ஹதீஸ்களை அடையாளம் காண்போம்.
ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்
‘பள்ளிவாயலினுள் பேசுவது கால்நடைகள் புற் பூண்டுகளை சாப்பிடுவது போல் (உங்கள்) நன்மைகளை சாப்பிட்டு விடும்’
இச்செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இது நபிகளாரின் பெயரில் புனையப்பட்டது என்பதை அல்லாமா முல்லா அலி காரி அவர்கள் தனது நூலான ‘அல் மஸ்னூஃ பீ மஃரிபதில் ஹதீதில் மஃலூஃ’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். அதே போன்று ‘தஹ்ரீஜுல் இஹ்யா’ எனும் நூலில் இமாம் இராகி அவர்களும், ‘தபகாதுஸ் ஷாபி இய்யா’ எனும் நூலில் இமாம் ஸுபுகீ அவர்களும் ‘இது அறிவிப்பாளர் வரிசை அற்ற பொய்யான செய்தியெனக் கூறியுள்ளார்கள்’ இவ்வாறான கோளாருகள் உள்ள இச்செய்தியை எமது மார்க்க அறிஞர்கள் பயான்களில் கூறி வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
ஆதாரபூர்வமான ஹதீஸ்
ஜுன்தப் பின் சுஃப்யான் (ரழி) அவர்கள் கூறியதாவது.
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்குகொண்டபோது அவர்களது விரலில் (காயம் ஏற்பட்டு) இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள் நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே நீ அடைந்த (பழு)தெல்லாம் அழ்ழாஹ்வின் பாதையில் தானே என்று (ஈரடிச் சீர்ப்பாடல் பேன்ற வடிவில்) கூறினார்கள்.’
ஹதீஸ் தொகுப்பு : ஸஹீஹுல் புஹாரி பாகம்: 3 அத்தியாயம்: 56-அறப்போரும் அதன் வழிமுறைகளும்

Comments are closed.