பயங்கர வாதத்தால் எதையும் சாதிக்க முடியாது
வரைவு: அல்ஹாபிழ் ஸைனி
அதிகாரத்தால் சாதிப்பதை அன்பினால் இலகுவாக சாதித்து விடலாம் என்று எமது முன்னோர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
ஆம் அது உண்மைதான் எந்தவொரு விடயத்தையும் மனிதாபிதமாக சாதிக்கும் போது பல வெற்றிகளையும் சாதனைகளையும் நாம் கண்டு கொள்ள முடியும். அதுவே நிதர்சனமான ஒரு உண்மையாகும்.
மிருகத்தனமான வாஞ்சையுடனும் வெறுப்புடனும் ஒன்றை எதிர் கொள்ளும் போது அதன் இறுதி முடிவு தோல்வியிலேதான் அமையும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை
இஸ்லாத்தில் கூட இதற்கு அழகிய முண்ணுதாரனம் இருக்கின்றது.
ஒரு மனிதர் அண்ணலாருடைய காலத்தில் அன்று இறையில்லமாகக் கருதப்பட்ட மஸ்ஜிதுன்னபவியில் சிறு நீர் கழித்து விட்டார் இதைக்கண்ட அண்ணலாரின் அன்பர்கள் கோபமுற்று அவரைத் தாக்க ஆரம்பித்தார்கள். அதைக் கண்ணுற்ற அண்ணலார் அவரைத் தாக்காமல் சிறு நீர் கழிக்கும் வரை அவரை விட்டு விடுமாறு கட்டளையிட்டதுடன் அவர் சிறு நீர் கழித்து முடிந்தவுடன் அதன் மீது ஒரு வாளி நீரை ஊற்றுமாறு கட்டளையிட்டார்கள்.
பின்னர் அம்மனிதரைக் கூப்பிட்டு இது இறையில்லம் இதில் இவ்வாறான அசிங்கமான செயல்களை செய்யக் கூடாது என அவர் செய்த தவறினை அழகிய முறையில் அடையாளப்படுத்துகிறார்கள் அண்ணலம் பெருமானார்(ஸல்) அவர்கள்.
இந்த செய்தியிலிருந்து இரு பாடங்களை நாம் பிரதானமாகப் பெறுகின்றோம்
ஒன்று: ஒருவர் சிறு நீர் கழிக்கும் போது இடையில் நிறுத்தக் கூடாது அவ்வாறு நிறுத்தினால் அது உடலுக்கு ஆபத்தினை விளைவிக்கும் என்று இன்றய விஞ்ஞானம் ஒத்துக் கொள்ளும் பேருண்மையை அன்றே அண்ணலார் அம்மக்களுக்கு தனது செயலால் தெளிவு படுத்துகிறார்கள்.
இரண்டாவது: ஒருவர் தவறு செய்யும் போது அதைக் திருத்துவதில் அழகிய முறையைக் கையாள வேண்டும் என்பதே!
இதனால்தான் அம்மனிதரை அழைத்து அண்ணலார் அறிவுரை கூறிய சமயத்தில் இறைவா! எனக்கும் இந்த முஹம்மதுக்கும் மாத்திரம் உனது அருளை சொரிவாயாக வேறு எவருக்கும் நீ அவ்வாறு செய்து விடாதே! என பிரார்த்தனை செய்து விட்டுச் சென்றதாக ஆதாரமான ஹதீத் கிரந்தங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.
ஆக ஒட்டு மொத்தத்தில் எந்தவொரு பிரச்சனையையும் சுமூகமான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் கையாண்டால் மாத்திரமே வெற்றி கிட்டும் என்பதை மேற் குறித்த செய்திகள் எமக்கு உணர்த்துகின்றன.
ஆனால் இன்றய கால கட்டத்தில் இலங்கை நாட்டில் நடந்து முடிந்த பிரச்சனை என்னவென்பதை சற்று அலசிப் பார்த்தால் உண்மை கல நில வரம் எமக்குப் புரியும். நாட்டைப் பிடித்து அதன் அரசியலில் உள் நுழைந்து தனக்கென்று ஒரு சக்தியை உருவாக்கிக் கொள்ள முனைந்த ஒரு இயக்கத்தின் முதுகெழும்பு உடைந்து கிடக்கின்றது. அதன் உடல் பகுதிகள் அங்கு மிங்கும் சிதறிக் கிடக்கின்றன.
அவ்வியக்கத்திற்காக குரல் கொடுத்தோர் அடையாளம் காணப்படாதோராகி மண்ணுக்கு இரையாகி விட்டார்கள். இயக்க வெறி பிடித்து மனித உயிர்களை தங்களை பாதுகாக்கும் கேடயங்களாக பயன்படுத்திய இவர்களுக்கு நேர்ந்த கதியின் மர்மம்தான் என்ன? மனிதர்களை பலிக்கடாவாக்கி நாட்டிலும் சர்வதேசத்திலும் அராஜகங்களை தோற்றுவித்த அந்த அரக்கர்கள் வரலாறு அடியோடு அழிந்து விட்டதா? இல்லை மீண்டும் உருவாகின்ற சாத்தியக் கூறுகள் உள்ளனவா? இவைகளெல்லாம விடை காணப்படாத வினாக்களா?
நாட்டில் நடந்து முடிந்த கலவரத்தை நடு நிலமையாக நின்று அவதானித்த அவதானிகளே! சற்று சிந்தித்துப்பாருங்கள்
ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இவ்வியக்கம் செய்த பிரயத்தனங்களை சற்று எண்ணிப் பாருங்கள்.
ஒவ்வொரு இயக்கமும் தனது குறிக்கோளை எய்த பல பிரயத்தனங்களை மேற்கொள்ளும் என்பதனை நாம் மறுக்கவில்லை.ஆனாலும் இவ்வியக்கம் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளை கணக்கிட்டால் நாட்டைப் பாதுகாக்க களத்தில் போராடும் இராணுவ வீரர்களை கொன்று குவித்த எண்ணிக்கையை விட ஒரு படி மேலாகவே இருப்பதைப் பார்க்கின்றோம்.
எத்தனை அப்பாவி உயிர்கள் இவர்களது துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி இருக்கும்? எத்தனைக் கன்னிகள் இவர்களால் விதவையாகி இருப்பார்கள்? எத்தனை குழந்தைகள் பெற்றோரை இழந்த அனாதைகளாக இருப்பார்கள்? இவர்கள் தனது இனத்தைக் கூட விட்டு வைக்காமல் கொன்று குவித்த கயவர்கள்.
முஸ்லிம்களை அகதிகளாக்கியும் பள்ளிகளிலும் ஊர்களிலும் சுட்டுக் கொலை செய்தவர்கள் வாகனங்களில் பிரயாணிக்கும் பிரயாணிகளை கடத்தியும் அவர்களிடத்தில் கப்பம் அறவிட்டும் பல பஞ்சமா பாதகச் செயல்களை இந்நாட்டில் உண்டு பண்ணியவர்கள்தான் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதனை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உள்ளமும் நன்கு நினைவில் வைத்துக் கொள்ளும்.
உலகில் எந்தவொரு பயங்கர வாத இயக்கமும் செய்யாத கொடூரச் செயல்களை இவ்வியக்கம் செய்துள்ளது. இவ்வியக்கம் முற்றாக அழிந்து போன மர்ம டயரியினை புரட்டிப் பார்த்தால் ஒரு விடயம் எமக்கு தெளிவாகும். ஆம் அதுதான் பயங்கர வாதம். பயங்கர வாதத்தால் எதையும் சாதிக்க முடியாது அவ்வாறு சாதிக்க முனையும் எந்தவொரு இயக்கத்திற்கும் இதே கதிதான் நிகழும் என்பதனை நாம் மறுக்க முடியாது.
முட்களைக் கொண்ட பயங்கரவாதப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் இந்நிகழ்வைப் பார்த்து படிப்பினை பெற வேண்டும். இது வரலாற்றில் அழிக்க முடியாத பக்கத்தில் எழுதப்பட்டு விட்டது.
பயங்கரவாதத்தின் மூலம் காரிருள் சூழ்ந்த சமூதாயத்தை உருவாக்கி இந்த சமுதாயத்தின் இளைஞர்களின் அறிவையும் ஆழ்ந்த சிந்தனையையும் மழுங்கடிக்கச் செய்து விட்டார்கள். தமிழ்ப் பெண்களின் எதிர்கால வாழ்வினை குட்டிச் சுவராக்கி விட்டார்கள். ஆயினும் இனியாவது இந்த வீழ்ச்சியை சரிக்கட்ட இழைஞர்கள் முன் வர வேண்டும்.
இஸ்லாம் எதிர்க்கும் பயங்கரவாத்தை முற்றாகப் ஒழிக்க வேண்டும். கடந்த கால புலிகளின் வரலாற்றை மறக்கடிக்கப்பட்ட வரலாறாகவும் மலையேறிய வரலாறாகவும் மாற்றியமைப்பதற்கு இந்த சமுதாயத்தில் உள்ள மார்க்க அறிஞர்களும் புத்தி ஜீவிகளும் சிந்தனா ரீதியான போராட்டத்தினை மேற்கொள்ள வேண்டும். இன மத பேதமின்றி அனைவரும் இதில் ஒன்றினைய வேண்டும்.
தமிழர்கள்,சிங்களவர்கள்,முஸ்லிம்கள்,பறங்கியர்கள் என பாகுபாடு பார்க்காமல் அனைவரும் ஒரே இனத்து மக்கள் போன்று செயற்பட வேண்டும் அப்போது தான் நாட்டில் ஐக்கியமும் சமாதானமும் மலரும். அதற்கு இஸ்லாம் கூறும் ஒரே வழியில் சென்றால் நிச்சயம் வெற்றி கிட்டும்.
அன்று இறுதிப் பேருரையின் போது அண்ணலார் எந்த யருக்கும் அறபியல்லாதவரை விட தனிச் சிறப்பு கிடையாது அன்று நீங்கள் ஜாஹிலிய்யாக் (அறியாமை) காலத்தில் செய்த மூடப் பழக்க வழக்கங்களை இன்று எனது காலின் கீழ் போட்டு மிதிக்கின்றேன். எந்த சிவப்பினத்தவனுக்கும் மற்ற கருப்பினத்தவனை விட இறையச்சத்தைக் கொண்டே அன்றி தனிச் சிறப்புக் கிடையாது’ என்பதை அன்று கூறி வைத்தார்கள். இதன் மூலம் இனவெறியைத்துண்டும் அனைத்து ஆணி வேர்களையும் அன்று அண்ணலார் அறுத்தெரிந்து விட்டார்கள்.
ஆகவே அண்ணலார் காட்டிய அடிப்படையில் எமது அரசியல் வாழ்க்கையையோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையையோ அமைத்துக் கொண்டால் மாத்திரமே இந்த சமுதாயத்திற்கு விடிவு கிடைக்கும் எனக் கூறி முடித்துக் கொள்கின்றேன்.
அல்லாஹ் போதுமானவன்!!

Comments are closed.