இஸ்லாத்தின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட சரித்திரங்கள்..!
ஆக்கம்:கொள்கைப்பிரச்சாரகர்:எம்.ஸஹ்றான்(மஸ்ஊதி)
பொதுவாக அனைத்து மூட நம்பிக்கைகளுக்கும்இ தீமைகளுக்கும் மூலகர்த்தாவாக இருப்பது சமுதாயத்தில் நிலவும் போலிச்செய்திகளே! எந்தச்சமுதாயத்தில் போலிகள் நடமாடுமோ அந்தச்சமுதாயத்தில் மூட நம்பிக்கைகள் மிதமிஞ்சிக் காணப்படும் என்பதில் சந்தேகமில்லை
இதனைக்கருத்திற்கொண்டே நாம் இக்கட்டுரையில் பிரபல்யமான
போலிச்செய்திகளை இனங்காட்ட இருக்கின்றோம். ஏனெனில் இவ்வாறான போலிச்செய்திகளே சமுதாயத்தில் நாம் சத்தியத்தை முன்மொழிவதற்கும் அதனை எடுத்துச்சொல்வதற்கும் தடைக்கற்களாக உள்ளன. இன்று பேச்சு மேடைகளிலும் மிம்பர் மேடைகளிலும் பல்லவியாய் பாடப்படும் ஒரு சம்பவம்தான் ‘அல்கமா’ என்ற ஒரு நபித்தோழருடன் சம்பந்தப்பட்ட வரலாறு. இதோ அந்த வரலாறு:
‘நபியவர்களின் காலத்திலே ‘அல்கமா’ என்ற ஒரு வாலிபன் வாழ்ந்து
வந்தார். அவர் அதிகமாக தொழுகை நோன்பு போன்ற நல்லமல்களில் ஈடுபடுபவராகவும் இருந்தார். ஒரு முறை அவர் கடுமையாக நோயுற்று மரணப்படுக்கையில் இருந்தார். இதனால் அவரது மனைவி நபி(ஸல்)அவர்களுக்கு ஆளனுப்பி அல்கமாவின் நிலையைப்பற்றி விபரித்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் அம்மார் சுஹைப் பிலால்(ரலி)ஆகியோர்களை அனுப்பி அவருக்கு கலிமாவைச்சொல்லிக்கொடுக்குமாறு ஏவினார்கள்.
அங்கு அந்த நபித்தோழர்கள் சென்றதும் அல்கமாவின் பரிதாப நிலையைக்கண்னுற்றுஇஅவருக்கு கலிமாவைச்சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவரது நாவோ அதைக்கூற மறுத்துவிட்டது. உடனே அவர்கள் நபியவர்களுக்கு ஆளனுப்பி இவ்விடயத்தைப்பற்றி வினவியதும் அவரது பெற்றோரில் எவரேனும் உயிருடன் உள்ளனரா? எனக்கேட்டார்கள். ஆம் அல்லாஹ்வின் தூதரே! வயதுமுதிர்ந்த அவரது தாய் உயிருடன் உள்ளார் என விடையளிக்கப்பட்டதும் அந்தத் தாயை அழைத்துவருமாறு கூறி நபி(ஸல்)அவர்கள் ஆளனுப்பினார்கள். அத்துடன் அந்தத் தூதுவரிடத்தில் அவர் செல்லும் போது அந்தத் தாய் தன்னிடத்தில் வரமுடியுமாயின் வருமாறு கூறவும் இல்லாவிடின் அவளை அவளது வீட்டில் இருக்குமாறு கூறு! நான் அங்கு வருகின்றேன் என்று கூறி அத்தூதுவரை அனுப்பினார்கள்.
அவர் வந்து அல்கமாவின் தாயிடத்தில் விடயத்தைச்சொல்லியதும் அந்தத்தாய் எனது ஆத்மா நபிகள்(ஸல்)அவர்களின் ஆத்மாவுக்கு சமர்ப்பணமாகட்டும்! நானே அங்கு வரத்தகுதியானவள் எனக்கூறி கம்பை ஊன்றிக்கொண்டு வந்து நபியவர்களுக்கு ஸலாம் கூற அதற்கு நபியவர்கள் பதிலளித்தார்கள். பின்னர் நபியவர்கள் அவளைப்பார்த்து அல்கமாவின் தாயே! உனது மகனின் நிலை எவ்வாறு உள்ளது என வினவினார்கள். அதற்கு அவள் ‘அவர் அதிகமாக தொழுகைஇநோன்பு போன்ற நல்லமல்களில் ஈடுபடுபவராகவும் தர்மம் வழங்குபவராகவும் இருந்தார் எனக்கூறினாள்.
உனது நிலமை எவ்வாறு என நபியவர்கள் கேட்க நான் அவர் மீது கோபமுற்றவளாகவே உள்ளேன் எனக்கூறினாள். காரணம் யாது?? என நபியவர்கள் வினவ அவர் என்னை விட அவரது மனைவிக்கே அதிக முக்கியத்துவமளிப்பார். மேலும் எனக்கு மாறு செய்வார் எனக்கூறினாள். உடனே நபியவர்கள் அல்கமாவின் தாயினது கோபமே அவர் கலிமாவை மொழிவதற்குத் தடையாக உள்ளது எனக்கூறிய நபியவர்கள் பிலால்(ரலி)அவர்களை அழைத்து ‘நீ சென்று விறகுக்கட்டைகளை சேகரித்து வாரும்’ எனக்கூறினார்கள். இதனைச்செவியுற்ற அப்பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! என்ன செய்யப்போகிறீர்கள்?? என வினவினாள். அதற்கு நபியவர்கள் ‘உமக்கு முன்னாலேயே நான் அவரை எரிக்கப்போகிறேன்’ எனக்கூறஇஎனக்கு முன்னாலேயே எனது பிள்ளையை நெருப்பிலிடுவதை எனது உள்ளம் தாங்காது என அந்தத்தாய் கூறினாள்.
அப்போது நபியவர்கள் ‘அல்லாஹ்வின் தண்டனை மிகக் கொடியதும்இநிரந்தரமானதுமாகும். நீர் அல்கமாவின் மீது கோபமுற்றிருக்கும் போது அவருக்கு அவரது தொழுகையோ நோன்போ தர்மமோ எவ்விதப்பயனையும் அளிக்கப்போவதில்லை எனக்கூறினார்கள். இதனைக்கேட்ட அத்தாய் ‘அல்லாஹ்வின் தூதரே!எனது மகனான அல்கமாவை நான் பொருந்திக்கொண்டேன் அதற்கு அல்லாஹ்வும் அவனது வானவர்களும் இங்கு வந்துள்ள முஸ்லிம்களும் சாட்சி எனக்கூறினாள்.
உடனே நபியவர்கள் பிலாலைப் பார்த்து ‘பிலாலே! இப்போது அல்கமா கலிமாவை மொழிகிறாரா இல்லையா என்பதைப்பார்த்து விட்டு வாரும் ஏனெனில் என்னைக்கண்டு வெட்கமடைந்ததால் இப்பெண்மணி தனது உள்ளத்தில் இல்லாதவற்றைப் பேசியிருக்கக்கூடும்’ எனக்கூறி அங்கு அவரை அனுப்பி வைத்தார்கள். அங்கு பிலால்(ரலி)சென்றதும் அல்கமா கலிமாவை மொழிவதை செவியுற்றார். உடனே பிலால்(ரலி)அவர்கள் அங்குள்ளோரை விளித்து ‘ஏ மனிதர்களே! நிச்சயமாக அல்கமாவின் தாயினது கோபம்இஅவர் கலிமாவை மொழிவதற்குத் தடையாக இருந்தது.அவளது பொருத்தம் அதனை விடுவித்து விட்டது’ எனக்கூறினார்கள்.
பின்னர் அந்நாளிலேயே அல்கமா மரணமெய்தினார். நபியவர்கள் அவரது ஜனாஸாவிற்கு சமூகம் தந்து அவரைக்குளிப்பாட்டி கபனிடுமாறு ஏவினார்கள். பின்னர் அவருக்கு நபியவர்களே தொழுகை நாடாத்தி அவரது அடக்கத்திலும் கலந்துகொண்டார்கள். பின்னர் அவரது அடக்கஸ்தலத்தின் ஓரத்தில் நின்று கொண்டு ‘அன்ஸாரிகள் முஹாஜிர்கள் கூட்டமே! தனது தாயைப்பார்க்கிலும் யார் தனது மனைவியை மேம்படுத்துகின்றாரோ அவர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் ஒட்டுமொத்த மனிதர்களின் சாபமும் உண்டாவதாக! எனக்கூறிவிட்டு தாயை மேம்படுத்தாத மனிதரிடமிருந்து அல்லாஹ் எதனையும் ஈடாகப்பெறமாட்டான். அவர் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக்கோரி அவரது தாயிற்கு உபகாரம் புரிந்து அவளது பொருத்தத்தை வேண்டினாலே தவிர அப்போது தான் இறைவன் அவரைப்பொருந்திக்கொள்வான். ஏனெனில் அவளது திருப்தியிலே இறைதிருப்தி உண்டு அவளது கோபத்திலே இறைவனின் கோபமுண்டு எனப் பகர்ந்தார்கள்.
மேற்கூறப்பட்ட சரித்திரத்தை எந்த ஹதீஸ் நூற்கலிலும் அதாரபூர்வமாகக் காணமுடியவில்லை. சிறப்புச்சேர்க்க வேண்டுமென்று கூறும் ஸூபிகளே இச்செய்தியை இட்டுக்கட்டினார்கள். தாயை ஒரு முஸ்லிம் மதிக்க வேண்டும். அதற்கு ஆதாரமாக ஏகப்பட்ட வசனங்கள் திருமறைக்குர்ஆனிலும் நபிகள் நாயகத்தின் வாழ்விலும் நிறைந்து காணப்படுகின்றது.
இவ்வாரான நெஞ்சைநெகிழ வைக்கும் அதேவேளை ஆதாரமற்றுக்காணப்படும் போலியான செய்திகளை இணைய அன்பர்களுக்கு தொடர்ந்து இன்ஷாஅல்லாஹ் எமது இணையத்தில் தொடர்ந்தும் பதிப்பிப்போம்.

Comments are closed.