Skip to content

ஷீஆக்களின் வலையில் சிக்கிய முஸ்லிம் சமூகம்

May 13, 2009

அல் அதர் மாத இதழ் >அல்குர்ஆன்

அல் ஹாபிழ் அபூ அஸ்பாக் அல் அதரி
abooashfaqalathary@gmail.com

சென்ற இதழின் தொடர்ச்சி…

‘என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர் என்று இத்தூதர் கூறுவார்.’ (அல்குர் ஆன் 25:30)

தஃவீல் என்றால் என்ன?

இச்சொல் மொழி ரீதியாக மீண்டு வருதல் இறுதி முடிவு சென்றடையும் இடம் போன்ற கருத்துக்களை தாங்கி நிற்கின்றது. கலை பிரயோகத்தில் இச்சொல்லுக்கு மூன்று விதமான அர்த்தங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு மாத்திரமே சரியானதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமாகும். மற்றையது (3வது) வழிகேடர்களிடம் காணப்பட்ட தவறான வழிந்துரையாகும்.

1. தஃவீல் – விளக்கவுரை 3ம் அத்தியாயத்தின் ஏழாம் வசனத்தில் காணப்படும் உண்மைக் கருத்தை (விளக்கவுரையை) அழ்ழாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். எனும் வசனத் தொடரில் வரும் ‘தஃவீல்’ என்ற சொல்லிற்கு விளக்கம் என்பதே அர்த்தமாகும்.

அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான தப்ஸீர்கலை அறிஞர்கள் இக்கருத்திலேயே இதனைப் பிரயோகித்துள்ளதோடு தப்ஸீர் கிரந்தங்களில் மிகப்பிரபல்யம் வாய்ந்ததாகத் திகழும் இமாம் இப்னு ஜரீர்; அத்தபரி அவர்களின் தப்ஸீர் கிரந்தம் ‘ஜாமிஉல் பயான் பீ  தஃவீலி ஆயில் குர்ஆன்’ (குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கூறல்) எனும் பெயரிலேயே பிரசித்தி பெற்றிருப்பதானது இக்கருத்தை மேலும் வலுவூட்டுகின்றது.

2. தஃவீல் – முடிவு

இதுவும் தஃவீல் என்ற சொல்லிற்கு திருமறைக் குர்ஆனில் பிரயோகிக்கப்படும் அடிப்படைக் கருத்தாகும். 17:53, 17:35 போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும்             ‘தஃவீல்’ எனும் வார்த்தைக்கு முடிவு என்றே பொருள் கொள்ள வேண்டும்.

3. தஃவீல் (ஒரு சொல்லை அதன் வெளிப்படைக் கருத்தை விட்டும் மாற்றுதல்)

இதுதான் தஃவீலுக்குக் கொடுக்கும் மூன்றாவது அர்த்தமாகும். எனினும் இக்கருத்து எந்த ஒரு ஸஹாபியிடமோ, ஹதீஸ்கலை அறிஞர்களிடமோ காணப்பட்டது கிடையாது. பிற்பட்ட காலப்பகுதியில் வந்த ‘இல்முல்கலாம்’ எனப்படும் வேத சாஸ்திரங்களைப்படித்த மேதாவிகள்(?)தான் புதிதாக இக்கருத்தை ஏற்படுத்திக் கொண்டனர். ‘இல்முல்கலாம்’ என்பது இஸ்லாமியக் கொள்கையிலிருந்து நெறிபிறழ்ந்த அஷ்அரிய்யாக்கள் எனும் வழிகேடர்களிடம் வேரூண்றிக் காணப்படுகின்ற ஒரு கொள்கையாகும்.

இது ஒரு மோசமான சித்தாந்தமாகும். ஆனால் துரதிஷ்ட வசமாக எமது இலங்கை நாட்டில் (மத்ஹபுகள் சார்ந்த) பெரும்பாலான அரபு மத்ரஸாக்களில் அகீதாப்பாடங்கள் இச்சாராரின் நூற்களிலிருந்தே போதிக்கப்படுகின்றன.

அவற்றில் ‘இல்முல்கலாம்’ என்ற வேத சாஸ்திரங்களே நிறைந்து காணப்படுகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் நமது சமூகத்திலுள்ள உலமாக்கள் எந்த மத்ஹபு அறிஞர்களை தாங்கள் பின்பற்றுவதாக கூறுகின்றார்களோ, அந்த மத்ஹபு அறிஞர்கள்தான் இல்முல்கலாமைப் படிப்பது ஹராம் என்பதாக பத்வாவும் வழங்குகின்றார்கள்.

இதற்குச் சான்றாக ஒரு சில அறிஞர்களின் கூற்றுக்களை மாத்திரம் இங்கு சுட்டிக்காட்டுகிறோம். (மாற்றுக் கருத்துடையவர்கள் புரிந்துகொள்வதற்காகவே இங்கு இமாம்களின் கருத்துக்களை சுட்டிக்காட்டுகின்றோம்)
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) (ஹிஜ்ரி 80-150)

‘அம்ருப்னு உபைதுக்கு அழ்ழாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ஏனெனில் அவன்தான் மக்களுக்கு இல்முல்கலாமை கற்பதற்கு வழியமைத்துக்கொடுத்தவன்’
இமாம் அபூ யூசுப் (ரஹ்) (அபூ ஹனீபாவின் பிரதான மாணவர்) (ஹிஜ்ரி 113-182)

‘இல்முல்கலாமை அறிந்திருப்பது அறியாமையாகும். அதனை அறியாமல் இருப்பது புத்திசாலித்தனமாகும். மேலும் எவன் ‘இல்முல்கலாமை தேடுகிறானோ, அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாவான்.
இமாம் ஷாபி (ரஹ்) (ஹிஜ்ரி 150-204)

‘ஷிர்கை தவிர்த்து அழ்ழாஹ்வினால் தடுக்கப்பட்ட அனைத்துப் பாவங்களையும் விட இல்முல் கலாம் சார்ந்த விடயங்களை படிப்பதுதான் மிகப்பெரிய பாவமாகும்.

மேலும் இல்முல்கலாமை கற்ற மேதாவிகள் விடயத்தில் எனது தீர்ப்பானது அவர்கள் அனைவரும் கால்பாதணிகளாலும், நார்களாலும் துன்புறுத்தப்பட்டு கோத்திரங்களுக்கு மத்தியில் வீதிகளில் வலம் கொண்டுவரப்பட்டு அவ்விடத்தில் ‘இதுதான் குர்ஆன்’ சுன்னாவை விட்டுவிட்டு வேத சாஸ்திரங்களை (இல்முல்கலாமை) எடுத்துக்கொண்ட வனுக்குரிய கூலி என சொல்லப்படவேண்டும்.’
இமாம் அஹ்மத் பின் ஹம்பல்(ரஹ்) (இமாம் ஷாபியின் மாணவர்) (ஹிஜ்ரி 164-241)

‘வேத சாஸ்திரங்களை கற்பவன் ஒரு காலமும் வெற்றி பெறவே முடியாது. இதனை எடுத்துக்கொண்ட அனைவரும் ஸிந்தீக்குகள் (இறை நிரகாரிப்பாளனாக இருந்து கொண்டு இறை விசுவாசியை போன்று வாழ்பவர்)கள் ஆவார்கள்.

இது தவிர, அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி (ஷாபி மத்ஹபு வாதிகளால் ‘ஹுஜ்ஜதுல் இஸ்லாம்’ (இஸ்லாத்தின் ஆதாரம்) என மதிக்கப்படுபவர்) என்ற ஸூபித்துவவாதி ‘இல்ஜாமுல் அவாம் அன் இல்மில் கலாம்’ (இல்முல்கலாமைப்  படிப்பதை விட்டும் பொதுமக்களைத் தடுத்தல்) என்ற ஒரு தனியான நூலையே இதற்காக எழுதியுள்ளார்கள்.

இப்படி ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. மேற்குறிப்பிட்ட அறிஞர்கள் யாவரும் மத்ஹபுவாதிகளால் மதிக்கப்படும் அறிஞர்களே. ஏன் இவற்றை முக்கியத்துவப்படுத்தி இங்கு எழுதுகின்றோ மெனில் சகல அறிஞர்களாலும் புறக்கணிக்கப்பட்ட இந்த வழிகேடான ‘இல்முல்கலாம்’ எனும் சிந்தனை நமது அறபு மத்ரஸா பாடத்திட்டங்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

மத்ஹபுகளுக்கு சொந்தமென இவர்களால் அழைக்கப்படும் இமாம்களே இக் கருத்துக்களை கற்பவர்களை ‘ஸிந்தீக்குகள்’ (இறை நிரகாரிப்பாளனாக இருந்து கொண்டு இறை விசுவாசியை போன்று வாழ்பவர்) எனக்குறிப்பிடும் போது அவர்களைப் பின்பற்றுவதாக மார்தட்டும் பொய் நேசர்கள் அவர்களை ‘அகீதாவுடைய அறிஞர்கள்’ என்று மாணவர்களுக்கு படிப்பித்துக் கொடுக்கின்றனர்.

அகீதாப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்குவோம் என வீரமுழக்கம் போடும் காத்தான்குடி உலமா சபை ஏன் இதுவரை இந்த விடயத்தில் கரிசனை  காட்டவில்லை? இஜ்திஹாத் சார்ந்த பிரச்சனைகளுக்கு போர்கொடி தூக்கும் பல்கலைக்கழக பட்டதாரிகள் அகீதாவிற்கு வேட்டு வைக்கும் இப்பாரிய கொடுமையை கண்டுகொள்ளாமல் இருப்பதானது எமக்கெல்லாம் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது. நேர்வழி காட்ட அழ்ழாஹ் போதுமானவன்.

<< AL ATHAR MAY 2009

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers