Skip to content

‘மும்பைத் தாக்குதல்’ இஸ்லாத்தின் பார்வையில் அநியாயமானது.

November 29, 2008

-தாருல் அதர் பிரச்சாரக் குழு

bombayகடந்த சில தினங்களாக மும்பை நகரில் அப்பாவிப் பொதுமக்களின் உயிரை  அநியாயமாக பறிக்கும் கோர நிகழ்வுகள் பல இடம் பெற்று வருகின்றன. தீவிரவாதிகளினால் அங்கு நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பினால் பல அப்பாவி மக்களும் கோடிக்கணக்கான சொத்துக்களும் அழித்தொழிக்கப்பட்டதை அனைவரும் நன்கறிவோம்.

இம்மோசமான காரியத்தை ‘இஸ்லாமியத் தீவிரவாதிகளே’ மேற்கொண்டனர் என பரவலாக செய்தி ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. உண்மையில் இத்தாக்குதலுக்கும் இஸ்லாம் கூறும் ஜிஹாதுக்கும் எச்சம்பந்தமும் கிடையாது.

இஸ்லாம் அனுமதிக்காத, அப்பாவி மக்களின் உயிரை அநியாயமாகப் பறிப்பதைக் கண்டிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில், அல்லாஹ் கூறும் சட்டங்களைச் சரிவரக் கற்காத கோழைகளால் தான் இத்தாக்குதல் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். இவ்வாறான தீவிரவாதிகளின் கெடுபிடிகளுக்கும் அவர்கள் உரிமை கோரும் மார்க்கத்திற்கும் எச்சம்பந்தமும் கிடையாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தகளத்திலும் கூட பெண்களின் உயிரையோ, மதகுருமார்களின் உயிரையோ,மரம்,செடி கொடிகளையோ வெட்டி விடக்கூடாது எனக் கூறும் உயர்ந்த ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!

இம்மார்க்கத்தில் போதிய தெளிவில்லாத மடையர்களால் நிகழ்த்தப்படும் எவ்வன்முறை நிகழ்வுக்கும் இஸ்லாம் பொருப்பாளியாக முடியாது என்பதை, இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers