Skip to content

மாபெரும் சீதன ஒழிப்பு மாநாடு.

August 18, 2008

 

சமூகத்தலைவர்களேஉலமாக்களே! களத்தில் இறங்குங்கள்எதிர்வரும் 22ம் திகதி சீதனக்கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைப்போம்!

இன்ஷாஅல்லாஹ் 22.08.2008 ( வெள்ளி) பி. 4.30 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை காத்தான்குடி சேர் ராஸீக் பரீட் மாவத்தையில் (தண்னீர் தாங்கி முன்பாக)மாபெரும்சீதன ஒழிப்புமாநாடொன்று நடைபெறவுள்ளதை அனைத்து சகோதரர்களும் நன்கறிவர்.

இம்மாநாட்டைப் பொருத்தமட்டில் பெண்களுக்கொதிராக இன்று முஸ்லிம் சமூகத்தில் இழைக்கப்படும் அத்தனை கொடுமைகளையும் கண்டித்து பெண்கொடுமைக்கு சாவுமணியடிப்பதும்  ஆக்கபூர்வமான நாகரீகமான தன்மானம் கொண்ட ஒரு இளம் தலைமுறையினர்களை உருவாக்குவதே அடிப்படை நோக்கமாகும்இம்மாநாட்டிற்கான அனைத்து முன்னெடுப்புக்களையும் எமது அமைப்பின் இளைஞர் அணி மேற்கொண்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் சட்டத்தில் வரதட்சனை வண்மையாகக் கண்டிக்கப்பட்டிருந்தும் அதிகமான முஸ்லிம்கள் அப்பிழையை தொடர்ந்தும் செய்துகொண்டே வருகின்றனர். இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமாயின் முஸ்லிம் சமூகத்தில் அனைத்து அமைப்புக்களும் அணிதிரள வேண்டும்.

ஒரு சமூகத்தின் முதுகெலும்புகளென வர்ணிக்கப்படும் வகுப்பினர் இளைஞர்களேஇவ்விளைஞர்களுல் சத்தியக்கொள்கையை நெஞ்சில் சுமந்த இளைஞர்கள் அணி தனி ரகம். அல்லாஹ்வின் கொள்கையை வளர்க்க வேண்டுமென களத்தில் குதித்த இத்தலைமுறையினருக்கு சமூகத்தலைமைகள் அனைத்து வழி வகைகளையும் ஒத்துழைப்புக்களையும் செய்து கொடுக்க வேண்டும்.

பொருப்பு வாய்ந்த அத்தனை சமூகத்தலைமைகள் மீதும் இது கட்டாயமாகும்.நீதியையும்இநேர்மையையும் நேசிக்கும் யாரும் சீதன்க்கொடுமையை ஒழிக்கும் விடயத்தில் பின்நிற்கமாட்டார்கள். இது யதார்த்தமாகும். அல்லாஹ் போதுமானவன்.

 ஃவாப்பிரிவு

தாருல் அதர் அத்தஅவிய்யா

 

Related Readings:

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers