Skip to content

இவர்கள் பகிரங்கமாக சத்தியம் செய்ய முன்வருவார்களா!???

September 27, 2008

 

வன்முறையைத் தூண்டும் தீய சக்திகள் பற்றிய ஓர் விழிப்புணர்வு

இஸ்லாத்தை யாருக்கும் அஞ்சாமல் சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்யும் தாருல் அதரின் வேகமான வளர்ச்சியை சகித்துக் கொள்ளாத சில சக்திகள் தாருல் அதரை வன்முறை அமைப்பாகசித்தரித்து கடந்த 25.09.2008 அன்று காத்தான்குடியில் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டன.

இத்துண்டுப்பிரசுரம் சமூக அவதானிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கும் விசனத்திற்கும் ஆளாகின. தாருல் அதரின் பிரச்சாரப் பிரிவின் கவனத்திற்கு இப்பிரசுரம் கொண்டுவரப்பட்டதை அடுத்து கருத்தை கருத்தால் அனுகத்தெரியாத காழ்ப்புணர்வும் குரோத சிந்தனையும் கொண்ட அச்சக்திகளுக்கு மறுப்புப் பிரசுரமாகவே “இவர்கள் பகிரங்கமாக சத்தியம் செய்ய முன்வர்வார்களா???” எனும் இப்பிரசுரத்தை எமது வெளியீட்டுப் பிரிவு வெளியிடுகின்றது.எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எமது வேகமான பிரச்சாரப் பயணத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்புப் பொதுமக்களுக்கு,  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

    கடந்த 25.09.2008 வெள்ளி அன்று காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா தலைமையில்  ஏழு தஃவா அமைப்புக்கள் ‘வன்மையாகக் கண்டிக்கின்றோம்’ எனும் தலைப்பில் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்ததை நாம் அனைவரும் நன்கறிவோம். இத்துண்டுப்பிரசுரத்தில் எமது அமைப்பின் பெயரை நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் முழுக்க முழுக்க தாருல் அதரை நோக்கியே அவர்களின் விமர்சனம் அமையப்பெற்றிருந்ததை அவதானிகளான பொதுமக்கள் உணர்ந்திருப்பீர்கள். தாருல் அதரின் கொள்கைகளையும், இலக்குகளையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓடியோ, வீடியோ, பிரசுரம், இணைய தளம் ஆகியவையூடாக நாம் தெளிவுபடுத்தியிருந்தும் வீண் அபாண்டங்களையும் அர்த்தமற்ற விமர்சனங்களையும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் ஏனைய ஏழு தஃவா அமைப்புக்களும் அத்துண்டுப் பிரசுரத்தில் அள்ளி இறைத்திருந்ததை எம்மால் காணமுடிந்தது. நாளுக்கு நாள் எழுச்சி பெற்றுவரும் எமது தஃவா அமைப்பை பொதுமக்களிடம் ஏதோ வன்முறைகளைக் கட்டவிழ்த்து ஆரோக்கியமற்ற இளைஞர் குழுவை உருவாக்கும் பயங்கரவாத அமைப்பாக சித்தரிப்பதில் மிகவும் குறியாகவே இத்துண்டுப்பிரசுரத்தை அமைத்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புப் பொதுமக்களே! நடுநிலையாளர்களே!

 மிக அண்மையில் சகோதரர் மௌலவி றிழ்வான்(மதனி) அவர்களின் வீடு இனந்தெரியாத நபர்களினால்  சேதமாக்கப்பட்டதை மையப்படுத்தியே இத்துண்டுப்பிரசுரத்தை எமது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் ஏனைய ஏழு தஃவா அமைப்புக்களும் வெளியிட்டிருக்கின்றன. அப்பிரசுரத்தில் அத்தாக்குதலை மேற்கொண்டது தாருல் அதர் அத்தஅவிய்யாதான் என்பதை பல்வேறு இடங்களில் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்ததை சகோதரர்களாகிய நீங்கள் அறிந்திருப்பீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றோம். நாம் நமது பிரச்சாரப் பயணத்தில் எந்தவொரு சகோதரருக்கும் அல்லது எந்தவொரு அமைப்பிற்கும் மிரட்டலோ, அச்சுருத்தலோ, அடாவடித்தனங்களோ, மொட்டைத் துண்டுப்பிரசுரங்களோ வெளியிட்டதுமில்லை வெளியிடப்போவதுமில்லை. அல்லாஹ்வின் பரிபூரண திருப்தியை எதிர்பார்த்து முழுக்க முழுக்க நேர்மையாகவும், ஜனநாயக அடிப்படையிலும் பிரச்சாரம் செய்யும் எமது தஃவா அமைப்பின் மீது ஏன் இத்தனை காழ்ப்புணர்வும், குரோதமும் என்பதுதான் எமக்குப் புரியவில்லை.

மதிப்பிற்குரிய எமதூர் ஜம்இய்யதுல் உலமா சபையினரே!

  நாங்கள் செய்யாத, அநாவசியமான, பொய்யான குற்றங்களை சுமத்தும் நீங்கள் முதலில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! தீர்ப்பாளர்களுக்கெல்லாம் சிறந்த தீர்ப்பாளனாகிய அந்த ரப்புல் ஆலமீனை மறந்துவிட்டு இத்துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருக்கும் நீங்களும் உங்களுக்குத் துணைநின்ற ஏழு தஃவா அமைப்புக்களும் நாளை மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் நிச்சயம் நிறுத்தப்பட்டு எம்மீது சுமத்திய வன்முறைக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியாக வேண்டிவரும் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். சாதாரண அப்பாவிப் பொது மக்களிடம் தங்களது இத்திட்டங்கள் பலிக்கலாம். ஆனால், தஃவாவின் களநிலவரத்தைப் புரிந்துகொண்ட கல்விமான்களை உங்களது பிரசுரம் எந்தவிதமான மாற்றங்களையும் ஏற்படுத்தப்போவதில்லையென்பது பிரச்சாரக் களத்திலுள்ள எங்களுக்குத் தெரியும். அல்ஹம்துலில்லாஹ்.

அன்பின் உலமாக்களே! தஃவா அமைப்பினர்களே!

    உங்களது துண்டுப்பிரசுரத்தில் எம்மீது முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களை நூற்றுக்கு நூறு வீதம் நாம் நிராகரிக்கின்றோம். யாரோ தீய சக்திகள் மேற்கொண்ட அநாகரீகமான  செயற்பாடுகளுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல. றிழ்வான்(மதனி) அவர்களின் பாதிப்பிற்கும், ஏனைய நிகழ்வுகளுக்கும் எங்களைக் காரணம் காட்டும் உங்களது குற்றச்சாட்டு நியாயபூர்வமானதும் உண்மையானதுமென்றால், உங்களையும் இஸ்லாமிக் சென்டர், இஸ்லாமிய தஃவா நிலையம், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம், அல்மனார் கல்வி கலாசார மேம்பாட்டிற்கான அமைப்பு, ஜமாஅத்தே இஸ்லாமி, சமூக கல்வி பொருளாதார மறுமலர்ச்சிக்கான அமையம்(SEERA), ஜம்இய்யதுத் தலபா ஆகிய அமைப்புக்களையும் பகிரங்கமான அழிவுச் சத்தியப் பிரமாணத்திற்கு(முபாஹலா) அழைப்பு விடுக்கின்றோம் (வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று நாம் பிரார்த்திப்போம் பார்க்க திருமறைக் குர்ஆன் 3:61). மக்கள் அனைவரும் ஒன்று திரளக் கூடிய ஒரு பொது மைதானமொன்றில் எங்களது அமைப்பின் அத்தனை உறுப்பினர்களும் வருகின்றோம்.. பிரசுரம் வெளியிட்ட எட்டு அமைப்புக்களின் உறுப்பினர்களும் வாருங்கள். நாங்கள் அனைவருக்கும் முன்னால் பகிரங்கமாக அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு ‘இந்த வன்முறைக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை’ என அழிவுச் சத்தியப் பிரமாணம் செய்யத் தயாராகவிருக்கின்றோம். நீங்கள் தெளிவானவர்களாகவும், நேர்மையாளர்களாகவும் இருந்தால் இச்சத்திய நிகழ்வுக்கு முன்வாருங்கள். யார் பொய்யர்களாக இருக்கின்றோமோ நம் மீது அல்லாஹ்வின் சாபமும் தண்டனையும் இறங்கட்டும். நீதமாகவும் நேர்மையாகவும் சிந்திக்கும் அவதானிகளை உட்பொதிந்த எமது சம்மேளனம் இதில் பார்வையாளர்களாக இருக்கட்டும். உலமாக்களே! ஏனைய தஃவா அமைப்புக்களே! நீங்கள் உண்மையாளர்களா? கூற்றில் நீங்கள் உண்மையாளர்கலென்றால் நாம் கூறிய அழிவுச் சத்தியப் பிரமாணத்திற்குத் தயாரா?. இவர்கள் இந்நிகழ்வுக்கு வராவிட்டால் மக்களே இவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்! எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

இப்படிக்கு.
தாருல் அதர் அத்தஅவிய்யா
(மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையிலான பிரச்சார அமைப்பு)
த.பெ. இல 19, கப்பல் ஆலிம் வீதி, புதிய காத்ததான்குடி 02.

www.dharulathr. com

27.09.2008

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers