Skip to content

காத்தான்குடியில் களைகட்டிய சீதன ஒழிப்பு மாநாடு (படங்கள் இணைப்பு)

August 23, 2008

 இஸ்லாத்தை அதன் தூய வடிவில் சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்யும் அமைப்பாகிய தாருல் அதர் அத்தஅவிய்யா நேற்றய தினம் காத்தான்குடி சேர் ராஸீக் பரீட் மாவத்தையில்(தண்ணீர் தாங்கி முன்பாக)மாபெரும் சீதன ஒழிப்பு மாநாடு ஒன்றை அல்லாஹ்வின் பேரருளால் நடாத்தியது.அல்ஹம்துலில்லாஹ்.

இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதோடு உலமாக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலதரப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.

நஷ்மல் மெளலவியின் புரட்சிகரமான தலைமை உரையோடு ஆரம்பித்த இந்நிகழ்வில் ‘சீதனக் கொடுமையால் சீரழியும் முஸ்லிம் சமூகம்’ எனும் தலைப்பில் அல்ஹாபிழ் மெளலாவி ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்கள் உரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்றைச் சேர்ந்த மெளலவி அன்ஸார் (தப்லீகி – தத்பீகுஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா கலாபீட அதிபர்) அவர்கள் ‘சீதன ஒழிப்பில் ஒரு முஸ்லிமின் கடமைப்பாடு’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

பெருந்திரளான இளைஞர்கள் யுவதிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் இருதி அம்சமாக ‘எதிர்காலத்தில் சீதனமில்லாமல் திருமணம் முடிக்கவிருக்கும் இளைஞர்கள் அணி மாநாட்டு மேடை ஏறியது. அத்துடன் அனைத்து மக்களும் ‘அல்லாஹு அக்பர்’ என்ற கோஷத்துடன் அல்லாஹ்வின் பேரருளால் மாநாடு முற்றுப்பெற்றது. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.‌

 

மாபெரும் சீத‌ன‌ ஒழிப்பு மாநாடு

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers