சமூக சேவைகள்
இஸ்லாத்தைப் பொருத்தமட்டில் இதர கொள்கை களுக்குள் தனித்து விளங்கும் ஓர் உயர்ந்த கொள்கை என்பதை யாவரும் அறிவர்.மனிதன் சுயநல வாதியாய் வாழ்வதை ஒருக்காலும் அங்கீகரிக்காத இஸ்லாம் மனிதத்துவத்தைக் கட்டியெழுப்பும் எப்பனியையும் ஊக்குவிப்பதில் எப்போதும் பின்நின்றது கிடையாது.
மனிதன் இனத்தில் நிறத்தில் மொழியில் எப்படி வேறுபட்டிருந்தாலும் “மனிதம்” பேனிப்பாதுகாக்கப் படவேண்டுமென இஸ்லாம் வலியுருத்துகின்றது. மனிதன் வாழக்கூடிய சூழலை மாசுபடுத்தும் எக்காரியத்தையும் அங்கீகரிக்காத இஸ்லாம் சுற்றத்தாரை துன்புருத்துபவன் ஈடேற்றம் பெறமுடியாது என்றும் கோட்பாட்டை வகுத்து வைத்துள்ளது. சமூக சேவைகளைப் பொருத்தமட்டில் அல்குர்ஆன் அதிகம் அதனை ஆர்வமூட்டுகின்றது.
பின்வரும் திருமறைவசனம் இதற்குத் தெளிவான சான்றாகும்.
“ஒரு ஆத்மாவை வாழ வைத்தவர் முழு மனித சமுதாயத்தையும் வாழவைத்தவர் போன்று“(4:32)
இன்று நாம் வாழும் பூமி நாளுக்கு நாள் மாசடைந்து வருவகின்றது.
மனிதனின் முறைகேடான செயலே இதற்குப் பிரதான காரணமாகும்.
ஒருசில மனிதர்களின் நாசகாரச்செயல்களினால் இவ்வுலகு பல நோய்களை நாளுக்கு நாள் சந்தித்து வருகின்றது.மனித குலம் பூமியில் இன்னும் எத்தனை நாள் வாழும் எனக் கேள்வியெழுப்பும் அளவுக்கு சூழல் மாசடைந்துள்ளது.
அன்று சுயநலவாதிகளாய் வாழ்ந்த மனிதர்களை சகோதரத்துவ வாஞ்சையுள்ளவர்களாய் மாற்றிய மார்க்கத்தில் இன்று வாழும் சில முஸ்லிம் சகோதரர்கள் சமூகசிந்தனை மறந்து தாணுன்டு,தன்பாடுண்டு என வாழ்ந்துவருகின்றனர்.
இவர்களின் இப்போக்கு முஸ்லிம்சமூகத்தை மேற்குநாடுகளில் வாழும் இஸ்லாம்பற்றித் தெளிவிள்ளாத மக்களிடம் தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே முஸ்லிம்கள் அதிகம் சமூக சேவைகளை இப்புவியில் ஆற்ற வேண்டும்.
இப்பூமி அல்லாஹ்வுக்குச் சொந்தமானது.அது தூய்மையாய் இருக்க வேண்டுமென இறைவன் விரும்புகிறான்.இறைவிருப்பத்தைப் பெற்றுத்தரும் பனிகளில் சமூக சேவையும் ஒன்றாகும். சர்வதேச உலகில் முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் “சுயநலவாதிகள்” எனும் கலங்கத்தைக் கழைந்து இறைதிருப்தியைப் பரிபூரணமாய்ப் பெற்ற சத்தியவான்கள் கூட்டத்தில் எம்மனைவரையும் வல்ல இறைவன் ஆக்கியருள்வானாக!
காத்தான்குடியில் மாபெரும் சிரமதானம்
வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு வினியோகம்
இரத்ததான நிகழ்வு…
தோணாவளவு சுத்திகரிப்பு…

Comments are closed.