நாம் ஏன் தனித்து தஃவா செய்கின்றோம்?
அன்பின் இஸ்லாமியச் சகோதர சகோதரிகளே!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருல் நம்மனைவர்கள் மீதும் உண்டாவதாக!
மத்ஹபுகளைப் பின்பற்றாமல் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வெளிச்சத்தில் சத்தியப்பிரச்சாரம் செய்துவரும் அமைப்பாகிய தாருல் அதர் அத்தஅவிய்யாவை நோக்கி முன்வைக்கப்படும் கேள்விகளில் ஒன்று ‘நீங்கள் மற்ற தெளஹீத் அமைப்புக்களோடு இணையாமல் தனித்து நின்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வது ஏன்?’ எனும் கேள்வியாகும்.
அன்பின் சகோதரர்களே!
எமது அமைப்பின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள இலங்கையின் காத்தான்குடி எனும் ஊரில் தெளஹீதைப் பிரச்சாரம் செய்யும் பல அமைப்புக்கள் காணப்படுகின்றமை உண்மையானதே! இவ்வூரில் முதன் முதலில் ஏகத்துவத்தைப் (தெளஹீதை) பாதுகாப்பதற்கும் தூதுத்துவத்தை (ஸுன்னாவை)ப் பிரச்சாரம் செய்வதற்கும் உருவாக்கப்பட்ட முதலாவது அமைப்பு காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல்(C.I.G)ஆகும். இவ்வமைப்பு ஒரு காலத்தில் சத்தியக்கொள்கையை யாருக்கும் அஞ்சாமல் மிகவும் துணிச்சலான முறையில் முன்வைத்து அதிவேகமாக வளர்ந்துவந்தது.
கப்ருவணங்கிகளும், மெளலூது வியாபாரிகளும் திணறுமளவிற்கு அவ்வமைப்பின் பிரச்சார முன்னெடுப்பு மிகக் கடுமையாகக் காணப்பட்டது. காத்தான்குடியில் மெளலவி அப்துர்ரஊப் என்பவரால் முன்வைக்கப்பட்ட இந்துமதக் கருத்துக்களால் குழம்பிப்போயுள்ள மக்களுக்கு உடனடியாக தீர்வை வழங்கும் அமைப்பாக இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் அக்காலத்தில் விளங்கியது.
இவ்வாறு இருக்கும் வேளையில் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் போக்கும், முறைமைகளும் மாற்றங்காண ஆரம்பித்தன. அந்நிலையத்தில் பணியாற்றும் (சில) மதீனாப் பல்கலைக்களகப் பட்டதாரிகள் தங்களுக்கு ஜும்ஆப் பிரசங்கம் செய்ய ஊரில் அனுமதி கிடைக்கும் போதெல்லாம் பித்அத்களைச் செய்ய ஆரம்பித்தனர். குறிப்பாக அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவுக்கு முரணாக பித்அத்வாதிகளின் முறைப்படி கூட்டு துஆ, கூட்டு திக்ர் என இன்னபிற ஸலவாத்துக்கள் ஓதி அல்குர்ஆனுக்கும், அஸ்ஸுன்னாவுக்கும் முரணாக ஊரில் நடைபெறும் பித்அத்களுக்கு ஆதரவாக செயற்பட்டது மட்டுமன்றி தவறைக் கண்டிக்க வேண்டிய இடங்களில் கண்டிக்காமல் கைகட்டி மெளனியாகினர். அவர்களின் கண்முன்னாலேயே பித்அத்தான பல அனாச்சாரங்கள் நடைபெற்ற போதும் அவர்கள் வாய்திறக்கவில்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் வன்மையாகத் தடைசெய்யப்பட்ட சீதனக் கொடுமையை அவர்களே முன்னின்று அரங்கேற்றினர்.இதற்கு சான்றுகள் ஏராளம்.
மத்ஹபுவாதிகளை பெரும்பான்மையாகக் கொண்ட ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகித்ததோடு ஜம்இய்யதுல் உலமாவே நமது முன்மாதிரி என்றனர். தங்களிடம் வசதியும், வாய்ப்புக்களும் நிறையவே கிடைத்தபோது அல்லாஹ்வின் சத்தியத்தில் விட்டுக் கொடுக்க ஆரம்பித்தனர். இந்நிலை கண்டு மனம் வெதும்பினோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களின் முக்கிய உறுப்பினர்களிடம் எடுத்துக் கூறினோம். அல்லாஹ்வின் கொள்கையை நிலைநாட்ட வந்த அவ்வமைப்பில் இஹ்வானுல் முஸ்லிமீன்களின் ஆதிக்கம் காலூண்றியதே அவ்வமைப்பு இவ்வாறு திசைமாறியதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். தூய முறையில் பணியாற்றிய அவ்வியக்கம் ஏகத்துவத்தில் விட்டுக் கொடுத்து ஊரோடு ஒத்துப் போகவேண்டியதன் அவசியத்தைப் பேச ஆரம்பித்தபோதே கனிசமான கொள்கைச் சகோதரர்கள் அதைவிட்டுப் பிரிந்து ‘இஸ்லாமிக் சென்டர்’ எனும் அமைப்பை நிறுவினர்.
அவ்வமைப்பும் இஸ்லாத்தை உரக்கச்சொல்லவே பல முயற்சிகளை முடுக்கிவிட்டது. பல்வேறு மாநாடுகளை நடாத்தி மக்களுக்குத் தெளிவைக் கொடுப்பதில் முன்னெனியாகத் திகழ்ந்த அதேவேளை தனியாக ஒரு பள்ளிவாயலையும் ஆரம்பித்து மக்களுக்கு சத்தியத்தைப் போதித்தது. இருந்தபோதிலும் ஒரு சிலர்களின் சுயநலத்தால் அவ்வமைப்பின் முன்னெடுப்பு சற்று குறைய ஆரம்பித்தது. சில மார்க்க விடயங்களில் ஊரோடு ஒத்துப் போக அவர்களும் ஆரம்பித்தனர்.
இஸ்லாத்தில் அனுமதியில்லாத மார்க்கத்திற்கு முரணான தலைமைத்துவங்களை அங்கீகரிக்கும் நிலைக்கு அவர்கள் சென்றார்கள். ஒளிவு, மறைவின்றி சத்தியத்தை முன்வைக்காமல் கொள்கையில் வளைந்து கொடுத்தனர். சர்ச்சைக் குறிய சட்டங்களை இப்பள்ளியில் அறவே பேசக்கூடாது என்று தடைவிதித்தனர். இஸ்லாத்தில் ஏற்படும் அனைத்து சர்ச்சைகளுக்கும் அல்குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் தெளிவான தீர்வுண்டு என அவர்களுக்கு எடுத்துக் கூற நாம் பல்வேறு தடவைகள் முயற்சி செய்த போதும் அவர்கள் தங்களது நிலைப்பாட்டில் விடாப்பிடியாகவே இருந்தனர். உடனே அவ்வமைப்பிலிருந்தும் நாம் வெளியேறினோம்.
அதன் பிற்பாடு அவ்வேளையில் எம்மோடு இருந்த சுமார் இருபத்தி இரண்டு சகோதரர்களும், உலமாக்களும் பல்வேறு அமர்வுகளை நடாத்தி தீர்க்கமான ஒரு முடிவிற்கு வந்தோம். அதாவது எமக்கு சத்தியக்கொள்கை தான் அதிமுக்கியமானது. சத்தியத்தைப் பிரச்சாரம் செய்ய வருபவர்கள் இடைநடுவினிலே கொள்கையை விட்டுத் தடம்புரளுவதற்கு என்ன காரணம் என மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து (அவ்வாறான நிலைமைகளை தவிர்ப்பதற்கு) பின்வரும் முடிவுகளை எடுத்ததோம்.
- இஸ்லாத்தின் சட்டமூலாதாரம் அல்குர்ஆனும், அஸ்ஸுன்னா ஆகியவை மட்டுமே. நமது முன்னால் தெளஹீத் வாதிகள் கூறுவது போன்று இஜ்மா,கியாஸ், ஊர்த்தலைமை, ஸஹாபாக்களின் செயல்கள்,ஸஊதி முப்திகளின் தீர்ப்புக்கள் ஆகிய எதுவாக இருந்தாலும் (குர் ஆன் ஸுன்னாவிற்கு முரணாகும் போது) அற்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் எச்சம்பந்தமுமில்லை.
- மார்க்க விடயத்தில் யாருக்காகவும், எச்சந்தர்ப்பத்திலும் அறவே விட்டுக்கொடுப்பதில்லை. சத்தியத்தைச் சொல்ல ஒரே ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் இஸ்லாத்தில் உள்ளதை உள்ளபடியே மக்களுக்கு எடுத்துக் கூறுதல் வேண்டும்.
- மார்க்க விடயத்தில் ஜம்இய்யதுல் உலமாவோடு சமரசம் செய்ய முடியாது! ஏனெனில் அக்கூட்டமைப்பில் உள்ள அதிகமானவர்கள் ஏகத்துவத்தில் உறுதியற்றவர்களாகவும், பித்அத்களை ஆதரிப்பவர்களாகவுமே காணப்படுகின்றனர். அதிகமான பொதுமக்களும் இக்கூட்டமைப்பில் பூரண திருப்தி காணவில்லை. இவர்கள் எந்தெவொரு ஆக்க பூர்வமான நபிவழியையும் இதுவரை மக்களுக்கு வலியுருத்திப் பிரச்சாரம் செய்தது கிடையாது மேலும் இவர்கள் பித்அத்கள் என்று பத்வா வழங்கிய பல அனாச்சாரங்கள் பள்ளிவாயல்களில் தினந்தோரும் அரங்கேரிவருகின்ற போதும் இவர்கள் மௌனியாகவே இருக்கின்றனர். இவை போன்ற அதிகமான காரணிகளால் அதனோடு நாம் சேர்வதில்லை.
- இதுவரை எமதூரில் காணப்பட்ட தெளஹீத் அமைப்புக்கள் சீதனம் போன்ற சமூகக்கொடுமைகளை கண்டிக்காமல் இருந்த நிலைப்பாடு மிகமிகத் தவறானது என்றும், இனிமேல் எந்த சீதனத் திருமணங்களிலும் கலந்து கொள்வதில்லை, அத்திருமணங்களை பகிஷ்கரிப்பது.
மேற்படி முடிவுகளை முன்னிறுத்தியே அல்லாஹ்வின் பேரருளால் ‘தாருல் அதர் அத்தஅவிய்யா’ தோற்றம் பெற்றது. ஆரம்பத்தில் ஒரு வாடகைக் கட்டடத்திலேயே இயங்கிவந்தோம். எதிர்ப்புக்கள் மாத்திரம் அலைகளைப் போல் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தன. எமது சகோதரர்கள் மிரட்டப்பட்டணர். இம்சிக்கப்பட்டனர். நாம் பிரச்சாரம் செய்துவந்த அந்த இடத்தை இழந்தோம்.
சர்வதேசப் பிறையை நாம் நூற்றுக்கு நூறு வீதம் சரிகாணக் கூடியவர்கள்.(இது பற்றிய விரிவுரைகளை எமது தளத்தில் பார்க்கலாம்)திடலில் சர்வதேசப்பிறையை நாம் தொழச் சென்றதால் அடித்துத் துன்புறுத்தப்பட்டோம். சில கொள்கைச் சகோதரர்களின் மனைவி, குழந்தைகள், உறவினர்களுக்கு எதிரிகளால் மிரட்டலும், கொலை அச்சுருத்தல்களும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டன. எமது சகோதரர்களின் சுய வாழ்வும் பாதிக்கப்பட்டது.அப்போதுதான் சத்தியத்தை அதன் தூயவடிவில் பிரச்சாரம் செய்தால் சோதனைகள் இப்படித்தான் வரும் எனும் பாடத்தைக் களத்தில் புரிந்துகொண்டோம். எதிர்ப்புக்களைச் சந்திக்காமல் ஒருகாலமும் சத்தியத்தை அல்லாஹ்வின் பூமியில் நிலைநாட்ட முடியாது எனும் விடயத்தை மிகத் தெளிவாகப்புரிந்து கொண்டோம்.
அதன்பிறகு சொந்தமான ஒரு இடத்தை வாங்கி தஃவா செய்வோம் எனும் நோக்கில் மக்களிடம் பணம் வசூலிக்க இறங்கினோம். ஏனெனில் மற்றய தெளஹீத் அமைப்புக்களைப் போல் எமக்கு அரபுநாடுகளிலிருந்து பணம் வருவது கிடையாது. அல்லாஹ்வின் உதவிலால் பல லட்சங்களை வசூலித்து புதிய காத்தான்குடி கப்பல் ஆலிம் வீதியில் ஒரு காணியை வாங்கினோம்.அங்கிருந்தே எமது தீவிரப்பிரச்சாரம் ஆரம்பித்தது.
அதிகமான இளைஞர்களும், யுவதிகளும் இவ்வமைப்பில் இணைந்து இஸ்லாமியப்பணியாற்றத் தொடங்கினர். திட்டமிட்டு எமக்கொதிரான அத்தனை சதிமுயற்சிகளை முன்னால் தெளஹீத்வாதிகளில் சிலர் கூட மேற்கொண்டனர். நாம் ஒரு ஸுன்னாவை அமுல்படுத்தத் தயாரானதற்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கும் செல்லவேண்டியும் வந்தது. தொடர்ந்தோம். எமது பிரச்சாரப்பணிகளை முடுக்கி விட்டோம்.விண்திரையில் (PROJECTOR) மூலம் இஸ்லாத்தின் அடிப்படை தெரியாத மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சத்தியத்தை எடுத்துச்சென்றோம்.அல்ஹம்துலில்லாஹ்.
மக்கள் பெருந்திரளாக வரத்தொடங்கினர். பல்வேறு தலைப்புக்களில் மாநாடுகளை நடாத்தினோம். எமது பிரச்சாரம் விரிந்தது. தனியாக பெண்களுக்கொன்று அல்குர்ஆன் விரிவுரை வகுப்பு, ஹதீஸ் வகுப்பு, அகீதா வகுப்பு என பல்வேறு தொடர்களை நடாத்தி பெண்பிரச்சாரகர்களை உருவாக்கினோம். படங்களிலும், பாடல்களிலும் மூழ்கித்திரிந்த கனிசமான இளைஞர்களும், யுவதிகளும் திருமறைக்குர்ஆனைக் கையிலெடுத்து சத்தியப்பிரச்சாரத்தில் ஈடுபடத்தொடங்கினர். அல்ஹம்துலில்லாஹ்.
அவ்வப்போது சமூகத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களில் போதும் உடனடியாகக் களத்தில் இறங்கி சமூகப்பணியாற்றும் ஒரு இளைஞர்கூட்டத்தை எமது அமைப்பு அல்லாஹ்வின் பேரருளால் உருவாக்கியுள்ளது.இப்படி பல்வேறு சமுதாய மேம்பாடுகளையும் எம்மால் முடிந்தளவுக்கு ஆற்றிவருகின்றோம்.அல்ஹம்துலில்லாஹ்.
நாம் சத்தியக்கொள்கையை எமது ஊரான காத்தான்குடியோடு சுருக்கிக்கொள்ளவில்லை.மாறாக எமது நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும் விஸ்தரித்துள்ளோம். சில பகுதிகளில் எமது துணைஅமைப்புக்களையும் கூட உருவாக்கி சத்தியப்பிரச்சாரம் செய்துவருகின்றோம். ஏகத்துவத்தையும், தூதுத்துவத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இணையதளத்தின் ஊடாகவும் தஃவா செய்துவருகின்றோம்.
சில ஊர்களில் மார்க்கத்திற்கு முரணான செய்திகளை தப்லீக் இயக்கம், ஜமாஅதே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற இயக்கங்கள் முன்வைக்கின்றபோது ‘மார்க்க விழிப்புணர்வுக் கருத்தரங்குக்ளினூடாக அவற்றை குர் ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு தெளிவுபடுத்தி வருகின்றோம். மேலும் வழிகெட்ட காபிர்களான ஷீஆக்கள், காதியானிகள், கப்ருவணங்கிகள் போன்ற இயக்கங்கள் பற்றிய விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றோம். இன்னும் அதிக பணிகளைக் கூறமுடியும் சுருக்கிக்கொள்கின்றோம்.
அன்பின் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!
இத்துனை சீரிய பணிகளைச் செய்கின்ற நீங்கள் ஏன் மற்ற அமைப்புக்களோடு சேரக்கூடாது? ஒற்றுமை முக்கியமல்லவா? எனும் நியாயபூர்வமான கேள்விகள் எழலாம்.
நாம் அவர்களோடு இணைந்து இஸ்லாமியப்பிரச்சாரம் செய்வதாக இருந்தால் பின்வரும் நியாயபூர்வமான, யதார்த்தமான, மறுக்க முடியாத, மார்க்க ரீதியான நிபந்தனைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டால் நாம் அவர்களோடு இணையத்தயார்!!!
அந்நிபந்தனைகள் பின்வருமாறு…
- ‘எங்களது சட்ட மூலாதாரம் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா மட்டுமே!இஜ்மாவோ,கியாஸோ, ஸஊதி முப்திகளின் கூற்றுக்களோ,இல்லை’ என அவர்கள் தெளிவாக அறிக்கை மூலம் அறிவித்தால் இன்ஷாஅல்லாஹ் அவர்களோடு இணைந்து கொள்ள நாம் தயார்!
- இஸ்லாம் என்று வந்தால் யாருக்கும் அஞ்சாமல் நெஞ்சுருதியோடு களத்தில் பாடுபடத்தயார் என அவர்கள் தெளிவாக அறிக்கை மூலம் அறிவித்தால் அவர்களோடு இணைந்து கொள்ள நாம் தயார்!
- ஸுன்னாக்களை சில்லரை என்று கருதாமல் அத்தனை நபிவழியையும் மக்களிடம் ஆணித்தரமாக எடுத்துக் கூறுவோம் என அவர்கள் உறுதி மொழி வழங்கினால் இன்ஷாஅல்லாஹ் அவர்களோடு இணைந்து கொள்ள நாம் தயார்!
- சத்தியமென்று ஒரு விடயம் ஆதாரபூர்வமாக நிறூபணமானால் எந்த உலமாக்கள் அமைப்பு அதற்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் தனித்து நின்று அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டுவோம் என அவர்கள் சான்றுபகர்ந்தால் இன்ஷாஅல்லாஹ் அவர்களோடு இணைந்து கொள்ள நாம் தயார்!
- பித்அத்தான காரியங்களை(நபிகள் நாயகம்(ஸல்)அவர்களால் காட்டித்தரப்படாத நூதன அனுஷ்டானம்)ஊர் தலைமைகளில் யார் செய்தாலும் தயவு தாட்சன்யமின்றி கண்டிப்போம் என அவர்கள் உறுதி மொழி வழங்கினால் இன்ஷாஅல்லாஹ் அவர்களோடு இணைந்து கொள்ள நாம் தயார்!
- திருமணத்தின் போது மணமகளிடத்தில் (சீதனமாக) வீடு கொள்ளையடிக்கப்பட்டால் அத்திருமணங்களை நாங்கள் ஒரு காலமும் நடாத்தி வைக்கமாட்டோம் என அவர்கள் உறுதி மொழி வழங்கினால் இன்ஷாஅல்லாஹ் அவர்களோடு இணைந்து கொள்ள நாம் தயார்!
- நீதிக்கே முதலிடம்! எந்தப் பெரிய பள்ளிவாயல்கள், நிறுவனங்கள், ஜம்இய்யாக்கள் மக்களுக்கு எவ்விதத்தில் அநீதி இழைத்தாலும் அந்த அநியாயத்தை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம். மாறாக அதற்கெதிரான தீவிரப்பிரச்சாரத்தில் இறங்குவோம் என அவர்கள் உறுதி மொழி வழங்கினால் இன்ஷாஅல்லாஹ் அவர்களோடு இணைந்து கொள்ள நாம் தயார்!
- சத்தியத்தைப் புறக்கணிக்கும் ஜம்இய்யதுல் உலமா அமைப்புக்களை அடியோடு நிராகரிப்போம் என அவர்கள் உறுதி மொழி வழங்கினால் இன்ஷாஅல்லாஹ் அவர்களோடு இணைந்து கொள்ள நாம் தயார்!
- இஸ்லாத்திற்கு முழுமையாக மாற்றமாக அமைந்துள்ள இன்றைய அரசியல் சாக்கடையில் மார்க்க அறிஞர்களாகிய நாங்கள் ஒரு காலமும் இறங்கமாட்டோம் என அவர்கள் உறுதி மொழி வழங்கினால் இன்ஷாஅல்லாஹ் அவர்களோடு இணைந்து கொள்ள நாம் தயார்!
- சத்தியமென்று வந்தால் விட்டுக்கொடுக்கவோ, பூஸிமெழுகவோ, காலம் தாழ்த்தவோ இடமளிக்கமாட்டோம் என அவர்கள் உறுதி மொழி வழங்கினால் இன்ஷாஅல்லாஹ் அவர்களோடு இணைந்து கொள்ள நாம் தயார்!
- கொள்கைப் பிரச்சாரத்தோடு சேர்த்து சமுதாயப்பணிகளையும் செய்ய எப்போதும் பின்னிற்க மாட்டோம் என அவர்கள் உறுதி மொழி வழங்கினால் இன்ஷாஅல்லாஹ் அவர்களோடு இணைந்து கொள்ள நாம் தயார்!
- தெளஹீத்வாதிகள் யாராக இருந்தாலும் தவறு என்று வந்தால் எடுத்துக்கூற தயங்கமாட்டோம் என அவர்கள் உறுதி மொழி வழங்கினால் இன்ஷாஅல்லாஹ் அவர்களோடு இணைந்து கொள்ள நாம் தயார்!
அன்பின் சகோதர, சகோதரிகளே!
நீங்கள் குழம்பிப்போகவேண்டிய தேவை அறவே இல்லை. நாம் சொல்லும் நிபந்தனைகள் மார்க்க வரையறைகளுக்கு உட்பட்டவையே! வெறும் மனோ இச்சைகளுக்கு இசைவாக போடப்பட்டவையல்ல. நன்றாக சிந்தித்தால் நமது பிரச்சாரான அமைப்பான ‘தாருல் அதர் அத்தஅவிய்யா’ ஏன் மற்ற தெளஹீத் அமைப்புக்களோடு இணைந்துகொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்! அதாவது இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்குச் சொந்தமானது. யாருடைய திருப்திக்கும் பணியாற்ற முடியாது. நாம் மிகத்தெளிவாகக் கூறுகின்றோம்.’ஒற்றுமை ஒற்றுமை எனக்கூறிக்கொண்டு சுத்தமான அநியாயங்களுக்கு அடைக்களம் வழங்க முடியாது.
பெரும்பான்மையில் ஆதரவு இல்லாமல் நாம் எப்படி வாழ்வது?! என்று அவர்கள் சிந்திப்பதனாலேயே அசத்தியவாதிகளின் ஆபத்தான அட்டூளியங்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம். மேற்குறித்த நியாயமான நிபந்தனைகளை அவர்கள் அங்கீகரித்தால் அவர்களோடு கைகோர்த்துக்கொள்ள இப்போது, ஏன் எப்போதும் அல்லாஹ்வின் உதவியினால் நாம் தயார்!!
அவர்கள்….???
பொருத்திருந்து பார்ப்போம்.
இன்ஷாஅல்லாஹ்.
Related Reading:
