Skip to content

மத்ஹபுகள் ஓர் இஸ்லாமியப் பார்வை

November 26, 2009

இன்று தோன்றியுள்ள மார்க்கப் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமே மத்ஹபுச் சட்டங்கள்தான். குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமான சட்டங்களைப் போதிக்கும் மத்ஹபுகள் எமது நாட்டில் மாத்திரமல்லாது உலக நாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இந்த மத்ஹபு மாயையில் சிக்கியுள்ள அப்பாவி முஸ்லிம்கள் அதன் விபரீதம் புரியாமல் தமது வணக்க வழிபாடுகளில் மத்ஹபுச் சட்டங்களையே பெரும்பாலும் பின்பற்றுகின்றனர்.

இம் மத்ஹபுகளே அநேக அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் சேர்த்து போதிக்கப்படுகின்றது. அனைத்து வழிகெட்ட கொள்கைகளும், அனாச்சாரங்களும், பித்அத்துக்களும் தோன்ற அடிப்படைக் காரணியாக அமையும். இம் மத்ஹபுகள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும். அதற்கு நாம் இரண்டு விடயங்களை கவனத்திற் கொள்ளவேண்டும்….

____________________________________________________________________________________________________

இன்று உலகில் வாழம் முஸ்லிம்களில் கணிசமானோர் நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றுகின்றனர. இம்மத்ஹபுகளைத் தொகுத்தவர்கள் கண்ணியமிக்க இமாம்களான அபு ஹனிபா,ஷாபிஈ, மாலிகி, ஹம்பலி, ஆகியோர்கள்தான் என்றும் நம்புகின்றனர்.

இந் நம்பிக்கை முற்றிலும் தவறானதாகும். எவ்வாறு இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையோ, அதே போன்று மத்ஹபுகளுக்கும் நான்கு இமாம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இமாம்கள் மத்ஹபுகளைத் தொகுக்கவுமில்லை, தங்களை பின்பற்றுங்கள் என்று சொல்லவுமில்லை.. இவ்விமாம்கள் மீது கொண்ட அளவுகடந்த பக்தியினால் இவர்களின் மாணவர்களால் உருவாக்கப்பட்டவைகளே மத்ஹபுகள்.

____________________________________________________________________________________________________

இஸ்லாமிய வரலாற்றில் நபியவர்களின் மரணத்தைத் தொடர்ந்து பல பிரிவுகள் தோன்றின. இப்பிரிவுகளில் முக்கியமாக அரசியல் ரீதியாகத் தோன்றிய பிரிவினறையும்,மத்ஹபுகள் ரீதியாக தோன்றிய பிரிவினரும் குறிப்பிடலாம். இந்தப்பிரிவினர் ஒவ்வொருவரும் குர்ஆன், ஹதீஸை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்று தவறான விளக்கங்கள் கொடுக்கலானார்கள். சரியான ஹதீஸ்களில் தங்களுக்கு சாதகமான விஷயங்கள் இல்லாத போது தங்கள் கொள்கையை வலுப்படுத்த பல ஹதீஸ்களை இட்டுக்கட்டி கூற ஆரம்பித்தனர்…

____________________________________________________________________________________________________

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாக அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் அமைந்திருக்கின்றது. இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொரு முஸ்லிமும் இவ்விரண்டின் அடிப்படையிலும் தமது வாழ்வின் எல்லா அம்சங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.

மத்ஹபு நூற்களைப் பொறுத்த மட்டில் அவற்றில் அல்குர்ஆனுக்கு மாற்றமான சட்டங்கள் காணப்படுவது போல் நபிவழிக்கு நேர் முரணான சட்டங்களும் மலிந்து காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை நோக்குவோம்

____________________________________________________________________________________________________

மத்ஹபுகளில் காணப்படும் ஆபாசத்தைப் போதிக்கும் சட்டங்கள் சிலவற்றைப் தெளிவு படுத்தவுள்ளோம். ஒருவன் இப்படியெல்லாம் சிந்திப்பானா? என்று எண்ணுமளவிற்கு மத்ஹபு நூலாசிரியர்கள் கற்பனை செய்துள்ளார்கள். வக்கிர புத்தி கொண்டவர்களை விடவும் இந்த மத்ஹபு நூலாசிரியர்கள் மிக மோசமாக கற்பனை செய்துள் ளார்கள் என்பதை நாம் அவர்களது நூற்களிருந்தே மேற்கோள்காட்டுவதிலிருந்தே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

____________________________________________________________________________________________________

மத்ஹபுகளில் உள்ள மக்களைக் குழப்பக்கூடிய சட்டங்கள் சிலவற்றை நோக்குவோம்.

இஸ்லாம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தத்துவத்தை உரக்கச் சொல்லக் கூடிய ஓர் மார்க்கமாகும். இஸ்லாத்தில்; ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன், வெள்ளையன். கறுப்பன் என்ற வித்தியாசம் கிடையாது. அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்பதை உலகிற்குப் போதிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை வேற்று மதத்தில் இருப்பவர்கள் கூட ஏற்றுக்கொள்கின்றனர்.

இத்தூய இஸ்லாமிய மார்க்கத்தில் இன வேறுபாட்டை காட்டும் வகையில் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலியென்று மத்ஹபுகளின் பெயரால் இவர்கள் பிரிந்தது மாத்திரமின்றி சட்டங்களிலும் பாகுபாடு காட்டுவது அழ்ழாஹ்வுக்குச் சொந்தமான மார்க்கம் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது…

____________________________________________________________________________________________________

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers