Skip to content

இஸ்லாத்திற்காக வாழ்ந்த‌ இமாம்கள்

June 19, 2008

இணையத்திலிருந்து அதரி…

இஸ்லாம் என்பது உலக சமுதாயத்தில் உன்னதமான ஒரு மாற்றத்தை உண்டு பண்னி வழிகேட்டின் உச்சகட்டத்தில் இருந்த மானிடப்பிறவிகளை மனிதப்புனிதர்களாக மாற்றியமைத்த ஒரு கொள்கையே இஸ்லாம். இந்த நாகரீகத்தை அழித்தெழிப்பதற்கு இஸ்லாத்தின் எதிரிகள் நபிகள்(ஸல்)அவர்கள் பெயரில் இட்டுக்கட்டிய போதே ஹதீதுக்கலை தோற்றம்பெற்றது என்ற வரலாற்றை நாம் அறிந்துவைத்திருக்கின்றோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாத்திற்கெதிரான மனிதப்போலிகளை சமூதாய‌த்தில் அடையாளம் காட்டுவதற்கு அல்லாஹுத்தஆலா அறிஞர் பெருமக்களை உருவாக்கினான்.

அவர்கள் நபிகளார்(ஸல்) அவர்கள் கூறிய ஸஹீஹான பொன்மொழிகளை வடித்தெடுப்பதற்கு நெடுந்தூரப்பிரயாணம் மேற்கொண்டார்கள். பல இன்னல்களை இன்புடன் சந்தித்தார்கள். எண்னற்ற நூற்களை பின்வரும் சமூதாயத்திற்காக விட்டுச்சென்றார்கள். அந்நூற்களின் மூலமே சமூதாயத்தில் நிலவுகின்ற போலிச்செய்திகளை அடையாளம் காணுகின்றோம். மத்ஹபுகளின் பித்தாலாட்டங்களை எடைபோடுகின்றோம். ஸூபித்துவத்தின் சாயலையும் அத்வைதத்தின் முகத்திரையையும் அம்பலப்படுத்துகின்றோம். ஆக ஒட்டு மொத்தத்தில் தீமைகளைக்களைவதற்குரிய அளவு கோலாகப் பயன்படுத்துகிறோம்.

இவ்வாறான அளவுகோலினை நாம் பயன்படுத்துவதால் ஹதீதுக்கலையில் நினைத்தபடி யாரும் கைவைத்துவிட முடியாது. நினைத்த‌தையெல்லாம் ந‌பிக‌ளார் கூறினார்க‌ள் என்று இட்டுக்க‌ட்டிவிட‌ முடியாது. அல்ல‌து த‌ப்லீக் ஜ‌மாஅத்தில் சொல்ல‌ப்ப‌டுவது போல‌ ‘அங்கு சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து இங்கு சொல்ல‌ப்ப‌டுகின்றது’ என்று சொல்ல‌‌ முடியாது.

என‌வே தான் இமாம்க‌ள் இந்த‌ உய‌ர்த‌ர‌மான‌ ப‌ணிக‌ளை மேற்கொண்டார்க‌ள். இமாம் புஹாரி(ர‌ஹ்) அவ‌ர்க‌ள் த‌ன‌து நூலான ‌’ஸ‌ஹீஹுல் புஹாரி’ யைத்தொகுப்ப‌த‌ற்கு முன்னால் இர‌ண்டு ல‌ட்ச‌ம் ப‌ல‌ஹீன‌மான‌ செய்திக‌ளை ம‌ன‌ன‌மிட்டார்க‌ள். பின்ன‌ர் த‌ன‌து த‌ந்தையிட‌ம் அவைக‌ளை ஒப்புவிக்க‌ அன்னார் அவ‌ர்க‌ள் அவை அனைத்தும் ப‌ல‌ஹீன‌மான‌வை என‌க்கூற‌ மீன்டும் இமாம் அவ‌ர்க‌ள் இர‌ண்டு ல‌ட்ச‌ம் ஸ‌ஹீஹான‌ ஹ‌தீதுக‌ளை ம‌னன‌மிட்டார்க‌ள் என‌ அவ‌ர்க‌ள‌து வ‌ர‌லாறு கூறுகின்ற‌து.

ஆனால் இன்ற‌ய‌ ச‌முதாய‌த்துத் த‌லைவ‌ர்க‌ள் என‌ப் ப‌றைசாற்றும் சில‌ லெப்பைமார்க‌ள், மெள‌ழ‌விமார்க‌ள் ப‌ள்ளி பேஷ்இமாம்க‌ள் ஆகியோரின் நிலையோ மிக‌வும் க‌வ‌லைக்கிட‌மாக‌ உள்ள‌து. இத்துனை தியாக‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌ இமாம்க‌ளின் அர்ப்ப‌ணிப்புக்க‌ளையும் அறிவுத்தேட‌லையும் அவ‌ர்க‌ள‌து எச்ச‌ரிக்கைக‌ளையும் புற‌க்க‌ணித்துவிட்டு அவ‌ர்க‌ளின் பெய‌ரால் வ‌யிற்றுப்பிழைப்புக்காக‌ ம‌த்ஹ‌புக‌ளை உருவாக்கிக்கொண்டு ந‌பியின் பெய‌ரால் பொய்யான‌ முறையில் ஹ‌தீதுக‌ளை இட்டுக்க‌ட்டிக்கொண்டும் எம‌து சமூக‌த்தில் உலாவ‌ரும் போலிக‌ள் அல்லாஹ்வை அதிக‌ம் அஞ்சிக்கொள்ள‌ட்டும்.

ஷாபி மத்ஹப் என்ற பெயரால் இமாம் ஷாபி(ரஹ்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத إعانة ,عمدة போன்ற நூற்களை அறபுக்கலாசாலையில் பாடத்திட்டத்தில் புகுத்தி மாணவர்களுக்குத் தவறான வழியினைக்காட்டும் தலைமைகள் இத‌னை ஒரு கணம் சிந்திக்கட்டும். அல்லது வெளிநாட்டிற்குச் சென்று ஹன்பலி மத்ஹபினைப்படித்துக்கொண்டு வந்து மக்களுக்கு சத்தியத்தை உடைத்துச்சொல்ல பின் தயங்குவதோடு பெற்றோருக்கு முன்னால் பெட்டிப்பாம்பாய் மாறி அவர்களது கூற்றுக்கிணங்கி இஸ்லாம் தடுத்த சீதனத்தையும் வாங்கிக்கொண்டு சமுதாயத்தில் நடமாடும் சில மதனிமார்களும் ரியாதிமார்களும் ஒரு கணம் இஸ்லாத்திற்காய் சேவை புரிந்த அறிஞர்பெருமக்களின் தியாகத்தையும் இஸ்லாத்தை முழு உலகிலும் பரப்ப வேண்டும் என்ற அவர்களது தூர நோக்கைப் பற்றியும் சிந்திக்கட்டும்!

அந்த இமாம்களோ இவர்களைப் போலல்ல. தனது உயிரையும் இஸ்லாத்திற்காய் தியாகம் செய்ய முன் வந்தார்கள். சத்தியத்திற்கு எதிராய் நின்ற அனைத்துச் சவால்களையும் முறியடித்தார்கள் இஸ்லாத்தில் ஊருடுவிய போலிகளை இனங் காட்டினார்கள் அவர்களில் ஒருவர்தான் இமாம் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) ‘ரிபாயிய்யா’ என்ற தரீக்காவுக்கெதிரான போராட்டத்தினை மேற்கொண்ட இமாமவர்கள் இறுதியில் சிறை வைக்கப்பட்டு அங்கேயே மரண‌மெய்தினார்கள் . அதே போன்றுதான் இமாம் அஹ்மதிப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் அன்னார்
அல்குர்ஆனிற்காக பல காலம் சிறையில் இருந்தார்கள். இப்படி எத்தனையோ இமாம்களின் வரலாறு உண்டு தியாகங்கள் செய்யாமல் கஷ்டப்படாமல் ச‌த்திய தீனை வளர்க்கமுடியாது என்பதனை அவர்கள் நன்குணர்ந்திருந்தனர்.

இன்றய பிரச்சாரகர்களிடத்தில் அந்த தைரியமும் தற்துணிச்சலும் இல்லாமையே சத்தியப்பிரச்சாரத்திற்கு அவர்கள் பின்னிற்பதற்கு முக்கிய காரணம் என்றால் மிகையில்லை.

அல்லாஹ் போதுமானவன்.

EMAIL THIS POST>>

No comments yet

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers