Skip to content

ஜனாஸா நலன் புரிச் சங்கம் ஓர் அறிமுகம்

June 18, 2009

அல்குர்ஆன் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மாத்திரம் முன்னிருத்தி இஸ்லாமியப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் எமது அமைப்பு சமூக நலனைக் கருத்தில்கொண்டு பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இத்தொடரில் ‘ஜனாஸா நலன் புரிச் சங்கம்’ எனும் பெயரில் ஒரு புதிய அமைப்பை அழ்ழாஹ்வின் அருளால் எமது ஸூறா சபை தோற்றுவித்துள்ளது. இதன் அடிப்படை நோக்கம் மரணிக்கும் சகோதர சகோதரிகளை பித்அத்கள் இல்லாமல் தூய்மையான குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் நல்லடக்கம் செய்துவதும் அழ்ழாஹ்வின் நல்லருளைப் பெற்றுக் கொள்வதும் மத்ஹபுகளின் அடிப்படையில் உருவான அநாச்சாரங்களை அழித்தொழிப்பதும் தான்.

ஆகவே இந்நடைமுறை தொடர்பில் உங்களது ஆலோசனைகளையும் அவதானங்களையும் எமது ஜனாஸா நலன்புரிச் சங்கம் எதிர்பார்க்கின்றது. வாழ்வின் அனைத்துத் துறையிலும் அழ்ழாஹ்வின் சட்டங்கள் மாத்திரம் ஊடுருவ வேண்டுமென விரும்பும் சகோதர சகோதரிகள் பித்அத்துக்களை ஒழிக்கும் இம்மகத்தான முயற்சிக்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுதவுமாறு வேண்டுகின்றோம்.

ஜனாஸா நலன் புரிச் சங்கம்
தாருல் அதர் அத்தஅவிய்யா
காத்தான்குடி.
தொலைபேசி இல. 0652247900 begin_of_the_skype_highlighting              0652247900

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers