“ஜிஹாத்” தவறாகப் புரியப்பட்டதும்,சரியான அதன் வடிவமும்”
இஸ்லாமியமார்க்கத்தில் முஸ்லிமல்லாதோர்களால்தவறாகப் புரியப்பட்ட சொற்களில் “ஜிஹாத்” எனும் சொல்லும் ஒன்றாகும். அன்னிய நாடுகளை அனியாயமானமுறையில் ஆக்கிரமிப்பதற்கும், இஸ்லாத்தை ஏற்காதவர்களை கொன்று குவிப்பதற்கும் பயன்படுத்தப்படும் சொல்லே ் “ஜிஹாத்” என்று அதிகமான மாற்றுமத சகோதரர்கள் நம்பியிருக்கின்றார்கள்.
இவ்வெண் ணம் மிகமிகத் தவறாகும். இஸ்லாத்தைப் பற்றிய சரியான, ஆழ்ந்த புலமையின்மையே இவ்வாறு அவர்கள் நம்புவதற்குப் பிரதான காரணமாகும். அல்லாஹுத்தஆலா “ஜிஹாதை” எந்தத் தனிமனிதருக்கோ, எந்தத் தனிக்குழுக்களுக்கோ கடமையாக்கவில்லை. மாறாக இஸ்லாமிய அரசுக்கே “ஜிஹாத்” எனும் அறப்போராட்டத்தைஅல்லாஹ் கடமையாக்கியுள்ளான். இதற்குப் பின்வரும் நபிமொழி ஆதாரமாகத் திகழ்கின்றது.
” من أطاعني فقد أطاع الله ، ومن عصاني فقد عصى الله ، ومن يطع الأمير فقد أطاعني ، ومن يعص الأمير فقد عصاني ، وإنما الإمام جنة يقاتل من ورائه ويتقى به ، فإن أمر بتقوى الله وعدل ، فإن له بذلك أجرا وإن قال بغيره فإن عليه منه
“நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்; எவர் எனக்குக் கீழ்படிந்தாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். எவர் தலைவருக்குக் கீழ்படிந்தாரோ அவர் எனக்குக் கீழ்படிந்தவராவார். எவர் தலைவருக்கு மாறு செய்கின்றாரோ அவர் எனக்கு மாறு செய்தவராவார். தலைவர் ஒரு கேடயம். அவருக்கு கிழிருந்துதான் போரிடப்படும். அவர் மூலம் பாதுகாப்புப் பெறப்படும்.அவர் (தன் தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறை(யச்ச)உணர்வை கைக் கொள்ளும் படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்துகொண்டால் அவருக்கு அதன் காரணமாக (பெரும்)நற்பலன் உண்டு. அது அல்லாத தீயவற்றை அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர் மீது(ம்) சாரும்.(ஆதாரம்:ஸஹீஹுல் புஹாரி,ஹதீஸ் இல:2957)
மேற்குறித்த செய்தியில் குடிமக்களை வழிநடாத்தும் தலைவருக்கே யுத்தம் கடமை என்பது தெளிவாகின்றது. ஒரு இஸ்லாமிய அரசாங்கம் இல்லாமல் “ஜிஹாத்” குழு எனும் பெயரில் கள்ளத்தனமாக யார் இயங்கினாலும ்(நாம் அறிந்தவரை இல்லை)அ து தவறாகும். ஏனெனில் மேற்குறித்த செய்தியில் இடம்பெறும் “அமீர்” எனும் சொல் அதிகாரமுள்ள ஒரு ஜனாதிபதியையே குறிக்கும்.
எனவே “ஜிஹாத்” எனும் அறப்போராட்டத்தை மேற்கொள்வதாக இருந்தால் அதனை இஸ்லாமிய அரசே மேற்கொள்ள வேண்டும். அவ்வப்போது ஆங்காங்கே மார்க்க அறிவில்லாத சில முஸ்லிம் இளைஞர்கள் மேற்கொள்ளும் வன்முறைகளுக்கும் தூயமார்க்கமாகிய இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
டயர்கள் எரிப்பதாக இருந்தாலும், கடைகளை உடைப்பதாக இருந்தாலும் அதற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்தவிதத்திலும் எத்தொடர்பும் கிடையாது. அவ்வளவு மட்டகரமாகப் போதனைகளை முன்வைக்கும் ஒரு கொள்கையுமல்ல இஸ்லாம். இதனை இஸ்லாத்திற்கெதிரான ஊடகங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
யுத்தகளத்திற்குப் போனாலும் பெண்களையும், குழந்தைகளையும் கொல்லக்கூடாது என்று யுத்தத்திற்கான அளவுகோலை நேர்த்தியாகச் சொன்ன ஒரே மார்க்கம் இஸ்லாம். இதற்குப் பின்வரும் ஆதாரபூர்வமான செய்தி சான்றாகும்.
أن عبد الله رضي الله عنه ، أخبره : أن امرأة وجدت في بعض مغازي النبي صلى الله عليه وسلم مقتولة ، ” فأنكر رسول الله صلى الله عليه وسلم قتل النساء والصبيان
“இப்னு உமர்(ரலி)அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கலந்துகொண்ட புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள்.அப்போது அல்லாஹ்வின் துதர்(ஸல்)அவர்கள் “பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடைசெய்தார்கள்”.(ஆதாரம்:ஸஹீஹுல் புஹாரி,ஹதீஸ் இல:3015)
இந்தளவுக்கு “ஜிஹாதை” மேற்கொள்ளும் போது கூட ஒழுக்கங்களையும், விழுமியங்களையும் போதிக்கின்ற இஸ்லாத்தை தீவிரவாதம், அடிப்படைவாதம் போன்ற பெயர்களில் அழைக்கும் ஊடகங்கள் ஒருமுறை திருமறைக்குர்ஆனையும், நபிகளாரின் அற்புதமான அந்த வாழ்வையும் படித்துப் பார்க்கவேண்டும்.
இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டிருக்கும் குற்றவியல் சட்டத்தைக் கூட முஸ்லிம்களில் தனி நபரோ அல்லது குழுக்களோ நிறைவேற்றிவிட முடியாது. உதாரணமாக “திருடியவனின் கரத்தை வெட்ட வேண்டும்” என்று அல்லாஹுத்தஆலா தனது அருள்மறையில ( 05:38 ) வசனத்தில் கூறுகின்றான். மேற்படி கட்டளையை எந்தத் தனிமனிதரோ, குழுவோ கையில் எடுக்கமுடியாது.
வளரும் இன்ஷாஅல்லாஹ்…
அடுத்த பதிப்பில் “படை திரட்டும் அதிகாரம் அரசுக்கா? தனி நபருக்கா? குழுக்களுக்கா?” இன்ஷாஅல்லாஹ் வாசகர்கள் எதிர்பாருங்கள்!..

Comments are closed.