நொந்து நூலாகும் நாட்டுக்கு நாடு பிறை ஆகில் அஹ்மத் அவர்களின் கட்டுரைக்கான மறுப்பு!
(சரிந்து விழும் சர்வதேசப் பிறை சாட்சி சொல்கின்றது சவூதி அரேபியா என்ற ஆகில் அஹ்மத் அவர்களின் ஆக்கத்தை இங்கே பார்க்கலாம்.)
அல்குர் ஆன் அஸ்ஸுன்னா வலியுறுத்தும், பூகோள மற்றும் வாணியல் காரனிகள் உறுதி செய்யும், ஏன் ஒழித்துக் கட்டப் பட வேண்டிய மத்ஹபுகள் கூட (பெரும்பாண்மை அறிஞர்களது அபிப்பிராயம்) எடுத்துக் கூறும் சர்வதேசப் பிறை என்ற நிலைப் பாட்டில் நாம் இருக்கிறோம்.
இதற்கு மாற்றமாக நாட்டுக்கு நாடு பிறை என்ற நிலைப்பாட்டில் உள்ள சகோதரர்கள் குழும அன்பர்கள் மற்றும் உலமாப் பெருமக்கள் மற்றும் கல்விமான்கள் தங்களது நிலைப்பாட்டை நிரூபிக்க அல்லது நியாயப் படுத்த ஒன்றில் அல்குர் ஆன் அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் முன் வர வேண்டும். அல்லது குறைந்த பட்சம் மத்ஹபுகளைச் சரிகாணக் கூடியவர்கள், அவை இஸ்லாமிய சிந்தனைப் பாரம் பரியம் என மத்ஹபுகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் மத்ஹபு அடிப்படையிலாவது நாட்டுக்கு நாடு பிறைதான் சரியான நிலைப்பாடு என்று நிரூபிக்க முன்வரவேண்டும். அல்லது அறிவுபூர்வமான வாதங்கள் வாணியல் ரீதியான ஆதாரங்கள் அடிப்படையிலாவது தங்களது நிலைப்பாடு சரி என்பதை தெளிவு படுத்த வேண்டும். இதுதான் நியாயமான நேர்மையான அனுகுமுறையும் நேர்த்தியான வாத முறையுமாகும்.
அதை விடுத்து, கடலிலே மூழ்குபவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சிறு சருகையும் பற்றிப் பிடிப்பதைப் போல் பிறை பற்றிய தங்களது பிழையான, தவறான நிலைப் பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சர்வதேசப் பிறையை எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரனத்திற்காக நாட்டுக்கு நாடு பிறைஎன்ற தங்களது நிலைப்பாட்டுக்கு மாற்றமானவர்களது கருத்துகளை சரிகாண்பதும் அவர்களது தவறான வாதங்களில் தொங்கிக் கொள்ளமுயற்சிப்பதும் தங்களிடம் உள்ள சிந்தனை வரட்சியையும் அறிவுப்பஞ்சத்தையும் தாங்களே பறை சாற்றிக் கொள்வதாக அமையுமே தவிரஒரு சுமுகமான கருத்தாடலின் மூலம் முன்னேற்றகரமான முடிவுகளைஅடைவதற்கான முயற்சிகளாக ஒரு போதும் அமையாது.
இந்த அடிப்படையிலேயே சர்வதேசப் பிறையைப் பிழைகாண்பது போலவே நாட்டுக்கு நாடு பிறை என்ற நிலைப்பாட்டையும் பிழை காணும் பிஜேயின் (தவறான) வாதங்களின் பின்னே ஒழிந்து கொண்டு சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாட்டைக் குறை கூற முற்படுவதும் “வலயப் பிறை“ என்ற நிலைப்பாட்டை சரிகாணும் சகோதரர் ஆகில் அஹ்மது அவர்களது (அபத்தமான) கட்டுரைக்குப் பின் மறைந்து கொண்டு சர்வதேசப் பிறையை விமர்சிக்க முற்படுவதும் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகது.(அது என்ன வலயப் பிறை என சற்றுப் பின்னால விபரிக்கிறேன்).
வைத்தியர் ஆகில் அஹ்மத் அவர்களது “”பிறை நிலா”” எனும் புத்தகம் தமிழ் பேசும் முஸ்லிகள் மத்தியில் பிறை தொடர்பான பல்வேறு பட்ட கருத்துகளை முன் வைக்கும் ஒரு முக்கிய நூலாகும். அதில் அவர் பிறை தொடர்பாக அல்கு ர்ஆன் அஸ்ஸுன்னவின் அடிப்படையிலோ அல்லது மத்ஹபு ரீதியான கருத்துகள் அடிப்படையிலோ எழுதாமல் முழுக்க முழுக்க வாணியல் அடிப்படையிலான கருத்துகளையே முன்வைத்திருந்தார்.
அப்புத்தகத்தில் அவர் நாட்டுக்கு நாடு பிறைதான் இஸ்லாம் வலியுறுத்தும்நிலைப்பாடு என்றோ அல்லது வாணியல் அடிப்படையில் நாட்டுக்கு நாடுபிறைதான் சரியானது என்றோ நிறுவ முற்படவில்லை. இன்னும்சொல்லப் போனால் நாட்டுக்கு நாடு பிறை கரீபியன் தீவுகள் போன்றநாடுகளுக்கு பூகோள அடிப்படையில் சரிப்பட்டு வராது என்றேகுறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஏற்கனவே பிறை சம்பந்தமாக குழப்பங்கள் நிலவும் எமது நாட்டில் “”வலயப் பிறை”” என்ற நிலைப்பாட்டுக்கான என்ணக் கருவை முன்வைத்திருந்தார்.
வலயப் பிறை என்பது சுருக்கமாக ஊருக்கு ஊர் பிறை , நாட்டுக்கு நாடு பிறை என்ற வரையறைகளைத் தாண்டி சர்வதேசப் பிறை என்ற அளவுக்கும் வந்து விடாமல் உலகின் மொத்த நாடுகளையும் கிழக்கு, மத்தி, மேற்கு என மூண்று வலயங்களாகப் பிரித்துக் கொள்வது. கிழக்கே ஒரு நாளை முதலில் தொடங்குகிறது என்ற அடிப்படையில் கிழக்கு வலயத்தில் பிறை தென்பட்டால் கிழக்கு வலய முஸ்லிம்களும் நேரத்தால் பிந்திய மத்திய மற்றும் மேற்கு வலய முஸ்லிம்களும் என சர்வதேச அளவில் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே பிறையின் அடிப்படையில் மாதத்தை தொடக்குவது.அவ்வாறில்லாமல் மத்திய வலயத்தில் பிறை தென்பட்டால் மத்திய வலய முஸ்லிம்களும் அதை விட நேரத்தால் பிந்திய மேற்கு வலய முஸ்ஸிம்களும் மாதத்தை ஆரம்பிக்க நேரத்தால் முந்திவிட்ட கிழக்கு முஸ்லிம்கள் அடுத்த நாளில் மாதத்தை ஆரம்பிப்பார்கள். அதேபோல் கிழக்கு வலயத்திலும் மத்திய வலயத்திலும் பிறை தென் படாமல் மேற்கு வலயத்தில் தென்பட்டால் மேற்கு வலய முஸ்லிம்கள் மாத்திரம் மாதத்தை ஆரம்பிக்க நேரத்தால் முந்திவிட்ட கிழக்கு மற்றும் மத்திய வலய முஸ்லிம்கள் அடுத்த நாளில் மாதத்தை ஆரம்பிப்பார்கள்.
இதுதான் ஆகில் அஹ்மத் அவர்களால் ”பிறை நிலா “” என்ற அவரது புத்தகத்தில் முன்வைக்கப் பட்ட அவர் கொள்கையளவில் சரிகண்ட பிறை பற்றிய நிலைப்பாடாகும். இவ்வாறு ஓரளவு அறிவுபூர்வமான, ஆதாரங்கள் அடிப்படையிலான சர்வதேசப் பிறைக்கு மிக நெருக்கமான ஒரு அழகிய நிலைப்பாட்டை முன்வைத்த வைத்தியர் ஆகில் அஹ்மது அவர்கள் தான் சரி கண்ட கருத்தை பின்பற்ற முன்வராமல் வெறுமனே ஊர் ஒற்றுமை என்றும் தலைமைத்துவக் கட்டுப் பாடு என்றும் சாட்டுகள் கூறி உலகில் இந்த நிலை தோண்றி ,மாற்றம் ஏற்படும் வரை நாட்டுக்கு நாடு பிறையைதான் பின்பற்ற வேண்டும் எனக் கூறி தனது பெறுமதி மிக்க கருத்துக்கு எந்த வித பெறுமானமும் இல்லாமல் செய்து விட்டர். நோன்பு, பெருநாள் போன்ற இறைவணக்கங்களில் அதுவும் தான் ஆய்வு ரீதியாக சரி கண்ட ஒரு விடயத்தில், படைத்தவனுக்குக் கட்டுப் படும் விடயத்தில் ஊர் ஒற்றுமை, தலமைத்துவக் கட்டுப் பாடு எனக் கோஷம் எழுப்பி படைப்புகளுக்குக் கட்டுப் பட வேண்டுமா என அவர் மார்க்க ரீதியாக சற்று சிந்தித்திருந்தாலோ அல்லது தான் ஒரு கருத்தை சரி கண்டவர்கள் தாங்களே அதை அமுல் படுத்த, நடைமுறைப் படுத்த முன்வராத போது ஏனைய கருத்தில் இருப்பவர்கள் ஒரு காலமும் அதை ஏற்றுக்கொள்ளவோ நடைமுறைப் படுத்தவோ முன்வருவார்களா என அறிவுபூர்வமாக சற்று யோசித்திருந்தலோ இத்தகைய இரட்டை நிலைப்பாட்டுக்கு அவர் ஒரு போதும் வந்திருக்க மாட்டார்.
இந்த இடத்தில் நாட்டுக்கு நாடு பிறை என்ற நிலைப்பாடுள்ளவர்கள், அவரது (அபத்தமான) கட்டுரையை, கருத்துகளை ஏதோ சர்வதேசப் பிறக் கெதிரான மிகப் பெரி ஆதாரமாகக் கருதுபவர்கள், அல்லது சர்வதேசப் பிறை நிலைப்பாட்டில் உள்ளவர்களது தக்க வாதங்களுக்கு தகுந்த பதில் அளிக்க முடியாதவர்கள், வைத்தியர் ஆகில் அஹ்மத் அவர்களின் “”வலயப் பிறை”” என்ற கருத்தையாவது சரி காண, நடைமுறைப் படுத்த முன்வருவார்களா அல்லது நடைமுறைப்படுத்தலோ, பௌதீக இருத்தலோ இல்லாதா வெறும் எழுத்தாடலைத்தான் நாங்கள் விரும்புகிறோம் என்றாவது ஒத்துக் கொள்வார்களா அல்லது நாங்கள் (பிஜே போன்று) ஊருக்கு ஊர் பிறையுமல்ல, நாட்டுக்கு நாடு பிறையுமல்ல, வலயப் பிறையுமல்ல, சர்வதேசப் பிறையுமல்ல மொத்தத்தில் பிறை எங்களுக்கு ஒரு பிரச்சனையே கிடையாது. பிறை தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்பது பற்றியும் எமக்கு அக்கறையில்லை.நாங்கள் “”தலைமைத்துவப் பிறை“” ,எங்கள் தலைமை ஊர்ப் பிறை என்றால் நாங்களும் ஊர்ப் பிறை, நாட்டுக்கு நாடு என்றால் நாட்டுக்கு நாடு, வலயம் என்றால் வலயம் என்றாவது குறைந்த பட்சம் ஒத்துக் கொள்வார்களா என நாம் கேள்வி எழுப்புவதில் என்ன தவறிருக்கிறது.
ஆனால் சர்வதேசப் பிறை என்ற நிலைபாட்டில் உள்ள எமக்கென்று அல் குஆன் அஸ்ஸுன்னா என்ற ஒரு கொள்கை இருக்கிறது. அதன் அடிப்படையில் ஊர் வழமையையோ அல்லது கண்மூடித்தனமாக பின்பற்றல் என்ற அடிப்படையிலோ பிறை தொடர்பாக ஒரு நிலைப்பட்டிற்கு வந்து அதன் மூலம் பாவியாகப் போய்விடாமல் குறைந்த பட்சம் அல்லாஹ்விடம் ஒரு கூலியையாவது பெற்றுக் கொள்ளவேன்டும் என்ற ஒரே நோக்கத்தில் எம்மால் முடியுமான வரை பிறை பற்றி ஆய்வு செய்து சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாட்டிற்கு வந்தோம். அதன் காரனமாகத்தான் எங்கிருந்தோ கட்டுரைகளையும் இணைப்புகளையும் நீங்கள் அனுப்பும் போதெல்லாம் சர்வதேசப் பிறை நிலைப்பாட்டுக்கு சார்பாக எழுதப்பட்ட அறபு, ஆங்கில, தமிழ் ஆக்கங்களின் இனைப்புகளை தேடியெடுத்து, தொகுத்து ,இதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று நழுவிவிடாமல் அல்லது அன்ஸார் மௌலவி அவர்கள் பேசிய சீடிகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கழன்று கொள்ளாமல் பொறுப்பாக உட்கார்ந்து பதில் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
இந்த இடத்தில் சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்கள் பற்றி மேலும் சில உன்மைகளைக் குறிப்பிட விரும்புகிறேன். தான் கொள்கையளவில் ஏற்றுள்ள வலயப் பிறையையோ அல்லது தற்காலிகமாக நடைமுறை படுத்தும் நாட்டுக்கு நாடு பிறையையோ மார்க்க ரீதியாகவும் சரி வாணியல் ரீதியாகவும் சரி சரி கண்டோ அல்லது நியாயப் படுத்தியோ , நிரூபிக்கும் வகையிலோ பகிரங்க விவாதத்திற்கு அல்ல ஒரு சுமூகமான கருத்தாடலுக்கோ ஏன் பூட்டியஅறைக்குள் சாதாரன ஒலிப்பதிவுடன் கூடிய கலந்துரையாடலுக்கோ அவர் வரவில்லை.நான் கடந்த 2007 ம் ஆண்டு அக்கரைப் பற்று சென்றிருந்த போது பிரதான வீதியில் அமைந்துள்ள ஜும்மாப் பள்ளிவாயிலில் வாணவியல் கணிப்பு பற்றி பகிரங்க சொற்பொழிவாற்றியதன் பின் இடம் பெற்ற கேள்வி பதில் நிகழ்சியில் ஒருவர் எழுந்து இது தொடர்பாக ஆகில் அஹ்மத் அவர்களுடன் பேசத் தயாரா என வினவினார். நான் ஆம் என்றதும் ஆகில் அஹ்மதுடன் தொடர்பு கொண்டார். ஆனால் அவரோ மறுத்துவிட்டார். அப்போது அவரது “”பிறை நிலா”” புத்தகத்திற்கான எனது மறுப்பான பிறை மதியும் குறைமதியும் /வாணியல் கணிப்பு : கோட்பாட்டுக் குழப்பங்களும்நடைமுறைச் சிக்கல்களும் என்ற புத்தகம் http://www.scribd.com/doc/20200273/AstronomicCalculationinSriLanka வெளிவர வில்லை. எனவே நாம் என்ன வாதங்களை எடுத்து வைப்போம் என்று அவருக்குத் தெரியாது என்ற ஒரு நியாயம் இருந்திருக்கலாம்.
ஆனால் 2007 ம் ஆண்டின் இறுதியில் எனது மேற்பபடி புத்தகம் பிரசுரிக்கப்பட்டு சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்களின் சொந்த ஊரான அக்கரைப் பற்று உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் குறைந்த விலையில் விநியோகிக்கப் பட்டும் அவருடைய கரங்களில் இலவசமாகவே கிடைக்கச் செய்தும் இணையத்தின் மூலம் இலவச மின்நூலகவே சகலருக்கும் கிடைக்கும் வகையில் வழி செய்திருந்தும் இது வரை அவரோ அல்லது அவர் சார்ந்திருக்கும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தலைமையகமோ அல்லது அதில் தங்கியிருக்கும் ஜம் இய்யதுல் உலமாவின் உள்ளூர்க் கிளைகளோ அல்லது இதன் கருத்துகளை சரிகாணும், பின்பற்றும் உலமாக்கள்,அறிஞர் பெருமக்கள்,ஆய்வாளர்கள் மற்றும் கல்விமான்களில் ஒருவரோ இது வரை காலமும் ஒரு எழுத்து வடிவிலான பதிலோ அல்லது மறுப்போ தரவில்லை. (முடிந்தால் அவர் கட்டுரையை எமது குழுவில் பிரசுரித்த சகோதரராவது எமது புத்தகத்திற்கான பதிலையோ அல்லது மறுப்பையோ பெற்றுத்தர முயற்சித்துப் பார்க்கட்டும்)
அத்துடன் கடந்த வருடம் ரிஸாலா எஃப் எம் நிகழ்சிக்காக அவர் வருகை தந்த போது அவருடனான சந்திப்புக்கு மேற்கொள்ளப் பட்ட பிரயத்தனங்களும் பயனளிக்கவில்லை.!! இதையெல்லாம் ஒரு புறம் வைத்துவிடுங்கள்; அவரது சொந்த ஊரான அக்கரைப் பற்றிலேயே சகோதரர் அன்ஸார் மௌலவி அவர்கள் பலமுறை இவருக்கு அழைப்பு விடுத்தும் ஒவ்வொரு முறையும் இவர் தட்டிக் கழிக்கும் மர்மம்தான் என்ன ! என்றாவது நாம் சிந்திக்க் கூடாதா?!
கடந்த 02/11/2005 அன்று அக்கரைப் பற்றிலே இவர் நடாத்திய “”வாணியல் விளக்க”” நிகழ்சியும் அதில் இன்று பிறை தென்படாது என இவர் அடித்துச் சொன்னதும் ஆனால் அன்று மாலையே ஷஃபான் பிறை அக்கரைப் பற்றில் தென்பட்டு நாட்டுக்கு நாடு பிறை சகோதரர்கள் உட்பட ஆண்கள், பெண்கள், வயோதிபர், சிறுவர் என பலர் அது பற்று சாட்சி கூறியும் சகோதரர் ஆகில்அஹ்மதின் மானத்தைக் காக்க வேண்டும் என்ற ஒரே காரனத்திற்காக(ஒரு தனி மனிதனுக்காக) பிறைக் குழுவினர் அச்சாட்சிகளை நிராகரித்துஇலங்கை வாழ் முஸ்லிம்களை பெரு நாள் தினத்தி ஹறாமான நோன்புநோற்கும் அவல நிலைக்கும் பெருநாள் அல்லாத தினத்தில் பெருநாள்கொண்டாடும் துன்பியல் நிகழ்வுக்கும் காரனமாக அமைந்த நிகழ்வுஇன்றும் எம் மனக் கண்ணை விட்டும் மறையவில்லை.மேற்படி நிகழ்வு குறு வட்டாக ஆவனப்படுத்தப் பட்டு இன்றும் அன்ஸார் மௌலவி அவர்களது பிரச்சார நிலையத்தில் காணப்படுகிறது.(தேவையான சகோதரர்கள் பெற்றுக் கொள்ளலாம்)
இவ்வாறு துல்லியமான வாணியல் கணிப்புக்கு!! மாற்றமாக அக்கரைப் பற்றிலேயே பிறை தென்பட்டு பலரும் அது தொடர்பாக சாட்சியளித்ததின் காரனமாக ஏற்கனவே நாட்டுக்கு நாடு பிறை என்ற நிலைப்பாட்டில் இருந்த ஆயிரக்கனக்கான முஸ்லிம்கள் அந்த வருடம் சர்வதேசப் பிறை சகோதரர்களுடன் இணைந்து பெருநாள் கொண்டாடியதன் காரனமாகவும் தனது சொந்த ஊரிலேயே தனனது கருத்துகள் எடுபடாமல் போனதால் ஏற்பட்ட அவமானத்தினாலும் சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்கள் தனக்குஎங்கெல்லாம் எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அங்கெல்லாம்அப்போதெல்லாம் தனது கருத்துகளாலும் எழுத்துகளாலும் சர்வதேசப்பிறை எனும் நிலைப் பாட்டைக் கரித்துக் கொட்டுவதும், வாருங்கள்கருத்து முரண்பாட்டை பேசித்தீர்த்துக் கொள்வோம் என நாம் அழைத்தால்ஓடி ஒழிந்து கொள்ளும் மகத்தான பணியை செவ்வனே செய்துவருவதைப் பார்கிறோம்.
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. எமது குழுவில் உள்ள நடுநிலையாளர்கள், உன்மையைப் புரிந்து கொள்ள் வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் யாராவது முன்வந்து சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்களுடன் தொடர்பு கொண்டு பிறை பார்க்கும் விடயத்தில் வாணவியல் கணிப்பைகருத்திற் கொள்ள முடியுமா என்ற தலைப்பில் அல்கு ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் அல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் ஷாபி இ மத்ஹபின் அடிப்படையில்லாவது பகிரங்க விவாதத்திற்கு என்றில்லாமல் ஒரு பூட்டிய அறைக்குள் சாதாரன ஒலிப் பதிவுடன் கூடிய கருத்தாடலுக்காவது வரத் தயாரா என அழைத்துப் பாருங்கள். அல்லது பிறை பார்த்தல் விடயத்தில் வாணியல்கோட்பாடுகளைக் கருத்திற் கொள்வது ஒரு தீர்வாகுமா என்ற தலைப்பிலோ அல்லது வாணியல் கணிப்பின் அடிப்படையில் நாட்டுக்குநாடு பிறை பார்த்தல் சாத்தியமா என்ற தலைப்பிலோ அல்லது அகிலஇலங்கை ஜம் இய்யதுல் உலமாவும் பிறைக் குழுவும் கடைப்பிடிக்கும்வாணியல் கணிப்பு கணிப்பு அடிப்படையிலான பிறை பார்த்தல் முறைஉலகில் கடைப் பிடிக்கப் படும் முறைகளுள் மிகச் சிறந்த முறையாஅல்லது மிக மோசமான முறையா என்ற தலைப்பிலோ அல்லதுஅவராகவே தீர்மானிக்கும் பொருத்தமான பிறை மற்றும் வாணியல்கணிப்புடன் தொடர்புள்ள எந்த ஒரு தலைப்பிலோ கருத்தாட தயாரா என அழைத்துப் பாருங்கள். நாம் சொல்வது எவ்வளவு தூரம் உன்மை எனப் புரிந்து கொள்வீர்கள்.
இந்த ஒரு சுருக்கமான பின்னனியுடன் தற்போது அவர் எழுதிய கட்டுக் கதைக்கு… மண்ணிக்கவும் கட்டுரைக்கு வருவோம்.
அவரது கட்டுரையின் முதல் வசனம் “”இன்று உலகம் முழுவதும் ரமழான்28. என்று அமைந்துள்ளது. உன்மையில் இவர் குறிப்பிட்டதை போல் உலகம் முழுவதும் ரமளான் இருபத்தியெட்டா என்பதை அவர் உறுப்பினராக இருக்கும் I C O P (Islamic Crescents’ Observation Project) இஸ்லாமிய பிறை அவதானத் திட்டம் எனும் நிருவனம் தனது உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் இது தொடர்பாக என்ன சொல்கிறது என்பதை இவ்விணைப்பு மூலம் பார்ப்போம். http://www.icoproject.org/icop/ram30.html
The OFFICIAL First Day in Different Countries
Friday 21 August 2009:
1. Libya (Astronomical Calculations)
2. Turkey (Astronomical Calculations)
3. Kosova (Following Turkey)
4. Magdonia (Following Turkey)
5. Romania (Following Turkey)
6. Bosnia and Herzegovina (Following Turkey)
7. Serbia (Following Turkey)
8. Bulgaria (Following Turkey)
9. Montenegro (Following Turkey)
10. Albania (Following Turkey)
Saturday 22 August 2009:
1. Brunei Darussalam (After 30 Days of Shaban)
2. Indonesia (After 30 Days of Shaban)
3. China (After 30 Days of Shaban)
4. Philippines (After 30 Days of Shaban)
5. Japan (After 30 Days of Shaban)
6. Singapore (After 30 Days of Shaban)
7. Saudi (After 30 Days of Shaban)
8. Bahrian (After 30 Days of Shaban)
9. Qatar (After 30 Days of Shaban)
10. Kuwait (After 30 Days of Shaban)
11. UAE (After 30 Days of Shaban)
12. Yemen (After 30 Days of Shaban)
13. Iraq (After 30 Days of Shaban)
14. Jordan (After 30 Days of Shaban)
15. Palestine (After 30 Days of Shaban)
16. Lebanon (After 30 Days of Shaban)
17. Syria (After 30 Days of Shaban)
18. Egypt (After 30 Days of Shaban)
19. Sudan (After 30 Days of Shaban)
20. Somalia (After 30 Days of Shaban)
21. Algeria (After 30 Days of Shaban)
22. Tunisia (After 30 Days of Shaban)
23. Mauritania (After 30 Days of Shaban)
24. Nigeria (After 30 Days of Shaban)
25. France (After 30 Days of Shaban)
26. Netherlands (After 30 Days of Shaban)
27. Switzerland (After 30 Days of Shaban)
28. Check (After 30 Days of Shaban)
29. Italy (After 30 Days of Shaban)
30. Hungary (After 30 Days of Shaban)
31. Belgium (After 30 Days of Shaban)
32. Spain (After 30 Days of Shaban)
33. Sweden (After 30 Days of Shaban)
34. UK
35. USA (After 30 Days of Shaban)
36. Australia (Actual Sighting of the Crescent)
37. Iran (Actual Sighting of the Crescent)
38. Oman (Actual Sighting of the Crescent)
39. Morocco (Actual Sighting of the Crescent)
40. Senegal (Actual Sighting of the Crescent)
41. Ghana (Actual Sighting of the Crescent)
42. Tanzania (Actual Sighting of the Crescent)
Sunday 23 August 2009:
1. Bangladesh (After 30 Days of Shaban)
2. India (After 30 Days of Shaban)
3. Pakistan (After 30 Days of Shaban)
ஆக இவ்வருடம் உலகில் முஸ்லிம்கள் முறையே எட்டாம் மாதம் 21,22,23 என நோன்பைத் துவக்கியிருக்க எப்படி குறித்த நாளில் உலகம் முழுவதும் ரமளான் 28 ஆக இருக்க முடியும்?!!!. இதில் வாணவியல் கணிப்பின் அடிப்படையில் நோன்பை ஆரம்பித்த துருக்கியையும் அதனைப் பின்பற்றிய நாடுகளையும் விட்டுவிட்டுப் பார்த்தால் கூட பங்ளாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பிந்திவிட்டன அல்லவா?! நிலமை இவ்வாறிருக்க இன்று உலகம் முழுவதும் ரமளான் 28 எனக் கூறி தனது கட்டுரையை ஆரம்பித்தது எவ்வளவுஅப்பட்டமான பொய் என்பதைப் பார்த்தீர்களா??
சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்களது இறையச்சம் தொடர்பாக நாம் கருத்து வெளியிட விரும்பவில்லை. அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் உள்ள விடயம். ஆனால் தான் இப்படி ஒரு பொய்யை ஜனரஞ்சகப்பத்திரிகையில் எழுதுகிறோமே அதை எத்தனை பேர் படிப்பார்கள் என்றவெட்கம் கொஞ்சங் கூட இல்லாமல் இப்படி எழுதியதன் காரனம் என்ன,தனக்கு ஒரு கண் போனாலும் சர்வதேசப் பிறைக் காரனுக்கு இரு கண்களும் போக வேண்டும் என்ற காழ்ப்புணர்வா அல்லது தான் எதை எழுதினாலும் அதைக் கண்மூடித்தனமாக நம்பும், பின்பற்றும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற நம்பிக்கையா அல்லது இது போன்ற குழுமங்களில் தனது கட்டுரைக்கு இடங் கிடைக்கும் என்ற நப்பாசையா அவர் சிந்திக்காவிட்டாலும் நாமாவது சற்று யோசிக்க வேண்டும் அல்லவா?!.
அவ்வாறே இதே சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்கள் உறுப்பினராக உள்ள இணையத்தளத்தின் பெரு நாள் தின அறிக்கையைப் அவதானித்தால் வாணியல் கணிப்பு அடிப்படையில் மாத ஆரம்பத்தைக் கருத்திற் கொள்ளும் லிபியா ஒரு தினத்திலும் துருக்கி மற்றும் மலேசியா மற்றொரு தினத்திலும் பெருநாளை அறிவித்துள்ளது வாணியல் கணிப்பு பிறைப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாகஅமையாது என்பதற்கு ஒரு நல்ல உதாரனமாகும் என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம்.
அடுத்து இவருடைய “”ஏனென்றால் இம்முறை ரமழான் தலைப்பிறைமுதன்முதலில் தென்பட்டது அதாவது சர்வதேச தேதிக் கோட்டுக்குஅருகில். இதனை நாம் ரமழானுக்கு முந்தியே எதிர்வு கூறியும், ரமழான்14ல் எடுத்துச் சொல்லியும் ஆலமுல் இஸ்லாம் பகுதியில் இருகட்டுரைகளை பிரசுரித்திருந்தோம்“” என்ற வாசகங்கள் உலகில் நடக்கும்விடயத்திலேயே, கண் கூடான உன்மை விடயத்திலேயே இப்படிஅப்பட்டமாக பொய்யை எழுதுபவர் பிறை விடயத்தில் எந்தளவுஉன்மையாக எதிர்வு கூறியிருப்பார்கள் என்ற சந்தேகத்தையே எமக்கு ஏற்படுத்துகிறது.
அத்துடன் பிறை எங்கு எப்போது தோண்றும் என்பதை அறிந்து கொள்வது இன்று ஒரு பெரிய விடயமே அல்ல. மாறாக சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்களும் சரி அவர் போன்ற பிறை ஆய்வாளர்களும் சரி தங்கியிருக்கும் மென் பொருளான
(Accurate Times) என்பதை யார் வேண்டுமானாலும்http://www.icoproject.org/accut.html என்ற இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன் படுத்தலாம். ஆனால் இம்மென்பொருட்கள் இவர்கள் வாதிடுவது போல் துல்லியமான வாணவியல் கணிப்பை வழங்காது என்பதுதான் உன்மையாகும்.
இது தொடர்பாக நான் முன்னர் எழுதிய புத்தகத்தில் இருந்து இல விடயங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
””மேலும் டொக்டர் ஆகில் அஹ்மத் அவர்கள் தான் உறுப்பினராக உள்ள இஸ்லாமிய பிறை அவதானிப்பு திட்டத்தினால்(I.C.O.P) மிக துல்லியமாக பிறையை கணிக்கக் கூடியது என உத்தரவாதம் வழங்கப்பட்ட Accurate Times, salat times, red shift என்ற மூண்று மென்பொருட்களில் ccurate Times என்ற கீழுள்ள மென்பொருளை மாத்திரம் பயன்படுத்தியே இலங்கையில் 12-09-2007 அன்று பிறை தென்படுவதற்கு சாத்தியம் உள்ளது என விளக்கினார்.
ஆனால் முஸ்லிம் வானியலாளர் அலி ஹத்தாத் என்பவரால் உருவாக்கப்பட்ட இதே டொக்டர் ஆகில் அஹ்மத் அவர்கள் தான் உறுப்பினராக உள்ள இஸ்லாமிய பிறை அவதானிப்பு திட்டத்தினால்(I.C.O.P) மிக துல்லியமாக பிறையை கனிக்கக் கூடியது என உத்தரவாதம் வழங்கப்பட்ட மற்றுமொரு மென்பொருளான salat times இலங்கையில் 13-09-2007 அன்றுதான் றமழான் தலைபிறை தென்படுவது சாத்தியம் என சுட்டிக் காட்டியதை(அவ்வாறே 12ம் திகதி தலைபிறை தென்படவில்லை என்பதையும் கவனத்திற் கொள்க)டொக்டர் ஆகில் அஹ்மத் அவர்கள் கவனிக்கத் தவறி விட்டார்களோ!!!
மேற்படி Salat Times Version 2.8, May, 2002 எனும் மென் பொருள் வழங்கிய தகவலை கீழே தருகிறேன்.
Location: colombo,sri lanka,
Latitude 06°55’55”N Longitude 077°50’52”E
Height: 0 meters ASL, Time Zone: 6.00,
No Summer Time availablE
Moon data for 12-September-2007 at sun set
Moon set (18:44)-sun set (18:13) =00:31
Moon Altitude (05°56’47”)-Sun Altitude (00°16’11”) = 07°12’58” Moon Azimuth (266°50;51”) – Sun Azimuth (274°20’38’) =07°29’47” Geocentric Moon Age=23:58, Topocentric Moon Age=22:28 Geocentric Elongation=11°24’45”, Topocentric Elongation 10°45’00” Geocenric distance=400850.3km, Topocenric distsnce=394472.5km Position angle of bright limb=224°22’40” Topocenric Width=00°00’16” The Moon is 0,88% illuminatet, Topocentric Semidiamerer=00°14’56” Possible start of Ramadan, 1428 AH: Thursday,13- September-2007
பாருங்கள் டொக்டர் அவர்கள் தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தினால் ‘பிறையை துல்லியமாகக் கனிக்கக்கூடியவை’ என உத்தரவாதம் அளிக்கப்பட்ட மூண்று
மென்பொருட்களில் ஒன்றைப் பயன்படுத்தி 12ம்திகதி பிறை தென்படும் சாத்தியம் என்று சொல்ல அதே நிறுவனத்தால் பரிந்துரை செய்யப்பட்டமற்றுமொரு மென்பொருள் இல்லை 13ம் திகதிதான் பிறை தென்படும் சாத்தியம் என கூறுகின்றது.இவ்விரண்டு மென்பொருட்களில் துல்லியமாகக் கணிக்கக் கூடியது எது?
கலாநிதி அவர்கள் பயன்படுத்திய 12ம் திகதியைக் காட்டிய Accurate Times மென்பொருளா? அல்லது டொக்டர் அவர்கள் பயன்படுத்தாமல் விட்ட 13ம் திகதியைக் காட்டிய salat times எனும் மென்பொருளா?அல்லது இரண்டுமே துல்லியமாகத்தான் கணித்துள்ளதா?!!
இரண்டில் ஒன்றுதான் துல்லியமாகக் கனித்தது என்றால் இரண்டுக்கும் வழங்கப்பட்ட ‘துல்லியமாகக் கனிக்கக்கூடியது’ என்ற பரிந்துரையின் அர்த்தம்தான் என்ன என்பதை நாம் யோசிக்க வேண்டாமா?
சில வேளை மேற்படி salat times எனும் மென்பொருள் வழங்கிய ‘13ம் திகதிதான் றமழான் மாதம் ஆரம்பிப்பதற்கான சாத்தியம்’ என்ற தகவலை ‘12ம் திகதி பிறை தென்பட்டு 13ம் திகதி றமழான் ஆரம்பிக்கும்’ எனக் குறிப்பிடுவதாக யாராவது தவறாக விளக்கமளிக்க முற்படலாம்.
ஆனால் இதே salat times எனும் மென்பொருள் -றமழான் மாதம் முப்பது நாடக்களாக பூர்த்தி செய்யப்பட்டடு- ஷவ்வால் மாதம் 13ம் திகதி அரம்பிக்கலாம் எனக் குறிப்பிடுவதே salat times மென் பொருளின் 13ம் திகதி என்பது 12ம் திகதி மாலை அல்ல என்பதற்கு போதிய சான்றாகும்.
ஏனெனில் ஒரு வாதத்திற்காக இரு மாதங்களிலும் 13ம் திகதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது 12ம் திகதி மாலையைத்தான் என வைத்துக் கொண்டால் இலங்கையில் றமழான்உன்மையில் பிறைக்குழுவினர் தங்களது ‘முஸ்லிம் வானவியலாளரின் கருத்து’ எனும் நிலைப்பாட்டில் உறுதியானவர்களாக இருந்திருப்பார்களேயானால் Accurate Times எனும் மென்பொருளை விடுத்து 13ம் திகதியை காட்டிய salat times எனும் மென்பொருளையே கருத்திற் கொண்டிருக்க வேண்டும்.””
அடுத்து இவர் எழுதிய “”ஆனாலும் நாம் செய்கின்ற வேலை ஒன்றை ஏன்செய்கின்றோம், எதனால் செய்கின்றோம் என்று பலரால் புரிந்துகொள்ளப்படாமலே வேலை செய்யப்படுகின்றது“” என்ற வாசகங்கள் இவர் விடயத்தில் முற்றிலும் உன்மையே இவர்கள் ஒரு ஏன் செய்கிறார்கள்எதனால் செய்கிறார்கள் என்பது பலராலும் புரிந்து கொள்ளப் படாததன்காரனமாகவே அவர்கள் நாட்டுக்கு நாடு பிறை என்ற நிலைப்பாட்டில்இருக்கிறார்கள். எப்போது புரிந்து கொள்வார்களோ அப்போது சர்வதேசப்பிறைக்கு வந்து விடுவார்கள்.
மேலும் “”இந்த சம்பாஷணை எதனைக் காட்டுகின்றது.. “அவர்களிடம்தெளிவான அத்தாட்சி வந்ததன் பின்னரும் அதனை அவர்கள்மனமுரண்டாக நிராகரிக்கின்றார்கள்” எனும் அல்குர்ஆன் வசனத்தை இதுஞாபகமூட்டவில்லையா? சவூதி அரேபியாவில் என்ன நடக்கின்றது.நடக்கப் போகின்றது என்ன நடந்தது, என்பதனை நாம் தெளிவாகவிளக்கியதன் பின்னரும் பெயர் சொல்லாமல் சிலர் குரல் கொடுத்துப்பார்க்கின்றனர். இவர்கள் என்னதான் சொன்னபோதும் அல்லாஹ்வின்பிரபஞ்சம் அவன் விதித்த விதியை மீறப்போவதில்லை என்பது மட்டும்உண்மை. ஏனெனில் மனிதனுக்கு மட்டும்தான் அல்லாஹ் தான்விரும்பியதைத் தெரிவு செய்யும் உரிமையைத் தந்திருக்கின்றான்..ஏனைய அனைத்துப் படைப்புகளும் அல்லாஹ்வின் விதிகளுக்குக்கட்டுப்பட்டு முஸ்லிமாகவே நடந்து வருகின்றன“” என்ற வசனங்கள்சர்வதேசப் பிறை என்றால் சவூதிப் பிறை என்ற பாமரத்தனமானவட்டத்திற்குள் நின்று கொண்டே இவர் தனது (அபத்தமான ) கட்டுரையைஎழுத முற்பட்டுள்ளார் என்பதையே எமக்கு உணர்த்துகிறது.
மேலும் அல்லாஹ்வின் பிரபஞ்சம் அவன் விதித்த விதியைமீறப்போவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு மனிதன்அவனது சிறு அறிவு கொண்டு அல்லாஹ்வின் மகத்தான பிரபஞ்சவிதியின் ரகசியங்களைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றுவளரவில்லை என்பதும் உன்மையாகும்.
அடுத்து “”இம்முறை சவூதி அரேபியாவிலே தலைப் பிறை விடயத்தில்நம்பிக்கை தரத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ரமழான்தலைப்பிறையை வியாழக்கிழமை கண்டதாக சிலர் அங்கே சாட்சிசொன்னபோதும் அவை சவூதியின் நீதி அமைச்சினால்நிராகரிக்கப்பட்டன.
அங்கே நீதி அமைச்சினால் நிறுவப்பட்டிருக்கும் தலைப்பிறை பார்க்கும்உத்தியோக பூர்வ குழுக்களில் எவையும் தலைப்பிறை கண்டதாகஅறிவிக்காமையும், இச்சாட்சியங்களை வானியல் ஆய்வு மையங்கள்நிராகரித்தமையுமே இதற்கான காரணங்களாகும் என்பதனை அல்வதன்செய்திப் பத்திரிகை எழுதி இருந்தது. (பார்க்க: http://www.alwatan.com.sa/NEWS/WriterSave.asp?issueno=3254&id=13923)
இதனை “வினைத்திறன் மிக்க வானியல் ஆய்வு மையத்தினால்காணமுடியாது போகின்ற ஒரு தலைப்பிறையை வெற்றுக்கண்களால்யாரும் கண்டதாகச் சொல்வதை சவூதியின் உயர் நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளாது” என முன்கூட்டியே சவூதி கெஸட் அறிவித்திருந்தது. (பார்க்க: http://www.saudigazette.com.sa/intex.cfm?method=home.regcon&contentID=2009081847079
எனவே தலைப்பிறை கண்டோம் என்று சொல்லப்படுகின்ற ஒருசாட்சியத்தை அவர் முஸ்லிம் என்பதற்காக இனிமேல் சவூதி அரேபியாஏற்றுக் கொள்ளப் போவதில்லை.. அங்கே இரண்டாவது சாட்சியமாகவானியல் விஞ்ஞானம் அழைக்கப்பட்டிருக்கின்றதது. என இவர் எழுதியுள்ளது சர்வதேசப் பிறை நிலைப்பாடுடையவர்கள் சவூதிஅரேபியாவின் ஏஜென்டுகள் என்ற குறுகிய பார்வையின் அடிப்படையில் எழுதியுள்ளதும் வருடா வருடம் நாட்டுக்கு நாடு பிறை என்றநிலைப்பாட்டில் இருந்து சர்வதேசப் பிறை நிலைப்பாட்டுக்கு மாறிக்கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம்களைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஒரே காரனத்திற்காக பிறை விடயத்தில் வாணியல்கணிப்பை நிராகரிக்கும் ஷாபி இ மத்ஹபை தூக்கி வீசிவிட்டு அகிலஇலங்கை ஜம் இய்துல் உலமாவினர், பெரியபள்ளி மத்ஹபுவாதிகள் ,மத்ஹபை நியாயப் படுத்தும் இயக்கங்கள் அனைவரும் வாணியல்கணிப்பு எனும் கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்தது போல் சவூதிஅரசாங்கம் வாணவியலை எடுக்கிறது என்று நிரூபித்துவிட்டால்அல்குஆன் ஹதீஸின் போதனைகளை வீசிவிட்டு நாமும் கோட்பாட்டுரீதியான குழப்பங்களையும் நாடைமுறை ரீதியான சிக்கல்களையும்தன்னகத்தே கொண்டுள்ள வாணவியல் கணிப்பை நாமும் எடுத்துக்கொள்வோம் என இவர் நினைத்திருப்பதும் எவ்வளவு தவறானஅபிப்பிராயங்களின் அடிப்படையில் தனது கட்டுரையைவரைந்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அத்துடன் “”ஆனால் இவ்வருட ஷவ்வால் தலைப்பிறையானது வெற்றுக்கண்களுக்கு முதன்முதலில் தோற்றம் தருவதற்கு அதி சிறப்பானசாத்தியப்பாடு இருப்பது ஆபிரிக்கக் கண்டத்தின் தென்புலத்திலாகும் எனத் தொடங்கி ஒரு நீன்ட வாணியல் விளக்கம் அளித்துள்ளார்.””
ஆனால் இவர்களது எதிர்வுகூறல்களுக்கு மாற்றமாக அவுஸ்திரேலியாவிலேயே 19ம் திகதி பிறை தென்பட்டது ஊர்ஜிதப்படுத்தப்பட்ட moonSighing.com இனையத்தளத் தகவல்களைப் பாருங்கள்.
Dr. Shabbir Ahmed (MCW member) Imam of Rooty Hill Mosque Sydney Australia reported: Seen
The Hilaal of SHAWWAAL 1430 has been sighted in Port Hedland and Perth. I have personally contacted those brothers who sighted the Moon. In the Eastern suburbs, the possibility of sighting the moon was not strong. However, in the Western suburbs, the age of the moon wasn’t sufficient enough for the moon to be sighted clearly but the thing that helped the moon to be sighted was the time difference between sunset and moonset which was of 40 minutes. Therefore after accepting the testimony of the brothers who saw the moon, the Moonsighting Committee and Majlisul Ulamaa’ of Australia declared that Eid would be celebrated on Sunday 20/09/09. EID MUBARAK to everyone!
Engr Manzoor A Mian (MCW member) from Australia reported: Seen in Western Australia
I wish to inform you again that Shawal crescent has been sighted in Australia, Port Hedland (Western Australia) Therefore there will be Eid in whole Australia tomorrow 20th sep 2009 Sunday InshaAllah.
Habeeb Mohamed-Hussain (MCW member) from Gold Coast Australia reported: Seen in Western Australia ,The moon has been sighted. Insha-Allah Eid will be celebrated tomorrow, Sunday, Eid Mubaruk.
எனவே நாமும் இவ்வருடம் அவுஸ்திரேலியாவில் இருந்து எமக்குக்கிடைக்கப் பெற்ற நம்பகமான தகவல் அடிப்படையிலேயே நோன்பைஇருபத்தியொன்பதுடன் முடித்துக் கொண்டோம்.இதில் சர்வதேசப் பிறைஎங்கே சரிந்து விழுந்தது என்ற மர்மத்தை இக் கட்டுரையில் இருந்துயாராவது புரிவைத்தால் மிக உதவியாக இருக்கும்!!?
இதில் வேடிக்கை என்னெவென்றால் ஆரம்பத்தில் உலகம் முழுவதும் இன்று ரமளான் 28 என்று அப்பட்டமான பொய்யை எழுதியவர் மீண்டும் அதே பாணியில் ”ஆக இம்முறை உலகில் எந்தவொரு பிரதேசத்திலும்சர்வதேசப் பிறை எனும் எண்ணக்கரு எவராலும் பேசப்படவில்லை“ என இறுதியிலும் முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மண்ணிக்கவும் ஒரே ஒரு சோற்றுப் பருக்கைக்குள் மறைக்க முற்பட்டிருப்பதுதான்.
மதிப்புக் குரிய குழும அன்பர்களே!! நீங்கள் உங்களிடம் உள்ள கணிணிமற்றும் இணைய வசதிகளைப் பயன் படுத்தி தமிழ் ஆங்கிலம், அறபுமற்றும் உங்களுக்குத் தெரிந்த மொழிகளில் எல்லாம் சகோதரர் ஆகில்அஹ்மத் அவர்கள் கூறியது இம்முறை உலகில் எந்தவொருபிரதேசத்திலும் சர்வதேசப் பிறை எனும் எண்ணக்கரு எவராலும்பேசப்படவில்லையா என்பதை சற்று தேடித்தான் பாருங்களேன்.அவ்வாறு உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் எமக்கு அறிவியுங்கள்அந்தப் பட்டியலை நாம் வெளியிடுகிறோம்.
இறுதியாக இவர் கேட்டுள்ள “”லிபியா மற்றும் துருக்கியின் கணிப்பீடு,தென்னாபிரிக்காவின் தேசிய பிறை, சவூதியின் தேசிய பிறை அல்லதுஇலங்கையின் தேசிய பிறை இவற்றில் எதனை நீங்கள் எங்களுக்காகஎடுத்துக் கொள்ளப் போகின்றீர்கள்? உங்களுக்கு எந்நாளில்பெருநாள்?என்ற கேள்விக்கு சர்வ்தேசப் பிறை என்ற நிலைப் பாட்டில் உள்ள நாங்கள்அவுஸ்திரேலியாவில் 19 ம் திகதி சனிக் கிழமை பிறை தென்பட்டதாகஎமக்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் எனக்கு ஞாயிற்றுக் கிழமை பெருநாள் என்ற பதிலைக் கூறி விடை பெறுகிறேன்.
அன்புடன்,
மௌலவி எம். ஐ. எம். நௌபர் (காஷிபி),

Comments are closed.