Skip to content

வாழ்க்கையே வேதனையாக!

March 25, 2009

அல் அதர் மாத இதழ் >அறிவியல்

FM அஸ்லம்
(ரஜரட்டை மருத்துவ பீடம்)
aslamaumsa@gmail.com

பூமியிலும், உங்களுக்குள்ளும் உறுதியாக நம்புவோருக்குப் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 51:21)

சென்ற மாதம் வழமை போன்று அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண்கள் பொது ரோயனர் விடுதியில் புதிதாக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் நோய் பற்றிய தகவல்களைச் சேகரிக்கச் சென்ற போது சோகம்ததும்பிய முகத்துடன் 14 வயதுச் சிறுமியொருவர் 20ம் இலக்கக் கட்டிலில் ஈழ்நத சிந்தனையுடன் கவனிப்பார் யாரும் அற்று அமர்ந்து கொண்டிருந்தாள்.

சிறுமியின் அருகே சென்ற உற்று நோக்கிய போத அவளுடைய இடது கைவிரல்களும், இடது காதும் தன்னிச்சையாக அவளது கட்டுப்பாட்டை இழந்து ஒரு நிமிடத்திற்கு 20 தடவைக்கும் மேலாக உதறிக் கொண்டிருந்தது.

மேலும் இந்நோய் பற்றி வினவிய போது 2 வருடங்களுக்கு முன்னர் இதைவிடத் தீவரமாக உடலின் வலது பக்கம் முழவதும் தனது கட்டுப்பாட்டை இழந்து உதறியதாகவும் பின்னர் படிப்படியாகக் குறைந்து திருமணமாகியதிலிருந்து இந்த ஆட்டம் தற்போது அதிகரித்திருப்பதாகவும் கூறினாள்.

18 வயது பூர்த்தியாகாத எவரும் திருமணம் செய்து கொள்ள முடியாது எனும் இலங்கைச் சட்டம் 14 வயது இச்சிறுமியன் திருமணம் பற்றிய பல சந்தேகங்கங்களை என்னுள் தோற்றுவித்தது. இச்சிறுமியின் திருமணம் சம்பந்தமாக பல கேள்விக் கணைகளை தொடுத்த போது, தனது வீட்டுக்கு அடிக்கடி வரும் ஒரு அந்நிய ஆணுடன் ஒரு வருட காலமாக தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் விளைவாக கருவுற்றதாகவும் அக்கருவைக் கலைப்பதற்காக இரண்டு முறை எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்த தற்போது நான் அந்த ஆணின் வீட்டில் தஞ்சமைடைந்திருப்பதாகவும் கூறினாள்.

இறுதியாக அவளிடம் இருந்து விடைபெறும் பேது அவளின் கண்களில் இருந்து கண்ணீர் மல்க ஆரம்பித்ததுடன் என்னை சட்ட வைத்திய அதிகாரியினூடாக பொலிஸரிடம் ஒப்படைப்பதாக வைத்தியர்கள் கூறியிருக்கின்றார்கள் இது உண்மைதானா? என்று சஞ்சலக் குரலில் கேட்டாள்.

இச்சிறுமிக்கு ஏற்பட்டிருக்கும் இந்நோயானது Sydenham’s chorea (st vitus dance) என அழைக்கப்படும். அதாவது Chorea எனும் சொல் இலத்தின் மொழியல் நடனத்தைக் குறிக்கின்றது. அதாவது மூளையில் உள்ள நான்கு கருத்திணிவுகளால் ஆக்கப்பட்ட அடிச்சிறுமணி (Basal ganglia) யில் ஏற்படும் பாதிப்புக்கள் இவ்வாறான ஒழுங்கற்ற கட்டுப்பாட்டை இழந்த உதறல் அசைவுகளை ஏற்படுத்தும். அடிச்சிறுமணியில் ஏற்படும் அதிக பாதிப்புக்கள் சில வேளை யாருமே அருகில் நிற்க முடியாத அளவுக்கு அதிக அளவில் கால் கைகளை விசிக்கி உடல் முழுவதும் ஆடத் தொடங்கும். மூளையத்தில் அமைந்துள்ள கருத்திணிவுகளால் ஆக்கப்பட்ட மிகவும் சிறிய அமைப்பான அடிச்சிறுமணியான(Bacal Ganaglie)ஆற்றப்படும் தொழில் பற்றிய விபரங்கள் இதுவரையில் முழுமையாக் கண்டறியப்படவில்லை.

அறியப்பட்ட சில தரவுகளின் அடிப்படையில் எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் சற்று நேரத்திற்கு முன் அடிச்சிறுமணியால் உள்ள நரம்புக் கலங்களில் இருந்து ஒரு வகை கணத்தாக்கம் மூளையத்தின் இயக்க மையத்திற்கு கடத்தப்படுவதாகவும் அச்செய்தி இயக்கமையத்தை அடைந்த பின்னரே அச்செயல் செய்யப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே ஒரு செயலை செய்வதற்கு திட்டமிடுதலும் அத்திட்டத்தைச் செய்வதற்கு மூளையத்திற்கு கட்டளையிடுதல்(Planning & Programming) போன்ற தொழில்களை ஆற்றுகின்றது.

அடிச்சிறு மணியால் தீட்டப்பட்ட திட்டம் மூளையத்தை அடைவதற்கு முன்னர் அடிச்சிறுமணியில் உள்ள கருக்களின் ஊடாக கடத்தப்படும் போது சில இடங்களில் நிரோதிக்கப்பட்டும், சில இடங்களில் தூண்டப்பட்டும் கடத்தப்படுவதால் இரண்டுக்கும் இடையில் நிலவும் சம நிலையின் காரணமாக சாதாரண இயக்கம் நம்மில் நடைபெறுகின்றது. ஆனால் Chorea ன் போது அடிச்சிறுமணியில் நிரோதிக்கும் பாதையில் (Gabaergic Pathway)கோளாறுகள் ஏற்படுவதனால் நிரோதிப்பு குறைவடைந்து தூண்டல் அதிகரிப்பதனால் வேகமான தொடர்ச்சியான அசைவுகள் இடம்பெறுகின்றது.

மேலும் அடிச்சிறுமணியில் உள்ள இரண்டு கருக்களுக்கிடையில் கணத்தாக்கம் கடத்தப்படுவதற்கு நரம்புக்கலங்கள் சிதைவடைவதால் அல்லது நரம்புக்கலங்களுக்கிடையில் பயன்படுத்தப்படும் Dopamine எனப்படும் கணத்தாக்கு பொருள் (Neumo Transmitter) குறைவாக சுரப்பதால் அல்லது முற்றாக சுரக்காமை போன்ற காரணங்களால் அதிக இயக்கமுடைய அசைவுககளை காண்பிக்கின்ற paricinson’s எனப்படும் ஒரு நோயும் ஏற்படுகின்றது.

இந்நோயினால் பீடிக்கப்பட்வர்கள் எந்நேரமும் கையில் ஒரு பொருளை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக உருட்டிக்கொண்டிருப்பதைப் போன்று (Pill Roling Movement) செய்து கொண்டிருப்பார்கள்.

நமது மூளையில் கருத்திணிவுகளால் ஆக்கப்பட்ட இரண்டு அடிச்சிறுமணிகளை மிகவும் கச்சிதமாக அமைத்து, அதில் எந்த வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு அதன் தொழிற்பாடுகளை செம்மைப்படுத்தி சீராக இயங்க வைத்திருப்பதன் மூலம் தமது வீடுகளை நடன மேடைகளாக மாற்றிக் கொள்கின்ற நடன நோயாளர்களின் பட்டியலில் இருந்த நம்மையும் பாதுகாத்து சுகமுடன் வாழ வைத்திரக்கும் இம்மாபெரும் அருட்கொடையை வழங்கிய இறைவனுக்குநன்றியுள்ள அடியானாக நான் இருக்கக்கூடாதா?

<< Al Athar – March 09

EMAIL THIS ARTICLE>>>

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers