Skip to content

பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்!

July 17, 2008

அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றோம்.

ஹஸாபிய்யாத் தரீக்காவின் விஷேட குருவாகத் திகழ்ந்த ஹஸனுல் பன்னா என்பவரால் எகிப்தில் தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் இயக்கத்தை அல்குர்ஆன் அஸ்ஸுன்னா வெளிச்சத்தில் ‘வழிகேடானது’ என்று தொடர் பிரச்சாரம் செய்துவருகின்றோம். இஹ்வான்களின் தலைவர்களாக விளங்கும் ஹஸனுல் பன்னா, மெளலானா மெளதூதி, செய்யிதுல் குதுப், முஹம்மது குதுப், ஸைனப் அல்கஸ்ஸாலி, யூஸுப் அல்கர்ளாவி, முஹம்மத் அல்கஸ்ஸாலி போன்றவர்களின் கருத்துக்களில் அதிகமானவை இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களுக்கு முரண்பட்டவை என்றும் அவர்கள் ஷீஆயிஸத்தைப் ஆதரிக்கும் பிரச்சாரகர்கள் என்றும் நாம் கூறிவருகின்றோம்.

இக்கருத்துக்களை வெளிப்படையாகவும் மிகத்தெளிவாகவும் கூறுவதால் அதிகமான மக்கள் இஹ்வானிஸத்திலிருந்து மீட்சி பெற்று வருகின்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.

தங்களது தரீக்காவின் வீழ்ச்சியைப் பொருத்துக்கொள்ள முடியாத இஹ்வானிகள் தாருல் அதருக்கெதிரான பல்வேறு சதித்திட்டங்களில் இறங்கியிருப்பது அவதானிகளை வியக்கவைத்துள்ளது. மிக அண்மையில் இஹ்வான்கள் அதிகம் செரிந்து வாழும் ஊரான பேருவலைக்கு எமது பிரச்சாரகர்களான மெளலவி நஷ்மல்(பலாஹி)அல்ஹாபிழ் மெளலவி ஸஹ்ரான்(மஸ்ஊதி)அவர்களும் சென்று இஹ்வானுல் முஸ்லிமீன் என்போர் யார்? அவர்களின் கொள்கைஇகோட்பாடுகள் என்ன? ஏன் அவர்களை வழிதவறியவர்கள் என்று நாம் பிரச்சாரம் செய்கின்றோம்? என்றெல்லாம் விலாவாரியாக அங்குள்ள ஏகத்துவ வாதிகளுக்கு எடுத்துக்கூறினர்.இப்பிரச்சாரத்தைத் தொடர்ந்து சில அநாமோதய தொலைபேசி அழைப்புக்கள் மிரட்டும் தொணியில் எமது பிரச்சாரகர்களை நோக்கி வந்ததோடு ‘இதற்குப் பின்னரும் இஹ்வான்களை விமர்சித்தால் நாம் உங்களை சுட்டுக்கொலை செய்வோம்’ என அத்தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழைப்புக்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக அவர்கள் நாகரீகவாதிகளாக இருக்கப்போவதில்லை. கருத்துக்களை கருத்துக்களால் மோதும் அடிப்படை தெரியாத இவர்களால் என்ன சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும்?

எனவே பகிரங்க சவால் விடுகின்றோம். இஹ்வாலுல் முஸ்லிமீனைச் சரிகாணும் எந்த அமைப்போ மார்க்க அறிஞரோ யாராக இருந்தாலும் பகிரங்க விவாதத்திற்குத் தயாரானால் நாம் விவாதிக்கத் தயாராகவே இருக்கின்றோம்.  எமக்கு சத்தியக்கொள்கையே முக்கியம். இது அல்லாஹ்வின் மார்க்கம். மனிதக்கருத்துக்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு இம்மார்க்கம் எமக்கு அருளப்படவில்லை.

தூய்மையான கொள்கையை நீங்கள் நேசித்தால் விவாதக்களத்தை நோக்கி அடியெடுத்து வையுங்கள்.பொது மக்கள் இன்று விழிப்படைந்து விட்டார்கள். போலியாக‌ ஒற்றுமை, ஒற்றுமை எனக்கூறி இஸ்லாமிய அடிப்படைக்கொள்கையோடு ஷீஆயிஸத்தைக் கலக்காதீர்கள்!
நீங்கள் உங்கள் கொள்கையில் தெளிவானவர்களாகவும் உண்மையாளர்களாகவும் இருந்தால் விவாதக்களத்தை விட்டு நழுவ மாட்டீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இப்படிக்கு
தாருல் அதர் விவாத ஏற்பாட்டுக்குழு
கப்பல் ஆலிம் வீதி
புதிய காத்தான்குடி.

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers