”தம் கைகளால் நூலை எழுதி அதை அற்ப விலைக்கு விற்பதற்காக ‘இது அல்லாஹ்விடமிருந்து வந்தது’ என்று கூறுவோருக்குக் கேடு தான்.அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.(அதன் மூலம்)சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.” (2:79)
” இட்டுக்கட்டும் ஒவ்வெரு பாவிக்கும் கேடு தான்.”(45:7)
‘உங்களுக்குக் கேடு தான் ஏற்படும்.அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்!அவன் உங்களை வேதனையால் அழிப்பான்.இட்டுக்கட்டியவன் நஷ்டமடைந்து விட்டான்’ என்று மூஸா அவர்களிடம் கூறினார்.(20:61)
உண்மையை பொய்யின் மேல் வீசுகிறோம்.அது பொய்யை நொறுக்குகிறது.உடனே பொய் அழிந்து விடுகிறது.(இறைவனைப் பற்றி)நீங்கள்(தவறாக)வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.(21:18)
‘நான் உங்களைப் போன்ற மனிதன் தான்.உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகின்றது.எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்!அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்!இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது’ என்று (முஹம்மதே!)கூறுவீராக!(41:06)
அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்!(83:01)
குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.(104:01)
தமது தொழுகையில் கவனமற்றுத் தொழுவோருக்குக் கேடு தான்!(107:04)
(நம் வசனங்களை)பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.(52:11)
மகத்தான நாள் வரும் போது (ஏக இறைவனை)மறுப்போருக்குக் கேடு உள்ளது.(19:37)
அவர்களிடையே பல்வேறு கூட்டத்தினர் முரண்பட்டனர்.துன்புறுத்தும் நாளில் அநீதி இழைத்தோருக்கு வேதனை எனும் கேடு இருக்கிறது.(43:65)
(ஏக இறைவனை) மறுப்போருக்கு அவர்கள் எச்சரிக்கப்பட்ட நாளில் கேடு உள்ளது.(51:60)
பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.(52:11)
வானங்களில் உள்ளவையும் பூமியும் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன.(ஏக இறைவனை)மறுப்போருக்கு கடுமையான வேதனை எனும் கேடு உள்ளது.(14:02)
யாருடைய உள்ளத்தை இஸ்லாத்திற்காக அல்லாஹ் விரிவடையச் செய்து விட்டானோ அவர் தமது இறைவனிடமிருந்து (கிடைத்த)ஒளியில் இருக்கிறார்.இறைவனை நினைப்பதை விட்டு உள்ளங்கள் இறுகிப்போனவர்களுக்கு கேடு தான்!அவர்களே தெளிவான வழிகேட்டில் இருப்பவர்கள்.(39:22)
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது தெளிவுரைகள்
