“அல் அதர்” இஸ்லாமிய மாத இதழ் – டிஸம்பர் 08
* DOWNLOAD THE MEGAZINE (HTML FILE)
* தாருல் அதர் அத்தஅவிய்யா – சில குறிப்புகள்.
* நாம் சமூக ஒற்றுமைக்கு எதிரானவர்களா?
* தௌஹீத் என்றால் என்ன?
* ஸுன்னா ஓர் அறிமுகம்.
* உணரப்படாத பயங்கரத்தீமை வட்டி
* அல் குர்ஆனிய சமூகத்தை நோக்கி.!!
* இயற்கைத்தேர்வுக் கொள்கையின் வீழ்சிப் பயணம்.
* சீரழிக்கும் சீரியலும் சினிமாவும், சீரழியும் முஸ்லிம் சமூகமும்.
* தாருல் அதர் சொன்னாலும் கண்மூடித்தனமாக பின்பற்றாதீர்கள்.
*மூட நம்பிக்கையில் மூழ்கிப் போகும் முஸ்லிம் பெண்களே! விழித்தெழுங்கள்!!
* நாம் ஏன் அல்குரஆனின் போதனைகளையும் நபிகளாரின் வழிகாட்டளையும் பின்பற்ற வேண்டும்.
* பாதையை பாதுகாக்கும் விடயத்தில் இஸ்லாம் சொல்வது என்ன? முஸ்லீம்கள் செய்வது என்ன?
வாசகர்களின் கவனத்திற்கு..
இஸ்லாத்தை அதன் தூயவடிவில் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமெனும் உயர் நோக்கத்திலேயே இம் ‘மாதஇதழை’ நாம் துவக்கியுள்ளோம்.
இம் ‘மாதஇதழ்’ மனிதர்களின் சொந்தக் கருத்துக்களை மார்க்கமென்று கூறாமல் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் கருத்துக்களை மாத்திரமே மார்க்கமாக மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டுமென்பது எமது நோக்கமாகும்.
இவ்விதழில் பதிப்பிக்கப்படும் எல்லா ஆக்கங்களும் சிறந்த ஆய்வுக்குழுவின் பரிசீலனைக்குப் பின்னரே வெளியிடப்படுகின்றன. இதனடிப்படையில் எமது இவ்விதழில் எம்மை அறியாமல் சில நேரங்களில் தவறுகள் இடம்பெறலாம். வாசகர்களாகிய தாங்கள் நாம் விடும் கருத்துப்பிழைகளை எமக்குச் சுட்டிக்காட்டினால் நன்றி யுடையோராக இருப்போம்.
நமது இவ்விதழில் வெளிவரும் கருத்துக்களில் யாருக்காவது மாற்றுக்கருத்திருந்தால் அதனை எமக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம். அல்குர்ஆனுக்கும் அஸ்ஸுன்னாவுக்கும் முரண்படும் அமைப்பில் எமது கருத்துக்கள் அமைந்திருந்தால் அக்கருத்துக்களை மறுக்கும் உரிமை உங்களுக்குண்டு. மாறாக நாம் வெளியிடும் கருத்துக்கள் குர்ஆனுக்கும் ஸுன்னாவிற்கும் இசைவாக இருந்தால் அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டியது வாசகர்களாகிய உங்கள் கடமையாகும்.
நாம் வெளியிட்ட ஒரு கருத்து அல்குர்ஆனுக்கும் அஸ்ஸுன்னாவுக்கும் முரணானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கும் பட்சத்தில் உடனடியாக அக்கருத்திலிருந்து எமது நிலைப்பாட்டை நாம் மாற்றிக் கொள்வோம்.
* ஆசிரியர்
இன்ஷா அல்லாஹ் எமது அடுத்த இதழ் தொடக்கம் ‘சந்தேகங்களும் தெளிவுகளும்’ எனும் பகுதி ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே தங்கள் கேள்விகளை எமக்கு எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:
‘சந்தேகங்களும் தெளிவுகளும்’
Al Athar,
Dharul Athar Adh Dhaviyya,
No. 19, Kappal Alim Road,
New Kattankudy-02, 30100.
Sri Lanka.
Email: dharulathar@yahoo.com


Comments are closed.