Skip to content

மனித உருவாக்கம் தொடர்பான விஞ்ஞானக் கருத்தரங்கு

September 8, 2008

7.09.2008 ஞாயிற்றுக் கிழமை எமது தலைமைக் காரியாலயத்தில் ‘மனித உருவாக்கம் எப்படி நிகழ்கின்றது?’ எனும் தலைப்பில் விஞ்ஞானக் கருத்தரங்கு ஒன்று அல்லாஹ்வின் பேரருளால் நடைபெற்றது. அனுராதபுர ரஜரட்ட பல்கலைக்களக வைத்தியக் கற்கை மாணவன் அப்துஷ் ஷுக்ர் அவர்களது தலைமையிலேயே மேற்படி கருத்தரங்கு பி.ப 1.00 மணிக்கு ஆரம்பித்து சுமார் மூன்று மணித்தியாலங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இக்கருத்தரங்கில் விஞ்ஞான ரீதியில் எப்படி மனித உருவாக்கம் தாய் வயிற்றினுல் நடைபெருகின்றது என்பதை சகோதரர் ஷுக்ர் அவர்கள் இந்நிகழ்வில் கணனி மூலமாக அழகாக விளக்கினார். அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வில் அதிகமான மாணவர்கள் உட்பட பல சகோதரர்கள் கலந்து பயன்பெற்றதோடு எதிர்கால அவ்வைத்தியரிடம் தங்களது சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொண்டனர். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers