ஹதீஸ்களை அடையாளம் காண்போம்
ஆதாரமற்ற ஹதீஸ்:
பொறாமையை உங்களுக்கு நான் எச்சரிக்கின்றேன்.பொறாமை கொள்வதானது நெருப்பு விறகை அழிப்பதைப் போன்று ஈமானை அழித்து விடும்.
மேற்குறித்த செய்தி முஸ்லிம்களிடம் மிகவும் பலமான செய்தியாக பரவிக்காணப்படுகின்றது.ஆனால் இச்செய்தி ஹதீச்கலை ஆய்வின் படி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.இதில் இப்றாஹீம் என்ற போதிய விபரமற்ற அறிவிப்பாளர் இடம் பெருகின்றார்.இமாம் புஹாரி உள்ளிட்ட அறிஞர்கள் இதனை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆதாரபூர்வமான ஹதீஸ்
” (ஆதாரமில்லாமல் பிறரை)சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.ஏனெனில்,சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும்.(பிறரின் குறையைத்)துருவித் துருவி ஆராயாதீர்கள்.(பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்)விலையை ஏற்றிக் கேட்காதீர்கள்.
ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்.கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக)அழ்ழாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்)சகோதரர்களாய் இருங்கள் என அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்
ஆதாரம்:ஸஹீ{ஹல் புஹாரி.
அறிவிப்பாளர்:அபூ{ஹரைரா(ரலி)
ஹதீஸ் இலக்கம்:6066.

Comments are closed.