Skip to content

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் ஏற்படுத்திய சில ஐயப்பாடுகள். ஓர் ச‌ர்வ‌தேச‌ப்பார்வை!

May 2, 2008


சில தினங்களுக்கு முன்னர் இலங்கை நாட்டுக்கு விஜயம் செய்த ஈரான் நாட்டு ஜனாதிபதியின் வருகை குறித்து சர்வதேசரீதியாக வாழும் முஸ்லிம்களிடம் வித்தியாசமான ஓர் பார்வை ஏற்பட ஆரம்பித்துள்ளது.

ஈரானைப் பொருத்தமட்டில் அணுஆயிதம் தொடர்பான சர்வதேசத்தின் பல்வேறு அபிப்பிராய பேதங்களுக்கு மத்தியில் அதிகமான முஸ்லிம்கள் அஹ்மட் நெஜாதின் வருகையை பல்வேறு வகையில் நோக்குகின்றனர்.

இலங்கையைப் பொருத்தமட்டில் முஸ்லிம்கள் அவ்வப்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும் சற்று நிம்மதியோடும், மனநிறைவாகவும் வாழ்ந்துவருகின்ற ஒரு நாடு. இச்சிறுபான்மை சமூகத்தில் ஷீஆ ஸுன்னா பிரச்சனைகள் கிடையாது. ஒரு சில இடங்களில் மாத்திரம் ஷீஆக்கள் தங்களது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு முஸ்லிம்களின் ஈமானைப் பறித்துவருகின்றனர். ஷீஆக்கொள்கைக்கும் இஸ்லாத்திற்கும் துளியளவும் சம்மந்தம் கிடையாது என்பதும், “ஷீஆ முஸ்லிம்” எனும் வாசகத்தை இஸ்லாத்தின் விரோதிகளே தங்களது ஊடகங்களில் பிரயோகித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஈரானைப் பொருத்தமட்டில் அது இஸ்லாமியக்குடியரசு” என்று கூறுவதற்கு சிறிதும் அருகதையற்ற ஒரு நாடாகும். அங்கு பல்லாயிரக்கணக்கான ஸுன்னா முஸ்லிம்கள் நாளுக்கு நாள் கொலை செய்யப்படுகின்றனர். சுதந்திரமான முறையில் ஒரு இஸ்லாமிய‌ ஊட‌க‌த்தை ந‌டாத்த‌முடியாத‌ சூழ்நிலை அங்கு நிலவுகின்றது.

இன்னும் ப‌ல்வேறு வ‌கையான‌ கொடுமைக‌ளை அந்நாடு அர‌ங்கேற்றுவ‌து மாத்திர‌மில்லாம‌ல் த‌ங்க‌ள‌து கொள்கையான‌ “ஷீஆயிஸ‌த்தை” திட்ட‌மிட்டுப்ப‌ர‌ப்பி வ‌ருகின்ற‌து. ஆய‌துல்லாஹ் கொமைனி என‌ப்ப‌டும் த‌னிந‌ப‌ருக்காக‌வே நாளுக்கு நாள் ம‌க்க‌ள் ப‌லிக்க‌டாவாக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இக்கொடுமைக‌ளை நீங்க‌ள் பார்வையிட‌ விரும்பினால் www.البينة.com எனும் இணைய‌த‌ள‌த்திற்குச் சென்று பாருங்க‌ள்.

த‌ங்க‌ள‌து நாட்டில் ம‌ட்டும‌ல்ல‌ வெளிநாடுக‌ளிலும் வாழும் ஷீஆக்க‌ளுக்கும் உத‌வுக‌ளையும், ஆலோச‌னைக‌ளையும் ஈரான் நாடு வ‌ழ‌ங்கிவ‌ருகின்ற‌து. அவ்வாறு ஈரானால் உத‌வி வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் நாடுக‌ளில் இல‌ங்கையும் பிர‌தான‌ இட‌த்தை மிக அண்மைக்காலமாக‌ வ‌கிக்கின்றது என்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.

ஓட்ட‌மாவ‌டி, க‌ண்டி, காலி, கொழும்பு, நீர்கொழும்பு போன்ற‌ இட‌ங்க‌ளில் வேக‌மாக‌ப்ப‌ர‌வும் “ஷீஆயிஸ‌த்தை” இன்னும் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் ப‌ர‌வ‌ச்செய்வ‌த‌ற்கான‌ ராஜ‌தந்திர‌ யுக்தியாக‌வே அஹ்ம‌ட் நெஜாதின் இல‌ங்கை வ‌ருகையை அவ‌தானிக‌ள் நோக்குகின்ற‌ன‌ர். திடீரென்ற‌ ஈரானின் த‌லையீடு இந்நோக்க‌த்தையே ம‌றைமுக‌மாக‌க் கொண்டிருக்க‌லாமென ‌ஆய்வாள‌ர்க‌ள் க‌ருத்துத்தெரிவிக்கின்ற‌ன‌ர்.

ஏனெனில் மிக‌ அண்மைக்கால‌மாக‌ “ஷீஆயிஸ‌த்தை” ஏக‌த்துவ‌வாதிக‌ள் ப‌கிர‌ங்க‌மாக‌ விம‌ர்சித்த‌ போதெல்லாம் அவ‌ர்க‌ள் மிக‌க் க‌டுமையாக‌ ஷீஆவாதிகளால் நைய‌ப்புடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

விம‌ர்சிக்கும் ஏக‌த்துவவாதிக‌ளின் உயிருக்கே ஆப‌த்து நேரிட‌லாமென்று அச்ச‌ம் கொள்ளும‌ள‌விற்கு நில‌மை பார‌தூர‌மாக‌ விருந்த‌து. இவ்வாரான சூழ்நிலையில் அஹ்மத் நஜாதின் வருகையானது இலங்கை ஸுன்னி முஸ்லிம்களின் (அகீதா)இறை நம்பிக்கைக்கு ஆபத்தானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எது எவ்வாறிருந்தாலும் திட்டமிட்ட அடிப்படையிலேயே மேற்படி விஜயம் அமைந்திருக்கலாமென சர்வதேச முஸ்லிம் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாரான சூழ்நிலையில் “இஸ்லாமியப்பிரச்சாரத்தை நாங்களும் தான் செய்கின்றோம்” என முழங்கும் ஜமாஅதே இஸ்லாமி, தாருல் அர்க்கம் போன்ற இயக்கங்கள் ஏதும் கருத்துக்களை வெளியிடாமலிருப்பதும் இதனையே இன்னும் வலியுருத்துகின்றது. அல்லாஹ்வின் சத்தியத்தை எச்சக்தியாலும் ஊதிஅணைத்து விட முடியுமா??? முடியவே முடியாது!!!! அல்லாஹ் போதுமானவன்

இணையத்திலிருந்து அதரி…

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers