Skip to content

சல்மான் ருஷ்தியின் சாத்தானிய வசனங்கள்.

June 17, 2009

அல் அதர் மாத இதழ் >அல் குர்ஆன்

அல் ஹாபிழ் அபூ அஸ்பாக் அல் அதரி abooashfaq@gmail.com

‘அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அழ்ழாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அழ்ழாஹ் சிறந்தவன்.’ (அல்குர்ஆன் 8:30)

சென்ற இதழின் தொடர்ச்சி…

நாம் எமது அல்குர்ஆன் பகுதியில் அல்குர்ஆனுக்கு எதிராக வரலாற்றிலே நடந்தேறிய சதித்திட்டங்களையும் அவைகள் எவ்வாறு முறியடிக்கப்பட்டன என்ற வரலாற்றுக் குறிப்புக்களையும் பார்த்து வருகின்றோம்.
இதன் தொடரில் கடந்த இதழ்களில் மக்கத்து முஷ்ரிக்குகள் முஸைலமதுல் கத்தாப் ஸிஜாஹ் அத்தமீமிய்யா துலைஹா அல்அஸதி ஷீஆக்கள் பஹாஇய்யாக்கள் (ஹுஸைன் பின் அலீ) போன்றோர்கள் அல் குர்ஆனை மாற்றி அமைப்பதற்கு எத்தகைய கையாடல்களை மேற்கொள்வதற்கு பிரயத்தனம் எடுத்தார்கள் அவைகள் எவ்வாறு முறியடிக்கப்பட்டன அவை முஸ்லீம் சமூகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தின போன்ற பல அம்சங்களை பார்த்தோம்.

அந்த வகையில் இவ்விதழில் கறுப்பு வரலாற்றுக்குச் சொந்தக்காரனான சல்மான் ருஷ்தி இஸ்லாமிய சமூகத்தில் ஏற்படுத்திய குழப்பங்களை சற்று சுருக்கமாக நோக்குவோம்.

சல்மான் ருஷ்தி தஸ்லீமா நஸ்ரின் போன்றோரின் பெயர்களைக் கேட்டாலே தூய்மையான உள்ளங் கொண்ட இஸ்லாமியர்களின் நெஞ்சங்களிலே ஒரு வகையான வெறுப்புணர்ச்சி ஏற்படுகின்ற அதே வேளை மேற்கு சமூகம் இவர்களுக்கு எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் போன்ற பட்டங்களை வழங்கி உயர்த்தி வைத்திருக்கின்றது.

சல்மான் ருஷ்தி என்பவன் யார்? அவனது பின்னணி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல்தான் நாம் இருந்தோம். அவன் “Satanic Verses”‘ எனும் நூலை எழுதும் வரை…

இஸ்லாமிய வரலாற்றை சரியாக ஆய்வு செய்த எவரும் (அவர் மாற்றுமதத்தவராக இருப்பினும் சரியே) இந்நூலை வாசிப்பார்களாயின் இந்த ஈனன் மீது காறி உமிழ்வர். இவன் இஸ்லாமியர்களுக்குள் இருந்து கொண்டே கிளம்பிய நச்சுப்புழு. இவனது இந்நூல் முஸ்லீம் சமூகத்தில் மேற்கத்தியர்கள் தடவி விட்ட காயத்தை மீண்டும் குத்திக் கீறியது.

இதயம் ஒன்று இருக்கின்ற எந்த ஒரு இஸ்லாமியனும் இந்த ஈனனின் பெயர் கேட்டால் அவர்களின் இதயங்கள் பொசுங்கும்.இவன் தான் எழுதுவதை பற்றி விரிவான ஆய்வு எதுவும் செய்யாமல் இஸ்லாமிய மார்க்கத்தைக் கொச்சைப்படுத்துவதற்கும்இ தான் சமூகத்தில் எவ்வாறு பிரபல்யம் அடைவதற்கும் சில வரலாற்றாசியர்களின் தவறான தகவல்களை ஆதாரமாகக் கொண்டு கூடையால் மூடிய விளக்கு போல மேற்குறிப்பிட்ட நூலை எழுத ஆரம்பித்தான். முஸ்லீம்களின் அன்னைஇ உம்முல் முஃமினீன் என்று நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற நபியவர்களின் மனைவியர் மீது வீணான அவதூறுகளை அள்ளி வீசிய இந்த ஷைத்தான் சல்மான் ருஷ்தி வரலாற்றாசிரியர்களால் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்ட வரலாறுகளை திருத்தி எழுதவும் தயங்கவில்லை.

இப்படிப்பட்ட வன்நெஞ்சம் கொண்டவர்கள் மீது முஸ்லீம்கள் தங்களது எதிர்ப்பலைகளை அள்ளிவீசுவதை எவராலும் தவறு என்று கூறமுடியாது. அப்படி அவர் என்னதான் செய்தார்? சற்று இஸ்லாமிய வரலாற்றை நுகர்ந்து பார்ப்போம் அன்பர்களே! இவர் வுhந ஐளடயஅiஉ ஏநசளரள என்ற கட்டுக்கதையை எழுதினார். நபிகளார் இவ்வுலகில் வாழும் கட்டத்திலேயே அவரது சுய கௌரவத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அறபிகளில் சிலர்கள் புனைந்த கதைதான் இது.

எமது ஆரம்ப வரலாற்றின் உள்ளே சற்று செல்வோம். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறந்தது முதல் இறந்தது வரை அரேபிய தீபகற்பத்தில் நற்பெயரோடு வாழ்ந்து வந்த மகான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதனால்தான் இறைத்தூதர் அவர்கள் சத்திய பிரச்சாரத்தை மக்கள் மன்றத்தில் முன்வைத்தபோது எந்தவொரு ஆதமின் மகனாலும் முன்மொழிய முடியாத ஒரு வார்த்தையை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தார்கள். அதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. ‘அழ்ழாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா? என்று (முஹம்மதே!) கூறுவீராக!’ (அல்குர்ஆன் 10:16)

உலகில் எத்தனையோ நபிமார்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனர். சத்தியப்பிரச்சாரத்தை மேற்கொண்டும் இருக்கின்றனர். ஆனால் நபிகளார் தான் நபித்துவத்திற்கு முன்னால் வாழ்ந்த அப்பழுக்கற்ற வாழ்வை சவாலாக வைத்து பிரச்சாரம் செய்ததைப்போல் எந்த ஒரு நபியும் பிரச்சாரம் செய்ததில்லை.

இப்படியான நற்பெயரோடு வாழ்ந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் திடீரென்று ‘இந்த சிலைகள் வணக்கத்திற்குரியவை அல்ல. வணங்கப்படுவதற்குத் தகுதியான ஒரு இறைவன் மேலே இருக்கிறான். அவன் பக்கம் மீண்டு வாருங்கள்’ என்று அறைகூவல் விட்டதும்; மக்கத்து காபிர்கள் வியந்து போய்விட்டனர். காரணம் விடுக்கப்பட்ட அறைகூவல் அவர்களின் ஆளுமையையும் சுய கௌரவத்தையும் கேள்விக்குறியாக்கிய அதே நேரம் அறைகூவல் விடுத்தவரோ அல்அமீன் (நம்பிக்கை யாளர்) அஸ்ஸாதிக் (உண்மையாளர்) போன்ற பட்டப் பெயர்களை கொண்டு விளிக்கப்பட்டவர்.

முஹம்மத் நபியின் நேர்மைதவறா நாணயத்தை அறிந்தவர்கள் நாளாந்தம் சத்தியத்தூதை ஏற்றுக்கொண்டதினூடாக மக்கள் கூட்டம் அவரை அரவணைத்துக் கொண்டதை கண்ட தீய உள்ளம் கொண்டோர் தங்களின் ஆட்சி அதிகாரங்களும் நாளடைவில் பங்கிடப்பட்டு விடுமோ? எனப் பயந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதெற்கென்று தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்கள். எனினும் நபிகளார் வம்சம் உயர்ந்த வம்சமாகும். அவர்களின் குலம் உயர்ந்த குலமாகும். ஆகவே அவரோடு நேரடியாக மோதும் எவரும் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்த அவர்கள் வழக்கம் போல கோழைகளின் யுக்திகளையே கையாண்டனர். அந்த யுக்தி இரு விதங்களில் அமையப் பெற்றிருந்தது.

1.ஏழ்மையில் இருக்கின்ற நபித்தோழர்களை குறிவைத்து (பிலால் யாசிர் போன்றோர்) அவர்களை துன்பத்திற்குள்ளாக்குவதனூடாக இஸ்லாத்திற்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்துவது
2.முஹம்மத் (ஸல்) அவர்களின்  நற்குணத்திற்கு அபகீர்த்தியை உண்டுபண்ணி அவர்களின் பக்கம் மக்கள் செல்வதை தடுத்து நிறுத்துவது.

இவ்விரண்டு யுக்திகளின் முதலாவது யுக்தி பெரிதாக கை கொடுக்கவில்லை. ஏனெனில் அன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் எவரும் நாம் வாழையடி வாழையாக இஸ்லாத்தை ஏற்றிருப்பது போல் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக உளப்பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் ஏற்றுக் கொண்டிருந்தனர். இதனால்தான் இவ்யுக்திக்கு அன்றைய நபித்தோழர்கள் பலியாகவில்லை. எனினும் இரண்டாவது யுக்தி சற்று வித்தியாசமானதும் அறிவுபூர்வமானதாகவும் இருந்தது. அதுதான் நபிகளாரின் அப்பழுக்கற்ற வாழ்க்கையில் கலங்கத்தை ஏற்படுத்த முனைந்தது.

எதிரிகள் தங்களது இவ் இரு பிரதான திட்டங்களையும் மிகக் கச்சிதமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கும் வேளையில்தான் ஒரு நிகழ்வு நடந்தேறுகிறது.  முஸ்லிம்கள் இறைவணக்கத்தை மேற்கொள்ளும் சமயம் அல்குர்ஆனிலிருந்து சில வசனங்களை சப்தமிட்டு ஓதுவது வழக்கம். இது எதிரிகளுக்கும் நன்கு தெரியும். எனவே வழக்கம் போல கஃபாவில் முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கும் போதுதான் நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு ஒரு சம்பவம் நடைபெறுகிறது.

21ம் நூற்றாண்டின் நவயுகத்தில் இருக்கும் நாம் இதை விவாதிக்கின்ற அளவுக்கு முஸ்லிம்களின் உள்ளங்களில் மாறாத வடுவாக இருந்து வருகின்றது. இந்த வடுவை சம காலத்தில் உருவாக்கியது தற்போது பேசிக்கொண்டிருக்கும் கருப்பொருளுக்கு கதாநாயகனான சல்மான் ருஷ்தி என்பவனே. (இச்சம்பவத்தின் நம்பகத்தன்மை பற்றி பின்னர் மிக விரிவாக நோக்குவோம்).

நபிகளாருக்கும் அவரது சமூகத்திற்கும் உள்ள பகைமைகளின் விரிசல்கள் நீண்டு கொண்டே இருந்தன. இதனை உணர்ந்த அண்ணலார் அழ்ழாஹ்வை நிராகரித்த அச்சமூகத்தினரை திருப்திப்படுத்தும் வகையில் இறைவன் ஏதாவது வேத வாக்கியங்களை இறக்கியருளக்கூடாதா? என எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர். இவ்வாறு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இறைவன் நஜ்ம் என்ற அத்தியாயத்தை இறக்கினான்.

இவ்வத்தியாயத்தை சப்தமிட்டுக் கொண்டு ஓதிக்கொண்டிருந்த அண்ணலார் ‘லாத் உஸ்ஸாவைப்பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் எனக்கு அறிவியுங்கள்!  உங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா? அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான்.’ (அல்குர்ஆன் 53:19-22) இந்த வசனங்களை அடைந்ததும் ஷைத்தான் நபிகளாரது நாவில்

‘இவர்களின் பரிந்துரைகள் இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்படுகின்றன’ என்பது போன்ற வார்த்தகைளை போட்டான். இதனைக் கேள்வியுற்ற குறைசிகள் வியந்து போனார்கள். மிகக் கடுமையாக மகிழ்ச்சி அடைந்தார்கள். அது மாத்திரமில்லாமல் முஹம்மத் பல தெய்வக்கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டார் என்ற(பொய்யான)தகவலையும் பரப்பினார்.

இவ்வத்தியாயம் முடிவடைந்ததும் நபிகளார் ஸஜதா செய்தார்கள். அண்ணாரை உண்மைப் படுத்தியதற்காக கூடவே முஸ்லீம்களும் ஸஜதா செய்தார்கள். காரணம் நபிகளார் லாத் உஸ்ஸா போன்ற தெய்வங்களின் பெயர்களை உச்சரித்து விட்டார்களாம். பள்ளிவாயலில் இருந்து வெளியேறியதும் ‘நபிகளார் பல தெய்வக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்டார்’ என்ற தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அபீசினியாவில் இருக்கின்ற நபித்தோழர்களுக்கும் இச்செய்தி சென்றடைந்தது.

அச்சமயம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபிகளாரிடம் வந்து நடந்த நிகழ்வினை நினைவுபடுத்தி விட்டு பலதரப்பட்ட படிப்பினைகளையும்இ யதார்த்தங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது விண்ணுலக யாத்திரை அல்இஸ்ரா மிஃராஜ் என்கின்ற இருநிலைகளைக் கொண்டதாக காணப்பட்டது.

1.அல்இஸ்ரா: அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீன் பூமியில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு மேற்கொண்ட பயணமே இஸ்ரா என அழைக்கப் படுகின்றது. இஸ்ரா பற்றி அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகையில் ‘மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.’ (அல்குர்ஆன் 17:01)

2.மிஃராஜ்: அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டமையே மிஃராஜ் எனப்படுகின்றது. மிஃராஜ் பற்றி இன்ஷா அழ்ழாஹ் அடுத்த இதழில் நோக்குவோம்.
இன்ஷா அழ்ழாஹ் வளரும்…

<< AL ATHAR JUN 2009

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers