Skip to content

சத்தியத்தை மறைப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள்???

June 13, 2008

இணையத்திலிருந்து அதரி….

அன்பின் சகோதர சகோதரிகளே!

அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூய வடிவில் எடுத்துச்சொல்லும் வேளையில் ‘இதைச் சொன்னால் சமூகத்தின் ஒற்றுமை குலைந்து விடும்இசமூகக் கட்டமைப்பு வலுவிழந்து விடும்இவீண் பிரச்சனைகளும் பிளவுகளும் ஏற்படும்’ எனப்பிரச்சாரம் செய்யும் சில இயக்கங்களின் வாதங்களையே இக்கட்டுரை விபரித்து விடையளிக்கின்றது.

எமது சமூகத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள உண்மைகளை எடுத்துக்கூறும் வேளைகளில் நாம் சமூகத்திற்கு சத்தியத்தைப்பிரச்சாரம் செய்வதாகக்கூறி சமூகத்தைக் கூறுபோடுவதாக சிலர்கள் பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மையிலேயே அல்லாஹ்வின் மார்க்கத்தில் எந்தக்குழப்பமோ தடுமாற்றங்களோ கிடையாது.

அல்லாஹ்வின் தீனை எடுத்துச்சொல்ல காலக்கொடுவும் இம்மார்க்கத்தில் கிடையாது. உண்மையை உரக்கச்சொல்வதற்கே அனுமதி உண்டே தவிர உண்மைகளை மறைப்பதற்கல்ல. ஏனெனில் இது அல்லாஹ்வின் மார்க்கம். அம்மார்க்கத்தை ஒருவர் எச்சந்தர்ப்பத்திலும் கைவிட்டு விட்டு மேற்கத்தய சாயலுக்கு அடிமைப்படவேண்டிய எத்தேவையும் கிடையாது.

மக்களுக்கு ஏற்பவே இம்மார்க்கத்தை இறைவன் வடிவமைத்துள்ளான். அதிலே விட்டுக்கொடுக்க இவ்வுலகில் யாருக்கும் அதிகாரம் கிடையாது. சத்தியக்கொள்கையென‌ எமக்கு ஒரு விடயம் தெளிவானால் அவற்றை மறைப்பது என்பது சுத்தமான நயவஞ்சகத்தனமாகும்.

அருள்ம‌றையில் அல்லாஹுத்த‌ஆலா ச‌த்திய‌த்தை எப்ப‌டிப்பிர‌ச்சார‌ம் செய்ய‌ வேண்டுமென்ப‌தை பின்வ‌ரும் வ‌ச‌ன‌த்தின் ஊடாக‌ விள‌க்குவ‌தைக் காண‌லாம்.

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ

(ந‌பியே)உம‌க்கு ஏவ‌ப்ப‌ட்ட‌தை த‌ய‌வு தாட்ச‌ய‌மின்றி எடுத்துரைப்பீராக‌!இறை நிராக‌ரிப்பாள‌ர்க‌ளை வெறுப்பீராக‌!’(15:94)

ச‌த‌அ’ எனும் வேர்ச்சொல்லிலிருந்தே ‘ப‌ஸ்த‌ஃ’ எனும் வார்த்தை பிற‌ந்த‌தாகும். ‘ச‌தஅ’ என்றால் ‘போட்டு உடைத்தான்’ என்று அர்த்த‌மாகும். அதாவ‌து ச‌த்திய‌த்தை விளைவையெல்லாம் க‌ருத்தில் கொள்ளாம‌ல் போட்டு உடைப்பீராக‌! என்ப‌தே இவ்வ‌ச‌ன‌த்தில் இறைவ‌ன் கூற‌வ‌ருகின்றான். இவ்வ‌ச‌ன‌த்தை தூக்கிக் க‌டாசி விட்டு சூழ‌லுக்கேற்ப‌வே த‌ஃவா (பிர‌ச்சார‌ம்) செய்ய‌ வேண்டுமென‌ சில‌ அமைப்புக்க‌ளும் இய‌க்க‌ங்க‌ளும் பேசுவ‌து திரும‌றைக்குர்ஆனுக்கு முற்றிலும் முர‌ணான‌தாகும்.

மார்க்க‌த்தில் ஞான‌மில்லாத‌ திரும‌றைக்குர்ஆனில் ஆழ்ந்த‌ புல‌மையில்லாத சில‌ அமீர்மார்க‌ளும் உஸ்தாதுமார்க‌ளும் ‘ஒற்றுமையெனும் க‌யிற்றைப் ப‌ற்றிப்பிடித்துக்கொள்ளுங்க‌ள்’ என்று ஒரு புதிய‌ அல்குர்ஆனில் இல்லாத‌ வ‌ச‌ன‌த்தை மேற்கோள்காட்டி த‌ங்க‌ள‌து முஅஸ்க‌ர்க‌ளிலும் இஜ்திமாக்க‌ளிலும் மாநாடுக‌ளிலும் இளைஞ‌ர்க‌ளை ச‌த்திய‌த்தை விட்டுக்கொடுத்து ஊரோடு ஒத்துப்போக‌த் தூண்டிவ‌ருகின்ற‌ன‌ர்.

திரும‌றையில் (03:103)ம் வ‌ச‌ன‌த்தில் அல்லாஹ் இப்ப‌டிக்கூறுகின்றான்:

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا’

அல்லாஹ்வின் க‌யிற்றை அனைவ‌ரும் சேர்ந்து ப‌ற்றிப்பிடியுங்க‌ள்! பிரிந்து விடாதீர்க‌ள்!’

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் கயிறு என்பது அல்லாஹ் இறக்கிய வஹீயையே (குர்ஆன், ஹதீஸ்) குறிக்கிறது. காலத்திற்கு ஏற்றால் போல் மார்க்கத்தை வளைத்து பரஸ்பரமெனும் பெயரில் சத்தியக்கொள்கையில் விட்டுக்கொடுக்கலாம் என்ற நிலைப்பாடானது இஸ்லாமிய மார்க்கத்தில் அறவே கூறப்படாத நிலைபாடாகும்.இஸ்லாமிய மார்க்கத்தின் உட்பொதிவுகளைச்சரிவரப்புரிந்து கொள்ளாத அறிவிலிகளே மேற்கூறிய வாதத்தை தூக்கிப்பிடித்துவருகின்றனர்.

முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு காண்போம் நாங்கள் அழைப்பாளர்களே தவிர தீர்ப்பாளர்கலல்ல.சட்டங்களில் தாராளத்தன்மையை ஏற்படுத்துவோம் கருத்து வேறுபாடு ரஹ்மத்(அருள்)போன்ற ஆதரமற்றசொன்ன நபர் யாரென்று தெரியாத உள‌ரல்களை ஆதாரங்களாக முன்னிருத்தியே சத்தியத்தை மறைப்பவர்கள் தங்களது மனங்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

சத்தியத்தை மறைப்பவர்கள் எப்படி இஸ்லாத்தைப்பிரச்சாரம் செய்ய வேண்டுமென்ற பாடத்தை துள்ளியமாக அறிந்துகொள்ள ஆசைப்பட்டால் அல்லாஹ்வின் வேதமாகிய திருமறைக்குர்ஆனைப் படிக்க வேண்டும்.

சத்தியத்தை மறைப்பவர்கள் இன்னுமொன்றையும் தங்களது வாதத்திற்கு வலுச்சேர்த்துவருகின்றனர். அதாவது சத்தியத்தை நாம் உடைத்துச்சொல்வதனால் சமூகப்பிளவுகள் ஏற்படும் எனவே சத்தியத்தை மூடிமறைப்பதால் நாம் சமூகத்திற்கு அளப்பெரிய தொண்டை ஆற்றுகின்றோமென அவர்கள் எண்னுகின்றனர். இவ்வாரான தவறான எண்ன‌மும் அவர்களை அல்லாஹ்வின் கொள்கையைச்சொல்வதற்குத் தடையாக அமைகின்றது.

சத்தியத்தை மறைப்பவர்களுக்கு ஒன்றை மட்டும் கூறிவைக்க விரும்புகின்றோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அகிலத்தாரை ஒன்று திரட்டும் அந்நாளில் நீங்கலெல்லாம் அழைத்து வரப்படுவீர்கள். அல்லாஹ்வின் கொள்கையைத்தெரிந்து கொண்டு மறைத்த பாவிகள் என்று வானவர்களால் அடையாளப்படுத்தப்படும் வேளையிலேயே உலகில் ஏகத்துவவாதிகளை நோக்கி ‘சில்லரைப்பிரச்சனை,சர்ச்சை,முரண்பாடு’ என ஸுன்னாக்களை அவமதித்த விபரீதத்தை நிச்சயம் உணர்ந்துகொள்வீர்கள்.

அல்லாஹ் போதுமானவன்.

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers