சர்வதேசப் பிறை தொடர்பான தவறான வாதமும் தக்க பதிலும்
வசனம் – 185.
ஏம்.சி.எம்.அப்துல் காதர் வீதி
காத்தான்குடி – 03.
அன்புச் சகோதரருக்கு!!
உங்களைப் போன்று அறிவைத் தேடுபவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறிய “யார் அறிவைத்
தேடுவதற்காக ஒரு வழியை வகுத்துக் கொள்கிறார்களோ அதன் மூலம் அல்லாஹ் அவருக்கு சுவனத்திற்கான பாதையை இலகுபடுத்துகிறான்” என்ற நற்செய்தியையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தாங்கள் குறிப்பிட்ட மேற்படி
சூறா – அல்பகரா
வசனம் – 185.
’றமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் நன்மை தீமைகளைப் பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோன்க வேண்டும்’.
என்ற வசனம் மேலோட்டமாகப் பார்க்கும் போது சர்வதேசப் பிறை எனும் நிலைப்பாட்டிற்கு எதிரானது போல்தான் தென்படுகிறது, இதன் காரனமாகத்தான் இவ்வசனத்தை சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாட்டுக்கு எதிரானதாக பி.ஜே போண்ற சில அறிஞர்கள் குறிப்பிடுவதையும் காண்கிறோம்.
எனினும் மேற்படி வசனதின் சரியான விளக்கம் என்ன என்பதை நாம் ஏனைய அல் குர் ஆன் அல் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் சுருக்கமாக விளங்க முற்படுவோம்
தவறான வாதமும் தக்க பதிலும்
மேற்படி வசனம் “ரமளான் மாதத்தை ஒரு சாரார் அடையும் போது இன்னுமொரு சாரார் அதை அடையாமல் இருக்க வேண்டும்” என குறிப்பிடுவதாக ஒரு தவறான வாதத்தை சிலர் முன்வைக்கிறார்கள்.
இவ்வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை நடைமுறை ரீதியாக உங்களுக்கு விளக்குகிறேன்.
சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாடுள்ளவர்கள் ஒரு புறம் இருக்கட்டும் நாட்டுக்கு நாடு அல்லாது ஊருக்கு ஊர் பிறை என்ற நிலைப்பாடுள்ளவர்கள் இன்று உலகில் மூண்று நாட்கள் வித்தியாசத்தில் ரமளானை ஆரம்பிப்பதைப் பார்க்கிறோம்.
உதாரனமாக முதலாம் சாரார் திங்கட் கிழமையும் இரண்டாம் சாரார் செவ்வாய்க் கிழமையும் மூண்றாம் சாரார் புதன் கிழமையும் என வைத்துக் கொள்ளுங்கள்.
“ரமளான் மாதத்தை ஒரு சாரார் அடையும் போது இன்னுமொரு சாரார் அதை அடையாமல் இருக்க வேண்டும்” என்ற விளக்கத்தின் அடிப்படையில் முதல் சாரார் ரமளானை அடையும் போது இரண்டாம் சாராரும் மூண்றாம் சாராரும் ரமளானை அடைய மாட்டார்கள். அதே போல் இரண்டாம் சாரார் ரமளானை அடையும் போது கூட மூண்றாம் சாரர் ரமளானை அடையாமல் இருப்பார்கள்.ஆனால் மூண்றாம் சாரார் ரமளானை அடையும் போது ரமளானை அடையாதா சாரார் யார் என்றும் ஒரு சாரார் ரமளானை அடையும் போது இன்ணுமுரு சாரார் ரமளானை அடையாமல் இருக்க வேண்டும் என்று (மேற்படி தவறான வாதத்தின் அடிப்படையில்)அல் குர் ஆன் கூறும் போது மூண்றாம் சாரார் எப்படி
ரமளானை அடைந்தார்கள் என்றும் நாம் அறிவு பூர்வமாக சிந்தித்தால் இவ்விளக்கம் பிழை என இலகுவாகப் புரிந்துவிடும்.
இதை இன்னும் சற்று எளிமையாக விளக்குவதெண்றால், இவ்வசனத்தின் அடிப்படையில் மேற்படி பிழையான விளக்கத்தைக் கூறி நாட்டுக்கு நாடு அல்லது ஊருக்கு ஊர் பிறை என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களிடம் நீங்கள் ரமளானை அடையும் போது ரமளானை அடையாத மற்றவர் யார் என இதே கேள்வியை நாம் கேட்போம் என்றால் முதல் சாரார் இரண்டாம் மற்றும் மூண்றாம் சாராரையும் இரண்டாம் சாரார் மூண்றாம் சாராரையும் காட்டி விடுவார்கள்.ஆனால் இதே கேள்வியை மூண்றாம் சாராரிடம் கேட்டால் அவர்களிடம் பதில் கிடையாது.
எனவே எந்தவிதமான மார்க்கரீதியான ஆதாரங்களோ அல்லது அறிவுபூர்வமான வாதங்களோ இன்றி வெறும்னே ஊர் வழமையை மாத்திரம் கருத்திற் கொண்டு நடைமுறைப் படுத்தப்படும் நாட்டுக்கு நாடுபிறை அல்லது ஊருக்கு ஊர் பிறை என்ற நிலைப்பாட்டை தக்க வைத்துக்கொள்வதற்காக இவ்வாறான தவறான வாதங்களை எழுப்புபவர்களிடம் அவர்களின் கேள்விக்கான பதில் அவர்களிடமே இல்லை என்பதுதான் யதார்த்தமாகும்.
உதாரனமாக, மேற்படி வாதத்தை வைத்து சர்வதேசப் பிறை நிலைப்பாட்டில் உள்ளவர்களிடம் காத்தான் குடியைச் சேர்ந்த ஒருவர் கேள்வி கேட்கிறார் என வைத்துக் கொண்டால் நாம் அவரிடம் நீங்கள் ரமளானை அடையும் போது ரமளானை அடையாதவர் யார் எனக் கேட்டால் பதில் கூறமாட்டார்,கூறவும் முடியாது!!!.
அவ்வாறாயின் மேற்படி வசனத்திற்கான சரியான விளக்கம் என்ன என்ற கேள்விக்கு பின்வருமாறு பதிளளிக்கலாம்.
1.மேற்படி வசனம் “முஸ்லிம்களானா நீதமான இருசாட்சிகளின் பிறை கண்ட தகவலை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்ற ந்பி மொழிக்கு முரணில்லை, தகவல் தொழில்நுட்பம் அதன் உச்சத்தை அடந்துள்ளதாக மார்தட்டிக் கொள்ளப்படும்
இண்றைய காலகட்டத்தில் கூட அடிப்படை பின்சார வசதி கூட இல்லாத எத்தனையோ கிராமங்களை எம்
அண்மை நாடான இந்தியாவிலேயே நாம் காண்கிறோம். எனவே “அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவையும் அதன்
சக்திக்கு அப்பால் நிர்பந்திக்க மாட்டான்” என்ற இறை வசனத்திற்கு ஏற்ப இவ்வாறானவர்கள் _பிறை கண்ட தகவல் சென்றடையாத போது_ தாங்களாகவே பிறையை காணும் வரை அல்லது முதல் மாதத்தை முப்பது நாட்களாக பூரணப்படுத்தும் வரை ரமளானை அடையமாட்டார்கள்.எனவே சர்வதேசப்பிறை நிலைப்பாட்டை நடைமுறைப் படுத்தும் போது ரமளானை அடையாமல் யாருமே இருக்க மாட்டார்களே? அது இவ்வசனத்தோடு (மேற்படி தவறான விளக்கத்தின் அடிப்படையில் ) முரண்படுகிறதே? என்ற கேள்வி அடிப்படையிலேயே தவறானதாகும்.
2.அத்துடன் சர்வதேசப் பிறை என்றால் உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒரே நேரத்தில் ரமளானை அடைவது அல்லது நோன்பு பிடிப்பது என்று தவறாக விளங்கிவைத்திருப்பதன் காரனமாகவே இது போன்ற கேள்விகள்எழுகின்றன.
உன்மையில் ரமளானை அடைவதாக இருக்கட்டும் அல்லது நோன்பு நோற்பதாக இருக்கட்டும்.உன்மையில் யார் அதற்குரிய நேரத்தை அடைவார்களோ அப்போதுதான் அவ்வணக்கத்தை மேற்கொள்வார்கள்.
உதாரனமாக இன்று(இப் பதில் எழுதும் நாள்) பதின்மூண்றாம் திகதி மாலை நாம் எமதூரில் பிறை கண்டு பதினான்காம் திகதி அதி காலை நோன்பு நோற்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்.அதே குறித்த நேரத்தில் அமெரிக்காவில் பதின் மூண்றாம் திகதி மாலை நேரத்தில் இருப்பார்கள். எனினும் நாம் அந்த மாதத்தை அடைந்து விட்டதால் நாம் நோன்பு நோற்போம். அம்மாத்தை இன்னும் அடையாத அமெரிக்க முஸ்லிம்கள் நாம் கண்ட பிறைத் தகவலின் அடிப்படையில் அவர்கள் எப்போது பதின் நான்காம் திகதி அதிகாலையை அடைவார்களோ (அதாவது அடுத்த நாள்) நோன்பு நோற்பார்கள். இந்த வகையில் பார்க்கும் போது மேற்படி தவறான வாதம் சர்வதேசப் பிறை நிலைப்பாட்டில் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தாது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
அனால் நாட்டுக்கு நாடு பிறை அல்லது ஊருக்கு ஊர் பிறை என்ற தவறான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் அமெரிக்க முஸ்லிம்கள் நாம் கண்ட பிறைத்தகவலை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும்! மாறாக அவர்கள் பதின்மூண்றாம் திகதி மாலை (நாம் ஏற்கனவே கண்டு அறிவித்த) பிறையை அவர்கள் மீண்டும் பார்க்க வேண்டும் என்றும்!! அவர்களாகவே பிறயைக் கண்டால் தான் பதின் நான்காம் திகதி நோன்பு நோற்க முடியும் என்றும்!!! தப்பித்தவறி பிறை தென்படாவிட்டால் பதினைந்தாம் திகதி தான் நோன்பு நோற்க வேண்டும் என்றும்!!!! கூறுகிறார்கள்(என்னே ஒரு அறிவுபூர்வமான கருத்து!!)
3 எந்தவிதமான மார்க்கரீதியான ஆதாரங்களோ அல்லது அறிவுபூர்வமான வாதங்களோ இன்றி வெறும்னே ஊர் வழமையை மாத்திரம் கருத்திற் கொண்டு .நாட்டுக்கு நாடு அல்லது ஊருக்கு ஊர் பிறை என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு இந்த தவறான குதர்க்கமான வாதத்தை எழுப்பி “சர்வதேச பிறை நிலைப்பாட்டின் போது “ரமளானை
அடையாத மற்ற சாரார் யார்”? என எம்மிடம் கேள்வி கேட்பவர்களுக்கு “அல்குர் ஆன் அல் ஹதீஸின்
அடிப்படையில் சர்வதேசப் பிரை அடிப்படையில் நாம் நோன்பு நோற்கும் போது எந்தவிதமான மார்க்கரீதியான ஆதாரங்களோ அல்லது அறிவுபூர்வமான வாதங்களோ இன்றி வெறும்னே ஊர் வழமையை மாத்திரம் கருத்திற் கொண்டு நோன்பு பிடிக்காமல் இருக்கிறீர்களே நீங்கள்தான் அந்தச் சாரார்” என குதர்க்கமாகவே பதில் சொல்ல முடியும்.
எனவே அன்புச் சகோதரரே! வெறுமனே ஊர் வழமை என இருந்துவிடாமல் எமது பதிலில் உள்ள நியாயத்தையும் யதார்த்தத்தையும் கவனத்திற் கொள்ளுங்கள். தொடர்ந்தும் சந்தேகங்களை எழுதுங்கள்.
வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் நற்கூலி தருவானாக!!
– மௌலவி M.I.M. நௌபர்(காஷிபி)

Comments are closed.