ஹதீஸ்களை அடையாளம் காண்போம்.
அல் அதர் மாத இதழ் > ஹதீஸ்களை அடையாளம் காண்போம்.
ஆதாரமற்ற ஹதீஸ்:
ஒரு நேரத் தொழுகையை ஒருவர் தவறவிட்டுப் பின்னர் அதை அவர் களாச் செய்தாலும் அவர் ஒரு ‘ஹுகுப்’ நரகத்தில் வேதனை செய்யப்படுவார். ஒரு ‘ஹுகுப்’ என்பது, எண்பது வருடங்களாகும். ஒரு வருடத்திற்கு முன்னூற்றி அறுபது நாட்கள் உள்ளன. மறுமையின் ஒரு நாள் உலகின் ஆயிரம் வருடத்திற்குச் சமமாகும்.
மேற்குறித்த செய்தி தப்லீக் ஜமாஅத்தின் தஃலீம் தொகுப்பு எனும் நூலில் ‘தொழுகையை விடுவதன் தண்டனை’ எனும் பாடத்தில் முதல் செய்தியாக இடம் பெற்றுள்ளது. இந்த செய்தி நபிகளார் மீது இனம் தெரியாதவர்களால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும்.
ஆதாரபூர்வமான ஹதீஸ்
‘என் சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்’ என அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறிய போது ‘அவர்கள் யார் அழ்ழாஹ்வின் தூதரே?’ என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ‘அவர்கள் எத்தகையவர்கள் எனில், ஓதிப்பார்க்கமாட்டார்கள், பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்.’ (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ள மாட்டார்கள், தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன், நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-372)

Comments are closed.