Skip to content

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் பற்றிய எமது தெளிவான நிலைப்பாடு

August 18, 2008

‍-அதரி

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே!

சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்து வரும் தாருல் அதர் அத்தஅவிய்யா சில நாட்களாக ‘அல் இஹ்வானுல் முஸ்லிமூன்’ எனும் அரசியல் இயக்கத்தை தக்க சான்றுகளுடன் பரிசீலித்து மக்கள் மத்தியில் அவ்வியக்கத்தின் உண்மை நிலையைப் படம்பிடித்துக் காட்டியது.

இதன் இருதி அங்கமாக ‘பேருவலை’ எனும் ஊரில் இஹ்வானிய அறிஞர்களுக்கும் எமது மார்க்க அறிஞர்களுக்கும் விவாதம் ஒன்று கூட நடைபெற்றதை அன்பர்கள் நன்கறிவீர்கள்.

எந்தவொரு இயக்கத்தையும் விமர்சிக்கும் உரிமை யாருக்கும் எச்சந்தர்ப்பத்திலும் உண்டு என்பது நாகரீகமான கோட்பாடு. உலகில் தோற்றம் பெற்ற எந்த அமைப்பாக இருந்தாலும் அவற்றில் விமர்சனங்கள் தோன்றுவது இயல்பானதே! ஒரு இயக்கம் விமர்சனங்களை அங்கீகரிக்காமல் கண்டுகொள்ளாமல் சகித்துக்கொள்ளாமல் இருந்தால் அவர்களிடம் நேர்மை நீதி நியாயம் இல்லை என்று அர்த்தம்.

நமது அமைப்பாக இருந்தாலும் தவறுகள் இடம்பெறலாம். ஏனெனில் அமைப்புக்களை நடாத்துபவர்கள் மனிதர்களே! அவர்கள் வானவர்கள் இல்லை. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் எந்த இயக்கவாதியும் தனிமனித வழிபாட்டை நோக்கி நகர மாட்டார்.

தமது இயக்கம் தவறு செய்துள்ளது என்று நிறூபிக்கப்பட்டால் தவறை ஏற்றுக்கொள்ளும் மநோநிலை இன்று அதிகமான மாற்று இயக்கங்களிடம் இல்லை. இஹ்வான்களை நாம் விமர்சித்தது அறிவார்ந்த ரீதியாகவும் ஆதாரபூர்வமாகவும் என்பதை யாரும் மறுக்க முடியாது. நமது எழுத்துக்களும்இபேச்சுக்களும் இதற்குச் சிறந்த சான்று.

மிகத்தெளிவான நிலைப்பாட்டோடு தஃவா செய்யும் எம்மைப் பற்றி சில மார்க்க அறிஞர்கள் அபாண்டங்களைப் பரப்பிப் திரிகின்றனர். ஆதாரங்கள் மூலமாக எதிர்கொள்ளத் திராணியற்ற இம்மனிதர்களை ‘உலமாக்கள்’ என்று அழைப்பதற்கே வெட்கமாக உள்ளது. ‘மார்க்க அறிஞர்கள்’ எனப் பெயரைச் சூட்டிக்கொண்டு சாதாரண ஒரு முஸ்லிம் கூடப்பேசாத‌ தரம் கெட்ட வார்த்தைகளைப் பேசி எமது பிரச்சாரத்தை முடக்க நினைக்கின்றனர். சத்தியத்திற்குச் சொந்தக்காரன் அல்லாஹ். அவனது சத்தியத்தைப் பாதுகாக்க அவன் போதுமானவன்.

எட்டு வருடங்கள் ஏழு வருடங்கள் மார்க்கத்தைப் படித்ததாகச் சொல்லப்படும் இம்மெளலவிமார்கள் பொய்யான ஒரு விமர்சனத்தை எமக்கெதிராகப் பரப்பித்திரிகின்றனர். அதாவது ‘தாருல் அதர் இஹ்வான்களை காபிர்கள்’ எனக்கூறுகின்றது என்று பாமரமக்களிடம் பிரச்சாரம் செய்து எமது இஸ்லாமியப் பிரச்சாரத்தில் தடைகளையும் இடையூருகளையும் ஏற்படுத்த விரும்புகின்றனர்.

யாருடைய விமர்சனங்களும், தடைகளும் எம்மைத் தடுக்காது என்பது திண்னமாகும். இருந்த போதிலும் நாம் நமது தஃவாப்பிரச்சாரப் பயணத்தில் யாரையும் ‘காபிர்’ என்று அழைத்தது கிடையாது. இஹ்வானிஸத்தை வழிகேடு என்று அழைக்கின்றோமே தவிர அவ்வியக்கவாதிகளைக் ‘காபிர்கள்’ என்று அழைத்ததும் இல்லைஅழைக்கப்போவதுமில்லை.

பொய்களைப் பரப்பித்திரியும் இவ்வுலமாக்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! பொய்யர்கள் தலைநிமிர்ந்து நின்றதாக எந்த வரலாற்றிலும் எந்தச் சான்றும் இல்லை. மக்கள் இப்பொய்யர்களை இன்ஷாஅல்லாஹ் விரைவில் அடையாளம் கண்டுகொள்வார்கள்.

பொருத்திருந்து பார்ப்போம்!

Note: இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் பிழையான கொள்கைகளை நாம் மாத்திரம் விமர்சனம் செய்யவில்லை. இவ்வியக்கம் ஆரம்பித்த காலம் முதலே எத்த‌னையோ ஸலஃப் இமாம்கள் இஹ்வான்களை விமர்சித்தே வந்துள்ளனர்.

ஸலஃப் இமாம்களின் இஹ்வான்கள் பற்றிய விமர்சனங்கள்:

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers