மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்த மாபெரும் இரத்ததான நிகழ்வு (படங்கள் இணைப்பு)

நான்காவது இரத்ததான நிகழ்வு அழ்ழாஹ்வின் பேரரருளால் மிகவும் சிறப்பாக நடைபெற்றுமுடிந்தது. இதனை நடாத்துவதில் இறுதி வரை பல சிரமங்கள் காணப்பட்ட போதிலும் அழ்ழாஹ்வின் உதவியால் உரிய வேளைக்கு நிகழ்வு ஆரம்பமாகியது.
இந்நிகழ்வை முன்னிட்டு தாருல் அதர் தலைமைக் காரியாலயத்தை சூழ பலத்த பாதுகாப்பு அளிக்கப்படடுள்ளது. மிக நேர காலத்தோடு பாதுகாப்புத் தரப்பினர் ஸ்த்தலத்துக்கு வருகை தந்துள்ளனர். அதிதிகளும், பிரமுகர்களும் அதிகளவில் சமூகமளித்திருந்தனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு. சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களும்,
கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டு மற்றும் தொழிநுட்பக் கல்வி அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லா M.A,
காத்தான்குடி நகரமுதல்வர் U.L.M.N..முபீன் B.A,
நகரசபை உறுப்பினர் கலந்தர்லெப்பை J.P, மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் சார்பாக
பிரிகேட் கொமாண்டர் திலகரட்ண,மேஜர் தென்னக்கோன்(சிவில் பொறுப்பதிகாரி கல்லடி),எடிசன் குணதிலக்க DIG மட்டக்களப்பு,உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் D.S. ஜயசிங்க,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுராத மஹிந்த சிறி ,ஆரையம்பதி விஷேட அதிரப்படைத் தளபதி சமரசிங்க ஆகியோரும் மற்றும் பல உயர்அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தமிழ்,சிங்கள இரு மொழிகளிலும் வரவேற்புரை நடைபெற்றது. மௌலவி S.L.M. நஷ்மல் (பலாஹி) அவர்கள் உரையாற்றுகையில், “இஸ்லாமிய மார்க்கத்தின் மனித நேயம் சாந்தி சமாதானம், பிற மதத்தினரின் உரிமைகள், உணர்வுகளை மதித்து நடத்தல் போன்ற பல விடயங்களை எடுத்துக் கூறினார்.”
கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில், “இது போன்ற இரத்ததான நிகழ்வுகள் ஏனையோராலும் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னுதாரணமான செயற்பாடு எனவும், குறிப்பாக இக்கால கட்டத்தில் செய்ய வேண்டிய ஒரு பணி எனவும் எதிர்காலத்தில் இது போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” எனவும் கூறினார். கிழக்கு மாகாண அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லா அவர்கள் “திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் மக்களின் துன்பகரமான நிலமைகளை எடுத்துக் கூறி இது அம்மக்களின் துக்கத்தில் பங்கெடுப்பதற்கான ஒரு நிகழ்வு எனவும், தாருல் அதர் மார்க்க விவகாரங்களோடு இவ்விவகாரங்களையும் முன்னெடுப்பது பாராட்டத்தக்கது” எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் பெருந்தொகையான பாதுகாப்புத் தரப்பினரும் இரத்ததானம் வழங்கினர். 150 ற்கு மேற்பட்ட “பொயின்டுகள்” இரத்தம் வழங்கப்பட்டிருக்கின்றது. பெரும்பான்மையான சகோதரர்கள் தாராளமாக முன்வந்து இவ் இரத்ததான நிகழ்வில் பங்கெடுத்தெனர். நாட்டுக்காக தியாகத்துடன் போராடும் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும், வன்னியில் காயமடைந்து உயிருக்காகப் போராடும் உறவுகளுக்காகவும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வில் தானம் வழங்கும் சகோதர, சகோதரிகளுக்குமான அனைத்து வசதிகளையும் தாருல் அதர் சமூக சேவைப் பிரிவு இளைஞர்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தது. அல்ஹம்துலிழ்ழாஹ்.



















Comments are closed.