Skip to content

தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஆய்வுக்கருத்தரங்கு

July 25, 2008

-த‌ஃவாக்குழு

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)அல்லாஹ்வின் பேரருளால் அவனது சத்தியமார்க்கத்தை அதன் உண்மையான வடிவில் சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்யும் ‘தாருல் அதர் அத்தஅவிய்யா ‘இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 23,24, 25/08/2008 ஆகிய திகதிகளில் தாருல் அதரின் பிரச்சாரகர்களுக்கான ஆய்வுக்கருத்தரங்கு ஒன்றை நடாத்தத் தீர்மானித்துள்ளது. இந்நிகழ்வு தாருல் அதரின் தலைமைக்காரியாலயம் அமைந்துள்ள காத்தான்குடியில் இடம்பெறுவதாக அதன் ஏற்பாட்டுக்குழு எமது செய்திப்பிரிவுக்கு வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்காக நாட்டின் பலபாகங்களிலிருந்தும் எமது பிரச்சாரகர்கள் வருகை தரவுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் சர்வதேச ரீதியாக முஸ்லிம்கள் ரமாளானை எதிர்நோக்கவிருப்பதால் பின்வரும் மார்க்க விடயங்கள் இக்கருத்தரங்கில் மிக முக்கியமாக‌ ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  • இஃதிகாப் எந்தப்பள்ளிவாயல்களில் இருக்கமுடியும்?
  • ரமளான் காலங்களில் பிரயாணி கடமையான நோன்புகளை நோற்பது கூடுமா? இல்லையா?
  • கப்பிணிப்பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பு கடமையா? இல்லையா?
  • நோன்பை முறிக்கும் காரிய‌ங்க‌ளில் எவைக‌ள் ஆதார‌பூர்வ‌மான‌வை? எவைக‌ள் ஆதார‌ம‌ற்ற‌வை?
  • சர்வ‌தேச‌ப்பிறை ச‌ரியான‌தா? த‌வ‌றான‌தா?
  • ர‌ம‌ளான் கால‌ங்க‌ளில் ஊசியின் மூல‌ம் ம‌ருந்தை ஏற்றுவ‌து ஆகுமா? இல்லையா?
  • நோன்பு திற‌க்கும் வேளையில் ஓதும் துஆ பித்அத்தா? ஸுன்னாவா?

மேற்குறித்த‌ த‌லைப்புக்க‌ளில் ஒவ்வொரு பிர‌ச்சார‌க‌ரும் மேற்கொண்ட‌ ஆய்வுக‌ள் க‌ருத்த‌ர‌ங்கில் ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட்டு மிக‌வும் நுணுக்க‌மாக‌ அவைக‌ள் ஆய்வுக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌ட‌ல் வேண்டுமென‌ தாருல் அத‌ரின் ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ள‌து.  நாம் எடுத்துக்கொண்ட‌ த‌லைப்புக்க‌ளை ஒரு மீளாய்வுக்கு உட்ப‌டுத்த‌வேண்டுமென‌ எம‌து பிர‌ச்சார‌க‌ர்க‌ள் விரும்பிய‌த‌ற்க‌மைய‌வே இந்நிக‌ழ்வு ந‌டைபெற‌வுள்ள‌து.

இன்ஷாஅல்லாஹ் இத்த‌லைப்புக்க‌ளில் ஆய்வுக‌ளை கைவ‌ச‌ம் வைத்திரிக்கும் ஆய்வாள‌ர்க‌ள், பிர‌ச்சார‌க‌ர்க‌ள், அமைப்புக்க‌ள் த‌ங்க‌ள‌து ஆய்வுக‌ளை எம‌க்கு அனுப்பிவைத்தால் இன்ஷாஅல்லாஹ் த‌ஃவாக்க‌ள‌த்திற்கு பேருத‌வியாக‌ அது அமையுமென‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகின்ற‌து.

உங்க‌ள‌து ஆய்வுக‌ளை அனுப்ப‌ வேண்டிய‌ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி dharulathar@yahoo.com ஆகும்.

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers