ஒரு பள்ளியில் முதல் ஜமாஅத் முடிந்தபின் இன்னுமொரு ஜமாஅத் நடாத்த அணுமதி உண்டா?
ஒரு பள்ளியில் முதல் ஜமாஅத் முடிந்தபின் இன்னுமொரு ஜமாஅத் நடாத்த அணுமதி உண்டா?
என்ற கேள்விக்கு அவ்வாறு தொழுவது கூடும் என்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் சார்பாக அதன் பிரச்சாரகர், தள நிர்வாகி எஸ். எம். அப்பாஸ் அவர்களின் பதிலை ஒரு சகோதரர் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியிறுந்தார். ( அப்பதிலை இப்பதிவின் இறுதியில் காண்க!) அதற்கு எமது பிரச்சாரகர் M.I.M. நௌபர்(காஷிபி) அவர்களின் பதிலை இங்கே பதிப்பிக்கின்றோம்.
அன்புச் சகோதரர் அவர்களுக்கு !
அஸ்ஸலாமு அலைகும் (வறஹ்)
தங்கள் மடலுக்கு பல்வேறு பட்ட பிரச்சார மற்றும் ஏனைய பணிகள் காரனமாக பதில் எழுத தாமதமானதிற்காக முதலில் வருத்தம் தெரிவித்துக் கொள்வதுடன் “யார் அறிவத் தேடுவதற்காக ஒரு பாதையை வகுத்துக் கொள்கிறாரோ அல்லாஹ் அதன் மூலம் அவருக்கு சுவனத்திற்கான பாதையை இலகு படுத்துகிறான்” என்ற நபித்தோழர் அபூ ஹுறைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஸஹீஹ் முஸ்லிம் எனும் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸையும் நற்செய்தியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அடுத்து, இரண்டாம் ஜமாஅத் பற்றிய உங்கள் கேள்வியையும் அதற்கு தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் சார்பாக அதன் பிரச்சாரகர், தள நிர்வாகி எஸ். எம். அப்பாஸ் அவர்களின் பதிலையும் அனுப்பியிருந்தீர்கள். எனினும் இவ்வாறு நீங்கள் அனுப்பியதன் காரனம் “இந்த பதிலை இவர்களும் அறிந்து கொள்ளட்டும்” என்பதா அல்லது “இது தொடர்பாக தங்களது பதில் என்ன” என்பதா என்று உங்கள் மடலில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் நல்லெண்ணம் கருதி இரண்டாவது காரனத்தையே கருத்திற் கொண்டு பதிலளிக்கிறேன்.
விடயத்திற்குள் நேரடியாக நுழையுமுன் சில இஸ்லாத்துடன் தொடர்புபட்ட சில அடிப்படைகளை, பொது விதிகளை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
1.தொழுகை என்பது இரு இறை வணக்கமாகும். அதன் எண்ணிக்கை, அதன் நேரம் மற்றும் நிறைவேற்றும் முறை என்பன அல்லாஹ்வாலும் அவன் தூதராலும் எவ்வாறு எமக்கு வழி காட்டப்பட்டிருக்கிறதோ அவ்வாறே நாம் நிறைவேற்ற வேண்டும்.
2.இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் காட்டிய பிரத்யேகமான ஒரு முறை இருக்க நாமாக எந்த ஆதாரமும் இன்றி அதை அதன் எண்ணிக்கையிலும் சரி நிறைவேற்றும் முறையிலும் சரி விரிவுபடுத்தக் கூடாது.
3.மேற்கண்டவாறு ஒரு பொது முறை இருக்க விதிவிலக்காக ஹதீஸ்கள் இடம் பெற்றால் இந்த ஹதீஸ்கள் இடம் பெற்ற சமயம், சந்தர்ப்பம், சூழ் நிலை என்பவைகளைக் கவனத்திற் கொண்டு குறித்த சமயம், சந்தர்ப்பம், சூழ் நிலை என்பவற்றில் மாத்திரம் இந்த ஹதீஸ்களை நாம் அமுல் படுத்தலாமே தவிர எல்லா சமயங்களிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எச் சூழலிலும் அமுல் படுத்த முற்படக் கூடாது.
இந்த ஒரு அடிப்படை விளக்கத்துடன் எமது விடயத்திற்குள் நுழைவோம்.
மேற்படி விடயத்தில் “இரண்டாம் ஜமாஅத்” எனும் வார்த்தையின் பாரதூரத்தை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது கேள்வி எப்படி அமைய வேண்டும் என்றால் “மற்றொரு ஜமாஅத்”(அது எத்தனையாவது ஜமாஅத்தாக இருந்தாலும் சரியே) என்பதுதான் இதன் சரியான அமைப்பாகும்.
உதாரனமாக இஷா தொழுகையை ஒருவர் ஐம்பத்தியேழாவது ஜமாஅத்தாக தொழ முடியுமா? எனக் கேட்டால் இரண்டாவது ஜமாத்தை அனுமதிப்பவர் ஆம் எனக் கண்டிப்பாகக் கூறியே ஆக வேண்டும். இல்லை எனக் கூறினால் ஐம்பத்தியேழாவது ஜமாஅத் கூடாது என்பதற்கு என்ன ஆதாரமோ அவைகள் தான் ஐம்பத்தியாறாவது ஜமாஅத் கூடாது என்பதற்கான ஆதாரங்களாகும்;ஐம்பத்தியாறாவது ஜமாஅத் கூடாது என்பதற்கு எவைகள் ஆதாரங்களோ அவைகள் தான் ஐம்பத்திஐந்தாவது ஜமாஅத் கூடாது என்பதற்கான ஆதாரங்களாகும்.இவ்வாறே குறைந்து கொண்டே வந்து ஒரு ஜமாஅத்தா அல்லது அதற்கு மேற்பட்டதா என்ற சரியான கேள்வி பிறக்கும்.
எனவே இரண்டாம் ஜமாஅத்தை அனுமதிப்பவர் உன்மையில் மறைமுகமாக எத்தனை ஜமாஅத் வேண்டுமெண்றாலும் தொழுது கொள்ளலாம் என்ற இஸ்லாம் வலியுறுத்தும் ஒரே ஜமாஅத் தொழுகை எனும் கோட்பாட்டை தகர்த்தெறியும் அனுமதியையே வழங்குகிறார் என்பதுதான் யதார்த்தமாகும்.
அத்துடன் பொதுவாக வந்துள்ள ஜமாஅத்து தொழுகையின் சிறப்புகள், நன்மைகள், அதனை விடுவதால் ஏற்படும் பாவங்கள் பற்றி இடம்பெறும் அல்குர்ஆன் வசனங்கள், மற்றும் நபி மொழிகள் யாவும் நபிகளார் செயல் படுத்திக் காட்டிய முதல் ஜமாஅத்,ஒரே ஜமாஅத்தையே குறிக்குமே தவிர “பொதுவாகத்தானே ஜமாஅத்தாக தொழுவதால் இருபத்தி யேழு மடங்கு நன்மை என இடம் பெற்றுள்ளது எனவே நாங்கள் ழுஹர் தொழுகையின் முந்திய சுன்னத் இரு ரக அதுகைளையும் ஜமாஅத்தாக தொழப் போகிறோம்” என யாரும் விளங்குவதுமில்லை அவ்வாறு விளங்குவதும் கூடாது.
எனவே சுருங்கக் கூறின் ஒரு பள்ளிவாயிலில் அதற்கெனெ இருக்கும் இமாம் நடாத்தும் முதல் தொழுகைதான் இஸ்லாம் வலிறுத்தும், ஆர்வமூட்டும், அதை விட்டு விடுவதை எச்சரிக்கும் ஜமாஅத்தாகும். மேற்படி ஜமாஅத்தை விடுபவர்கள் அனைவரையும் இரண்டு வகையாக பிரித்து நேக்கலாம்.
முதல் சாரார்: வேண்டும் என்றே (அல்லது ஜமாஅத் தொழுகை வேண்டாம் எண்றோ!!?) ஜமாஅத் தொழுகையை விட்டு விடுபவர்கள்; இவர்கள் இரன்டாவது ஜமாஅதாகவோ அல்லது இருபதாவது ஜமாஅதாகவோ ஆயிரம் பேர் சேர்ந்து தொழுதாலும் முதல் ஜாமாஅத் தொழுகையின் அளப்பரிய நன்மைகளை அடந்து கொள்ள மாட்டார்கள்.மறாக முதல் ஜமாஅத்தை விடுவது பற்றிய கடுமையான எச்சரிக்கைக்கு ஆளாவார்கள்.
இரண்டாம் சாரர்: முதல் மற்றும் ஒரே ஜமாஅத்துக்கு சமூகமளிப்பதிலிருந்து இஸ்லாம் சலுகை வளங்கியுள்ளவர்கள்.
(வெங்காயம் சாப்பிட்டவர், தூங்கிவிட்டவர்,மறந்து விட்டவரல்லது முடியுமான முயற்சிகள் செய்தும் தாமதமாகிவிட்டவர் )இவர்கள் எவ்வாறு முதல் மற்றும் ஒரே ஜமாஅத்திற்கான கூலியை பெற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் அழகிய முறையில் வழிகாட்டியுள்ளது.
இந்த நபிமொழியைப் சற்று நோக்குங்கள்.
حديث أبي هريرة رضي الله عنه، قال قال النبي صلى الله عليه وسلم:
من توضأ فأحسن وضوءه ثم راح فوجد الناس قد صلوا أعطاه الله مثل أجر من صلاها أو حضرها لا ينقص ذلك من أجورهم شيئا.
رواه أحمد، وأبو داود، والحاكم، والبيهقي.
“யார் அழகிய முறையில் வுழூ செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்துவிட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு அல்லாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழாதவர்களுக்கும் குறைத்து விடாமல் வழங்குகிறான்”.
அறிவிப்பாளர்: அபூ ஹுறைறா (ரழி)
ஆதாரம் : அஹ்மத், அபூதாவுத், ஹாகிம், பைஹகி.
எனவே ஒரு முஸ்லிம் தவற விட்ட நன்மையை எப்படி மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என இஸ்லாம் அழகிய முறையில் வழிகாட்டியிருக்க இஸ்லாத்தின் தனித்துவங்களில் ஒன்றான ஒரே ஜமாஅத் என்ற கோட்பாட்டை சுக்கு நூறாக்கும் வகையில் ரயில் பெட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக கொழுகி விடுவது போல் ஒர் ஜமாஅத்துக்குப் பின்னால் மற்றுரு ஜமாஅத் அதற்குப் பின்னால் அடுத்த ஒன்று என்ற அவல நிலையைக் காண்கிறோம்.
இனி சகோதரர் எம். எஸ். அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்ட ஹதீஸ்களுக்கு!! வருவோம்.
சகோதரர் எம். எஸ். அப்பாஸ் அவர்கள் தனது “இரண்டாம் ஜமாஅத் கூடும்” என்ற கருத்துக்கு ஆதாரங்களாக “ஆதாரம்:1, ஆதாரம்:2, ஆதாரம்:3 என மூண்று!! ஹதீஸ்களைக் குறிப்பிட்டபின் “மேற்கண்ட ஹதீஸ்களில் ஒரு…….” என்று பண்மையிலும் குறிப்பிடுகிறார்.!!!
ஆனால் உன்மையில் அவர் இங்கே குறிப்பிட்டிருப்பதோ ஸுலைமான் என்பவர் ஊடாக அபூ ஸஈத் அல் குத்ரி (ரழி) அவர்கள் வாயிலாக மேற்படி அவர் சுட்டிக்காட்டிய கிரந்தங்களில் அறிவிக்கப்படும் ஒரே ஒர் ஹதீஸைத்தான். எனவே ஒர் ஹதீஸ் எவ்வாறு சில அல்லது பல வழிகளில் அறிவிக்கப்படுகிறது என்ற ஹதீஸ் (அறிவிப்பாளர்)கலையின் அடிப்படைகூடத் தெரியாமல் சகோதரர் அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளாரா அல்லது தனது கருத்துக்கு வலு சேர்க்க வேண்டி எண்ணிக்கையைக் கூட்ட வேண்டி 1,2,3 என அடுக்கிக் கொண்டு சென்றாரா என்பது புரியவில்லை.
எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்றிருந்தால் குறித்த ஹதீஸ் இடம்பெற்றிருக்கும் கிரந்தங்களான தாரமி ஆதாரம் 4, இப்னு அபீ ஷைபா ஆதாரம் 5, இப்னுல் ஜாரூத் ஆதாரம் 6, ஹாகிம் ஆதாரம் 7,முஸ்னத் அபீ யஹ்லா ஆதாரம் 8,தபரானி ஸகீர் ஆதாரம் 9, பைஹகீ ஆதாரம் 10 (ஆக மொத்தமாக “இரண்டாம் ஜமாஅத் கூடும் என்பதற்கு பத்து ஆதாரங்கள்) என அடுக்கிக் கொண்டே சென்றிருக்கலாம் அல்லவா?!!
எவ்வாறாயினும் ஒரே ஹதீஸை இப்படி மூண்று ஆதாரங்களாக குறிப்பாக கேள்வி கேட்கும் உலமாக்கள் அல்லாத சகோதரரிடம் சித்தரிக்க முயன்றது ஒரு தவறுதான் என்பதில் ஐயமில்லை.
எனினும் அறிவியல் ஆய்வுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் பிரச்சாரகரிடம் இது எப்படி ஏற்பட்டது என்பதுதான் ஆச்சரியமாகும். தவறுகளுக்கு அப்பாற்பட்ட அந்த தூய அல்லாஹ் எம் அனைவரது தவருகளையும் மண்ணித்து அருள் புரிவானாக!!!
அது ஒரு புறமிருக்க அவர் குறிப்பிட்ட ஹதீஸில் அவரது கருத்துக்கான ஆதாரம் இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது.
நாம் ஏலவே குறிப்பிட்டது போன்று ஒரே ஜமாஅத் என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இது போன்ற வணக்கத்துடன் தொடர்பு பட்ட விடயத்தில் “இரண்டாம் ஜமாஅத் கூடும்” எனக் கருதுபவர்தான் அவரது கருத்துக்கு உரிய ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.
இந்தவகையில் நோக்கும் போது இந்த ஹதீஸ் பின் வரும் அம்சங்களை உனர்த்துகிறது.
1.நாம் முன்னர் குறிப்பிட்ட காரணங்களுக்காக (தூக்கம் ,மறதி, வாடைவீசும் உணவு) ஜமாஅத் தவறுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருந்தும் இரண்டாம் ஜமாஅத்தோ அல்லது மூண்றாம் ஜமாஅத்தோ நபியவர்கள் காலத்தில் நடந்ததாக எந்த ஹதீஸும் இடம் பெரவில்லை.
2.குறித்த இந்த ஹதீஸிலும் தாமதமாக வந்தவர் இண்று நடைமுறை உள்ளது போல் மற்றவர்களுக்காகக் காத்திருந்து இரண்டாம் ஜமாஅத் ஆரம்பிக்காமல் தனியாகவே தொழ ஆரம்பிக்கிறார்.
3.நபியவர்களின் அனுமதி ஏற்கனவே முதல் ஜமாஅத்தி கலந்து கொண்ட ஒருவர் அதைத் தவற விட்ட ஒருவருடன் சேர்ந்து தொழுவதற்கான அனுமதியே தவிர ஜமாஅத்தை தவற விட்ட இருவர் அல்லது பலர் சேர்ந்து நடாத்தும் ஜமாஅத்தை அல்ல.
4.குறித்த ஹதீஸில் முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்டு நன்மை பெற்றவர் அதில் கலந்து கொள்ளாதவருக்கு தருமம் செய்கிறார் என விளங்க முடிகிறது. அனால் இண்றைய முதல் ஜமாஅத்திற்குப் பின் நடாத்தப்படும் ஏனைய ஜமாஅத்களில் யார் யாருக்கு தர்மம் செய்கிறார் என்பதைக் கூற முடியுமா? முடியவே முடியாது.
5. எனவே இந்த ஹதீஸ் ஒருவருக்கு (இஸ்லாம் அணுமதித்த காரனங்களுக்கா) ஜமாஅத் தவறும் போது நாம் முன்னர் குறிப்பிட்ட “யார் அழ்கிய முறையில் வுழூ செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்துவிட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு அல்லாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழாதவர்களுக்கும் குறைத்து விடாமல் வழங்குகிறான்”. என்ற ஹதீஸின் படி தனியாக தொழுதாலே அதற்கான கூலியை அடைந்து கொள்வார். அல்லது ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்ட ஒருவர் விரும்பினால் அவருடன் சேர்ந்து தொழுது தர்மம் செய்யலாம் என்பதற்கான ஆதாரமே தவிர முதல் ஜமாஅத்தை தவறவிடுபவர்கள் சேர்ந்து இரண்டாம் ஜமாஅத்தும் அதைத் தவற விடுபவர்கள் மூண்றாம் ஜமாஅத்தும் அதைத் தவறவிடுபவர்கள் நாலாவது ஜமாஅத்தும் அதைத் தவற………………….. இதற்கெல்லாம் ஆதாரம் இந்த ஹதீஸில் எங்கே இருக்கிறது!!
6.எனவே குறித்த விடயத்தில் சகோதரர் எஸ். எம். அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டது போல்நபி (ஸல்) அவர்களது அனுமதி கிடையாது என்பதுடன் “நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த, ஆர்வமூட்டிய காரியத்தை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை” என்பதல்ல இங்கு கவனத்திற் கொள்ளப்படவேண்டியது. மாறாக நபியவர்களின் வரையறைகளுடனான சுருங்கிய அனுமதியை வரையறைகள் அற்ற விரிந்த அனுமதியாக்குவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்பதையே நாம் கருத்திற் கொள்ளவேண்டும்.
7. இதற்கு ஒரு நல்ல உதாரனமாக “மறைவான ஜனாஸாத் தொழுகை”யை குறிப்பிடலாம். எப்படி நபி (ஸல்) அவர்களின் பொது வழக்கத்திற்கு மாறான “நஜ்ஜாஷி அவர்களுக்கு தொழுவித்த சம்பவத்தை மறைவான ஜனாஸாத் தொழுகை கூடும் என விளங்கிக் கொள்ளாமல் அது “அவருக்கு மட்டும் உரிய தனி நபர் சம்பவம்” என்றோ அல்லது “குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிற்கிறதோ அவருக்கு மட்டும்” என்றோ தழிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் புரிந்து கொள்வது போல் குறித்த் ஹதீசையும் “குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிற்கிறதோ அவருக்கு நபியவர்கள் அனுமதித்த ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் தொழுத ஒருவர் சேர்ந்து தொழுவதுஎன்ற முறையில் மாத்திரம் ” என சரியாக விளங்கிக் கொண்டால் இரண்டாம் ஜமாத்திற்கு அணுமதி என்ற க்ருத்துக்கே இடமில்லை.
8. “குறித்த வரையறைகளை கவனத்திற் கொள்ளத்தேவையில்லை எனக் கருதுவோர் இரண்டாம் ஜும்மாவுக்கோ அல்லது இரண்டாம் பெருநாள் தொழுகைக்கோ இந்த ஹதீஸை வைத்து அனுமதியளிக்க முன்வருவார்கலா என சிந்தித்தாலே “இரண்டாம் ஜமாத்திற்கு அணுமதி” என்ற க்ருத்து எவ்வளவு தவறானது, பார தூரமானது என்பதை விளங்கிக் கொள்ள போதுமானதாகும்.
வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள் புரிவானாக!!
இப்படிக்கு
உங்கள் அன்புச் சகோதரன்
மௌலவி M.I.M. நௌபர்(காஷிபி)
nowfer78@hotmail.com
————————–
———- Forwarded message ———-
From: Webmaster (TNTJ.net) <smohammedabbas@gmail.com>
Date: 2009/8/1
Subject: Re: TNTJ Msg Question
To: ali******@gmail.com
ஒரு பள்ளியில் முதல் ஜமாஅத் முடிந்த பிறகு இரண்டாம் ஜமாஅத் நடத்த மார்கத்தில் ஆதாரம் உள்ளது.
ஆதாரம்:1
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ الْبَصْرِيِّ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّكُمْ يَتَّجِرُ عَلَى هَذَا فَقَامَ رَجُلٌ فَصَلَّى
நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடித்தவுடன் ஒரு மனிதர் தொழுவதற்காக வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் உங்களில் யார் இவருக்கு தர்மம் செய்பவர்? என்ற கேட்டார்கள் பிறகு ஒரு மனிதர் எழுந்து, அவருடன் சேர்ந்து ஜமாஅத்தாக தொழுதார்.
நூல்: திர்மிதி 204
ஆதாரம்: 2
حدثنا علي بن عاصم أخبرنا سليمان الناجي أخبرنا أبو المتوكل الناجي عن أبي سعيد الخدري قال صلى رسول الله صلى الله عليه وسلم بأصحابه الظهر قال فدخل رجل من أصحابه فقال له النبي صلى الله عليه وسلم ما حبسك يا فلان عن الصلاة قال فذكر شيئا اعتل به قال فقام يصلي فقال رسول الله صلى الله عليه وسلم ألا رجل يتصدق على هذا فيصلي معه قال فقام رجل من القوم فصلى معه
நபி (ஸல்) அவர்கள்; தனது தோழர்களுக்கு லுஹர் தொழுகையை நடத்தி முடித்தவுடன் ஒரு சஹாபி தொழுவதற்கு வந்தாh. தாமதமாக வந்த அந்த சஹாபியை பார்த்து தொழாமல் உண்ணை தடுத்தது எது என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அந்த சஹாபி ஒரு சில காரணங்களை கூறிவிட்டு தொழ எழுந்தார், உடனே நபி (ஸல்) அவர்கள் இவருடன் சேர்ந்து தொழுது இவருக்கு தர்மம் செய்பவர் யாரும் இல்லையா? என்று கேட்டதும் ஒரு சஹாபி எழுந்து அவருடன் சேர்ந்து ஜமாஅத்தார் தொழுதார்கள்.
நூல்: அஹ்மத் 11380
ஆதாரம்: 3
حدثنا موسى بن إسمعيل حدثنا وهيب عن سليمان الأسود عن أبي المتوكل عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم أبصر رجلا يصلي وحده فقال ألا رجل يتصدق على هذا فيصلي معه – سنن أبي داود
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் தனியாக தொழுவதை கண்டதும் இவருடன் சேர்ந்து தொழுது இவருக்கு தர்மம் செய்பவர் யாரும் இல்லையா என்று கேட்டார்கள்.
நூல் : அபுதாவுத் 487
மேற்கண்ட ஹதீஸ்களில் ஒரு பள்ளியில் முதல் ஜமாஅத் முடிந்ததும் இரண்டாம் ஜமாஅத் நடத்த நபி (ஸல்) அவர்கள், அனுமதிகொடுத்ததோடு, சேர்ந்து தொழுபவருக்கு தர்மம் செய்யும் அந்தஸ்து கிடைக்கும் என்று கூறி அதை ஆர்வமூட்டியுள்ளார்கள் என்பதும் தெளிவாகின்றது.
நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த, ஆர்வமூட்டிய காரியத்தை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.
இப்படிக்கு,
எஸ்.எம் அப்பாஸ்
TNTJ வெப்மாஸ்டர்
a form has been submitted on July 3, 2009, via: http://tntj.net/?page_id=3D388Contact
பெயர் ALI**** மின்னஞ்சல் ali****@gmail.com தலைப்பு Question செய்தி Dear Mr. P. Jainul Abdeen I have doubt about 2nd jamath of a prayer in a mosque I heared that your saying there is no 2nd jamath in a mosque, if is out of the mosque can be prayed? or the group of passanger arraived in a mosque after end of prayer can be do? pls. give me good answer as soon as possible. Ali Ahamed Q&A 3 powered by cformsII

Comments are closed.