நபித் தோழர்கள் அறிமுகம்
தூய இம்மார்க்கத்தை பாதுகாத்ததில் உதாரண புருஷர்களாகத் திகழும் நபித் தோழர்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தும் விறுவிறுப்பான அறிமுகத் தொடர் இது. நபித் தோழர்களை கண்ணியப்படுத்துமாறு அழ்ழாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதாலும், நாம் பின்பற்றும் இம் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக பல்வேறு தியாகங்களையும் துன்ப, துயரங்களையும் வாழ்வில் சந்தித்த ஒளிவிளக்குகளான நபித் தோழர்களை நினைவு கூர்வது முஃமின்கள் மீது கடமையாகும். ‘அழ்ழாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான் அவர்களும் அழ்ழாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்.’
அல் மிஸ்வர் பின் மஹ்ரமாஃ (ரழி)
இயற் பெயர் : அல் மிஸ்வர்
புனைப் பெயர் : அபூ அப்துர் ரஹ்மான் அல் குரஷி அஸ்ஸுஹ்ரி.
தாயின் பெயர் : ஆதிகா
தந்தையின் பெயர் : மஹ்ரமாஃ பின் நவ்பல்
பிறப்பு : ஹிஜ்ரத்தின் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து மக்காவில்
சிறப்பு : சிறிய நபித் தோழர்கள் வரிசையில் இவர் உள்ளடங்குகின்றார்.
குழந்தைகள் : அப்துர் ரஹ்மான், உம்மு பக்ர்.
இறப்பு : ஹிஜ்ரி 64 ரபீஉல் அவ்வல் மாதம் மக்காவில் மரணமடைந்தார்கள்.
அறிவித்த ஹதீஸ்கள் : முஸ்லிம், அஹ்மத் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Comments are closed.