Skip to content

ஹதீஸ்களை அடையாளம் காண்போம்.

June 17, 2009

ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உணவு உட்கொண்ட பின்னர் இந்த துஆவை ஓதுவார்கள்.

‘அல்ஹம்துலிழ்ழாஹில்லதீ அத் அமனா வஸகானா வஜ அலனா மினல் முஸ்லிமீன்’

இந்த ஹதீஸ் ஆதாரபூர்வ மற்றதாகும். இச்செய்தியில் இடம்பெறும் அதிகமான அறிவிப்பாளர்கள் முன்னுக்குப் பின் முரணான செய்திகளை இது தொடர்பில் அறிவித்துள்ளதால் இச்செய்தி ஹதீஸ் கலையின் விதியின்படி அங்கீகரிக்க முடியாதவையாகும்.

(மேலதிக தகவலுக்கு பார்க்க: துஹ்பதுல் அஷ்ராப் (3:353) அத்தாரீஹுல் கபீர் (1:353)

ஆதாரபூர்வமான ஹதீஸ்

அபூஉமாமா (ரழி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உணவு உண்டபின் அல்லது தமது உணவு விரிப்பை எடுக்கும்போது

அல்ஹம்துலிழ்ழாஹி கஃபானா வ அர்வானா ஃகைர மக்ஃபிய்யின் வலா மக்ஃபூரின் என்று கூறுவார்கள்.

(பொருள்: எங்களுக்குப் போதுமான உணவு அளித்து எங்களின் தாகம் தணித்த அழ்ழாஹ்வுக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது.இப்புகழ் முற்றுப் பெறாதது. மறுக்க முடியாதது ஆகும்.

(ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி- 5459)

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers