கிரகணத்தொழுகையும் அதன் சட்டங்களும்

கிரகணம் என்பது இறைவன் அமைத்த பிரகாரம் சென்று கொண்டிருக்கும் சூரியன் அல்லது சந்திரன் ஏதோ இறைவனின் நாட்டப்படி மாறுதலுக்கு உட்படுவதாகும். இதனையே நாம் சூரிய அல்லது சந்திர கிரகணம் என்றழைப்போம். இன்னும் விபரமாக சொல்வதென்றால் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதாகும். இது இன்றய அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்ட உண்மையாகும்
அடுத்து நாம் கிரகணம் பற்றி இஸ்லாம் இயம்பும் சில கருத்துக்களைப் பார்ப்போம்
وَكَأَيِّنْ مِنْ آيَةٍ في السَّمواتِ وَالأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ1
வானங்களிலும் பூமியிலும் எண்ணற்ற அத்தாட்சிகளை அவர்கள் தாண்டிச்செல்கின்றனர். எனினும் அதனை விட்டும் புறக்கணித்த நிலையில் உள்ளனர்(அல்குhஆன்)
-2عن أبي بكرة قال قال رسول الله صلى الله عليه و سلم
: ( إن الشمس والقمر آيتان من آيات الله لا يخسفان لموت أحد ولكن الله تعالى يخوف بهما عباده( رواه البخاري)
நிச்சயமாக சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாகும். யாருடைய மரணத்திற்கும் அவைகள் மறைவதில்லை. எனினும் அவைகளின் மூலம் இறைவன் தனது அடியார்களை பயமுறுத்துகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி )
கிரகணத்தைப் பற்றி அறியாமைக்கால நம்பிக்கை:
அன்றய அறேபிய அறியாமைக் காலத்தில் கிரகணத்தைப் பற்றி தவறான நம்பிக்கைகள் அந்த சமூகத்திடம் காணப்பட்டன. எவ்வாறெனில் எவராவது மரணித்து அந்த வேளையில் கிரகணம் ஏற்பட்டால் அவரது மரணத்தினாலயே அது ஏற்பட்டது என்று அந்த சமூகம் நம்பியது. இந்த நம்பிக்கையை இஸ்லாம் அடியோடு மறுத்துரைத்தது.
عن المغيرة بن شعبة قال
: كسفت الشمس على عهد رسول الله صلى الله عليه و سلم يوم مات إبراهيم فقال الناس كسفت الشمس لموت إبراهيم فقال رسول الله صلى الله عليه و سلم ( إن الشمس والقمر لا ينكسفان لموت إحد ولا لحياته فإذا رأيتم فصلوا وادعوا الله(رواه البخاري)
நபியவர்களது காலத்தில் (அவர்களது மகனான) இப்றாஹீம் மரணித்த தினத்தன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களெல்லாம் அது இப்றாஹீமின் மரணத்தினாலே ஏற்பட்பது என்று பேசிக்கொண்டனர். (இதனைக்கேட்ட) நபி(ஸல்) அவர்கள் சூரியனும் சந்திரனும் யாருடைய இறப்பிற்கும் மறைவது கிடையாது நீங்கள்(அதனைக்) கண்டால் தொழுங்கள் மேலும் அழ்ழாஹ்விடத்தில் பிரார்த்தனை புரியுங்கள் எனக் கூறினார்கள் (புஹாரி)
கிரகணம் ஏற்படுவது நன்மையா? அல்லது தீமையா?
கிரகணம் ஏற்படுவது என்பது உண்மையில் இறைவன் எமக்கு ஏற்படுத்துகின்ற ஒரு சோதனை என்றே ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்ளல் வேண்டும். இதனை பின்வரும் ஹதீத் தெளிவுபடுத்துகின்றது.
قَالَتْ عَائِشَةُ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ فَأَرَانِي الْقَمَرَ حِينَ طَلَعَ فَقَالَ تَعَوَّذِي بِاللَّهِ مِنْ شَرِّ هَذَا الْغَاسِقِ إِذَا وَقَبَ(مسند أحمد: 23187)
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எனது இரு கைகளையும் பற்றி சந்திரனை அது உதயமாகும் வேளையில் எனக்கு காண்பித்தார்கள். (பின்னர்) இரவு பரவி விடும் போது அதனுடைய தீங்கை விட்டும் (ஆயிஷாவே!) நீ இறைவனிடத்தில் பாதுகாப்புத் தேடிக்கொள்! எனக்கூறினார்கள்.(முஸ்னத் அஹ்மத்23187)
கிரகணம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை
1-தொழுகை
‘நீங்கள் அதனைக் கண்ணுற்றால் தொழுங்கள்‘
என்ற நபிமொழியை முன்னர் பார்த்தோம். அதன் பிரகாரம் நாம் தொழுதிடல் வேண்டும்
இன்று அதிகமானவர்களுக்கு கிரகணத்தொழுகையை சரிவரத்தெரியாது உலமாக்கள் சரியாக தெளிவுபடுத்தாததின் விளைவாக மக்களுக்கு இதெல்லாம் தெரியாது எனவே கிரகணத்தொழுகை பற்றி ஹதீதின் வெளிச்சத்தில் பார்ப்போம்.
فَخَسَفَتْ الشَّمْسُ فَرَجَعَ ضُحًى فَمَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ ظَهْرَانَيْ الْحُجَرِ ثُمَّ قَامَ يُصَلِّي وَقَامَ النَّاسُ وَرَاءَهُ فَقَامَ قِيَامًا طَوِيلًا ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ ثُمَّ رَفَعَ فَسَجَدَ ثُمَّ قَامَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ ثُمَّ رَفَعَ فَسَجَدَ وَانْصَرَفَ فَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ ثُمَّ أَمَرَهُمْ أَنْ يَتَعَوَّذُوا مِنْ عَذَابِ الْقَبْرِ (البخاري)
நபியவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது நபியவர்கள் அறைக்கு முன்னால் நடந்து சென்றார்கள் பின்னர் தொழத் தயாராகினார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் தயாராகினார்கள்
(பின்னர்) நீண்ட நேரம் தொழுகையில் நின்றார்கள் பின்னர் நீண்ட நேரம் ருகூஃஉ செய்தார்கள்
பின்னர் (ருகூவிலிருந்து எழுந்ததும்);; மீண்டும் நீண்ட நேரம் தொழுகையில் நின்றார்கள் அது முதல் நின்ற அளவை விட சற்றுக் குறைவாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஃஉ செய்தார்கள் அது முதல் செய்த ருகூஃவை விட சற்றுக் குறைவாக இருந்தது
பின்னர் ருகூஃவிலிருந்து எழுந்து ஸஜ்தா செய்தார்கள். இவ்வாறே அடுத்த ரக்அத்திலும் செய்தார்கள் இவ்வாறு 2ரக்அத்துக்கள் தொழுது முடித்தார்கள். பின்னர் மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புத்தேடிக்கொள்ளுமாறு ஏவினார்கள்(புஹாரி)
2- தர்மம் புரிதல்:
இவ்வாறான சோதனைகளின் போது அதிகமதிகம் நாம் தர்மம் புரிந்திடல் வேண்டும் எவ்வாறு பெருநாள் தினத்தன்று நபிகள்(ஸல்) அவர்கள் மக்களை தர்மம் செய்யுமாறு ஆர்வமூட்டுவார்களோ அது போன்றே கிரகணம் ஏற்பட்டாலும் மக்களை ஆர்வமூட்டுவார்கள். அதனை பின்வரும் ஹதீதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
قال رسول الله(صلعم): فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ وَكَبِّرُوا وَصَلُّوا وَتَصَدَّقُوا (البخاري)
நீங்கள் அதனைக் கண்டால் இறைவனிடத்தில் பிரார்த்தனை புரியுங்கள் மேலும் தக்பீர்(அல்லாஹு அக்பர்) கூறுங்கள். தொழுங்கள் இன்னும் தர்மம் புரியுங்கள் என நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி)
அடிமையை உரிமையிடல்:
இந்தக் காலத்தில் அடிமைகள் இல்லாததின் காரணத்தினால் ஒவ்வொருவரும் தனது உள்ளத்தை ஷைத்தானிய கெடுதிகளை விட்டும் நீக்கிக் கொள்ளுதல் என்று இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம். அடிமைகளை உரிமையிடுதல் பற்றி பின்வரும் ஹதீத் தெளிவுபடுத்துகிறது
عَنْ أَسْمَاءَ قَالَتْ : لَقَدْ أَمَرَ النَّبيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَتَاقَةِ فِي كُسُوفِ الشَّمْسِ )البخاري)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின் போது அடிமைகளை உரிமை விடுமாறு கட்டளை பிறப்பித்தார்கள்.(புஹாரி)
அடுத்து நாம் கிரகணத்தொழுகை தொடர்பாக சில சட்டங்களைப் பார்வையிடுவோம்.
1-பாங்கு மற்றும் இகாமத் இல்லை
கிரகணம் தொடர்பாக இடம் பெற்ற எந்த ஹதீதிலும் பாங்கு மற்றும் இகாமத் தொடர்பாக எதுவும் இடம்பெறவில்லை. இதில் எவ்விதமான மாற்றுக் கருத்தும் நாமறிந்த வரை இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இத்தொழுகைக்கு பாங்கு மற்றும் இகாமத் கூறக்கூடாது.
2- கூட்டாக(ஜமாஅத்தாக)த் தொழல்:
இதுவும் நபிகளார் காட்டிய நடைமுறையாகும்
فَخَرَجَ إِلَى الْمَسْجِدِ فَصَفَّ النَّاسُ وَرَاءَهُ(البخاري)
நபிகளார் பள்ளிக்குச்சென்றார்கள் மக்களெல்லாம் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள்
3- பெண்களும் பள்ளிக்கு வரல்:
عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهَا قَالَتْ
أَتَيْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَسَفَتْ الشَّمْسُ فَإِذَا النَّاسُ قِيَامٌ يُصَلُّونَ وَإِذَا هِيَ قَائِمَةٌ تُصَلِّي(البخاري)
அஸ்மா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நான் நபியவர்களின் மனைவியான ஆயிஷாவிடத்தில் வந்தேன் அவ்வேளையில் மக்கள் தொழுது கொண்டிருந்தார்கள் ஆயிஷா(ரலி) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். (புஹாரி)
தொழுகைக்குப் பின்னர் உரை நிகழ்த்துதல்:
وَقَدْ انْجَلَتْ الشَّمْسُ فَخَطَبَ النَّاسَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ(البخاري)
சூரிய கிரகணம் நீங்கிய போது மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். மேலும் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்(புஹாரி)
நேரடியாகப் பார்த்தல்:
முஸ்லிம்களிலுல்ல சிலர் உலகின் எப்பகுதியில் கிரகணம் ஏற்பட்டாலும் தொழுகின்றனர் இது மிகப் பிழையானதும் ஸஹீஹான ஹதீதுகளுக்கு முரணானதுமாகும். ஏனெனில் ஹதீதில்‘நீங்கள் கண்டால் தொழுங்கள்‘ என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதால் நேரடியாகவே பார்க்க வேண்டும்.
சூரிய,சந்திர கிரகணங்கள் பிறையைப் போன்றல்லாமல் அனைவரும் உணரும் வண்ணம் சற்று நேரம் இருக்கும் என்பதால் அனைவராலும் அதனை எளிதாக கண்டு கொள்ள முடியும். எனவே எந்தப் பகுதியில் கிரகணம் ஏற்படுகின்றதோ அப்பகுதியினரே தொழவேண்டும.; இல்லாவிட்டால் முரண்படும். எவ்வாறெனில் உதாரணமாக சிறீலங்காவில் பகல் பன்னிரண்டு மணியாக இருக்கும் போது சூரிய கிரகணம் ஏற்பட்டுவிட்டது என்று வைத்துக் கொள்வோம் அதே வேளை அமெரிக்காவில் உள்ள அனஸ்கா தீவில் இரவு பன்னிரென்டு மணியாக இருக்கும் இப்போது அனஸ்காவிலுல்ல முஸ்லிம்கள் இலங்கையில் ஏற்பட்ட சூரிய கிரகணத்திற்காக அங்கு இரவில் தொழுதால் அதை எவ்வளவு பெரிய அறிவீனம் என்று நாம் சொல்லுவொம. எனவே இந்த கிரகணத் தொழுகையை அல்லாஹ்வும் அவனது து_தரும் காட்டிய வழிமுறையின் பிரகாரம் செய்து அவனது அருளை இம்மையிலும் மறுமையிலும் பெறுவோமாக!
ஆக்கம்: MCM. ஸைனீ(ஹாபிழ்)
zainemcm@gmail.com

Comments are closed.