Skip to content

அல்லாஹ்வின் கொள்கையை வளர்க்க அணிதிரளுங்கள்!

June 13, 2008

-அழைப்பாள‌ன்

ஏகத்துவப் பிரச்சாரத்தை நாம் மிகத்தீவிரமாக முடிக்கி விட்ட போது பல்வேறு வகையான சவால்களை எதிர்கொண்டோம். ஊருக்குக் கட்டுப்படாதவர்கள் ஜம்இய்யதுல் உலமாவை அங்கீகரிக்காதவர்கள் புதிய கொள்கைவாதிகள் குழப்பவாதிகள் என பல்வேறு அவப்பெயர்களை எமக்குச்சூட்டி எம்மை இகழ்ந்தார்கள்.

அல்லாஹ்வின் பேரருளால் விமர்சனங்களைப் பொருத்துக் கொண்டு சத்தியக்கொள்கையைப் பிரச்சாரம் செய்வதில் பின்நிற்காமல் வீறுநடைபோட்டோம். ‘அல்லாஹ்வின் வேதமும் தூதரின் நம்பகமான வாழ்வுமே எமக்கு வேண்டும் எனவும் பகுத்தறிவிற்கு முற்றிலும் முரணான மத்ஹபுகள் வேண்டாம்’ என்றும் சமுதாயத்தில் அனைத்து மட்டங்களிலும் உரத்துச் சொன்னோம். எதிர்ப்புக்கள் மாத்திரம் அலை போல் வந்தன.

நாம் வளைந்துகொடுக்கவில்லை. எம்மோடு சத்தியத்தைப் பிரச்சாரம் செய்ய வந்த சில மார்க்க அறிஞர்கள் இடைநடுவிலே ஜம்இய்யதுல் உலமாவின் பட்டத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு கொள்கையிலேயே இருந்து திசைமாறிப் போய்விட்டார்கள். நாம் சளைக்கவில்லை. சத்தியக்கொள்கை தான் முக்கியமானது. எமக்குப் பதவிகள் வேண்டாம் எனும் கொள்கையோடு களத்தில் இறங்கினோம். அல்லாஹ்வின் பேரருளால் பல இளைஞர்களும் யுவதிகளும் எம்மோடு சேர்ந்தார்கள். யாருக்கும் அஞ்சாமல் ‘தாருல் அதர் அத்தஅவிய்யா’ எனும் பெயரில் சர்வதேசமட்டத்திற்கு தஃவாவை மேற்கொள்ளும் அளவிற்கு அல்லாஹ் எம்மை வளர்த்தான். அல்ஹ‌ம்துலில்லாஹ்.

நாம் பிர‌ச்சார‌ம் செய்யும் இத்தூய‌ ஏகத்துவ‌க் கொள்கையால் ம‌ட்டுமே இஸ்லாத்தை வாழ‌வைக்க‌ முடியும். த‌னிம‌னித‌க் க‌ருத்துக்க‌ளால் இஸ்லாத்தை ஒருக்காலும் அனைத்து ம‌க்க‌ளிட‌மும் கொண்டு செல்ல‌முடியாது. அல்லாஹ்வின் கொள்கையை ம‌க்க‌ளுக்கு எடுத்துச் சொல்வ‌தில் நாம் ஏன் பின்நிற்க‌ வேண்டும்? அல்லாஹ்வின் உத‌வியும் வெற்றியும் அல்லாஹ்வின் கொள்கையை வாழ‌வைத்தால் நிச்ச‌ய‌ம் எம‌க்கு உண்டு.

நாஸ்தீக‌வாத‌ம், டார்வின் கோட்பாடு, திற‌ந்த‌ பொருளாதார‌க் கொள்கை போன்ற‌ த‌னிம‌னித‌க் க‌ருத்துக்க‌ளை வாசிப்ப‌திலும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு எடுத்துரைப்ப‌திலும் காட்டும் ஆர்வ‌த்தையும் அலாதியான‌ இன்ப‌த்தையும் க‌ல‌ப்ப‌ட‌மே இல்லாத‌ இந்த‌ தெள‌ஹீதில் செலுத்தினால் ந‌ம‌க்கு எவ்வ‌ள‌வு ந‌ன்மை!  ச‌கோத‌ர‌இச‌கோத‌ரிக‌ளே?? சிந்தித்துப்பாருங்க‌ள்!

யாரையும் சார்ந்து நிற்காம‌ல் த‌னியாக‌வே அல்லாஹ்வின் வேத‌த்தையும் ந‌பிக‌ள் நாய‌க‌த்தின் ஆதார‌பூர்வ‌மான‌ ஹ‌தீதுக‌ளையும் பின்ப‌ற்றுவ‌தும் அத‌னை முழு ம‌னித‌குல‌த்திட‌மும் கொண்டு செல்ல‌ அய‌ராது பாடுப‌டுவ‌தும் எவ்வ‌ள‌வு ம‌க‌த்தான‌ ந‌ன்மை!

ச‌கோத‌ர‌இச‌கோத‌ரிக‌ளே??  சிந்தித்துப்பாருங்க‌ள்! உங்க‌ளுக்கு ம‌றுமையில் சுவ‌ன‌ம்தானே வேண்டும்?? அப்ப‌டியானால் அல்லாஹ்வின் தூய‌மார்க‌த்தை உங்க‌ளால் முடிந்த‌ள‌வுக்குப் பிர‌ச்சார‌ம் செய்ய‌ க‌ள‌மிற‌ங்குங்க‌ள்!  விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் விம‌ர்சிக்க‌ட்டும்! ஊர் க‌ட்டுப்பாடும் ஜ‌ம்இய்ய‌துல் உல‌மாவின் ஒத்துழைப்பும் பேசுப‌வ‌ர்க‌ள் அத‌னைப் பேச‌ட்டும். எம‌க்கு அந்த‌ ர‌ப்புல் ஆல‌மீனின் திருப்பொருத்த‌ம்தான் வேண்டும். ம‌னித‌ர்க‌ளின் அங்கீகார‌மோ ம‌னித‌ர்க‌ள் த‌ரும் ம‌திப்புஇம‌ரியாதைகளோ வேண்டாம்! .

அன்பிற்கினிய‌வ‌ர்க‌ளே!

அல்லாஹ்வின் கொள்கையைப் ப‌டிப்ப‌த‌ற்கு சிறிது நேர‌ம் ஒதுக்குங்க‌ள். அல்லாஹ் உங்க‌ளுக்கு அருள் பாலிப்பான். அவ‌னின் இத்தூய‌ மார்க்க‌த்தை எடுத்துரைப்ப‌தில் எம்மோடு கைகோர்த்து நில்லுங்க‌ள்! அல்லாஹ் உங்க‌ளுக்கும் உங்க‌ள் குடும்ப‌த்தாருக்கும் உத‌வி செய்வ‌தில் பின்நிற்க‌மாட்டான்! சோத‌னைக‌ளும் துய‌ர‌ங்க‌ளும் இல்லாம‌ல் ச‌த்திய‌த்தை மக்க‌ளிட‌ம் எடுத்துச் சொல்ல‌முடியாது.

நாம் மேலே கூறிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை ச‌முதாய‌த்தின் அறிவிலிக‌ள் அடிக்க‌டி கூறிக்கொண்டே இருப்பார்க‌ள். எத்த‌னையோ ந‌பிமார்க‌ள் இமாம்க‌ள் இத்தூய‌ இஸ்லாத்தை ம‌க்க‌ளிட‌ம் த‌ய‌வு தாட்ச‌ன்ய‌மின்றி எடுத்துக்கூறிய‌தால் கொலை செய்ய‌ப்ப‌ட‌வில்லையா? அல்லாஹ்வின் வேத‌த்தைத் திற‌ந்து பாருங்க‌ள்!உண்மையை ஒருக்காலும் ச‌மூக‌த்த‌லைமைக‌ள் அங்கீக‌ரிக்காது. இது தின்னம்.

என‌வே!அன்புக்குரிய‌வ‌ர்க‌ளே! இஸ்லாத்தை அத‌ன் தூய‌வ‌டிவில் பிர‌ச்சார‌ம் செய்யும் ‘தாருல் அத‌ர் அத்த‌அவிய்யா’ வில் இணைந்து இஸ்லாத்தை வ‌ள‌ர்க்க‌ அணிதிர‌ளுங்க‌ள்!

அல்லாஹ் போதுமான‌வ‌ன்.

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers