Skip to content

ஹதீஸ்களை அடையாளம் காண்போம்.

August 20, 2009

அல் அதர் மாத இதழ் >ஹதீஸ்களை அடையாளம் காண்போம்!

ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்

நபிகளாரின் காலத்தில் இரண்டு பெண்கள் நோன்பு வைத்திருந்தார்கள். நோன்பின் காரணமாக அவர்களுக்கு பொறுக்க முடியாத அளவுக்கு கடினமான பசி ஏற்பட்டு விட்டது. உயிர் போய்விடுமளவுக்கு ஆகிவிடடது. ஸஹாபாக்கள் நபிகளாரிடம் இதனை முறையிட்ட போது, நபியவர்கள் ஒரு கோப்பையை அப்பெண்களிடம் அனுப்பி அவ்விருவரையும் அதில் வாந்தியெடுக்கச் சொன்னார்கள். அவ்விருவரும் வாந்தி எடுத்த போது இறைச்சித் துண்டுகளும், புதிதான இரத்தமும் வெளிவந்தன.

நபித்தோழர்கள் திகைத்து நின்றனர். அப்போது நபி(ஸல்)அவர்கள் ‘இவர்கள் அழ்ழாஹ் அருளிய ஹலாலான உணவினால் நோன்பு வைத்து ஹராமான பொருளைச் சாப்பிட்டிருக்கின்றார்கள். அதாவது அவ்விரு பெண்களும் மனிதர்களைப் பற்றி புறம் பேசியுள்ளனர்’ என்று விளக்கினார்கள்.

மேற்குறித்த செய்தியில் ‘ரபீஃ’ எனும் பெயரிலுள்ள அறிவிப்பாளர் இடம் பெறுகின்றார். இவர் ஹதீஸ் கலையில் கைவிடப்பட்டவர். எனவே, குறித்த செய்தி பலவீனமானது.

ஆதாரபூர்வமான ஹதீஸ்

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்!

என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அழ்ழாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!, (என்று அழ்ழாஹ் கூறுகிறான்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1894)

<<Back to Al Athar August 2009

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers