சத்தியத்தின் தீர்வை நோக்கி (உரையாடல்)
தப்லீக்வாதி: அஸ்ஸலாமுஅலைக்கும்
தவ்ஹீத்வாதி: வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி
வபரகாதுஹு.
தப்லீக்வாதி: எப்படி சுகம்?
தவ்ஹீத்வாதி: அல்லாஹ்வின் அருளால் நல்ல சுகம்.நீங்கள் எப்படி?
தப்லீக்வாதி: நானும் சுகம். நீங்கள் எங்கிருந்து
வருகீன்றீர்கள்?
தவ்ஹீத்வாதி: நான் ஏகத்துவமாநாடு ஒன்றிக்குச் சென்று விட்டு வருகின்றேன்.
தப்லீக்வாதி: ஏகத்துவ மாநாடா? அவ்வாரெல்லாம் மாநாடு நடாத்துபவர்கள் இஸ்லாமிய மத்ஹபுகளை அங்கீகரிக்காதவர்களே!!
தவ்ஹீத்வாதி: ஆமாம்இ நானும் மத்ஹபுகளை அங்கீகரிப்பதில்லை.
தப்லீக்வாதி: மத்ஹபுகளை அங்கீகரிக்காமல் விட்டால் ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியுமா?
தவ்ஹீத்வாதி: நிச்சயமாக இருக்கமுடியும். மத்ஹபுகளை நம்புகின்ற ஒருவர்தான் சரியான முஸ்லிமாக இருக்க முடியாது.
தப்லீக்வாதி: ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?
தவ்ஹீத்வாதி: மத்ஹபுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எள்முனையளவும் சம்பந்தமில்லை.
தப்லீக்வாதி: சுப்ஹானல்லாஹ். அப்படியென்றால் மத்ஹபுகளை போதிக்கும் உலமாக்கள் வழிகேடர்களா?
தவ்ஹீத்வாதி: நிச்சயமாக தங்களது வயிற்றுப்பிழைப்புக்காகவே மத்ஹபுகளை மக்களிடம் அறிமுகப்படுத்தினார்கள்.
தப்லீக்வாதி: மத்ஹபுகளை நிராகரித்தால் நீங்கள் யாரைப்பின்பற்றுவது?
தவ்ஹீத்வாதி: அல்லாஹுஅக்பர். நாங்கள் பின்பற்றுவது அல்லாஹ்வின் தூதரையும் திருமறைக் குர்ஆனையுமே!
தப்லீக்வாதி: அல்குர்ஆனையும்இ ஹதீஸையும் இமாம்கள் இல்லாமல் விளங்கமுடியுமா?
தவ்ஹீத்வாதி: சகோதரரே! நீங்கள் முதலில் மத்ஹபு என்றால் என்ன என்று புரிந்திருக்கின்றீர்கள்?
தப்லீக்வாதி: ‘மத்ஹபு என்றால் இமாம்களின் கருத்துக்கள்’ இப்படித்தான் தப்லீக் ஜமாஅத்தில் சொல்லித்தந்துள்ளார்கள்.
தவ்ஹீத்வாதி: உங்களைச் சுத்தமாக ஏமாற்றி இருக்கின்றார்கள்
தப்லீக்வாதி: எப்படி?!!
தவ்ஹீத்வாதி: மத்ஹபுகளுக்கும்இஇமாம்களுக்கும் எச்சம்பந்தமும் கிடையாது. மத்ஹபுகளை உண்டாக்கியவர்கள் மிக அண்மைக்காலத்தில் வாழ்ந்த எம்மைப்போன்ற மனிதர்களே!
தப்லீக்வாதி: நீங்கள் சொல்வதை நம்பமுடியுமா?
தவ்ஹீத்வாதி: ஏன் நம்பமுடியாது? வரலாற்று நூற்களை படித்துப்பார்த்தால் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
தப்லீக்வாதி: அப்படியானால் நாங்கள் பின்பற்றும் ஷாபி மத்ஹபிற்கும்இ இமாம் ஷாபி(ரஹ்) அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்றா கூறுகின்றீர்கள்?
தவ்ஹீத்வாதி: ஆமாம்! உங்களை உங்கள் உலமாக்கள் ஏமாற்றியிருக்கின்றார்கள். அவர்களிடம் சென்று நான் கேட்கும் சில கேள்விகளைத் தொடுத்துப்பாருங்கள். உண்மையைப் புரிந்து கொள்வீர்கள்.
தப்லீக்வாதி: என்ன கேள்விகள்??
தவ்ஹீத்வாதி: அதாவது இமாம் ஷாபி(ரஹ்) அவர்களுக்கு சுமார் நூற்றிப் பதினான்கு நூற்கள் உள்ளன. அவற்றில் எந்த நூலில் தன்னைப் பின்பற்றுமாறு இமாமவர்கள் கூறியிருக்கின்றார்கள்? இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் பின்பற்றிய மத்ஹபின் பெயர் என்ன?
தப்லீக்வாதி: சரி நான் கேட்டுவிட்டுச் சந்திக்க வருகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தவ்ஹீத்வாதி: வஅலைக்குமுஸ்ஸலாம்(வரஹ்)
முதலாம் சந்திப்பு நிறைவுற்றது.
சந்திப்புகள் தொடரும்….
