Skip to content

மனத்தூய்மையும் (இஹ்லாஸ்) உளப்பரிசுத்தமும் (தஸ்கியா)

January 28, 2010

மனித வாழ்க்கையை எடுத்து நோக்குகின்ற போது மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு தனி மனிதர்களிடத்திலும் கட்டாயம் குடிகொண்டிருக்க வேண்டியப பண்புகளே மனத்தூய்மையும் உளப்பக்குவமுமாகும். அவ்வாறு வாழ்கின்ற போதுதான் இந்த உலகத்தில் ஒவ்வொறு மனிதனும் எதிர்பாரக்கின்ற நிம்மதிப் பெறுமூச்சு என்ற ஒன்றை பெறமுடியும். இந்த இரண்டு பண்புகளும் இல்லாத காரணத்தினால்தான் பொறாமை, வஞ்சகம், கபடு, மற்ற சகோதரனுக்கு குழி பறிக்க வேண்டுமென்ற உணர்வு, ஒரு முஸ்லிமின் சுய கௌரவத்தில் விளையாடுவது, அவனை மேடைகள் போட்டு மானபங்கப்படுத்துவது, மது, சூது, விபச்சாரம், திருட்டு, கொலை, முகஸ்துதி, பெற்றோர்களை உதாசீனம் செய்வது, முதியவர்களை மதியாமை, சிறியோர்களுக்கு இரக்கம் காட்டாமை போன்ற பல சமுதாயச் சீரகேடுகளும் மோசமான கலாச்சாரங்களும் மேலோங்கி காணப்படுவதை பரவலாகப் பார்க்கின்றோம்.

இத்தகைய பண்புகளில் ஒன்று ஒரு மனிதனிடத்தில் காணப்படுகின்ற போது அவனைப் பார்த்து மனிதாபிமானம் இல்லாதவன் என்று சொல்கின்றோம். மனித நேயம் அல்லது மனிதாபிமானம் இல்லாதவன் மனிதன் என்ற நிலையிலிருந்து மிருகம் என்ற நிலைக்கு மாறுகின்றான். இதனால்தான் திருமறைக் குர்ஆன் கால்நடைகளை விட மோசமான படைப்பினமாக மனிதனை சித்தரிக்கின்றது. மனிதாபிமானம் இல்லாவிட்டால் அவன் மனிதனே இல்லை என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். இத்தகைய பண்புகள் வரவழைக்கப்படுவது மனிதனுக்குள்ளே இருக்கின்ற உள்ளம் என்ற சதைப் பின்டத்திலிருந்தாகும். இதனால்தான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.                                                                         3 ஃ ص 1219 إلا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب

‘அறிந்து கொள்ளுங்கள்! உடலிலே ஒரு சதைப்பின்டம் இருக்கின்றது. அது சீரடையும் போது உடல் முழுவதுமே சீராகிவிடும். அது சீர் கெட்டு விடும் போது உடல் முழுவதுமே சீர்கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அதுதான் உள்ளமாகும்’ (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1599)

மேற்படி நபிகளாரின் கூற்று நான் மேற்சொன்ன கருத்தை தௌ;ளத்தெளிவாக உணர்த்தி நிற்கின்றதல்லவா? எனவேதான், இந்த உலகத்தில் சன்டைகள், சச்சரவுகள், பஞ்சமா பாதகங்கள் இல்லாமல் ஒரு மனிதன் எதிர்பார்க்கின்ற உண்மையான நிம்மதியைப் பெறவேண்டுமாக இருந்தால் மனித உள்ளங்கள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அந்த சிகிச்சைகள்தான் மனத்தூய்மையும் உளப்பக்குவமுமாகும். இதனால்தான் இஸ்லாம் மனத்தூய்மையை இபாதாக்களின் ரூஹாக (உயிராக) வர்ணிக்கின்றது.

குர்ஆனையும் ஸுன்னாவையும் வெளிரங்கத்தில் பிரச்சாரம் செய்வதாலோ நடைமுறைப் படுத்துவதாலோ ஒரு காலமும் நாம் ஒவ்வொருவரும் ஆசிக்கின்ற சுவனலோகத்தைப் பெறமுடியாது. இஹ்லாஸ் என்ற மனத்தூய்மை இருந்தால் மாத்திரமே சுவனம் செல்லமுடியும். இதனால்தான் ஒரு இபாதத் அழ்ழாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருந்தால் அதற்கு முதல் நிபந்தனையாக இஸ்லாம் வைத்திருப்பது இஹ்லாஸ் என்ற மனத்தூய்மையைத்தான். எந்த அளவுக்கெனில் அழ்ழாஹ்வுக்கு இணைவைக்காமல் அவனை மாத்திரம் வணங்கி வழிபட்டால் கூட அவனிடத்திலும் இஸ்லாம் இஹ்லாஸ் என்ற மணத்தூய்மையைதான் எதிர்பார்க்கின்றது. இதனை பின் வரும் அல்குர்ஆன் வசனம் எமக்கு தெளிவாகச் சொல்லித்தருகின்றது.

. وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ البينةஃ5

‘அழ்ழாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அழ்ழாஹ்வை அவர்கள் வணங்கவேண்டும், மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும், மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.’ (அல்குர்ஆன் 98:5)

அதேபோன்று அழ்ழாஹுதஆலா சுவனவாதிகளின் இறுதி முடிவையும் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்ற அருட்கொடைகளைப்பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றான்: وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا الإنسانஃ8،

‘மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அழ்ழாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை (என்று அவர்கள் கூறுவர்) ‘ (அல்குர்ஆன் 76:8,76:9)

இந்த பாக்கியங்கள் இஹ்லாஸ் என்ற மணத்தூய்மைக்கு பிரதி உபகாரங்களாகும் என்பதை மேற்படி வசனம் கூறி நிற்கின்றது. அதே போன்று நாம் மேலே சொன்னவாறு இஹ்லாஸ் என்ற மனத்தூய்மைதான் இஸ்லாத்தின் அஸ்திவாராகும் என்ற கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள்.

صحيح البخاري – ج 1 ஃ ص 3 1 – حدثنا الحميدي عبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه و سلم يقول (إنما الأعمال بالنيات وإنما لكل امرىء ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه)

‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என உமர் இப்னு கத்தாப் (ரழி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். (நூல்: ஸஹீஹுல் புஹாரி 54, 2392, 3685, 4783, 6311, 6553)

மேலும் இறைவன் இஹ்லாஸ் என்ற மனத்தூய்மைக்கு எதிராக இருக்கின்ற ஷிர்க் (இணைவைத்தல்) ரியாஃ (முகஸ்துதி) போன்றவைகள் நமது வணக்கங்களை பால்படுத்திவிடும் என்ற கருத்தை பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ الزمرஃ65

‘அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள் (என்பதுவேயாகும்)’ (அல்குர்ஆன் 39:65)

இது இவ்வாறிருக்க இஹ்லாஹ் என்ற மனத்தூய்மை, இல்லாமல் போவதினால் நாளை மறுமையில் மனிதனுக்கு கிடைக்கவிருக்கின்ற மிக பயங்கரமான தண்டனைகளப்பற்றி அழ்ழாஹ்வின் தூhர் (ஸல்) அவர்கள் எவ்வாறு விளக்குகின்றார்கள் என்பதை நன்றாக அவதானியுங்கள்.

صحيح مسلم – ج 3 ஃ ص 1513 ( 1905 )حدثنا يحيى بن حبيب الحارثي حدثنا خالد بن الحارث حدثنا ابن جريج حدثني يونس بن يوسف عن سليمان بن يسار قال تفرق الناس عن أبي هريرة فقال له ناتل أهل الشام أيها الشيخ حدثنا حديثا سمعته من رسول الله صلى الله عليه و سلم قال نعم سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ( إن أول الناس يقضى يوم القيامة عليه رجل استشهد فأتى به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها ؟ قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لأن يقال جريء فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها ؟ قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله فأتى به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها ؟ قال ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஹதீதின் பொழிப்பு) ‘கியாமத் நாளில் முதன் முதலில் தீர்ப்புச் சொல்லப்படுகின்ற மனிதர் அழ்ழாஹ்வின் பாதையில் வீர மரணம் அடைந்த இறை தியாகியாவார். அவரை (அழ்ழாஹ்வின் முன்னிலையில்) கொண்டு வரப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகளை (அழ்ழாஹ்) ஞாபகப்படுத்துவான். அந்த மனிதனும் உடனே அவற்றை அறிந்து கொள்வான். உமக்கு தரப்பட்டிருந்த இந்த அருளை வைத்து நீர் என்ன அமல் செய்தாய் என்று அழ்ழாஹ் கேட்க, நான் வீர மரணம் அடையும் அளவுக்கு போராடினேன் என்று அந்த மனிதன் பதிலளிப்பான். அதற்கு அழ்ழாஹ் அதனை மருத்துரைத்து இல்லை நீர் பொய் சொல்கிறாய், எனினும் நீர் யுத்தம் செய்தது உண்மைதான். ஆனால், வீரன் என்று போற்றப்பட வேண்டுமென்பதற்காகவே யுத்தம் செய்தாய் என்று கூறுவான். அதன் பின் அவனுடைய முகத்தை இழுத்துக்கொண்டு வரப்பட்டு நரகத்தில் அவனை வீசப்படும். மேலும், கல்வியைக் கற்று அதனை பிறருக்கு கற்றுக்கொடுத்து அல்குர்ஆனை ஓதிய மனிதனை கொண்டுவரப்படும். அவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகளை (அழ்ழாஹ்) ஞாபகப்படுத்துவான். அந்த மனிதனும் உடனே அவற்றை அறிந்து கொள்வான். உமக்கு தரப்பட்டிருந்த இந்த அருளை வைத்து நீர் என்ன அமல் செய்தாய் என்று அழ்ழாஹ் கேட்க, நான் அறிவைக் கற்று, அதனை பிறருக்கு கற்றுக்கொடுத்து, அல்குர்ஆனையும் ஓதினேன் என்று அந்த மனிதன் பதிலளிப்பான். அதற்கு அழ்ழாஹ் அதனை மருத்துரைத்து இல்லை நீர் பொய் சொல்கிறாய், எனினும் நீர் கல்வியைக் கற்றது அறிவாளி என்று (மக்களால்) அழைக்கப்பட வேண்டுமென்பதற்காக! திருமறைக் குர்ஆனை ஓதியது காரிஃ (அழகாக ஓதுபவர்) என்று (மக்களால்) அழைக்கப்படுவதற்காக! என்று கூறுவான். அதன் பின் அவனுடைய முகத்தை இழுத்துக்கொண்டு வரப்பட்டு நரகத்தில் அவனை வீசப்படும். மேலும், இறைவன் பொருளாதார வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து அவனது வாழ்க்கையில் விருத்தி செய்த மனிதனை கொண்டுவரப்படும். அவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகளை (அழ்ழாஹ்) ஞாபகப்படுத்துவான். அந்த மனிதனும் உடனே அவற்றை அறிந்து கொள்வான். உமக்கு தரப்பட்டிருந்த இந்த அருளை வைத்து நீர் என்ன அமல் செய்தாய் என்று அழ்ழாஹ் கேட்க, அந்த மனிதனோ நீர் எந்தெந்த பாதையில் பொருளாதாரங்கள் செலவளிக்கப்பட வேண்டுமென்று விரும்பினாயோ அத்தனை பாதைகளிலும் நான் உணக்காக செலவளித்தேன் என்று பதிலளிப்பான். அதற்கு அழ்ழாஹ் அதனை மருத்துரைத்து இல்லை நீர் பொய் சொல்கிறாய், எனினும் நீர் எனது பாதையில் செலவு செய்தது உண்மையே! ஆனாலும் கொடை வள்ளல் என்று (மக்களால்) அழைக்கப்பட வேண்டுமெனபதற்காகவே அவ்வாறு செய்தாய் என்று கூறுவான். அதன் பின் அவனுடைய முகத்தை இழுத்துக்கொண்டு வரப்பட்டு நரகத்தில் அவனை வீசப்படும்.’ (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1905)

அன்பார்ந்த சகோதரர்களே, மேற்கூறப்பட்ட நபிமொழி கூறும் ஆழமான கருத்தை அவதானித்தீர்களா? இந்த முஸ்லிம் சமூகத்தின் ஆணிவேராக இருக்கின்ற அறிவாளிகள், கொடையாளிகள், ஷுஹதாக்கள் போன்றோரினது நிலையைப் பார்த்தீர்களா? வட்டி, விபச்சாரம், மது, சூது போன்ற பாவங்களில் ஈடுபட்டால் மட்டும்தான் நரகலோகம் கிடைக்கும் என்று என்னிவிடலாகாது. மாறாக, யுத்த களத்தில் போராடி இரத்தம் சிந்தினாலும் நரகம் கிடைக்கும். கல்வி கற்று அதனை பிறருக்கு கற்றுக்கொடுத்து அல் குர்ஆனை அழகுற ஓதினாலும் நரகம் கிடைக்கும். அழ்ழாஹ்வின் பாதையில் வாரி வாரி செலவு செய்தாலும் நரகம் கிடைக்கும். எவ்வளவு பெரிய நஷ்டம் பாரத்தீர்களா? (நம் அனைவரையும் அழ்ழாஹ் இக்கூட்டத்திலிருந்து பாதுகாப்பானாக) வெளிரங்கத்திலுள்ள பாவமான காரியங்கள் மட்டும்தான் நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்று என்னிக்கொண்டிருக்கின்ற பலருக்கு மேற்கூறப்பட்ட நபிமொழியில் மிகப்பெரிய பாடமும் படிப்பினையும் இருக்கிறது.

நாம் செய்கின்ற நல்லரங்கள் அனைத்தையும் அளித்துவிடக்கூடிய மிகப்பெரிய ஒரு பாவம்தான் இஹ்லாஸ் என்ற மனத்தூய்மைக்கு எதிரான முகஸ்துதி என்ற இனைவைப்பாகும். இதனால்தான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) ‘அவரகள் ‘செயற்பாடுகள் அனைத்தும் எண்ணங்களை வைத்தே தீரமானிக்கப்படுகின்றன’ என்றார்கள். என்னங்கள் அழ்ழாஹ்விற்காக என்று இருக்குமாக இருந்தால் மட்டுமே அந்த அமல்களினூடாக நாம் எதிர்பார்க்கின்ற பலாபலன்கள் கிடைக்கும். இல்லாவிட்டால் அவையே எம்மை நரகில் கொண்டு போய் சேர்த்து விடும். இப்படிப்பட்ட நிலையில் நாம் நல்லமல்கள் செய்வதும் தீய அமல்கள் செய்வதும் ஒன்றேதான்.

முகஸ்துதிக்காக (இஹ்லாஸ் இல்லாமல்) ஒரு அமலைச் செய்வதை விட அதனைச் செய்யாமலிருப்பது பல மடங்கு மேலாகும். எனவேதான், ஒரு மனிதன் சுவர்க்கம் நுழைவதும், நரகம் நுழைவதும் இஹ்லாஸ் என்ற மனத்தூய்மையை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. இதனால்தான் அபுல் அன்பியாஃ என்று அழைக்கப்படுகின்ற நபி இப்ராஹீம் (அலை) தனது இரட்சகனிடத்தில் தூய்மையான உள்ளத்தை தனக்கு தரும்படி வேண்டுகிறார்கள். அந்த இஹ்லாஸ் நிறைந்த உள்ளம் இருந்தால் மாத்திரம்தான் அழ்ழாஹ்வின் ஹலீலாகிய நான் கூட நாளை மறுமையில் ஈடேற்றம் பெற முடியும் என்று அழ்ழாஹ்விடம் இறைஞ்சுகின்றார்கள். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிட்டுக்காட்டுகின்றது.

وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ (87) يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ (88) إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ الشعراءஃ87-89

”இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக் குள்ளாக்காதிருப்பாயாக!” 26:87. ”அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்கமாட்டா.” 26:88. ‘‘எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அழ்ழாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).” 26:89.

அழ்ழாஹ்வுக்கு மாத்திரம் பயந்து அவனுக்காகவே நமது வணக்கங்களைப் புரிந்து இஹ்லாஸ் உள்ள அடியார்களாக வாழ்கின்ற போது நாம் இந்த உலகில் எதிர்பார்க்கின்ற சுபீட்சமும், ஒற்றுமையும், நிம்மதியும் எம்மை அறியாமலேயே எம்மை வந்தடையும். இதனை அல்குர்ஆன் இப்படிச்சொல்கின்றது.

وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ الطلاقஃ2،

எவர் அழ்ழாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். 65:2. அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவனுக்கு பயனலிக்கின்ற (அனைத்து) அளிக்கிறான், 65:3. மேலும், நம்மை இறைவன் சகல அளிவுகளிலிருந்து பாதுகாத்து அவனது திருப்பொருத்தத்திலேயே ஆக்கிவிடுவான். இதற்கு சிறந்ததொரு உதாரணம் நபி யூஸுப் (அலை) அவர்களாவார்கள். நபி யூஸுப் (அலை) அவர்களை எகிப்து அரசனின் மனைவி யாருமே இல்லாத நேரத்தில் அவளது அளவை மீறிய காமத்தினால் விபச்சாரத்தின் பால் அழைத்த போது அழ்ழாஹ் அவரை பாதுகாத்தான். இதனை அல்குர்ஆன் எப்படிச்சொல்கின்றது என்று பாருங்கள்!

وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَنْ رَأَى بُرْهَانَ رَبِّهِ كَذَلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ يوسفஃ24

‘ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் – ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார். 12:24. நபி யூஸுப் (அலை) அவர்களும் அழ்ழாஹ்வின் அத்தாட்சியை கண்டிராவிட்டால் மேற்படி தகாத செயலில் சிக்கியிருப்பார்கள். இவ்வாரான மாணக்கேடான காரியத்தில் அவர் ஈடுபடுவதை விட்டும் அவரை நாம் தடுத்தது அவர் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தமையினால்தான் என்று அழ்ழாஹ் குறிப்பிடுகின்றான். எனவே, இந்த உலகத்தில் மணத்தூய்மையோடு வாழ்கின்ற போது அழ்ழாஹ் எம்மை சகல மானக்கேடான அசிங்கமான செயற்பாடுகளிலிருந்தும் பாதுகாப்பான் என்பதை நபி யூஸுப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து விளங்க முடிகின்றதல்லவா?

எனவே, மேற்சொன்ன அம்சங்களிலிருந்து என்னையும் உங்களையும் பாடம் பெற்றவார்களாக அழ்ழாஹ் ஆக்கி அருள்வானாக!

(தொடரும்)

மௌலவி, அல் ஹாபிழ் எம்.எப்.எம் சிபான் அபூ அஷ்பாக் (பலாஹி)


Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers