Skip to content

செய்யித் குதுப்பும் அத்வைதமும் ‍ (விவாதம்)

September 22, 2008

விவாத தலைப்பு:

இஹ்வானுல் முஸ்லீம் இயக்கத்தின் தலைவரான செய்யிதுல் குதுப் தனது நூற்களில் அத்வைதம் பேசியுள்ளாரா? இல்லையா?

இடம்:

பேருவலை ரியாலுஸ்ஸாலிஹீன் ஜும்ஆ பள்ளிவாயல்.

காலம்:

01.08.2008 வெள்ளிக்கிழமை

பங்கேற்றவர்கள்

தாருல் அதர் அத்த அவிய்யா சார்பாக:
மௌலவி: MCM. ஸஹ்ரான் (மஸ்ஊதி)
மௌளவி: SLM. நஷ்மல் (பலாஹி)

தாருல் அர்க்கம் (DA) சார்பாக:
மௌளவி: MJM. அரபாத் (நளீமி)
(விரிவுரையாளர், ஜாமியா நளீமியா கலாபீடம்)
மௌளவி: MHM இஸ்பஹான் (நளீமி)

நடுவர்:

சகோதரர் மிர்சூக் பளீல்

விவாதம் நடைபெற்ற முறை:
ஒவ்வொரு சாராருக்கும் பத்து பத்து நிமிடங்கள் ஒவ்வொரு சுற்றிலும் வழங்கப்பட்டன.
அன்பர்களின் வசதிக்காக தனித்தனிச்சுற்றாக கீழே வழங்கியுள்ளோம்.

( click the link to play audio or right click and “save target as” to save the file )

நடுவரின் அறிமுக உரை: ( 9 MINUTES )

Download 2.61 MB
இருசாராரினதும் அறிமுக உரை (12 MINUTES )

Download 3.4 MB
முதலாம் சுற்று (18 MIINUTES)

Download 5.24 MB
இரண்டாம் சுற்று (17 MINUTES)

Download 5 MB
மூன்றாம் சுற்று (23 MINUTES)

Download 6.7 MB
நான்காம் சுற்று ( 21 MINUTES)

Download 6.2 MB
ஐந்தாம் சுற்று( 17 MINUTES)

Download 5 MB
ஆறாம் சுற்று ( 23 MINUTES )

Download 6.7 MB
ஏழாம் சுற்று ( 20 MINUTES )

Download 5.8 MB
எட்டாம் சுற்று( 25 MINUTES ) ( இறுதி தொகுப்புரைகள்)

Download 7.1 MB

<< BACK TO AUDIO LECTURE INDEX <<< EMAIL THIS POST TO A FRIEND >>>

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பேருவலையில் நடைபெற்ற விவாதத்தையே நீங்கள் கண்டீர்கள். இஹ்வான்களின் இரண்டாம் தலைவர் செய்யிதுல் குதுப் அவர்கள் தனது நூற்களில் இந்துமதக் கோட்பாடான அத்வைதத்தை பேசியுள்ளார் என்பது தாருல் அதர் அத்தஅவிய்யா உலமாக்களின் வாதம்.

இஹ்வானுல் முஸ்லீமின் இயக்கத்தை அங்கீகரிக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி, தாருல் அர்க்கம் (DA) போன்ற இயக்கவாதிகளின் வாதமோ செய்யிதுல் குதுப் அத்வைதம் பேசவில்லை என்பது.

அன்பார்ந்தவர்களே!
நடைபெற்ற விவாதத்தை நீங்கள் கூர்ந்து கவனித்து இருப்பீர்கள். யார் ஆதாரங்களைக் கேட்கின்றார்கள், யார் ஆதாரம் சொல்லாமல் தடுமாற்கின்றார்கள் என்பதை அவதானித்திருப்பீர்கள். இதுதான் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடு.
சத்தியவாதிகள் எப்போதும் எந்தத் தடுமாற்றத்திற்கும், தோல்விகளுக்கும் உள்ளானதாக எந்த வரலாறும் கிடையாது. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்.

அன்புக்குரியவர்களே!
இஹ்வான்களை நாம் விமர்சிப்பதால் எம்மை கனிசமான சகோதரர்கள் விமர்சிக்கின்றார்கள்.
நாம் அந்த விமர்சனங்களை கண்டுகொள்ளவேயில்லை. இருந்தும் அவர்களின் ஆக்கபூர்வமான விமர்சங்களை நாம் கருத்தில் கொள்கின்றோம். இஹ்வான்களை விமர்சிப்பதால் எமக்கு உலக ரீதியான எந்த இலாபங்களும் கிடையாது.

அல்லாஹ்வின் கொள்கை கன்னியமாது. மகத்தான அந்தக் கொள்கையை இழிவு படுத்திய இஹ்வான்களின் தலைவர்களை இலங்கையிலுள்ள ஜமாஅத்தே இஸ்லாமி, தாருல் அர்க்கம் (DA) போன்ற அமைப்புக்கள் துதித்துப் புகழ் பாடுவது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பெரிய தவறாகும். இதனால்தான் விமர்சிக்கின்றோம். இலங்கையில் சகோதரத்துவ இயக்கம் எனும் பெயரில் விஷமக் கருத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஷீஆ இயக்கவாதிகளின் முகத்திரையை நாம் பல்வேறு இடங்களில் கிழித்துள்ளோம்.

ஒற்றுமைக் கோஷமிடும் பிரிவினை வாதிகளான இவ்ர்களின் கொள்கை கோட்பாடுகளை எமது இவ்விணைய தளத்தில் வெளியிட்டோம். எழுத்துத் துறையில் இஹ்வான்கள் முன்னேற்றம் அடைந்திருந்தும் எமது ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு தெளிவான பதில்களை இவ்ர்கள் தராமல் இருப்பது இவர்கள் அசத்தியவாதிகள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

மீண்டும் சொல்கின்றோம், இன்ஷாஅல்லாஹ் இஹ்வான்களின் அனைத்து விஷமக்கருத்துக்களையும் எதிர்காலத்தில் தெளிவு படுத்துவோம்.

நாம் கூறும் கருத்துக்களில் யாராவது மாற்றுக்கருத்துக் கொண்டிருந்தால் அவர்களை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றோம். இந்நாட்டில் இஹ்வானிஸத்தை பகிரங்கமாக போதிக்கும் ஜாமிஆ நளீமிய்யாவையும் பகிரங்கமாக அழைக்கின்றோம். முடிந்தால் தங்களின் ஆதாரங்களை திரட்டிகொண்டு எம்மோடு விவாத களத்தில் சந்திக்கட்டும்.

அல்லாஹ் போதுமானவன்..

‘எங்கள் இரட்சகனே! எங்களையும் எங்களுக்கு முன்னால் விசுவாசங் கொண்ட சகோதர‌ர்களையும் மன்னிப்பாயாக! இன்னும் விசுவாசங்கொண்டவர்கள் மீதான காழ்ப்புணர்வை எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இரட்சகனே! நீயே கிருபை உள்ளவனாகவும் இரக்கம் உள்ளவனாகவும் இருக்கின்றாய்’. அல்குர்ஆன் (59:10)

தொடர்புடையவை:

“Sayyid Qutb had no knowledge of the fundamental or subsidiary matters of Islam.”

- Shaykh Muhammad Naasir ad-Deen al-Albaanee

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers