Skip to content

நாம் ஏன் மாத‌ இத‌ழ் ஒன்றை ஆர‌ம்பிக்கின்றோம்?

November 27, 2008

முன்னேறி வ‌ரும் இன்றைய‌ அறிவிய‌ல் உல‌கில் “எழுத்துத் துறை”என்ப‌து த‌னித்துவ‌மான‌ ஒரு இட‌த்தை த‌ன‌க்கென்று த‌க்க‌ வைத்துள்ள‌து.

எவ்வ‌ள‌வு தான் இன்டெர் நெட் எனும் ந‌வீன‌ம் செல்வாக்குச் செலுத்தினாலும் ப‌த்திரிகைக‌ளோ, மாத‌ இத‌ழ்க‌ளோ, நூற்க‌ளோ ம‌க்க‌ளின் அபிமான‌த்தை இழ‌ந்த‌தாக‌ இல்லை. உல‌கின் வ‌ர‌லாற்றுத் த‌க‌வ‌ல்க‌ளைப் பாதுகாக்கும் விட‌ய‌த்தில் எழுத்துத் துறைக்கு அள‌ப்பெரிய‌ ப‌ங்குள்ள‌து.

ஒரு கால‌த்தில் ம‌னன‌ ஆற்ற‌லின் மூல‌மாக‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ன‌தில் பாதுகாத்த‌ ம‌னித‌ன் பின்ன‌ர் அவ‌ற்றை எழுத்து வ‌டிவுக்குக் கொண்டு வ‌ந்து நூற்க‌ளாக‌ அவ‌ற்றை மாற்றினான்.

இச்சூழ்நிலையில் அல்லாஹ்வின் மார்க்க‌த்தை அத‌ன் தூய‌வ‌டிவில் ச‌ர்வ‌தேச‌ரீதியாக‌ பிர‌ச்சார‌ம் செய்யும் எம‌து அமைப்பு, மார்க்க‌ விட‌ய‌த்தில் மக்க‌ளுக்குத் தெளிவைக் கொடுக்க‌ வேண்டுமெனும் ந‌ன்னோக்கோடும், அல்லாஹ்வின் மார்க்க‌த்தின் அனைத்துப் ப‌குதிக‌ளும் த‌மிழ் பேசும் அன்ப‌ர்க‌ளுக்கு எழுத்து ரூப‌த்திலும் கிடைக்க‌ வேண்டுமெனும் உய‌ர் நோக்கிலுமே இம்மாத‌ இத‌ழ் வெளியிட‌ப்ப‌டுகின்ற‌து.

ச‌ர்வ‌தேச‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் இன்றைய நிலையையும், மார்க்க‌த்தில் ம‌க்க‌ள் அறிந்து கொள்ள‌ வேண்டிய‌ அடிப்ப‌டை விட‌ய‌ங்க‌ளையும் தெளிவுப‌டுத்தி வெளி வ‌ரும் இம்மாத‌ இத‌ழின் பிர‌வேச‌ம் இன்றைய‌ கால‌ க‌ட்ட‌த்தின் அவ‌சியாமான‌ ஒன்றாகும். அல்லாஹ்வின் திருப்தி ஒன்றை எதிர்பார்த்து வெளியிட‌ப்ப‌டும் இம்மாத‌ இத‌ழின் வ‌ள‌ர்ச்சிக்காக‌ அனைத்து ச‌கோத‌ர‌, ச‌கோத‌ரிக‌ளும் இறைவ‌னிட‌ம் பிரார்த்திக்குமாறு வெளியீட்டுக் குழு ப‌ணிவாக‌க் கேட்டுக் கொள்கின்ற‌து.

-வெளியீட்டுக் குழு

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers