Skip to content

ஏகத்துவத்தைப் போதிக்கும் தாருல் ஈமானில் கைக்குண்டு வீச்சு

August 27, 2008

ஏறாவூர் நகர் பகுதியில் இன்றிரவு (26.08.2008) கைக்குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது.ஏறாவூர் நகரில் இஸ்லாத்தை தூயமுறையில் பகிரங்கப் பிரச்சாரம் செய்து வரும் ‘தாருல் ஈமான்’ எனும் அமைப்பை நோக்கியே மேற்படி குண்டு வீசப்பட்டுள்ளதாக சம்பவ இடத்திலிருந்து எமது செய்திப்பிரிவிற்கு சகோதரர் அனஸ் தெரிவித்தார்.

மேற்படி குண்டுவீச்சு நல்லிரவு 2.00 மணியளவிலேயே வீசப்பட்டுள்ளது. வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்காமையினால் தேசம் ஏதும் ஏற்படவில்லை எனவும் சகோ.அனஸ் தெரிவித்தார்.

சத்தியத்தை சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சி முன்வைக்கும் கொள்கைவாதிகள் கப்ரு வணங்கிகளால் தொடர்ச்சியான சோதனைகளை அனுபவித்து வருவது இந்நாட்டில் வழமையான ஒன்றாக மாறிப்போய்விட்டது.தாருல் ஈமானை அழிப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்தவர்கள் அல்லாஹ்வின் தண்டனையைப் பயந்துகொள்ள வேண்டும்.

செய்திப்பிரிவு
தாருல் அதர் அத்தஅவிய்யா

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers