழுகைதான் என்பதனை அக்கு வேரு, ஆணிவேராக விளங்கப்படுத்துகின்றார். அவ்வாறு விளங்கப்படுத்திய அறிஞர் பி.ஜே அவர்கள் அதன் பிற்பாடே ‘இத்தொழுகை ஆதாரபூர்வமான செய்திகளைக்கொண்டு பதிவாகியிருக்குமாயின் இது ஆபத்தான ஒரு தொழுகை என்று ன் சொல்லமாட்டேன்.’ என்று அவரே கூறுகின்றார். அறிஞர் பி.ஜே அவர்கள் கூறும் (அவர்கள் பாணியில் இவ்விஷமக்) கருத்தை அவர் சரி கண்டு எழுதிய அறிஞர் அப்துன் நாஸர் அவர்கள் குறிப்பிடுகின்ற பின்வரும் கருத்தோடு ஒப்பிட்டுப்பாருங்கள்

ஹதீஸ்களின் அடிப்படையில் வாதத்தை எடுத்து வைக்கும் முன் இரண்டாம் ஜமாஅத் என்பது எவ்வளவு பாரதூரமானது என்ற கருத்தை மேற்கண்டவாறு விதைக்கிறார். ஐம்பத்தி ஏழு தடவை ஜமாஅத் நடத்தலாமா என்ற கேள்வியை முதலில் எழுப்பிவிட்டால் ஆய்வு செய்யும் திறன் இல்லாத பொது மக்கள் அது தவறு என்று நினைத்து விடுவார்கள். அதாவது ஹதீஸின் துணையுடன் கருத்தை நிறுவுவதை விட மனோ இச்சையின் அடிப்படையில் கருத்தை நிறுவ அடித்தளம் போடுகிறார்.
ஒரு ஜமாஅத் முடிந்த பின் இன்னொரு ஜமாஅத் நடத்த அனுமதி இருந்தால் ஐம்பத்தி ஏழு என்ன ஐயாயிரம் ஜமாஅத் நடத்துவதும் சரியானது என்று தான் அறிவுடையோர் முடிவு செய்ய வேண்டும். ஐம்பத்தி ஏழு தடவை ஜமாஅத் நடத்தும் நிலைக்கு ஹதீஸில் அனுமதி இருந்தாலும் என் மன இச்சை அதை ஏற்றுக் கொள்ளாது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

இதே கேள்வியை அறிஞர் பி.ஜே அவர்கள் விடயத்தில் கேட்டால் என்ன பதில் சொல்வீர்களோ, சொன்னீர்களோ அதே பதிலைத்தான் நாமும் சொல்கின்றோம். இவை அனைத்தையும் விட்டுவிடுவோம். கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஸகாத் கொடுக்கத் தேவையில்லை என்ற அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் ஆய்வு ரீதியான கருத்தை முன்வைக்கும் போது ஒவ்வொரு வருடமும் இறை பாதையில் ஜகாத் எனும் தான தர்மத்தை வழங்கினால் பிச்சைக்காரனாக வேண்டி வரும் நிலைதான் ஏற்படும் என்று ஒரு சாதாரன முஸ்லிம் கூட கூறக் கூடாத ஓர் வார்த்தையை பிரயோகிக்கிறாரே (பின்னர் வாபஸ் வாங்கிக் கொண்டார்) இது எவ்வளவு பெரிய பகுத்தறிவு வாதம்?

எனவே, மார்க்க விடயங்களில் இப்படியான பகுத்தறிவு வாதத்தை பேசுகின்ற TNTJ சகோதரர்கள் மேற்படி வாத்தை எப்படி எடுத்து வைப்பது? இன்னும் சொல்லப்போனால் அழ்ழாஹ் பற்றிய மறுமை நம்பிக்கைகளில் கூட தனது பகுத்தரிவு வாத்தை பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் விட்டுவைக்கவில்லையே? அழ்ழாஹ் இரவின் இறுதிப்பகுதியில் இறங்கி வருவதை மனிதன் இறங்குவதற்கு ஒப்பாக்கியதால்தானே அந்தப் பன்பை (மாத்திரம்) வலிந்துரை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இப்படியான மனோ இச்சை அடிப்படையிலான கருத்துக்களை தன்னகத்தே வைத்துக்கொண்ட இவர்கள் எப்படி மேற்படி வாதத்தினை எடுத்துவைக்க முடியும்?

அதற்காக பி.ஜே அவர்களை மொத்தமாக சிலர்கள் சொல்வதைப்போல் முஃதஸிலாக் கருத்திலுள்ள பகுத்தரிவுவாதி என்று நாம் சொல்ல வரவில்லை. மாறாக அவரினுடைய சில மார்க்க விளக்கங்கள் குர்ஆன் ஹதீதை விட பகுதத்தரிவு வாதத்தினை முற்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதைத்தான் கூற வருகின்றோம். அழ்ழாஹ் இப்படியான சில தவறுகளின் காரணமாக மழைபோன்ற அவரது சத்தியப் பிரச்சாரத்திற்கு எவ்விதத் தடங்களையும் எற்படுத்தக்கூடாது என அழ்ழாஹ்விடத்தில் மனதார பிரார்த்திக்கின்றோம்.

ஆனால் எம்மைப் பொருத்தவரைக்கும் மனோ இச்சைகளின் அடிப்படைகளில் ஒருகாலமும் இஸ்லாமிய சட்டங்களை தீர்மானிக்கவே மாட்டோம். இதற்கு மிகப்பெரிய சான்றே அப்துன் நாஸர் அவர்கள் எம்மைநோக்கி கேட்ட பின்வரும் கேள்விதான்?

ஒரு ஜமாஅத் தொழுகையில் கலந்து கொண்டவர் மற்றொரு ஜமாஅத் தொழுகை நடக்கும் பள்ளிக்குச் சென்றால் அதிலும் பங்கெடுக்கலாம் என்பதற்கு ஹதீத்களில் அனுமதி உள்ளது. இந்த அனுமதியிலும் மேற்கண்ட கேள்வியைக் கேட்க முடியும். ஜம்பத்தி ஏழாவது பள்ளிக்குச்சென்று தொழலாமா என்று கேட்டு ஹதீதில் உள்ளதை மறுப்பார்களா? ஆம் நாம் மறுக்கவில்லை. மறுக்கவுமாட்டோம். காரணம் ஹதீத் வந்தால் எப்படி பகுத்தறிவை பயன்படுத்தி மறுக்க முடியும். மேலும் இதன் மூலம் அப்துன் நாஸர் அவர்களே தன்னை அறியாமல் தான் கஷ்டப்பட்டு நிறுவ வந்த வாதத்தினை ஒரு நொடிப் பொழுதில் தகர்தெரிகின்றார். எப்படி என்று பாருங்கள்?

இரண்டாம் ஜமாஅத் நடாத்துவதற்கு ஹதீத் இருக்கிறது என்று கூறி அதனை நாம் மறுத்த மனோ இச்சைவாதிகள் என்பதுதான் அப்துன் நாஸர் அவர்களது வாதமே. இவர் தனது கூற்றில் உண்மையாளர் இல்லை என்பதற்கு மேற்படி அவரது வாதமே மிகப் பெரிய ஆதாரமாகும். நாம் உண்மையில் மனோ இச்சை அடிப்படையில் எமது வாதங்களை எடுத்து வைத்திருந்தால் மேற்படி அறிவுபூரவமான? கேள்வியைக் கேட்டே இருக்கமாட்டார். ஜம்பத்தி ஏழாவது பள்ளிக்குச்சென்று தொழலாமா என்று கேட்டு ஹதீதில் உள்ளதை மறுப்பார்களா? என்பதின் மூலம் ஹதீதில் உள்ளதை நாம் மறுப்பவர்கள் அல்ல என்று அவரே உத்தரவாதம் வழங்குவதோடு இரண்டாம் ஜமாஅதிற்கு ஆதாரபூர்வமான எந்த விதமான ஹதீதும் இல்லை என்பதை சூசகமாக ஒப்பும் கொள்கின்றார்.

அடுத்து, தனக்கு எதற்கு பதில் என்ற பெயரில் எழுதலாமோ அதனை மாத்திரம் எழுதிவிட்டு எதற்கு எழுத முடியாதோ அதனை அப்படியே விட்டு விடுவீர்கள் என்று நாம் ஏற்கனவே கேட்டதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களின் போக்கு அமைந்திருக்கின்றது.

சகோதரர் எம். எஸ். அப்பாஸ் அவர்கள் தனது ‘இரண்டாம் ஜமாஅத் கூடும்’ என்ற கருத்துக்கு ஆதாரங்களாக ‘ஆதாரம்:1, ஆதாரம்:2, ஆதாரம்:3 என மூண்று!! ஹதீஸ்களைக் குறிப்பிட்ட பின் ‘மேற்கண்ட ஹதீஸ்களில் ஒரு…….’ என்று பண்மையிலும் குறிப்பிடுகிறார்.!!!

ஆனால் உன்மையில் அவர் இங்கே குறிப்பிட்டிருப்பதோ ஸுலைமான் என்பவர் ஊடாக அபூ ஸஈத் அல் குத்ரி (ரழி) அவர்கள் வாயிலாக மேற்படி அவர் சுட்டிக்காட்டிய கிரந்தங்களில் அறிவிக்கப்படும் ஒரே ஒர் ஹதீஸைத்தான். எனவே ஒர் ஹதீஸ் எவ்வாறு சில அல்லது பல வழிகளில் அறிவிக்கப்படுகிறது என்ற ஹதீஸ் (அறிவிப்பாளர்) கலையின் அடிப்படைகூடத் தெரியாமல் சகோதரர் அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளாரா அல்லது தனது கருத்துக்கு வலு சேர்க்க வேண்டி எண்ணிக்கையைக் கூட்ட வேண்டி 1,2,3 என அடுக்கிக் கொண்டு சென்றாரா என்பது புரியவில்லை.

எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்றிருந்தால் குறித்த ஹதீஸ் இடம்பெற்றிருக்கும் கிரந்தங்களான தாரமி ஆதாரம் 4, இப்னு அபீ ஷைபா ஆதாரம் 5, இப்னுல் ஜாரூத் ஆதாரம் 6, ஹாகிம் ஆதாரம் 7, முஸ்னத் அபீ யஹ்லா ஆதாரம் 8, தபரானி ஸகீர் ஆதாரம் 9, பைஹகீ ஆதாரம் 10 (ஆக மொத்தமாக ‘இரண்டாம் ஜமாஅத் கூடும் என்பதற்கு பத்து ஆதாரங்கள்) என அடுக்கிக் கொண்டே சென்றிருக்கலாம் அல்லவா?!!

எவ்வாறாயினும் ஒரே ஹதீஸை இப்படி மூண்று ஆதாரங்களாக குறிப்பாக கேள்வி கேட்கும் உலமாக்கள் அல்லாத ச‌கோதரரிடம் சித்தரிக்க முயன்றது ஒரு தவறுதான் என்பதில் ஐயமில்லை.

எனினும் அறிவியல் ஆய்வுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் பிரச்சாரகரிடம் இது எப்படி ஏற்பட்டது என்பதுதான் ஆச்சரியமாகும். தவறுகளுக்கு அப்பாற்பட்ட அந்த தூய அழ்ழாஹ் எம் அனைவரது தவருகளையும் மண்ணித்து அருள் புரிவானாக!!!

மேற்படி எமது கேள்விக்கு அப்துன் நாஸர் அவர்கள் எந்தவொறு பதிலையும் அளிக்காது அடுத்த வாத்திற்கு தாவியதின் மர்மம் என்ன? இதில் நியாயம் இருந்தால் நீங்கள் குறிப்பிட்டது தவறு என்று ஏற்றுக்கொள்வதற்கு மனோ இச்சையையும் உங்களது தன்மானத்தையும் சுய கௌரவத்தையும் பாதுகாப்பதைத் தவிர வேறு என்ன காரணம்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அறிவியல் ஆய்வுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் பிரச்சாரகரிடம் இது எப்படி ஏற்பட்டது என்பதுதான் ஆச்சரியமாகும். தவறுகளுக்கு அப்பாற்பட்ட அந்த தூய அழ்ழாஹ் எம் அனைவரது தவருகளையும் மண்ணித்து அருள் புரிவானாக!!! என்று நாம் கேட்டதை வேறு வகையாக திசை திருப்பி தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅதிற்கு இது குறித்து ஆய்வு செய்வதற்கு ஞானம் இல்லை என்று நாம் குறிப்பிட்டதாக எம்மீது அவதூரு கூறியள்ளார் அறிஞர் பி.ஜே அவர்கள். அறிஞர் அவர்கள் ஏன் இப்படியான அவதூரை எம்மீது சுமத்துகிறார் என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

அடுத்து, அவர்கள் பதில் சொல்லாமல் பெல்டி அடித்த அம்சத்தை விட்டு விட்டு பதில் என்ற பெயரில் எழுதியிருக்கும் அம்சங்களில் உள்ள தவறுகளை ஒவ்வொன்றாக எடுத்து நோக்குவோம்.

நாம் குறிப்பிட்ட முதலாவது தத்துவம்.

1.நாம் முன்னர் குறிப்பிட்ட காரண‌ங்களுக்காக (தூக்கம், மறதி, வாடைவீசும் உணவு) ஜமாஅத் தவறுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருந்தும் இரண்டாம் ஜமாஅத்தோ அல்லது மூண்றாம் ஜமாஅத்தோ நபியவர்கள் காலத்தில் நடந்ததாக எந்த ஹதீஸும் இடம் பெரவில்லை.

வரட்டுத்தத்துவம்

என்னே தத்துவம் பாருங்கள்! ஒரு ஹதீத் இடம்பெற்றுள்ளதைப் பாரத்துக்கொண்டே எந்த ஹதீதும் இடம்பெறவில்லை என்று கூறுகிறார். அப்படியானால் இது ஹதீத் இல்லையா? அடிக்கடி இரண்டாம் ஜமாஅதோ மூன்றாம் ஜமாஅதோ நடந்ததாக வந்தால்தான் ஏற்றுக்கொள்வாராம். இவருக்கு ஹதீத் கலையும் தெரியவில்லை. ஒரு விஷயத்தை எப்படி புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அறிவும் கூட இல்லை.

எமது விளக்கம்


ஒரு ஹதீத் இடம்பெற்றுள்ளதைப் பார்த்துக்கொண்டே எந்த ஹதீதும் இடம்பெறவில்லை என்று கூறவில்லை. ஹதீத் எதற்கோ இடம்பெற நீங்கள் எதற்கோ ஆதாரம் எடுக்கிறீர்கள் என்பதுதான் எமது வாதமாகும். உங்களது வாதம் என்ன? நீங்கள் முன்வைக்கும் ஆதாரம் என்ன? என்பதை ஆய்வாளராகிய அப்துன் நாஸர் அவர்கள் கருத்திற்கொண்டாலே அவர் கேட்டதை நினைத்து அவரே ஆச்சரியப்படுவார். கந்தூரிக்கு ஆதாரம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு قل هوالله أحد ஆதாரம் காட்டினால் அதற்கு நீங்கள் என்ன பதில் கூறுவீர்களோ அதே பதில்தான் அறிஞர் அவர்களுக்கும் பொருந்தும். பொதுவாக இரண்டாம் ஜமாஅத் என்று மக்கள் மத்தியில் கருதப்படுவது எதனை? தர்மம் செய்த நபித்தோழரின் ஹதீதிலே வந்த நடைமுறையைப்போன்று நமது சமூகத்தில் பல ஜமாஅத்கள் நடைபெருகின்றனவா? அறிவுடைய மக்கள் சிந்திப்பார்களாக!

அடுத்து, அடிக்கடி இரண்டாம் ஜமாஅதோ மூன்றாம் ஜமாஅதோ நடந்ததாக வந்தால்தான் ஏற்றுக்கொள்வாராம் என்றும் ஒரே ஒரு ஹதீத் வந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டாராம் என்றும் அப்பட்டமான பொய்களை எம்மீது அள்ளி வீசியுள்ளனர். இது பொய் என்பதற்கு வேறு எங்கும் செல்லத் தேவையில்லை. அதற்கு மேலுள்ள பந்தியை அவதானித்தாலே உண்மை வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விடும். இதோ நாம் குறிப்பிட்ட வாசகம் ஜமாஅத் தவறுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருந்தும் இரண்டாம் ஜமாஅத்தோ அல்லது மூன்றாம் ஜமாஅத்தோ நபியவர்கள் காலத்தில் நடந்ததாக எந்த ஹதீஸும் இடம் பெரவில்லை.

நாம் சொல்லியிருப்பதை நன்றாக அவதானியுங்கள். அடிக்கடி ஜமாஅத் தவறும் வழக்கம் இருந்தும் இரண்டு ஹதீத் அல்ல ஒரு ஹதீத் கூட இடம்பெறவில்லை என்று நாம் சொல்லியிருக்க அடிக்கடி இரண்டாம் ஜமாஅத் நடப்பதாக வந்தால்தான் ஏற்றுக்கொள்வோம் என்று அப்பட்டமாக திரிபு படுத்துகின்றாரே. ஏன் தூய இஸ்லாத்தைச் சொல்பவர்கள் என்று சொல்லிக்கொண்டு இப்படியான மோசடியை செய்துள்ளார்கள் என்பது மிக மிக மனவேதனை தரும் அம்சமாகும்.

தூய இஸ்லாத்தை பின்பற்ற வேண்டுமென்ற ஆவலோடு வந்தவர்களே! பார்த்தீர்களா இவர்களின் மோசடியை? இது தவறுதலாக இடம்பெற எந்த வாய்ப்புமே இல்லை. குர்ஆன் ஹதீதை பின்பற்றும் எங்களை ஹதீத்களை மறுப்பவர்கள் என்று பொய்யைச்சொல்லி முத்திரை குத்துவதால் தங்களுக்கு என்ன இலாபம் இருக்கிறது. நானா? நீயா? ஏன்று போட்டியிடுவதற்கு இது ஒன்றும் அரசியல் இல்லையே! தௌஹீதை பின்பற்றுபவர்கள் தக்லீத் வாதிகளாக இருக்கமாட்டார்கள் என்பதை அழ்ழாஹ்வை முன்னிருத்தி சிந்தித்துப்பாருங்கள். இன்னும் சொல்லப்போனால் அவரே அவருக்கு ஒரே பக்கத்தில் ஒரே வரியிலேயே முரன்பட்டிருக்கிறார். எமது தத்துவத்திற்கு பதில் சொல்லப்புரப்பட்ட அறிஞர் குழுவினர் ஒரு ஹதீத் இடம்பெற்றுள்ளதைப் பார்த்துக்கொண்டே எந்த ஹதீதும் இடம்பெறவில்லை என்று கூறுகிறார். அப்படியானால் இது ஹதீத் இல்லையா? அடிக்கடி இரண்டாம் ஜமாஅதோ மூன்றாம் ஜமாஅதோ நடந்ததாக வந்தால்தான் ஏற்றுக்கொள்வாராம்’ பார்த்தீர்களா? எவ்வளவு பெரிய முரண்பாடு என்று! முதலில் ஒரு ஹதீதும் இல்லை என்று நாம் குறிப்பிட்டதாகச் சொல்கிறார். அதற்கடுத்த அதே வினாடி, அடிக்கடி ஜமாஅத் இடம்பெற்றதாக வந்தால்தான் நாம் ஏற்றுக்கொள்வோமாம்.

மொத்தத்தில் இவர்கள் முன்வைக்கும் 2வகையான குற்றச்சாட்டுக்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பதிலிருந்து அறிஞர் பி.ஜே அவர்களே அடிக்கடி சொல்வது போல் முரண்பாடே பொய் என்பதற்கு மிகப்பெரிய அளவு கோளாகும் என்பதற்கு அவர்களே மிகப்பெரும் உதாரண புருஷர்களாக மாறிவிட்டார்கள்.

நாம் குறிப்பிட்ட இரண்டாவது தத்துவம்.

2. குறித்த இந்த ஹதீஸிலும் தாமதமாக வந்தவர் இன்று நடைமுறை உள்ளது போல் மற்றவர்களுக்காகக் காத்திருந்து இரண்டாம் ஜமாஅத் ஆரம்பிக்காமல் தனியாகவே தொழ ஆரம்பிக்கிறார்.

வரட்டுத்தத்துவம்


அதைத் தூக்கி அடிக்கும் தத்துவமாக இது உள்ளது. அவர் தனியாகத் தொழ ஆரம்பிக்கிறார் என்ற நபித்தோழரின் செயல் மட்டும் தான் இவரது கண்களுக்குத் தெரிகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடுத்து ஜமாஅத்தாகத் தொழச் சொன்னது இவர் கண்களுக்குத் தெரியவில்லை. இவரும் இவரைச் சேர்ந்தவர்களும் ஸலஃபி வகையறாக்களை விட மார்க்கத்துக்கு ஆபத்தானவர்கள் என்றே நாம் கருதுகிறோம்.

எமது விளக்கம்

அப்துன் நாஸர் அவர்கள் குறிப்பிடுவதைப்போன்று தனியாகத் தொழ ஆரம்பித்த நபித்தோழரின் செயல் மாத்திரம் எமது கண்களுக்கு தென்படவில்லை. மாறாக நபிகளார் அவர்கள் ஜமாஅதை நடத்துமாறு சொன்னதும் எமது கண்களுக்கு அப்துன் நாஸர் அவர்களை விட அழகாக தென்பட்டது. அதனை வைத்துத்தான் பின்வரும் சட்டக்கலை அதாவது,அறிஞர் குழு கண்டு கொள்ளாத சட்டக்கலையையும் தலைப்பிற்குள் நுழைவதற்கு முன்னே குறிப்பிட்டோம். இதுதான் அந்த சட்ட விதியாகும்.

ஒரு பொது முறை இருக்க விதிவிலக்காக ஹதீஸ்கள் இடம் பெற்றால் இந்த ஹதீஸ்கள் இடம் பெற்ற சமயம், சந்தர்ப்பம், சூழ் நிலை என்பவைகளைக் கவனத்திற் கொண்டு குறித்த சமயம், சந்தர்ப்பம்,சூழ் நிலை என்பவற்றில் மாத்திரம் இந்த ஹதீஸ்களை நாம் அமுல் படுத்தலாமே தவிர எல்லா சமயங்களிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எச் சூழலிலும் அமுல் படுத்த முற்படக் கூடாது. சட்டக்களையில் முக்கியமான இடத்தைபிடித்துக்கொண்ட இவ்விதியே மேற்படி ஹதீத்கள் போன்றவற்றிலிருந்தே தோன்றின. ஆனால் இவர்களோ நாம் அதனை கண்டு கொள்ளவில்லை என்று தவறாகச் சொல்கின்றார்கள். இதனால்தான் நாம் அவ்விதிகளை மையப்படுத்தி எமது ஆய்வை ஆரம்பித்தோம். ஆனால் அப்துன் நாஸர் அவர்களோ அவரது ஆய்வை சரிகண்டு தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிட்ட அறிஞர் பி.ஜே அவர்களோ எமது அவ்வாதத்தை ஏரெடுத்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக கைக்கு வந்தாற்போல் எழுதியது எவ்வகையில் நியாயமாகும்?

சரி, மேற்குறித்த சட்டவிதி எதைக் குறிப்பிடுகிறது என்றால் இபாதத்களைப் பொருத்த மட்டில் அதன் பொது முறையே தனியாகச் செய்வதுதான். உதாரணத்திற்காக, ஒருவர் துஆ கேட்க பிரர் ஆமீன் கூறுவது பித்அதாகும். ஓவ்வொருவரும் தனித்தனியே துஆ கேட்பதுதான் இஸ்லாம் கூறும் வழிமுறையாகும். இது பொது முறையாகும். இவ்வாரான ஒரு பொதுமுறை இருக்கத்தக்க விதிவிலக்காக தொழுகையில் (ஸூரதுல் பாத்திஹாவில்) இமாம் துஆ கேட்க மஃமூன்கள் ஆமீன் கூறியதாக ஹதீத்கள் இடம்பெருகின்றன. பொது முறைக்கு மாற்றமான இந்நடைமுறையை வைத்து கூட்டு துஆ ஒதுவது சுன்னத் என்று வாதிடுவதுதான் அறிஞர் குழு கற்றுத்தரும் அறிவுடைமையான வாதமா?

இதை விட்டு விடுங்கள். வித்ரு குனூத் ஒதுவது (எமது பார்வையில் அது சுத்தமான வழிகேடாகும்) ஸுன்னத் என்ற பி.ஜே அவர்களது கருத்தின் அடிப்படையில் வெளியில் ஓதப்படும் கூட்டு துஆவிற்கு அதனை ஆதாரமாக முன்வைத்தால் பீ.ஜே அவர்களின் பதில் என்னவாக இருக்கும்? இந்த அடிப்படையில் ஒன்றிற்கு மேற்பட்டு நடாத்தப்படுகின்ற ஜமாஅத்ளை எடுத்துக்கொள்ளுங்கள். முதலாவது ஜமாஅத் கட்டாயமானதும் மிக அத்தியாவசியமானதாகும். அதற்கான ஆதாரங்கள் ஹதீத் கிரந்தங்களில் நிறைந்து காணப்படுகிறது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று (வெங்காயம் சாப்பிட்டவர், தூங்கிவிட்டவர், மறந்துவிட்டவரல்லது முடியுமான முயற்சிகள் செய்தும் தாமதமாகிவிட்டவர் ) இப்படியான நிலமைகள் நபிகளாரின் காலத்தில் இடம்பெற்றும் கூட அவற்றிற்கு பிரத்தியோகமாக தனியே ஜமாஅத் நடாதத்தியதாக எங்கும் ஆதாரம் கிடையவே கிடையாது. இது ஒரு பொது முறையாகும்.

இப்படி இருக்கத்தக்க தாமதித்து வந்த ஒருவருக்கு ஏற்கனவே ஜமாத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் தொழுவித்து மேலதிக தர்மம் செய்ததாக ஹதீத் ஒன்று இடம்பெருகிறது. இந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்? விதி விலக்காக ஹதீத்கள் இடம்பெருகின்ற போது அவை இடம்பெற்ற சமயம், சந்தர்ப்பம், சூழ் நிலை என்பவைகளைக் கவனத்திற் கொண்டு குறித்த சமயம், சந்தர்ப்பம், சூழ் நிலை என்பவற்றில் மாத்திரம் அவற்றை அமுல் படுத்த வேண்டும்.

மேற்குறித்த ஹதீதை நன்றாக அவதானியுங்கள்! ஏற்கனவே தொழுது முடித்த ஒருவரை நபிகளார் தொழுகை நடாத்துமாறு சொல்கிறார்கள். இந்த ஹதீதிதில் உள்ள சமயம், சந்தரப்பம், சூழ்நிலை ஆகியவற்றைக் கவனத்திற்கொண்டால் இப்படியான ஒரு நிலமை எவருக்கு ஏற்படுகிறதோ அப்படிப்பட்டவர்களை மாத்திரமே இந்த சட்டம் உள்ளடக்கிக் கொள்ளுமே அல்லாமல் நமது சமூகத்தில் உள்ள நடைமுறையைப் போன்று சுரண்டித் தொழுகின்ற, ஏற்கனவே தொழாதவரே தொழுவிக்கின்ற நடைமுறைகளுக்கு ஆதாரம் எடுப்பது மிக மிகத் தவறாகும். இஸ்லாமிய சட் டவிதிமுறைகளோடு விளக்கம் சொல்கின்ற எங்களை ஸலபி வகையராக்களைவிட ஆபத்தானவர்கள் என்று சீல் குத்துகின்ற இவர்களை மனோ இச்சைப்படி ஹதீத்களை மறுக்குகின்ற முஃதஸிலா வகையராக்களைவிட ஆபத்தானவர்கள் என்று நாம் சொல்வது மிக மிக சுலபமாகும். உங்களை விட பல மடங்கு எம்மாலும் எழுத முடியும். ஆனால் அவ்வாறு எழுதவுமாட்டோம், பேசவுமாட்டோம். ஏனெனின் இவ்வாரான வார்த்தைப் பிரயோகங்களெல்லாம் பண்பட்ட அழைப்பாளனின் வார்த்தைப் பிரயோகங்கள் அல்ல என்பதை தற்போது இல்லாவிட்டாலும் காலம் கடந்தாவது புரிந்து கொள்வார்கள்.

தௌஹீத் கருத்தில் இருந்தும் TNTJயோடு சேராத ஒரே காரணத்தினால் எங்களை பாமர மக்கள் மத்தியில் இவ்வாறு சித்தரித்து எங்களது கருத்துக்களில் நியாயம் இருக்கின்றதா என்று சிந்திப்பதை தடுக்கும் முகமாக எங்களது கருத்துக்களை ஏரெடுத்தும் பாரக்கக் கூடாது என்பதற்காக எழுதப்பட்ட விமர்சனமாகத்தான் நாம் இதனை பாரக்கின்றோம். இந்த இடத்தில் நியாயமான ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றோம். இவ்வாரெல்லாம் அநாகரிகமான விமர்சனங்கள் செய்து அடுத்த சகோதரர்களின் கௌரவங்களை இழக்கச் செய்வது எந்தக் குர்ஆனுடைய வசனத்தில் எந்த ஹதீதினுடைய இலக்கத்தில் இடம்பெருகின்றது? நபிகளாரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கின்றது என்று அழ்ழாஹ் குறிப்பிடுகின்றானே. இது யாருடைய அழகிய முன்மாதிரி?

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தங்களது தஃவாவை இப்படிக்கொண்டு சென்றால்தான் அதை ரசிக்கின்ற பிரியர்கள் தங்களோடு தொடர்ந்தும் இருப்பார்கள் என்பதற்காக கண்டுபிடித்த அழகிய? முன்மாதிரியா? ஸலபு வகையராக்களைவிட ஆபத்தானவர்கள் என்று எம்மை தூசித்து எம்மை சமூகத்திலிருந்து ஓரங்கட்ட முனைந்ததின் நோக்கமும் பின்னனியும் என்ன என்பதை தாழ்மையோடு கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

இன்னும் சொல்லப்போனால் இவர்கள் தமிழ் பேசும் உலகில் ஸலபுகளைப்பற்றி கொடுத்திருக்கின்ற அறிமுகங்களில் நிறையவே உண்மைக்கு புரம்பானவைகள்தான் இருக்கிறது என்பது தனியான விடயமாகும்.

நாம் குறிப்பிட்ட மூன்றாவது தத்துவம்.


3.நபியவர்களின் அனுமதி ஏற்கனவே முதல் ஜமாஅத்தி கலந்து கொண்ட ஒருவர் அதைத் தவற விட்ட ஒருவருடன் சேர்ந்து தொழுவதற்கான அனுமதியே தவிர ஜமாஅத்தை தவற விட்ட இருவர் அல்லது பலர் சேர்ந்து நடாத்தும் ஜமாஅத்தை அல்ல.

வரட்டுத்தத்துவம்

குர்ஆனையும் ஹதீஸையும் புரிந்து கொள்ளும் வழிமுறை கூட நவ்பர் என்பாருக்குத் தெரியவில்லை என்பதற்கு இதுவும் ஆதாரமாக உள்ளது. ஜமாஅத் தொழுகை முடிந்த பின் ஒருவர் தாமதமாக வந்தால் ஏற்கனவே தொழுதவர் மட்டும் அவருடன் சேர்ந்து தொழலாம். ஏற்கனவே தொழாதவர் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினால் தான் இவர் கூறுகின்ற கருத்து கிடைக்கும். அப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. பள்ளிவாசலில் தொழுகை முடிந்த பின் தொழுதவர்கள் மட்டுமே தான் இருந்தது தற்செயலானது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வாசகம் தான். யார் இவருக்கு தர்மம் செய்வது என்பது தான் அந்த வாசகம். அதாவது தனியாக ஒருவர் தொழுதால் அவருக்கு ஒரு நன்மை தான் கிடைக்கும். ஜமாஅத்தாகத் தொழுதால் அவருக்கு 27 நன்மைகள் கிடைக்கும். தாமதமாக வந்த இவர் அந்த நன்மையை இழந்து விட்டார். அவருக்கும் அந்த நன்மை கிடைக்க வேண்டும் என்ற கவலை தான் இதில் தென்படுகிறது. தாமதமாக வந்த ஒரு முஸ்லிமுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அக்கரை இவர்களின் கண்களுக்குத் தென்படவில்லை.

இந்த இடத்தில் இவர்களின் பாஷையில் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது. தாமதமாக ஒருவர் வரும் போது ஏற்கனவே தொழுத ஒருவர் அவருடன் சேர்ந்து தொழ அனுமதி உண்டு என்பதை இவர் ஒப்புக் கொள்கிறார். ஏற்கனவே ஜமாஅத் தொழுதவர்கள் பள்ளிவாசலில் இருக்கும் போது ஒருவர் பின் ஒருவராக 57 பேர் வருகிறார்கள். இப்போது 57 ஜமாஅத் பிரச்சனை வருமே இது பரவாயில்லையா? எதைப் பாரதூரமான காரணம் என்று சித்தரித்தார்களோ அதையே அவர்களும் சொல்லும் நிலைக்கு அவர்களை அல்லாஹ் தள்ளிவிட்டான்.

எமது விளக்கம்

குர்ஆனையும் ஹதீதையும் புரிந்து கொள்ளும் வழிமுறை கூட எமக்கு தெரியவில்லை என்று சொல்லிவிட்டு குராபிகள் பித்அத்வாதிகளைப் போன்றுதான் புரிந்துகொள்ள வேண்டுமாம் என்று பாடம் நடத்துகிறார்கள் அறிஞர் குழுவினர். ஆச்சரியமாக இருக்கின்றதா? எமக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது? ஆனாலும் உன்மை அதுதானே என்றால் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.

முதலாவது ஜமாஅத் முடிந்த பின் ஒருவர் தாமதமாக வந்தால் ஏற்கனவே தொழுதவர் மட்டும் அவருடன் சேர்ந்து தொழலாம் என்பது எமது சொந்தக்கருத்தல்ல. நபிகளாரின் கருத்தே. ஆனால், அப்துன் நாஸர் அவர்களோ ஏற்கனவே தொழாதவர் தொழக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினால்தான் நாம் சொன்ன கருத்து சரியாக அமையுமாம் என்று வாதிடுவதானது மார்க்கத்தின் அடிப்படை சட்டவிதி கூட அவருக்கு தெரியவில்லை என்பதை தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது. (இதை அவர் மறுப்பாராக இருந்தால் அடுத்த எமது தெளிவில் விளங்கப்படுத்துவோம்.)

அடுத்து, இதில் கவனிக்க வேண்டிய அம்சம் ‘யார் இவருக்கு தர்மம் செய்வது’ என்று கூறிவிட்டு தனியாக ஒருவர் தொழுதால் அவருக்கு ஒரு நன்மைதான் கிடைக்கும் என்று கூறுகிறார். ஆனால் ஆதாரபூர்வமான ஹதீதோ இதற்கு மாற்றமாகச் சொல்கின்றதே. இதுதான் அந்த ஹதீத். இந்த நபிமொழியைப் சற்று நோக்குங்கள்.

حديث أبي هريرة رضي الله عنه، قال قال النبي صلى الله عليه وسلم:
من توضأ فأحسن وضوءه ثم راح فوجد الناس قد صلوا أعطاه الله مثل أجر من صلاها أو حضرها لا ينقص ذلك من أجورهم شيئا.
رواه أحمد، وأبو داود، والحاكم، والبيهقي.

‘யார் அழ‌கிய முறையில் வுழூ செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்துவிட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு அழ்ழாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழாதவர்களுக்கும் குறைத்து விடாமல் வழ‌ங்குகிறான்’. (அறிவிப்பாளர்: அபூ ஹுறைறா (ரழி) ஆதாரம் : அஹ்மத் அபூதாவுத், ஹாகிம், பைஹகி.)

ஆதார பூர்வமான ஹதீத் என்ன சொல்கின்றது? நமது கொள்கைச் சகோதர அறிஞர் குழு என்ன சொல்கின்றார்கள். நடுநிலையோடு பார்வையிடுகின்ற மக்களாகிய நீங்களே முடிவெடுத்து க்கொள்ளுங்கள்.

அடுத்து, ஜமாஅத்தோடு தொழுதால் அவருக்கு 27 நன்மைகள் கிடைக்குமாம் என்று குறிப்பிடுகிறார். அப்துன் நாஸர் அவர்கள் குறிப்பிடுவதை வைத்து அனுமதிக்கப்பட்ட காரணங்கள் தவிர்த்து வேண்டுமென்று பிந்தியவர்களும் இவ்வாறு ஜமாஅத் நடாத்தினால் அந்தக் கூலி கிடைக்குமா? கிடைக்குமென்றால் முதல் ஜமாஅதிற்கான முக்கியத்துவத்தை அவர் மறுத்ததாக அமையும். அவ்வாரு நன்மைகள் கிடைக்கமாட்டாது என்றால் (காரணத்தோடு தொழுவிக்கப்படுகின்ற மேலதிக ஜமாஅத் தொழுகையையும், காரணமின்றி தொழுவிக்கப்படும் மேலதிக ஜமாஅத் தொழுகையையும்) வெவ்வேராக பிரிப்பதற்குறிய ஆதாரம்தான் என்ன? உப்புச்சப்பில்லாமல் ஆட்களை உதாசீனம் செய்வதை விட்டு விட்டு தகுந்த ஆதாரங்களோ, அறிவுபூர்வமான வாதங்களோ இருந்தால் அவற்றை முன்வைப்பீர்கள் என மிகவும் ஆவலோடு எதிர்பாரத்திருக்கின்றேன்.

அடுத்து, தாமதமாக வந்த ஒரு முஸ்லிமுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்ற நபிகளாரின் அக்கரை கூட இவர்களுக்கு தென்படவில்லை என்று சொல்கிறாரே. இது அப்பட்டமான குற்றச்சாட்டாகும். இவ்வாரான போலியான வாதங்களை நாம் முன்னர் குறிப்பிட்டுள்ள ஹதீதுக்கு நூராக உடைக்கின்றது.

அடுத்து, இவர்களின் பாஷையிலே இவர்களிடத்தில் ஒரு கேள்வி கேட்க வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிடுவதற்கு எமது பதிலாக, குர்ஆனிலும் ஹதீதிலும் ஒரு விடயம் இல்லாவிட்டால் அதனை எவ்வாரெல்லாம் இல்லாமல் செய்ய முடியுமோ அவ்வாரெல்லாம் இல்லாமல் செய்வோம். ஆனால் குர்ஆனிலும் ஸுன்னாவிலும் ஒன்று இருந்தால் அதனை எமது பகுத்தரிவு ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கேட்டோம் வழிப்பட்டோம் என்று கூறி அதனை மனதார ஏற்றுக் கொள்வோமே தவிர ஒரு காலமும் அறிஞர் பிஜே அவர்களைப் போன்று பகுத்தரிவைப் பயன்படுத்தி மறுக்கமாட்டோம். இதுதான் எமது பாஷையில் அவர் கேட்ட கேள்விக்கான பதிலாகும்.

நாம் குறிப்பிட்ட நான்காவது தத்துவம்.

4. குறித்த ஹதீஸில் முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்டு நன்மை பெற்றவர் அதில் கலந்து கொள்ளாதவருக்கு தருமம் செய்கிறார் என விளங்க முடிகிறது. அனால் இன்றைய முதல் ஜமாஅத்திற்குப் பின் நடாத்தப்படும் ஏனைய ஜமாஅத்களில் யார் யாருக்கு தர்மம் செய்கிறார் என்பதைக் கூற முடியுமா? முடியவே முடியாது.

வரட்டுத்தத்துவம்

மேற்கண்ட ஹதீஸை மறுப்பதற்குக் கண்டு பிடித்த நான்காவது தத்துவம் இது. தாமதமாக வந்தவர் கூடுதல் நன்மை பெற வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் நோக்கமா? அல்லது ஏற்கனவே தொழுதவரை தர்மம் செய்ய வைப்பது நோக்கமா என்ற அடிப்படையைக் கூட இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவர் ஏற்கனவே தொழுதவருடன் சேர்ந்து தொழுதாலும், ஏற்கனவே தொழாதவருடன் சேர்ந்து தொழுதாலும் அவருக்கு 27 மடங்கு நன்மை கிடைத்துவிடும். இது தான் இங்கே கவனிக்க வேண்டும். இன்னும் சொல்வதாக இருந்தால் ஏற்கனவே தொழுதவர் மீண்டும் தொழும் எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஏற்கனவே தொழாதவருக்கு தொழும் அவசியம் இருக்கிறது. ஏற்கனவே தொழுதவர் கூட மற்றொரு சகோதரன் 27 மடங்கு நன்மையை அடைய உதவ வேண்டும் என்றால் எப்படியாவது ஜமாஅத்தாகத் தொழ முயல வேண்டும் என்று தான் அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள். தாமதமாக வந்த நபித்தோழரோடு சேர்ந்து தொழுவதற்கு யாருமில்லாத காரணத்தினால் தான் தொழுத ஒரு ஸஹாபியை மீண்டும் அவரோடு சேர்ந்து தொழுமாறு நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். இவ்வாறு சேர்ந்து தொழுகின்ற காரணத்தினால் தனியாகத் தொழுதால் கிடைக்கும் நன்மையை விட அதிகமான நன்மையைத் தாமதமாக வந்தவர் பெறுகின்றார். இதைத் தான் நபியவர்கள் தர்மம் என்று குறிப்பிடுகிறார்கள். தாமதமாகப் பலர் வரும் போது அவர்களே சேர்ந்து தொழுவதின் மூலம் அந்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்கள்.

யாரும் யாருக்கும் தர்மம் செய்ய வேண்டியதில்லை. தர்மம் என்றாலே அதன் பொருள் என்ன? தேவைப்படும் போது கொடுப்பது தான். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாமதமாக வந்தால் இப்போது தர்மம் செய்யும் அவசியம் இல்லாமலே அவர்களுக்கு நன்மை கிடைத்து விடுகிறது. தொழுத ஒருவரே மீண்டும் தொழ வைத்தாலும் அது மற்றொரு ஜமாஅத் தொழுகை தான். எனவே, ஜமாஅத்தாக தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு மேற்கண்ட ஹதீஸே மிகச் சிறந்த சான்றாக இருக்கும் போது ஜமாஅத்தாகத் தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறுவது தவறானதாகும்.

எமது விளக்கம்

குறித்த ஹதீஸில் முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்டு நன்மை பெற்றவர் அதில் கலந்து கொள்ளாதவருக்கு தருமம் செய்கிறார் என விளங்க முடிகிறது. என்று நாம் தெள்ளத் தெளிவாகச் சொல்ல, முழுப்பூசனிக்காயை ஒரு சோற்றில் மறைக்கும் பானியில் மேற்கண்ட ஹதீதை மறுப்பதற்கு ‘நாம் கண்டு பிடித்த நான்காவது தத்துவம்’ என்று கூறுகிறாறே. இதனை அறிஞர் குழுவினர் கண்னை மூடிக்கொண்டா எழுதினார்கள் என்று இந்த இடத்தில் கேட்கத் தோனுகிறது. இன்னும் சொல்லப்போனால் நாம் மருத்ததாக குற்றம் சுமத்துகின்ற ஹதீதிலிருந்துதான் 8 விதமான விளக்கங்களை குறிப்பிட்டிருந்தோம். அப்படி இருந்தும் ஹதீதை மறுத்ததாக சொல்வது என்று சொல்வதில் எந்தளவுக்கு நியாயம் இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும்.

அடுத்து, தாமதமாக வந்தவர் கூடுதல் நன்மை பெறவேண்டுமென்பது நபிகள் நாயகத்தின் நோக்கமா? அல்லது ஏற்கனவே தொழுதவரை தர்மம் செய்ய வைப்பது நோக்கமா என்ற அடிப்படையைக் கூட எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று எம்மை குற்றம் சுமத்திவிட்டு ஏற்கனவே தொழுதவருடன் சேர்ந்து தொழுதாலும், ஏற்கனவே தொழாதவருடன் சேர்ந்து தொழுதாலும் அவருக்கு 27 மடங்கு நன்மைகள் கிடைத்து விடும். இதுதான் இங்கு கவனிக்கத்தக்கதாகும் என்றும் சொல்கிறார் அப்துன் நாஸர் அவர்கள்.

இங்கு கவனிக்கதத்தக்கது, நபிகளாரின் நோக்கம் என்றெல்லாம் இவர்கள் குறிப்பிடுவது இவர்களது மனோ இச்சைகள்தானே தவிர நபிகளாரின் ஹதீதில் இவ்வாரெல்லாம் கிடையவே கிடையாது. மறுபுரம் பார்த்தால் ஏற்கனவே தொழுதவருடன் சேர்ந்து தொழுதாலும், ஏற்கனவே தொழாதவருடன் சேர்ந்து தொழுதாலும் அவருக்கு 27 மடங்கு நன்மைகள் கிடைத்து விடும் என்ற கருத்தும் எந்தவொறு ஆதாரமும் இல்லாத கருத்தாகும். பித்அதான செயற்பாடுகளுக்கு நன்மை கிடைக்குமா? அந்த நன்மையை அதுவும் 27 மடங்கு நன்மையை எப்படி பெற்றுத் தருவார் என்பதுதான் இங்கு மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும்.

இன்னும் சொல்வதாக இருந்தால் ஏற்கனவே தொழுதவர் மீண்டும் தொழும் எந்த அவசியமும் இல்லை என்று கூறி ஹதீதை மறுப்பதற்கு வழமை போன்று மிகக் கடுமையாக பிரயத்தனம் எடுப்பவர்கள் நாங்களல்ல. இவர்கள்தான் என்பது உள்ளங்காய் நெள்ளிக் கணியாகும். ஏற்கனவே தொழுதவர் கூட மற்றொரு சகோதரன் 27 மடங்கு நன்மையை அடைய உதவ வேண்டுமென்றால் எப்படியாவது ஜமாஅதாக தொழ முயல வேண்டும் என்றுதான் அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள் என்ற வாதத்தை எடுத்துவைத்து குர்ஆன் ஹதீத்தான் சட்ட மூலாதாரம் என்று கூறிக்கொண்டு தங்களுக்கு சாதகம் என்று வருகின்றபோது ஸலபு வகையராக்கள் கூட மறுக்கின்ற கியாஸை ஆதரிப்பதின் மர்மம்தான் என்ன? எப்படியாவது பதில் சொல்ல வேண்டுமென்பதற்காக கொள்கையிலிருந்து தடம்பிறலலாமா? என்று இவர்கள் பாசையிலேயே எமக்கு கேட்கத் தோனுகிறது. அதற்காக பலவேஷக் கொள்கைதாரிகள் என்று அவர்களது பாணியில் சொல்லமாட்டோம். தவறிழைத்திருக்கின்றீர்கள் என்றுதான் கூறுகின்றோம்.

தாமதமாக வந்த நபித்தோழரோடு சேர்ந்து தொழுவதற்கு யாருமில்லாத காரணத்தினால்தான் தொழுத ஒரு ஸஹாபியை மீண்டும் அவரோடு சேர்ந்து தொழுமாறு நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். என்று அழ்ழாஹ்வோ ரஸூலோ கூறாத காரணத்தை ஏதோ அவரும் அந்த சபையில் உட்கார்ந்திருந்தது போல் அப்பட்டமான பொய்யை அழ்ழாஹ்வின் தூதரின் மீது கூறுகின்றார். தூய இஸ்லாத்தைச் சொல்லப் புரப்பட்ட இவர்களிடத்தில் ஏன்தான் இப்படியான கொள்கைப் பிரள்வுகள் வந்ததோ தெரியவில்லை. அழ்ழாஹ்தான் எமது தவறுகளை மன்னிக்கவேண்டும்.

தாமதமகப் பலர் வரும்போது அவர்களே சேர்ந்து தொழுவதின் மூலம் அந்த நன்மையைப் பெற்றுக்கொள்வார்கள். யாரும் யாருக்கும் தர்மம் செய்ய வேண்டியதில்லை. நபிகளார் தர்மம் செய்பவர் என்று கேட்டதாக தெள்ளத் தெளிவாக ஹதீதிலே இடம்பெற்றிருந்தும் கூட யாரும் யாருக்கும் தர்மம் செய்ய வேண்டியதில்லை. என்று கூறி தங்களது மனோ இச்சைக்கேற்றவாறு ஹதீத்களை திரித்திருப்பதற்கும் இது மிகப்பெரிய சான்றாகும்.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாமதமாக வந்தால் இப்போது தர்மம் செய்யும் அவசியம் இல்லாமலே அவர்களுக்கு நன்மை கிடைத்துவிடும் என்று கூறுவதும் மேலும் மேலும் இவர்களது போக்கை உருதிப்படுத்துகின்றது. ஹதீதை வைத்து சட்டம் சொல்கின்ற எம்மை ஹதீதை மறுப்பவர்கள் என்று சொல்லும் இவர்கள் மேற்குறித்த வாதத்தின் அடிப்படையில் அவர்களே அவர்களது குற்றச்சாட்டுக்கு இலக்காகிவிட்டார்கள் என்பதுதான் இங்கு வேடிக்கையானதாகும்.

தொழுத ஒருவரே மீண்டும் தொழ வைத்தாலும் அது மற்றொரு ஜமாஅத் தொழுகை தான். எனவே ஜமாஅத்தாக தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு மேற்கண்ட ஹதீஸே மிகச் சிறந்த சான்றாக இருக்கும் போது ஜமாஅத்தாகத் தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறுவது தவறானதாகும் என்பது மேற்படி நாம் குறிப்பிட்ட இஸ்லாமிய சட்ட விதிக்கு (ஒரு பொது முறை இருக்க விதிவிலக்காக ஹதீஸ்கள் இடம் பெற்றால் இந்த ஹதீஸ்கள் இடம் பெற்ற சமயம், சந்தர்ப்பம், சூழ் நிலை என்பவைகளைக் கவனத்திற் கொண்டு குறித்த சமயம், சந்தர்ப்பம், சூழ் நிலை என்பவற்றில் மாத்திரம் இந்த ஹதீஸ்களை நாம் அமுல் படுத்தலாமே தவிர எல்லா சமயங்களிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எச் சூழலிலும் அமுல்படுத்த முற்படக் கூடாது.) முற்றிலும் முரணானதாகும் என்பதை தெளிவாக விளங்க முடிகின்றது.

நாம் குறிப்பிட்ட ஐந்தாவது தத்துவம்.

5. எனவே இந்த ஹதீஸ் ஒருவருக்கு (இஸ்லாம் அனுமதித்த காரணங்களுக்கா) ஜமாஅத் தவறும் போது நாம் முன்னர் குறிப்பிட்ட ‘யார் அழகிய முறையில் வுழூ செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்துவிட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு அழ்ழாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழாதவர்களுக்கும் குறைத்து விடாமல் வழ‌ங்குகிறான்’. என்ற ஹதீஸின் படி தனியாக தொழுதாலே அதற்கான கூலியை அடைந்து கொள்வார். அல்லது ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்ட ஒருவர் விரும்பினால் அவருடன் சேர்ந்து தொழுது தர்மம் செய்யலாம் என்பதற்கான ஆதாரமே தவிர முதல் ஜமாஅத்தை தவறவிடுபவர்கள் சேர்ந்து இரண்டாம் ஜமாஅத்தும் அதைத் தவற விடுபவர்கள் மூண்றாம் ஜமாஅத்தும் அதைத் தவறவிடுபவர்கள் நாலாவது ஜ‌மாஅத்தும் அதைத் தவற………………….. இதற்கெல்லாம் ஆதாரம் இந்த ஹதீஸில் எங்கே இருக்கிறது!!

வரட்டுத்தத்துவம்

மறுபடியும் 57 ஜமாஅத்துக்கு தாவுகிறார். இவர் கூறுகிற வாதத்தின்படியும் 57 ஜமாஅத் வருமே அதற்கு இது ஆதாரமாகுமா? ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் எண்ணத்தில் ஒருவர் வந்தால் ஜமாஅத் முடிந்து விட்டாலும் ஜமாஅத் தொழுகையின் நன்மை கிடைத்து விடும் என்ற ஹதீஸை இங்கே எடுத்துக் காட்டுகிறார்.

முதலில் இவர் சுட்டிக்காட்டும் ஹதீஸ் பலவீனமானதாகும். அது சரியானது என்று வைத்துக் கொண்டாலும் குழப்பம் இல்லை. தாமதமாக வருபவருடன் சேர்ந்து தொழ ஒருவர் கிடைக்கவில்லையானால் அப்போது அவருக்கு ஜமாஅத்தின் நன்மை கிடைக்கும். யாராவது கிடைத்து விட்டால் அவருடன் சேர்ந்து தொழுதாலே அந்த நன்மையை அடைய முடியும் என்பது தான் இரண்டுக்கும் பொதுவான கருத்தாகும். இவர் கூறுகின்ற வாதத்தின் படியும் 57 ஜமாஅத் வருமே. அதற்கு இது ஆதாரமாகுமா?

எமது விளக்கம்

இதற்கு நாம் ஏற்கனவே பதில் கூறிவிட்டோம். அடுத்ததாக நாம் சுட்டிக்காட்டிய ஹதீத் பலவீனமானது என்று கூறியுள்ளார். அது எந்த அடிப்படையில் பலவீனமானது என்று சுட்டிக்காட்டும் பட்சத்தில் அது எந்தளவுக்கு ஆதாரபூர்வமான செய்தி என்பதை மிக அழகாக விளக்க முடியும். ஒரு கருத்துக்கு மிக பலமாக ஒரு ஆதாரத்தை முன்வைக்கின்ற போது அந்த ஆதாரம் பலவீனமானது என்று மொட்டையாகச் சொன்னால் அது ஆய்வாளர்களுக்கு அழகல்ல என்பதை நமது கொள்கைச் சகோதரர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாம் குறிப்பிட்ட ஆறாவது தத்துவம்.

6. எனவே குறித்த விடயத்தில் ச‌கோதரர் எஸ். எம். அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டதுபோல் நபி (ஸல்) அவர்களது அனுமதி கிடையாது என்பதுடன் ‘நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த, ஆர்வமூட்டிய காரியத்தை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை’ என்பதல்ல இங்கு கவனத்திற் கொள்ளப்படவேண்டியது. மாறாக நபிய‌வர்களின் வரையறைகளுடனான சுருங்கிய அனுமதியை வரையறைகள் அற்ற விரிந்த அனுமதியாக்குவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்பதையே நாம் கருத்திற் கொள்ளவேண்டும்.

வரட்டுத்தத்துவம்

இதுவும் அபத்தமான வாதமே. வரையறைகளுடன் சுருங்கிய அனுமதியாக இது இல்லை. வரையரை இல்லாத அனுமதிக்குள் இவர் தான் வரையரையத் தினித்திருக்கிறார். அதுதான் இவரது தடுமாற்றத்துக்குக் காரணம். இவர் வரையரை செய்தது தவறானது என்பதை முன்னர் விளக்கி விட்டோம். தாமதமாக வந்த ஒரு முஸ்லிம் ஜமாஅத்தின் நன்மையை இழக்கக் கூடாது என்ற பரந்த நோக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கும் போது குறுகிய நோக்கமாக இவர் சித்தரிக்கிறார்.

எமது விளக்கம்

இது வரையற்றதா அல்லது வரையற்றதை நாம் வரையரையாக்கி இருக்கிறோமா? என்பதை முன்னர் அவர்களது இரண்டாவது வரட்டுத்தத்துவத்திற்கான விளக்கத்தில் உதாரணங்களோடு விளக்கியுள்ளோம். முடிந்தால் அவற்றிற்கு பதில் சொல்லட்டும். அதை விட்டு விட்டு எந்த ஒரு ஆதாரத்தையும் முன்வைக்காமல் எம்மீது குற்றம் சுமத்துவது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.

தாமதமாக வந்த ஒரு முஸ்லிம் ஜமாஅதின் நன்மையை இழக்கக் கூடாது என்ற பரந்த நோக்கத்தை நபிகள் நாயகம் நாம் மேலே சுட்டிக்காட்டிய ஹதீதிலே சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்திவிட்டார்கள். அப்படியிருக்க இவர்களது மனோ இச்சைப்படியான விளக்கத்தை நபிகளாரின் விளக்கமாக சித்திரிக்க முயல்வது மிக மிக ஆபத்தான போக்காகும்.

நாம் குறிப்பிட்ட ஏழாவது தத்துவம்.

7. இதற்கு ஒரு நல்ல உதாரணமாக ‘மறைவான ஜனாஸாத் தொழுகை’யை குறிப்பிடலாம். எப்படி நபி (ஸல்) அவர்களின் பொது வழக்கத்திற்கு மாறான ‘நஜ்ஜாஷி அவர்களுக்கு தொழுவித்த‌ சம்பவத்தை மறைவான ஜனாஸாத் தொழுகை கூடும் என விளங்கிக் கொள்ளாமல் அது ‘அவருக்கு மட்டும் உரிய தனி நபர் சம்பவம்’ என்றோ அல்லது ‘குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிறதோ அவருக்கு மட்டும்’ என்றோ தழிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் புரிந்து கொள்வது போல் குறித்த ஹதீசையும் ‘குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிறதோ அவருக்கு நபியவர்கள் அனுமதித்த ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் தொழுத ஒருவர் சேர்ந்து தொழுவது என்ற முறையில் மாத்திரம்’ என சரியாக விளங்கிக் கொண்டால் இரண்டாம் ஜமாத்திற்கு அணுமதி என்ற கருத்துக்கே இடமில்லை.

வரட்டுத்தத்துவம்

நஜ்ஜாஷி மன்னர் விஷயத்தைப் பிரத்தியேகமானது என்று நாங்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவருக்குத் ஜனாஸா தொழுகை நடக்கவில்லை என்பது நமக்குத் தெரிய வந்தால் நாமும் ஜனாஸா முன்னால் இல்லாமல் தொழலாம் என்று பொதுவாகத்தான் புரிந்து கொள்கிறோம்.. ஏனெனில், ஒரு அடியார் இறந்து விட்டார். அவருக்கு தொழுகை நடத்தப்படவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணத்தைச் சொல்லி விட்டதால் அது பொதுவானதுதான். அது போல் ஏற்கனவே தொழுதவர் மட்டும்தான் இரண்டாவது ஜமாஅத்திற்கு உதவ வேண்டும் என்ற கருத்தை நபிகள் நாயகம் சொன்னதாக எடுத்துக் காட்டினால் தான் இவர் கூறுவது போல் புரிந்து கொள்ள முடியும்.

எமது விளக்கம்

நஜ்ஜாஷி மன்னர் விடயத்தை பிரத்தியோகமானது என்று நாம் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லிய அப்துன் நாஸர் அவர்கள் அவரே கூற்றில் உண்மையாளராக இல்லை. ஏன் தெரியுமா? ஏனெனில் ஒரு அடியார் இறந்து விட்டார். அவருக்கு தொழுகை நடாத்தப்படவில்லை என்று நபிகளார் காரணத்தைச் சொல்லிவிட்டதால் அது பொதுவானதுதான் என்ற கருத்தை முன்வைத்துத்தான் தனது வாதத்தையே ஆரம்பிக்கிறார். இது அழ்ழாஹ்வின் தூதரின் மீது சொல்லப்படும் அப்பட்டமான பொய்யாகும். நபிகளார் அப்படி எங்குமே சொல்லவில்லை. தமது கருத்துக்கு ஏற்றவாறு ஹதீத்களை வளைக்கமாட்டோம் என்று கூறிக்கொண்டு தமக்கு தேவை வருகின்ற போது நபிகளாரின் மீது இட்டுக்கட்டவும் இவர்கள் தயங்கவில்லை.

அடுத்து, நஜ்ஜாஷி மன்னனுக்கு ஜனாஸா தொழுவித்த ஹதீத் அவர்களுக்கு எதிரான ஒரு ஆதாரமே தவிர சாதகமான ஆதாரம் கிடையாது. எப்படி என்று பாருங்கள்! வெளிநாடுகளில் மரனிக்கின்ற எல்லோருக்கும் தொழுவிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, எவர்களுக்கு ஏற்கனவே தொழுவிக்கப்படவில்லையோ அவர்களுக்குத்தான் தொழுவிக்க வேண்டுமென்று குறிப்பாக அவர்கள் ஆக்கிக்கொள்கின்றனர். அதே போன்றுதான், நாமும் முதலாம் ஜமாஅத் தவறுகின்ற எல்லோரும் இரண்டு, மூன்று ஜமாஅத்கள் என்று நடாத்த முடியாது. மாறாக, (ஹதீதிலே இடம்பெற்றிருப்பதைப் போன்று) ஏற்கனவே தொழுத ஒருவர்தான் அப்படி ஜமாஅத்கள் நடாத்தலாம் என்று குறிப்பாக ஆக்கிக்கொள்கின்றோம்.

அது போல் ஏற்கனவே தொழுதவர் மட்டும்தான் இரண்டாவது ஜமாஅதிற்கு உதவ வேண்டும் என்ற கருத்தை நபிகளார் சொன்னதாக எடுத்துக்காட்டினால்தான் இவர் புரிந்து கொள்வது போல் புரிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார் சகோதரர் அப்துன் நாஸர் அவர்கள். நாம் குறிப்பிட்ட ஸதகா பற்றிய ஹதீத் இதனைத்தானே சொல்கிறது. இதனை அவரும் ஏற்றுக்கொண்டு விட்டு இவ்வாறு கேட்பதின் மர்மம்தான் என்ன? இருந்தாலும் கேட்டதற்காக அந்த ஹதீதை அப்படியே கீழே தருகின்றேன். இதோ அந்த ஹதீத்

حدثنا علي بن عاصم أخبرنا سليمان الناجي أخبرنا أبو المتوكل الناجي عن أبي سعيد الخدري قال صلى رسول الله صلى الله عليه وسلم بأصحابه الظهر قال فدخل رجل من أصحابه فقال له النبي صلى الله عليه وسلم ما حبسك يا فلان عن الصلاة قال فذكر شيئا اعتل به قال فقام يصلي فقال رسول الله صلى الله عليه وسلم ألا رجل يتصدق على هذا فيصلي معه قال فقام رجل من القوم فصلى معه

நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு லுஹர் தொழுகையை நடத்தி முடித்தவுடன் ஒரு ஸஹாபி தொழுவதற்கு வந்தார். தாமதமாக வந்த அந்த சஹாபியை பார்த்து தொழாமல் உண்ணை தடுத்தது எது என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அந்த ஸஹாபி ஒரு சில காரணங்களை கூறிவிட்டு தொழ எழுந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் இவருடன் சேர்ந்து தொழுது இவருக்கு தர்மம் செய்பவர் யாரும் இல்லையா? என்று கேட்டதும் ஒரு ஸஹாபி எழுந்து அவருடன் சேர்ந்து ஜமாஅத்தார் தொழுதார்கள். (நூல்: அஹ்மத் 11380)
அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

நாம் குறிப்பிட்ட எட்டாவது தத்துவம்.

8. ‘குறித்த‌ வரையறைகளை கவனத்திற் கொள்ளத் தேவையில்லை எனக் கருதுவோர் இரண்டாம் ஜும்மாவுக்கோ அல்லது இரண்டாம் பெருநாள் தொழுகைக்கோ இந்த ஹதீஸை வைத்து அனுமதியளிக்க முன்வருவார்களா என சிந்தித்தாலே ‘இரண்டாம் ஜமாத்திற்கு அணுமதி’ என்ற கருத்து எவ்வளவு தவறானது, பார தூரமானது என்பதை விளங்கிக் கொள்ள போதுமானதாகும்.

வரட்டுத்தத்துவம்

ஹதீஸில் கூறப்படுவதை இவர் ஏற்பவராக இல்லை. இவர் மனோ இச்சைப்படி தவறாக விளங்கிக் கொண்டதை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் வாதிடுகிறார். நாங்கள் எங்கள் விருப்பத்தின் படி ஹதீஸை வளைக்க மாட்டோம். ஜும்மாவுக்கும் பெரு நாள் தொழுகைக்கும் கூட இந்த அனுமதி உண்டு என்று தான் கூறுவோம். கூறுகிறோம். ஜமாஅத் தொழுகை கிடைக்காதவர் எப்படியும் ஜமாஅத் தொழுகை நன்மையை அடைவதற்காக ஏற்கனவே தொழுதவரைச் சேர்த்தாவது அந்த நன்மை கிடைக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முயற்சி செய்தார்களோ அது போன்ற அக்கரையுடனும், அவர்களின் அந்த உணர்வுடனும் தான் பெருநாள் தொழுகையயும் நாம் அணுகுவோம். பெருநாள் தொழுகை கிடைக்காதவர்கள் அந்த நன்மையை இழந்து விடக் கூடாது என்பதற்காக அவர்களும் பெருநாள் தொழுகையை இதே அடிப்படையில் தொழலாம். ஜும்மாவும் அப்படியே. இன்னும் சொல்வதாக இருந்தால் தமிழகத்தின் சில ஊர்களில் எமது மர்கஸ்களில் இடமின்மை காரணமாக பாதிப் பேர் தான் தொழ முடியும். மீதிப் பேர் வெளியே தான் நிற்க வேண்டும் .தொழுது முடிந்தவுடன் அதே பள்ளியில் இடம் கிடைக்காமல் நின்றவர்கள் மற்றொரு ஜும்மா நடத்துகிறோம். இடம் கிடைக்காவிட்டால் உங்களுக்கு ஜும்மா இல்லை என்று ஃபத்வா கொடுக்கும் உங்களுக்குத் தான் இந்தத் தத்துவம் பொருந்தும். எங்களுக்கு உளறலாகத் தான் தென்படும்.

எமது விளக்கம்

ஹதீஸில் கூறப்படுவதை இவர் ஏற்பவராக இல்லை. இவர் மனோ இச்சைப்படி தவறாக விளங்கிக் கொண்டதை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் வாதிடுகிறார். நாங்கள் எங்கள் விருப்பத்தின் படி ஹதீஸை வளைக்க மாட்டோம் என்று இவர்கள் கூறுவதானது பொய்க்கு மேல் பொய்யைச் சொல்லி உண்மையாக்களாம் என்ற கோயபல்சுடைய தத்துவத்தை அச்சொட்டாக பின்பற்றுகிறார்கள் என்பதைத்தான் எம்மால் அவதானிக்க முடிகின்றது. ஏனென்றால் மனோ இச்சைப்படி ஹதீத்களை வளைப்பவர்கள் யாரென்பதை மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவே, ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி அதனை உண்மையாக்க முனையாதீர்கள் என்பதை மிக மிகத் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம். இன்னும் சொல்லப்போனால் இதில் மனோ இச்சைக்கு எங்கே இடமிருக்கிறது? இரு ஜமாஅத்கள் நடந்தால்தான் என்ன? நடக்காமல் விட்டால்தான் எமக்கென்ன? இதில் எந்த மனோ இச்சையும் இல்லை என்பதை அறிவுடைய மக்கள் விளங்கிக்கொள்வார்கள்.

ஜும்மாவுக்கும் பெருநாள் தொழுகைக்கும் கூட இந்த அனுமதி உண்டு என்று தான் கூறுவோம். கூறுகிறோம். ஜமாஅத் தொழுகை கிடைக்காதவர் எப்படியும் ஜமாஅத் தொழுகை நன்மையை அடைவதற்காக ஏற்கனவே தொழுதவரைச் சேர்த்தாவது அந்த நன்மை கிடைக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முயற்சி செய்தார்களோ அது போன்ற அக்கரையுடனும், அவர்களின் அந்த உணர்வுடனும் தான் பெருநாள் தொழுகையயும் நாம் அணுகுவோம். பெருநாள் தொழுகை கிடைக்காதவர்கள் அந்த நன்மையை இழந்து விடக் கூடாது என்பதற்காக அவர்களும் பெருநாள் தொழுகையை இதே அடிப்படையில் தொழலாம். ஜும்மாவும் அப்படியே. இன்னும் சொல்வதாக இருந்தால் தமிழகத்தின் சில ஊர்களில் எமது மர்கஸ்களில் இடமின்மை காரணமாக பாதிப்பேர்தான் தொழ முடியும். மீதிப் பேர் வெளியே தான் நிற்க வேண்டும் .தொழுது முடிந்தவுடன் அதே பள்ளியில் இடம் கிடைக்காமல் நின்றவர்கள் மற்றொரு ஜும்மா நடத்துகிறோம்.

இவர்களின் அபூர்வ பத்வாவைப் பாரத்தீர்களா? எத்தனை ஜும்ஆக்கள் வேண்டுமானாலும் நடாத்திக்கொள்ளலாமாம்! எத்தனை பெருநாள் தொழுகைகள் வேண்டுமானாலும் நடாத்திக்கொள்ளலாமாம்! இதற்கு அவர்கள் காட்டுகின்ற ஆதாரம்தான் வேடிக்கையானதும் வினோதமானதுமாகும். ஜமாஅத் தொழுகைக்கு இவர்கள் எதை ஆதாரமாக எடுக்கின்றார்களோ அதே ஹதீதைத்தான் ஜும்ஆத் தொழுகைக்கும் பெருநாள் தொழுகைக்கும் ஆதாரமாக காட்டுகின்றனர். இது தெளிவான கியாஸ் இல்லையா? அதுவும் மத்ஹப் சார்ந்த கிதாபுகளில் கூட இபாதத்களில் கியாஸ் எடுக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தும் குர்ஆன் ஸுன்னா மட்டும்தான் இஸ்லாமிய சட்ட மூலாதாரம், இஜ்மா, கியாஸ், ஸலபு அறிஞர்களின் கூற்று போன்றவையெல்லாம் எந்த வகையிலும் மார்க்க ஆதாரமாக அமையாது என்ற சத்தியக் கொள்கையோடு களமிறங்கிய TNTJ யினது கொள்கை ஏன் இப்படி திசை மாறிப்போனது? ஒரு வாதத்திற்கு ஸதகா பற்றிய ஹதீத் இவர்களுக்கு சாதகமான ஆதாரமாக வைத்துக்கொண்டாலும் (இல்லை என்பதை முன்னர் தெள்ளத் தெளிவாக நிரூபித்துவிட்டோம்) அதனை பெருநாள், ஜும்ஆத் தொழுகைகளுக்கு எப்படி கியாஸ் மூலம் வேலி பாய்ந்து ஆதாரத்தை எடுத்தார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது. அழ்ழாஹ்வே நம் அனைவரையும் கொள்கையிலிருந்து தடம்பிரழச் செய்யாமல் பாதுகாக்க வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட ஜமாஅத்கள் நடாத்துவது கூடும் என்ற கருத்தினுடைய தௌஹீத் அறிஞர்களில் பலர்கள் கூட இவ்வாறு சொன்னதில்லை. அப்படியிருக்க TNTJ இந்த இடத்தில் தனது ஸ்தீரமான காலைச் சறுக்கிவிட்டதுதான் அதிர்ச்சியான உண்மையாகும்.

இடம் கிடைக்காவிட்டால் உங்களுக்கு ஜும்மா இல்லை என்று ஃபத்வா கொடுக்கும் உங்களுக்குத் தான் இந்தத் தத்துவம் பொருந்தும். எங்களுக்கு உளறலாகத் தான் தென்படும்.

இஸ்லாம் கூறுகின்ற பத்வாவை வழங்கினால் உங்களுக்கு உளரலாகத்தான் இருக்குமென்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும். ஜும்ஆவிற்கு தாமதித்தவர் எவ்வாரு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் அழகிய முறையில் சொல்லித் தந்திருக்கிறது. அப்படியிருக்க இஸ்லாத்தில் இல்லாத பத்வாவை சொல்லும் உங்கள் எழுத்துக்கள்தான் எங்களுக்கு உளரலாக இருக்கிறது.

அடுத்து, ஒன்றிற்கு மேற்பட்ட ஜமாஅத்கள் இஸ்லாத்தில் இல்லை என்பதற்கு மிகப்பெரிய ஆதாரங்களாக இரண்டு விடயங்களைக் கூற முடியும்.

01: நபியவர்களின் மனம் ஜமாஅதிற்கு பிந்தியவர்களின் வீடுகளை எரிப்பதற்கு விரும்பியமை. இரண்டாம் ஜமாஅத் என்ற ஒன்று இருந்திருந்தால் நபியவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கமாட்டார்களல்லவா?

02: ‘ஸலாதுல் ஹெளப்’ என்று அழைக்கப்படக்கூடிய யுத்த களத்தில் தொழுவிக்கப்படக்கூடிய தொழுகை கூட இரண்டு ஜமாஅத்களாக நடாத்தப்பட வேண்டிய அத்தியாவசியம் இருந்தும் கூட ஒரு ஜமாஅதாகவே நடைபெற்றிருக்கின்றது. இரண்டு ரகஅத்களாக தொழுவிக்கப்படக் கூடிய தொழுகையில் இரண்டு சாரார்கள் ஒவ்வொரு ரகஅதாக தொழுமாறு நபிகளார் பணிக்கிறார்களே! ஒன்றுக்கு மேற்பட்ட ஜமாஅத்கள் நடாத்துவது கூடும் என்று கருதும் சகோதரர்கள் இந்த இடத்தில் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் உண்மை புலனாகி விடும்.

குறிப்பு: நான் வெளிநாட்டு பல்கலைக் கழகமொன்றில் கல்வி கற்கும் மாணவனாக இருப்பதால் பல்வேறு வேலைப் பழுக்களுக்கு மத்தியில்தான் இதனை எழுதினேன். அதனால்தான் இக்கட்டுரை வெளிவருவதற்கு தாமதமாகிவிட்டது. மற்றும் இது தொடர்பாக தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அறிஞர்கள் பதில் எழுதுகின்ற பட்சத்தில் அவற்றில் நியாயங்கள் இருப்பின் அவற்றை மணப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம் என்பதையும் மீண்டும் அவற்றில் அபத்தங்களும் தவறுகளும் இருக்கும் பட்சத்தில் அவற்றிற்கும் தக்க பதில்கள் எழுதுவேன் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டுக் கொள்வதோடு நான் எழுதியவற்றில் மணங்கள் புன்படும் படியான வார்த்தைகள் ஏதும் இருந்தால் அழ்ழாஹ்விற்காக அவற்றை மன்னித்துக் கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கின்றேன். தங்களின் ஜமாஅதிற்கு சட்டப்பிரச்சினைகளில் முரண்பட்டதற்காக என்மீது பலவேஷக் கொள்கையுடையவன் போன்ற பட்டங்களைக் கொடுத்து தங்களின் மீது நானும் எமது அமைப்பும் வைத்திருக்கின்ற நம்பிக்கைகளை இல்லாமல் செய்யவேண்டாம் என்பதை பணிவோடு கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். அழ்ழாஹ் எம் அனைவருக்கும் சத்தியத்தை சத்தியமாக காட்டி அதனை பின்பற்றுவதற்கும், அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி அவற்றிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கும் அருள்புரிவானாக.

நிறைகள் அனைத்தும் இறைவனைச்சாரும், குறைகள் அனைத்தும் என்னைச்சாரும்

அழ்ழாஹ்வின் அருளை ஆதரவு வைக்கும் இறையடியான்
மௌலவி MFM சிபான் (பலாஹி)

Email: alhafilshifan@gmail.comabooashfaq@gmail.com

Mobile: 0020147909634

Skype ID : mfm.shifan

Yahoo ID :mfm.shifan

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers