எம்மை பற்றி
தாருல் அதர் அத்தஅவிய்யா ஓர் அறிமுகம்
தமிழுலக இஸ்லாமிய இணைய அன்பர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இலங்கை திருநாட்டில் முஸ்லிம்கள் தனித்து வாழும் ஓர் ஊர் காத்தான்குடி. உலமாக்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுனர்கள்,கல்விமான்கள், கலாபீடங்கள் என பல துறைகளிலும் இவ்வூர் தனித்து விளங்குகிறது.
முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தை கருத்திற்கொன்டு பல நிறுவனங்கள், அமைப்புகள், கழகங்கள் பல தொண்டுகளை இவ்வூரில் ஆற்றிவருகின்றன இருந்த போதிலும் இஸ்லாத்தின் தூயவடிவத்தை அழிக்கின்ற நாசகார வேலைகளில் தொடர்ந்தும் இஸ்லாத்தின் எதிரிகள் செயற்பட்டு வருவது ஆழ்ந்த மனக்கவலையை இஸ்லாமிய அறிஞர்கள், சமூக காப்பாளர்கள் உள்ளங்களில் ஏற்படுத்தியது. அதன் விளைவே 2000 ஆண்டு இஸ்லாத்தின் தூய்மையை காக்கும் நோக்குடனும் சமூக தொண்டுகளை மேம்படுத்தும் நோக்குடனும் தாருல் அதர் அத்தஅவிய்யா ( மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன் அஸ்ஸுன்னாஹ் அடிப்படையிலான பிரச்சார அமைப்பு) எனும் பெயரில் இவ்வமைப்பு தோற்றம் பெற்றது.
ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அச்சமூகத்தின் முதுகெழும்பான இளைஞர்களை நெறிப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. இவ்வடிப்படையை மையமாக கொண்டே தாருல் அதர் அத்தஅவிய்யா அதிகமான இளைஞர்களை தமது அமைப்பில் உள்வாங்கி அவர்களுக்குரிய பாசறை வகுப்புகளை அமைத்து தூய இஸ்லாத்தை அவர்களுடைய நெங்சங்களில் விதைத்து விடுகின்றது. அதன் பயனாக இஸ்லாத்தில் புதிதாக புகுந்தவற்றை புறக்கணித்தும் இஸ்லாத்தில் விடுபட்ட ஸுன்னாக்களை உயிர்ப்பிக்கும் ஓர் உன்னத இளைஞர்குழு தோற்றம் பெற்றது.
இஸ்லாத்தில் பெருங்குற்றமாக கருதப்படும் ஷிர்க்கை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதும் நபிகளர் (ஸ்ல) காட்டிதராத முஸ்லிம்களால் காலாகாலமாக செய்யபட்டுவரும் நூதன அனுஷ்டானங்களை களையுமாறு முஸ்லிம் சமூகத்திற்கு அறைகூவல் விடுவதையும் இவ்வமைப்பு தமது பிரதான பணியாகக் கொண்டுள்ளது.
வன்முறைகளற்ற சுதந்திரமான மனக்கட்டுப்பாட்டுடன் கூடிய ஓர் காத்திரமான கொள்கைவாதிகள் கூட்டம் உருவாகவேண்டுமெனில் தூய இஸ்லாத்தைப் பின்பற்றல் ஒன்றே அதற்கு வழியாகும். இஸ்லாம் என்பது ஓர் வாழ்வியல் திட்டமாகும் அதற்கென்று ஓர் வரலாறு உண்டு. அதன் கலாச்சாரங்கள் மனிதப்பகுத்தறிவிற்கு முரணானதல்ல. அதன் கொள்கைகள் தெளிவானவை தூய்மையானவை. அதனை ஓர் நாகரீகமென்றே கொள்ளலாம். பல துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் முகம் கொடுத்து பல உயிர்களை அறப்போராட்டங்களில் இழந்தே அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் எம்மிடத்தில் இம்மார்க்கத்தை விட்டுச்சென்றார்கள்.
இஸ்லாமென்றால் பள்ளிவாயலோடு சுருங்கிய ஓர் கொள்கையென்ற கருத்து மாற்றப்பட்டு அதனை வாழ்வின் ஒவ்வோர் கட்டத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மனப்பாங்கை மக்களிடத்தில் ஏற்படுத்தியதில் தாருல் அதருக்கு அளப்பெரிய பங்குள்ளது என்றால் அது மிகையாகாது.
இவ்வமைப்பின் பிரதான அடிப்படையான நோக்கங்களை பின் வருமாறு வரிசைப் படுத்தலாம்.
1. முஸ்லிம் சமூகத்தில் நம்பப்படும் (அல்லாஹ் அர்ஷிலில்லை,இறைநேசர்களுக்கும் அறுத்துப்பலியிடலாம், சாஸ்த்திரம், தாயத்து,தகடு, தட்டு) போன்ற ஷிர்க்கான, பிழையான கொள்கைத்தடுமாற்றங்களை தமது வாழ்வை களையுமாறு எமது சமூகத்திற்கு அழைப்பு விடுத்தல்.
2. விஞ்ஞானமும் தகவல் தொழில்நுட்பமும் அபரிமிதமாய் வளர்ச்சியடைந்த இக்காலகட்டத்திலும் இன்னும் முஸ்லிம்கள் மூடநம்பிக்கைகளிலும் பிற்போக்கு சிந்தனைகளிலும் மூழ்கிவருவதை ஆட்சேபித்து அறிவுரை கூறல்.
3. மார்க்க விவகாரத்தில் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாஹ் ஆகிய இரு அடிப்படைகள் மாத்திரமே பின்பற்றப்பட வேண்டுமென முஸ்லிம்சமூகத்திற்கு விழிப்பூட்டல்.
4. முஸ்லிம்களிடம் அதிகம் செரிந்து காணப்படும் போதைவஸ்த்துப்பாவனையை ஒழிக்க அயராது பாடுபடல்.
5. இஸ்லாமிய வாரிசுரிமைச்சட்டம், விதவைகளுக்கு வாழ்வழித்தல், அநாதைகளை ஆதரித்தல் போன்ற இன்னோரன்ன மனித உரிமைகளை கட்டியெழுப்பும் விவகாரத்தில் முஸ்லிம்களை ஊக்குவித்தல்.
6. மார்க்கத்திற்கு முரணாக முஸ்லிம் சமூகத்தை அசிங்கப்படுத்தும் பெண்களுக்கு எதிரான சீதனக்கொடுமைக்கு எதிராக அயராது பாடுபடல்.
7. ஆரோக்கியமான ஓர்சமூகத்தின் ஆணிவேர் அறிவுப்பாரம்பரியமே! அதனைக்கட்டியெழுப்பும் விடயத்தில் மாணவர்களை முழுமையாக ஈடுபடுத்தல்.
8. முஸ்லிம்சமூகத்தில் வழக்கொழிந்துபோன இரத்ததானம்,கைதிகளுக்கு உணவளிப்பு போன்ற இன்னோரன்ன் சமூகசேவைகளை வாழவைத்தல்.
9. இஸ்லாம் காட்டித்தரும் பக்குவமான வாழ்வொழுக்கத்தை சிறுகச்சிறுக அழித்து மேற்கத்தேயக்கலாச்சாரத்திற்கு அடிபணிய வைக்கும் சினிமாக்கலாச்சாரத்தை கைவிடுமாறு அழைப்புவிடுத்தல்.
10. சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் ஓர் அங்கமாகிய நாம் எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழுகின்றார்களோ அவர்களின் சுக,துக்கங்களில் தொடர்ந்து பங்கெடுக்கும் மனோநிலையை முஸ்லிம்களிடத்தில் வளர்த்தெடுத்தல்.
11. களமும், வளமும் கிடைத்தால் கருத்துக்களை மாற்றும் பொய்ப்பிரச்சாரகர்களை தவிர்த்து சத்தியத்திற்காய் அயராது உழைக்கும் புனிதர்களை உருவாக்கள்.
12. சத்திய மார்க்கம் அல்லாஹ்வுக்கே சொந்தமானது, அதில் மனித சுய, விருப்பு வெறுப்புக்களுக்கேற்ப கூட்டல், குறத்தல்,விட்டுக்கொடுத்தல் போன்ற மார்க்கமுறைகேடுகளைத்தவிர்த்து உள்ளதை உள்ளபடி பிரச்சாரம் செய்யும் உலமாகக்ளை உருவாக்க சமூகபுத்திஜீவிகளுக்கு ஆலோசனை வழங்கல்.
மார்க்க விவகாரத்திலும் சமூகமேம்பாட்டை கட்டியெலுப்புவதிலும் அதிசிரத்தையுடன் பாடுபடும் தாருல் அதர் அத்அவிய்யா காத்தான்குடி உள்ளிட்ட இலங்கயின் பல பாகங்களிலும் பல்வேறு வகையான மார்க்க ஒன்றுகூடல்கருத்தரங்குகளை நடாத்திவருவதுடன் இஸ்லாத்தில் புதிதாக தோன்றும் நெறிபிறழ்தல்களை அவ்வப்போது மக்களுக்கு அறிவுரை கூறி விழிப்பூட்டி வருகின்றது.
மனிதகுலத்திற்கு ஆக்கபூர்வமான பணிகளை யார் செய்தாலும் இன,மத,மொழி வேறுபாடின்றி அவர்களோடு அவ்விடயத்தில் கைகோர்க்கும் தாருல் அதர் தன்னாலான சமூகசேவைகளை தொடர்ந்தும் ஆற்றிவருகின்றது.
தாருல் அதரைப்பொருத்தமட்டில் முழுக்க முழுக்க தனது சொந்த பணத்தில் பல தியாகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் தஃவா செய்யும் ஓர் அமைப்பாகும். எதிர்ப்புகளைக்கண்டு சத்தியத்தை மறைக்காமல் சத்தியமென்றால் ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து அதனை மறுத்தாலும் மக்கள் எதிர்ப்புக்காய் சத்தியத்தில் சமரசம் செய்யும் போக்கு தாருல் அதருக்கு கிடையாது.
விமர்சனங்களை கண்டு, அஞ்சி கொண்ட கொள்கையை விட்டு பித்அத்வாதிகளோடு கைகோர்க்கும் பிழையான போக்கும் தாருல் அதருக்கு கிடையாது.
தாருல் அதர் அத்தஅவிய்யாவின் எதிர்பார்ப்பு இரண்டாகும்:
1. தூய இஸ்லாம் அல்லாஹ்விற்கு மாத்திரம் சொந்தமானது. அது இந்த மனிதகுலத்திடம் கலப்பற்ற தூய்மையான முறையில் சென்றடைய வேண்டும்.
2. அல்லாஹ்விற்கு சொந்தமான பூமியிது. அதில் மனிதன் நிறைவான சுதந்திரத்துடன் கூடிய அமைதியான வாழ்வு வாழ்வதற்கு இஸ்லாமிய வாழ்வியல் திட்டம் உலகமயமாதல் வேண்டும்.
இறைமார்க்கத்தை அல்லாஹ் இறக்கியதுபோல் பின்பற்ற மனிதகுலம் விளைந்தால் இப்பூமியில் வன்முறைகளோ, இயற்கை அழிவுகளோ ஏற்படவழியிருக்காது. சத்தியத்தை இப்புவியில் வாழவைக்க எம்மோடு ஒன்றினையுமாறு அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் தாருல் அதர் அத்தஅவிய்யா அழைப்பு விடுக்கின்றது.
