Skip to content

பேருவலையில் இடம் பெற்ற கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

July 26, 2009

25072009232

பேருவளை,  மஹகொடயில் அமைந்துள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாயல்  மற்றும் அல்குர்ஆன் மத்ரஸா போன்றன நேற்று (25.07.2009) அதிகாலை 1.30 மணியளவில் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளத் திராணியற்ற,  இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முர்தத்களான கப்றுவணங்கிகளே கோழைத்தனமானதும், கீழ்த்தரமானதுமான இவ் ஈனச் செயலில் ஈடுபபட்டுள்ளனர்.

கீழ்த்தரமான  இத்தாக்குதலை தாருல் அதர் மிக வன்மையாக கண்டிக்கின்ற அதேவேளை,  உங்களது இவ்அச்சுறுத்தல்கள் தௌஹீத்வாதிகளை சத்தியப்பிரச்சாரத்தில் இருந்து சற்றும் பின்வாங்கச் செய்யாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றது. இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடுவதன் மூலமும்,  அழ்ழாஹ்வை மாத்திரம் அழைப்பதற்காக உருவாக்கப்பட்ட தூய இறை இல்லங்களை எரிப்பதன் மூலமும் நீங்கள் பொய்யர்கள், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற கோழைகள் என்பதை மீண்டுமொரு முறை பறைசாற்றியிருக்கின்றீர்கள். இதனையே அல்குர்ஆன் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றது.

அழ்ழாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அழ்ழாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன்-09:32)

நீங்கள் எதிர்த்தாலும், எரித்தாலும் சத்தியப்பிரச்சாரம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். யாரைக் கொண்டேனும் அழ்ழாஹ் இப்பூமியில் அவனது மார்க்கமான தௌஹீதை வாழ வைத்தே தீருவான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே வேளை அரசாங்கம், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அனைவரும் கவனமெடுத்து இவ் ஈனச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

இக்கோரத்தாக்குதலில், அழ்ழாஹ்வின் மார்க்கத்திற்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த முஹம்மட் மொஹிதீன் மற்றும் முஹம்மட்  மாஹிர் ஆகிய சகோதரர்களுக்கும் அழ்ழாஹ் சுவனபதியை வழங்க வேண்டுமெனவும் தாக்குதலுக்குள்ளான சகோதரர்கள் பூரண குணமடைய வேண்டுமெனவும்  எல்லாம் வல்ல அழ்ழாஹ்வைப் பிரார்த்திப்பதோடு, அவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், இக்கீழ்த்தரமான தாக்குதலில் ஈடுபட்ட கப்றுவணங்கிககள் தங்கள் கருத்தில் உறுதியானவர்களாக இருந்தால் வாள்களாலும்,  தடிகளாலும் தீர்வு காண்பதை விடுத்து கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முன்வர வேண்டுமென தாருல் அதர் இவ்வேளயில் சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக்கொள்கின்றது.

அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அழ்ழாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அழ்ழாஹ் சிறந்தவன். (அல்குர்ஆன்- 08:30)

2507200922025072009224250720092232507200922125072009225250720092262507200922725072009228250720092292507200923625072009235250720092342507200923325072009230

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers