அல் அதர் மாத இதழ் ஆகஸ்ட் 2009 (ரமழான் சிறப்பிதழ்)

♦ரமழானை வரவேற்போம்.
♦ரமழானை வரவேற்க தயாராகுவோம்!
♦அழ்ழாஹ்வின் ஆலயத்திற்குள் அரங்கேறிய அரக்கர்களின் அராஜகம்
♦இரவுத் தொழுகை பதினொரு ரக்அத்கள்தானா?
♦நோன்பு திறக்கும் போது ஓதும் துஆக்கள்?
♦கர்ப்பிணித் தாய்மார்களும் பாலூட்டும் தாய்மார்களும் விட்ட நோன்பை கழாச் செய்ய வேண்டுமா?
♦சங்கைமிகு ரமழானை சம்பிரதாய சகதிக்குள் சாகடிக்காதீர்கள்!
♦வாழ்வடக்கம் தரும் ரமழான்
♦ரமழானும் ஆதாரபூர்வமற்ற செய்திகளும்
♦நபித் தோழர்கள் அறிமுகம்
ரமழான் கால வணக்கங்கள் தொடர்பாக…
அன்பார்ந்த இஸ்லாமிய உறவுகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்குர்ஆனையும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் மாத்திரம் பிரச்சாரம் செய்து வரும் எமது அமைப்பு வழமை போன்று இம்முறையும் நபிவழியில் ரமழான் கால வணக்கங்களை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளது.
ஆண்களுக்கு எமது பள்ளிவாயலிலும் பெண்களுக்கு ஊரின் பல பகுதிகளிலும் நபி வழி அடிப்படையில் இரவுத் தொழுகை 11 ரக்அத்துக்களும் பிரயோசனமான தலைப்புக்களில் விசேட மார்க்க சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளன. தமது ரமழான் வணக்கங்களை நபிவழியில் அமைத்துக்கொள்ள விரும்பும் சகோதர, சகோதரிகள் எமது தலைமைக் காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.
தாருல் அதர் பிரச்சாரப் பிரிவு
தலைமைக் காரியாலயம்,
தாருல் அதர் அத்தஅவிய்யா,
காத்தான்குடி.


Comments are closed.