Skip to content

முஸ்லிம்களே!

November 20, 2007

noble_quran.jpg

முஸ்லிம்களே! அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர் ஆனையும் நபி (ஸல்) அவர்களின் நம்பகமான போதனைகளை மாத்திரம் பின்பற்றுங்கள்.

முஸ்லிம்களே! யாரையும் க‌ண்மூடிப் பின்ப‌ற்றாதீர்க‌ள்! வ‌ஹியெனும் இறைவ‌ழிகாட்ட‌லுக்கு முர‌ணாக‌ யார் எதைச் சொன்னாலும் அதை நிராக‌ரியுங்க‌ள்!.

முஸ்லிம்களே! இறைவ‌ன் ம‌ன்னிக்காத‌ ஷிர்க்கை முஸ்லிம் ச‌மூக‌த்தை விட்டே அக‌ற்றி தூய்மையான‌ தெய்வீக‌க்கோட்பாட்டை இப்புவியில் நிலைநிறுத்துங்கள்.

முஸ்லிம்களே! சர்வதேச ரீதியில் நாம் ஒடுக்கப்படுவதற்கும், நசுக்கப்படுவதற்கும் மூட நம்பிக்கைகளே காரணமென்பதால் அவற்றைக் கழைந்து முஸ்லிம் சமூகத்தை தூய்மையாக்குங்கள்!

முஸ்லிம்களே!
எமது பின்னடைவுக்கும் அசமந்தப்போக்கிற்கும் அடிப்படை காரணம் வாசிப்பின்மையேயாகும்.எனவே சமூகத்தின் எழுச்சிற்கு பல்துறை சார்ந்த வாசிப்புத்துறையில் முன்னேறுங்கள்.

முஸ்லிம்களே! இஸ்லாத்தின் பெய‌ரால் பிர‌ச்சார‌ம் செய்ய‌ப்ப‌டும் பிழையான‌ சித்தாந்த‌ங்க‌ளை (ம‌ஹ்தி பௌண்டேஷ‌ன், காதியானிஷ‌ம், ஷீயானிஷ‌‌ம்) முஸ்லிம் ச‌மூக‌த்தை விட்டு நீக்கி இஸ்லாமிய‌ அகீதாவைப் பாதுகாக்க‌ அணிதிர‌ளுங்க‌ள்.

முஸ்லிம்களே! எமது முதுகெலும்புகளென வர்ணிக்கப்படும் இளைஞர்களை இஸ்லாமியப் பண்பாடுகளால் நெறிப்படுத்தி ஆக்கபூர்வமான ஓர் இளைஞர் வட்டத்தை உருவாக்க முன்வாருங்கள்.

முஸ்லிம்களே! பல்லின சமூகங்களுக்கு மத்தியில் நாம் வாழ்வதால் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மதித்து இந்நாட்டில் புரிந்துணர்வோடு கூடிய சமாதானத்தை மலரச்செய்யுங்கள்.

முஸ்லிம்களே! எம்மிடம் தேங்கிக் காணப்படும் ஆய்வுத்துறையை மீண்டும் உயிர்ப்பித்து இஸ்லாமியத் தூதின் உட்பொதிவுகளை மீளக்கட்டமையுங்கள்.

முஸ்லிம்களே! பெண்களின் சுதந்திரத்திற்கும் மானசீக உணர்வுகளுக்கு மதிப்பலியுங்கள். பெண் கொடுமையென வர்ணிக்கப்படும் சீதனத்தை முற்றாக கைவிட்டு பெண்களுக்கு வாழ்வளியுங்கள்.

முஸ்லிம்களே! இஸ்லாம் தடுத்த போதை வாஸ்த்துப்பாவனை, சினிமாக்கலாச்சாரம், வட்டி, இலஞ்சம் போன்ற சமூகத் தீமைகளை கைவிட்டு நெறிப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குங்கள்.

முஸ்லிம்களே! எமக்கு மத்தியில் வாழும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பௌத்தர்கள் போன்றோருக்கு இஸ்லாகியத் தூதை எத்தி வைக்கவும் மத்ஹபுகளை தழுவாமல், கப்றுகளை வணங்காமல் வஹியை மாத்திரம் பின்பற்றும் ஒரு சமூகம் இப்புவியில் உருவாகவும் எம்மோடு இணைந்து இறைத்தூதுப் பிரச்சாரப் பணியில் ஈடுபடுங்கள்.

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers