Skip to content

பெண்கள் மஹ்ரமில்லாமல் தனியாகவோ பெண்கள் குழுவுடனோ ஹஜ்ஜுக்குச் செல்வது ஹராமாகும்.

October 26, 2008

அன்பின் சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இஸ்லாமிய மார்க்கத்தில் ஹஜ் எனும் கடமை அடிப்படையானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். ஹஜ் எனும் கடமையை ஒருவர் மறுத்தால் இஸ்லாமிய வட்டத்தை விட்டு அவர் வெளியேறிவிடுவார் என்பது திண்னமாகும்.

இக்கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதர் அழகான முன்மாதிரியை எமக்குச் சொல்லித்தந்துள்ளார்கள். ஆனால் இன்றைய எமது ஹஜ் வழிகாட்டிகளும் முகவர்களும் நபிவழியைப் புறக்கணித்து விட்டு  ஆதாரமற்ற போலியான சட்டங்களை அறிமுகம் செய்யும் மத்ஹபு நூற்களிலிருந்தே ஹஜ்ஜுக்கான முன்மாதிரியை பெற்றுக்கொள்ளும் நிலையை கண்கூடாகக் கானுகின்றோம்.

ஹஜ்ஜுடைய வணக்க முறைகளை மாநபிவழியில் போதிக்கக் கடமைப்பட்டுள்ள மார்க்க அறிஞர்களே மத்ஹபு நூற்களை மையப்படுத்தி ஹஜ் விளக்கவுரைகள் நடாத்துவது ஸுன்னாவை நேசிக்கும் உள்ளங்களுக்கு ஆழ்ந்த மன வேதனையை அளிக்கின்றது. அல்லாஹ்வின் தூதரின் வழியைப் புறக்கணித்து விட்டுச் செய்யப்படும் அத்தனை காரியங்களும் வழிகேடானவை என்பதை உணராத அப்பாவிப் பொதுமக்கள்இ இவர்கள் கூறும் வழிமுறைகளை ஏற்றுக் கொண்டு ‘பித்அத்’ எனும் முஸீபத்தில் சிக்க அல்லாஹ்வின் அருளை இழந்து வருகின்றனர்.

வழமையாக ஹஜ்ஜுடைய காலங்களில் அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று தான் ‘பெண்கள் மஹ்ரமில்லாமல்(திருமணம் முடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல்) தனியாகவோஇபெண்கள் குழுவுடனோ ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?’ இக்கேள்விக்கான பதிலை அல்லாஹ்வுடைய தூதரே சொல்கின்றார்கள்.பாருங்கள்.!!

3336 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ كِلاَهُمَا عَنْ سُفْيَانَ – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ – حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ عَنْ أَبِى مَعْبَدٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ سَمِعْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَخْطُبُ يَقُولُ « لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلاَّ وَمَعَهَا ذُو مَحْرَمٍ وَلاَ تُسَافِرِ الْمَرْأَةُ إِلاَّ مَعَ ذِى مَحْرَمٍ ». فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ امْرَأَتِى خَرَجَتْ حَاجَّةً وَإِنِّى اكْتُتِبْتُ فِى غَزْوَةِ كَذَا وَكَذَا. قَالَ « انْطَلِقْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ ».

இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் கூறியதாவது: ‘ஒரு பெண்ணுடன் எந்த(அந்நிய)ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர ஒரு பெண் (மண முடிக்கத்தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்! ‘என்று அல்லாஹ்வின் தூதர் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.அப்போது ஒரு மனிதர் எழுந்து ‘அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப்புறப்பட்டு விட்டாள். இன்னின்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.(இந்நிலையில் நான் என்ன செய்வது?)’ என்று கேட்டார்.நபி(ஸல்)அவர்கள் ‘நீர் சென்று உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!’ என்று கூறினார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புஹாரி:1862 3006 3061 5233

ஸஹூஹு முஸ்லிம்: இரண்டாம் பாகம்இஹதீஸ் இல:2611)

மேற் குறித்த ஹதீஸ் எமக்கு மஹ்ரமில்லாமல் பெண்கள் தனியாகவோ, குழுக்களுடனோ ஹஜ்ஜுக்குச் செல்வது ஹராம் என அழகாக விளக்குகின்றதல்லவா?

(இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எம்மைத் தொடர்பு கொண்டால் முழுமையான ஆய்வை வழங்குவதற்கு எமது வெளியீட்டுப் பிரிவு தயாராகவுள்ளது என்பததை இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.)

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers